Jan 10, 2010

சீனா பெரிய அளவில் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது


புதுடெல்லி:கடந்த 20 வருடங்களில் சீனா பெரிய அளவில் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது.

கடந்த மாதம் லடாக்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கெடுத்த ஜம்முகஷ்மீர் அரசு, உள்துறை அமைச்சகம், ராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த அறிக்கையின் கூறப்பட்டுள்ளவைப் பற்றி விவாதித்தனர்.

சீனாவுடனானL.A.C(Line of Actual Control) அடங்கிய வரைப்படம் பல அரசு ஏஜன்சிகளிடம் வெவ்வேறான முறையில் உள்ளதாகவும் இக்கூட்டத்தில் கூறப்பட்டது. லே கமிசனர் எ.கே.ஷாஹுவின் தலைமையில்தான் இக்கூட்டம் நடந்தது.சரியான பூகோளவரைப்படம் இல்லையென்றாலும் இந்திய நிலபரப்பின் அதிகபகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதை இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒப்புக்கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறும் இந்த ஆக்கிரமிப்பு கடந்த 20-25 வருடங்களுக்கிடையே பெரிய அளவில் இந்தியா நிலப்பரப்புபகுதிகள் சீனா வசம் சென்றுள்ளது. இதுபற்றிய சரியான பூகோளவரைப்படம் இல்லாததும் சரியான கொள்கையை வகுக்காததும் சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு காரணமானது. இது இக்கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பில்(minutes) கூறப்பட்டுள்ளது.

லடாக்கோடு சேர்ந்த நியோமா பகுதியில் தோக்பக்கில் இந்தியாவைச் சார்ந்த ஆட்டிடையர்கள் சீனா ராணுவத்தினரிடமிருந்து சந்திக்கும் பிரச்சனைகளை விவாதித்தலும் இக்கூட்டத்தின் நோக்கமாகும்.கடந்த டிசம்பரில் ஆட்டிடையர்களின் கூடாரங்களை சீனா ராணுவத்தினர் அழித்துள்ளனர்.மேலும் அவர்களை அவ்விடத்திலிருந்து காலிச் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.நியோமா சப்-டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் செரிங் நோர்பு தயாராக்கிய அறிக்கையில் இந்தியா LAC யிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் நியோமாவிலிருந்து சீனா இந்திய ஆட்டிடையர்களை விரட்டவு செய்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். "முற்றமாக கைப்பற்றுவதைவிட அங்குலமாக கைப்பற்றுவதுதான் சிறந்தது" என்ற சீன பழமொழிக்கேற்ப சீனா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

ஜம்மு கஷ்மீர் அரசுதான் நோர்புவிடம் இது சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்க கோரியது.1984 இல் நாங்சாங், 1991 இல் நகூங், 1992 இல் லூங்மசெர்திங் ஆகிய பிரதேசங்களை சொந்தமாக்கியதுபோல் நியோமாவையும் கைப்பற்ற சீனா முயற்சிச் செய்துவருகிறது.

கடந்த வருடம் மவ்ண்ட் கியூக் அருகில் 1.5 கிலோமீட்டர் நிலத்தை ஆக்கிரமித்த சீனா தனதுடையது என அடையாளப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் சீனா விமானங்கள் எல்லையில் அத்துமீறியது அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

No comments: