அனுப்புனர்:
தமிழருவி, மனாமா தமிழ் சங்கம், பக்ரைன்.
பெறுனர்:
ஆசிரியர், தினமலர்.
பொருள்:மீண்டும் மீண்டும் தொடரும் உன் விசம பிரசாரம் நிறுத்த வேண்டி
வழக்கம் போல் அன்பு தினமலரே உனது காவி கைக்கூலி பிரசாரத்தை துவக்க இம்முறை செந்தடி பிடித்து ஆட்சி நடத்தும் சீன கைக்கூலி கேரள ஆட்சியாளர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.
இடதுசாரியும் வலதுசாரிகளும் ஒரே குட்டயில் ஊறிய மட்டைகள் என்பதும், குஜராத்திலும் கர்நாடகாவிலும் எப்படி காவி கட்சியினர் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்களையும் வன்முறைகளையும், குண்டுவெடிப்பு நாடகங்களையும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக ஏகாதியபத்திய முதலாளித்துவ அடிவருடி கொள்கைகளையும் செயல்படுத்தி வருகின்றனரோ அதில் சற்றும் குறைந்திடாதவர்கள்தான் மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் ஆட்சி செய்துவரும் குருதிகரம் படிந்த கம்யூனிஸ்ட்கள்.
இவர்களின் சிறுபான்மை தொழிலாளிகளை ஏமாற்றும் வார்த்தை ஜாலங்குக்கு விடை கொடுக்க வந்த ஓர் வளர்ந்து வரும் முன்னணி ஏற்கனவே 2009 நாடாளுமன்ற தேர்தலில் நல்ல பாடம் சொல்லி கொடுத்துள்ளது.
அடுத்த மாதம் நடக்க உள்ள கேரள உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கை மற்றும் ஓட்டு வங்கிக்கும் வளர்ந்து வரும் முன்னனியின் கட்சி வேட்டு வைத்து விடுமோ என்று பயந்து அரசு இயந்திரத்தை காவல்துறை வளர்த்து வரும் முன்னணிக்கு எதிராக பயன்படுதிவருவதாக கேரள அரசியல் ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தில் காவி கும்பல்களிடத்தில் கைப்பற்றப்பட்ட வெடி குண்டுகள் பற்றியும் அவ்வழக்குகள் சம்பந்தமாகவும் வாய்மூடி மௌனம் காத்த கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கு கைமாறாக; நபிகளார் பற்றி கொச்சையாக எழுதிய பொழுது அதனை சரியாக கையாளாது விட்டு வைத்த ஆட்சியாளர்கள் இன்று முஸ்லிம்களுக்கு ஏதிராக கிறித்துவர்களை தூண்டுவதற்காகவும் அதன் மூலம் அரசியல் இலாபம் அடையவும் அதற்கு ஏற்கனவே நன்றிகடன் பாக்கிவைதுள்ள கேரளாவில் காணமல் போய்வரும் காவிப் பயங்கரவாதிகள் ஆசிரியரின் கையை வெட்டி இருக்காலம் என்று மனித உரிமை ஆவலர்கள் சந்தேகிக்கின்ற வேலையில்; வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததை போன்று உனக்கு இப்பிரச்சினை கிடைத்துள்ளது.
எத்தனை நாள்தான் இந்த பொய் பிரச்சாரங்களையும் உளவு துறையின் கட்டு கதைகளையும் பரப்பி கொண்டிருப்பாய், இது போன்ற கதைகளை இனியும் நம்ப நாங்கள் தயாரில்லை .நடுநிலை சேதி இருந்தால் எழுது இல்லை என்றால் சங்க பரிவாரத்தின் முழுநேர ஊழியனகவே மாறிவிடு
அன்புடன்
தமிழருவி
மனாமா தமிழ் சங்கம்
பக்ரைன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
GOOD SERUPPADI TO DINAMALAR
Post a Comment