Feb 19, 2011
தமிழ் பள்ளிகளில் சிங்கள தேசிய கீதம்!!!
பிப் 19: இலங்கையில் தமிழ் பள்ளிகளில் சிங்களத்தில் தேசிய கீதம் பாட கட்டாயப்டுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியாவில், ஒல்லுமடு தமிழ் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அப்பகுதியைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதாகவும், அப்பள்ளி மாணவர்கள் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்படி வலியுறுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. நெடுங்கேணி உள்பட தமிழர்கள் மறுகுடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தை சிங்களத்தில் கட்டாயம் பாட வேண்டும் என்றும் வலியுறுத்தப் படுவதாகவும் மேலும், பள்ளி விழாக்களில் அமைச்சர்களை மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு படையினர் சார்பில் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment