Aug 11, 2012

சிந்திக்கவும் இணையதளம் வன்மையாக கண்டிக்கிறது!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அணுசக்தி ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே இன்னும் 10 நாட்களில் யுரேனியம் எரிபொருளை நிரப்பி மின் உற்பத்தியை தொடங்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: கூடன் குளத்தில் அணு மின் உற்பத்தியை தொடங்குவதை சிந்திக்கவும் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை தர நெய்வேலி அனல் மின்நிலையம் மற்றும் நீர், காற்றலை மின் நிலையங்கள் இருக்க கூடங்குளம் அணு மின்நிலையம் ஏன்?

கேரளா மக்களால், அரசியல் கட்சிகளால் புறம் தள்ளப்பட்ட இந்த அணு உலை தமிழர்களை கொல்லும் கொலை கருவியாக கூடங்குளத்தில் நிறுவப்பட்டது. கூடங்குளம் மக்களின் நியமான கோரிக்கைகளை ஏற்க மறுத்த மத்திய பயங்கரவாத அரசு மக்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரிக்கிறது.

கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் மற்றும் மக்கள் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. உதயகுமாரோடு சேர்த்து இடிந்தகரை மக்கள் அனைவரும் ஊரோடு சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதை குறித்து எழுத எந்த ஊடகமும் தயாராக இல்லை. வழக்கம்போல் தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகள் திட்டமிட்டு செய்திகளை மறைப்பதோடு உண்மைக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
 
கூடங்குளம் அணு மின்நிலையம் என்பது ஒரு மக்கள் விரோத, நாசகார செயல் திட்டமாகும். இந்த நாசகார திட்டத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிந்திக்கவும் இணையத்தளம் கேட்டுக்கொள்கிறது.

நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய விஷயம்...

நன்றி...