Apr 13, 2011

ஹுஸ்னி முபாரக் கைது செய்யப்பட்டார்.

கெய்ரோ: எகிப்து நாட்டில் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகிய சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், தன்னை எதிர்த்து போராடியவர்களுக்கு எதிராக ராணுவத்தை களமிறக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று விசாரணையின்போது ஹுஸ்னி முபாரக்கிற்கு நெஞ்சுவேதனை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

30 ஆண்டுகளாக எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த முபாரக் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து கடந்த பெப்ருவரி 11-ஆம் தேதி பதவி விலகினார்.

No comments: