May 24, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, ஜாமின் மறுக்கப்பட்டு, டில்லி திகார் சிறையில் இருக்கும் மகள் கனிமொழியை கருணாநிதி நேற்று நேரில் சந்தித்தார். நேற்று காலை, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்தார் கருணாநிதி. காலை, 11.30 மணிக்கு, டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், அங்கிருந்து நேராக கான்மார்க்கெட் அருகில் உள்ள தாஜ்மான்சிங் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்தார்.
அங்கு, தி.மு.க ., எம்.பி.,க்கள் சிலருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சிறிய ஓய்வுக்கு பின், மாலை, 5 மணிக்கு, ஓட்டலை விட்டு கிளம்பினார். அவருடன் ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்தன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் சென்றனர்.
இரண்டு கார்கள் மற்றும் ஒரு எஸ்.பி.ஜி., வாகனம் புடைசூழ, திகார் சிறைக்கு சென்ற கருணாநிதி, சரியாக, 5.45 மணிக்கு உள்ளே சென்றார். மீடியாக்கள் குவிந்திருந்த கேட்டை தவிர்த்து விட்டு, வேறுவழியாக, கருணாநிதியும், அவருடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர்.
தன்னை சந்திக்க வந்த தந்தை கருணாநிதியை பார்த்ததும் கனிமொழி சற்று உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு, பயப்படாமல் இருக்கும்படி கருணாநிதி ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் ராஜாவிடமும் சில நிமிடங்கள் பேசிய கருணாநிதி, அவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சரத்குமார் ரெட்டியிடமும் ஆறுதல் தெரிவித்துவிட்டு, தனது, 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு கருணாநிதி வெளியே வந்தார்.
ஓட்டலில் தங்கியிருந்த கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். ஏற்கனவே, கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டியில், சோனியாவை சந்திக்கப் போவதில்லை' என, கூறியிருந்தார். சோனியா, நேற்று ஒரு நாள் அவசரப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். பிரதமர் மன்மோகனும் எத்தியோபியா பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராக, நேற்று, கனிமொழி வந்த போது, அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டில்லி வந்தார்.

2 comments:
கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்
செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில் எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா....
கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு 'இறந்தது என் மகனே அல்ல ' என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?
சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?, காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?; எம்ஜியாரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா?, எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?
நல்லையா தயாபரன்
இந்திரா காந்தியை கொள்ள முயன்றதை மறக்க முடியுமா? வீறான ஊழலை மறக்க முடியுமா? அதில் வீணாக்கிய தமிழர்களின் (அப்பொழுதே) பல நூறு கோடிகளை மறக்க முடியுமா? சர்காரியார் கமிசனை மறக்க முடியுமா? 1970 கள் வரை முரசொலி மாறன் முரசொலியில் வாங்கிய 150 ரூபாய் சம்பளத்தை மறக்க முடியுமா? இன்று உங்களிடம் இருக்கும் சில லட்சம் கோடிகளை மறைக்க முடியுமா? (டீச்சர் ட்ரைனிங் டிப்ளோமா காலேஜ்) ஆரம்பிக்க லைசென்சுக்கு 3 லட்சம்தான் செலவு வரும் ஆனால் பொன்முடி மூலம் ஒவ்வொரு டிப்ளோமா காலேஜுக்கும் 17 லட்சம் லஞ்சம் வாங்கியதை மறைக்க முடியுமா? ஒவ்வொரு தேர்தலுக்கும் கருணாநிதியின் எடுபிடிகள் நகரங்களில் மளிகைக்கடை, ஜவுளி கடை, ரேஷன் கடைகளில் கூட, மற்றும் பெரு நிறுவனங்களில் வசூல் என்ற பெயரில் அடித்த கொள்ளைகளை மறக்க, மறைக்க முடியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக எம்மினம் அழிந்துகொண்டிருந்தபொழுது வீல் சேரிலே விழா என்ற பெயரிலே வசனம் பேசியே அலைந்து கொண்டிருந்ததை மறக்க முடியுமா?
MOHAMED THAMEEM
Post a Comment