Oct 22, 2010
பிரிட்டனைச் சேர்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.
லண்டன், அக்.22- பிரிட்டனைச் சேர்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த நீர்மூழ்கிக் கப்பலில் சுமார் 100 ஊழியர்கள் உள்ளனர்.
எனினும், இதில் யாரும் காயமடையவில்லை என்றும், இந்த விபத்தால் வேறு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
100 மீட்டர் நீளம் உள்ள "ஹெச்எம்எஸ் அஸ்டூட்" என்னும் அந்த நவீன நீர்மூழ்கிக் கப்பல் ஸ்காட்லாந்து அருகே மேற்கு கடலோரப் பகுதியில் இன்று விபத்தில் சிக்கியது.
இது சிறிய விபத்து தான் என்றும், இதனால் எந்த சுற்றுச்சூழல் ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அணுசக்தியால் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் 25 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாகும். அதன் ஆயுட்காலம் முழுவதும் மீண்டும் எரிசக்தியை நிரப்பத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
phentermine 37 5mg phentermine mail order - phentermine 37.5
Post a Comment