Feb 21, 2011

சாமியார் பிரேமானந்தா மரணமும்!! படிப்பினையும்!!


சென்னை, பிப்.21: சாமியார் பிரேமானந்தா இன்று சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். திருச்சி பாத்திமாநகர் ஆசிரமத்தில் உள்ள பெண்களை மயக்கி கற்பழித்த குற்றம், அதில் பல பெயரை கொலை செய்தது போன்ற வழக்கில் இரட்டை ஆயூள் தண்டனை பெற்று சிறையில் அடைக்க பட்டார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பரோலில் வெளிவந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை தேவைப்படவே சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

சிந்திக்கவும்: ஒருவர் மரணம் அடைந்த பின்னால் மக்கள் சொல்வார்கள் இவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்க மாட்டாரா? வாழ்ந்திருந்தால் இன்னும் இவரால் இந்த உலகுக்கோ, மக்களுக்கோ, பிரோஜனங்கள் நடந்திருக்கும் என்று. ஆனால் பாருங்கள் பிரேமானந்தா மரணித்ததும் அவரை பற்றி மக்கள் பேசுவதை. இவர் எந்த பணத்திற்கும், அற்ப சுகங்களுக்கும் ஆசை பட்டாரோ, அது எதுவும் அவரோடு கூட போக வில்லை. இதுதான் மனிதன் வாழ்க்கை தர்மம். நாம் வாழும் காலத்தில் ஒரு மரத்தையாவது நாட்டிவிட்டு போக வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் என்றால்? அதனை கொண்டு மக்கள் நிழல் பெறுவார்கள், பல உயிரினங்கள் அதை கொண்டு பயன் பெரும். ஐரோப்பிய நாடுகள் இப்படி? எல்லா விசயங்களிலும் வளம் பெற்று இருக்கிறது என்றால்? அந்நாடுகளின் அரசியல்வாதிகள் ஊழல் இல்லாமல் தங்களது நாடுகளை வளப்படுதினார்கள். நமது நாட்டில் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதற்காக ஒதுக்கபடும் பணத்தை " வெறி நாய்கள் மாதிரி" நமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் குதறி தின்றுவிடுவார்கள். மீதம்தான் அந்த திட்டங்களுக்கு போய் சேரும். இதனால்தான் நம் நாடு எல்லா வளங்களும் இருந்து இப்படி இருக்கிறது. மேலும் பிரேமானந்தாவுக்கு கொடுக்கப்பட்டது போல் காஞ்சி சங்கராச்சாரி, நித்யானந்தா, கல்கி பகவான் போன்ற சாமியார்களுக்கும், ரவுடிகளுக்கும், போலீஸ் பொறுக்கிகளுக்கும், ஜாதி மற்றும் மதமாச்சாரியங்களை உண்டாக்கி கலவரம் நடத்தி பொது அமைதியை கேடுபவர்களுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இரட்டை தூக்கு தண்டனை கொடுக்கபட்டால் நமது நாடு உலகின் தலை சிறந்த நாடுகளில் ஒன்றாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.

சிந்திக்கவும் : அன்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

No comments: