JULY 07, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாயூர் பகுதியில் தனியார் மகளிர் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருபவள் சுவேதா (6) . இவர் வீட்டுப் பாடம் முடிக்காததால் ஆசிரியை விஜயா (பெயர் மாற்றம்) கடும் ஆத்திரம் அடைந்தார்.
சுவேதாவை நிர்வாணமாக்கி பள்ளியில் ஊர்வலமாக வரச்செய்தார். பின்னர் அவளை அங்குள்ள கழிவறைக்குள் அடைத்து வைத்து சுத்தம் செய்யுமாறு கூறினார். இதனால் சுவேதா கதறி அழுதார்.
பின்னர் விஜயா அவளிடம் இங்கு நடந்ததை பெற்றோரிடம் கூறினால் பள்ளியை விட்டு நீக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் அவர் பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் அவளது தோழிகள் அவளது பெற்றோரிடம் ஆசிரியை நிர்வாண ஊர்வலம் நடத்தியது பற்றி கூறி விட்டனர்.
இதையறிந்ததும் சுவேதாவின் பெற்றோர் பள்ளியில் வந்து தட்டி கேட்டனர். இதையறிந்த மற்ற பெற்றோர்களும் பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை விஜயா கைது செய்யப்பட்டார்.
மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் அப்பள்ளி அரசு அங்கீகாரம் பெறாமல் 19 ஆண்டுகள் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பள்ளியின் அறங்காவலர்களிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 comments:
எங்கள் குழந்தைகள் கே.ஜி. படிக்கும் காலத்திலும் ஹோம் ஒர்க் செய்யாத மாணவர்களை ஒரு ஆசிரியை மேல் சட்டையைக் கழற்றச் செய்வார். தண்டனைகளின் குரூரத்தை ஆசிரியர்களின் மனவக்கிரம் தான் முடிவு செய்கிறது. கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் அரசுக்கும் அவசியம் இருக்க வேண்டும்.
இச்சம்பவத்தில், ஆசிரியையின் போக்கு பள்ளியின் தில்லுமுல்லையும் அம்பலப்படுத்தியது வேடிக்கை. எல்லாம் வெட்ட வெளிச்சமாகும் ஒருநாள் என்று தெரிந்தும் இப்போதெல்லாம் நேர்மை நியாயம் பற்றி யாரும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை என்பது வருத்தத்துக்கு உரியதே.
சரியாக சொன்னீங்கள் நிலாமகள்! உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி! தொடர்ந்து வருகை தாருங்கள் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. நன்றி!
Post a Comment