APRIL 24, லிபியா நாட்டில் உள்ள 3-வது பெரிய நகரான மிஸ்ராட்டா வை கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றி இருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவம் அந்த நகரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக அப்பாவி மக்கள் மீதும், கிளர்ச்கிக்காரர்கள் மீதும் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பலர் பலியானார்கள்.
அதோடு அந்த நகரத்தை ராணுவம் முற்றுகையிட்டு இருந்தது. இந்த நிலையில் கடாபி எதிர்ப்பாளர்களான கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுவதற்காக லிபியா நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அனுமதி அளித்து இருக்கிறார்.
ஆள் இல்லாத விமானம் மூலம் ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இதற்கிடையில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள மிஸ்ராட்டா நகரில் இருந்து வெளியேறுவது என்று ராணுவம் தீர்மானித்து உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment