ஊட்டி, அக்.20: விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு குறித்த மத்திய தீர்ப்பாயத்தின் மூன்றாவது அமர்வு இன்று ஊட்டியில் நடைபெற்றது. இந்த அமர்வில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதில் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் நேரில் ஆஜராகி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது குறித்த மத்திய தீர்ப்பாயத்தின் மூன்றாவது அமர்வு, இன்று ஊட்டியில் நடைபெற்றது. இந்த அமர்வின்போது நேரில் ஆஜரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் இந்த விவகாரத்தில் தீர்ப்பாயத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அதிகாரி பி.கே மிஸ்ராவிடம் குறுக்கு விசாரணை நடந்தது. பின்னர், மத்திய தீர்ப்பாயத்தின் இந்தக் கூட்டம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment