Feb 19, 2011

பார்வதி அம்மாள் மரணமும்!! இந்தியாவின் மனிதாபிமானமும்: ஒரு பார்வை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் இன்று காலையில் யாழ்.வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் காலமானார். தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கட்சியின் செயலாளர் நாயகமும், பார்வதி அம்மாளின் பாதுகாவலராக இருந்து வந்தவருமான முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் இத்தகவலை உறுதிப்படுத்தினார். பார்வதி அம்மாள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நோயால் பீடிக்கப்பட்டு இருந்தார். இறக்கும்போது இவருக்கு வயது-81.

சிந்திக்கவும்: இந்த தருணத்தில் இந்திய அரசின் மனிதாபிமானம் இல்லாத செயலே நமக்கு நினைவிற்கு வருகிறது. ஆறு அரை கோடி தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் படுகொலை செய்யப்படும் பொது பார்த்து கொண்டும், அதற்க்கு ஆயூத உதவிகளும் செய்தார்கள். ஒரு 81 வயது முதியவரின் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்காததன் மூலம் தங்களது மனிதாபிமானத்தை உலகிற்கு நிருபித்தார்கள். உலகில் எந்த நாடும் மருத்துவ உதவி நாடி போனால் அதை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுப்பார்கள். தமிழர்கள் ஒன்றும் இவர்களிடம் இலவச மருத்துவ உதவி கேட்டு நிற்கவில்லை. இதன் மூலம் இந்தியாவை மனிதர்கள் ஆட்சி செய்யவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஒரு முதியவரின் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி மறுத்தது இந்தியாவில் மனித உரிமைகள் செத்து விட்டதையே காட்டுகிறது. கோடிகணக்கில் மக்கள் பணத்தை கொள்ளை அடிபவர்களுக்கும் , ரவுடிகளுக்கும், மத கலவரங்கள் நடத்தும் சங்கபரிவார்களுக்கும், போலீஸ் ரவுடிகளுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் ஏற்ற நாடு இந்தியா? என்ற நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். அம்பானிக்கும், மிட்டளுக்கும், டாடா க்கும் தான் இங்கு எல்லா வசதிகளும் சுதந்திரமும்! மக்களுக்கு இல்லை.

அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

No comments: