
இந்தியர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் தாராளமாக நடந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம் என்று அந்நாட்டு பிரதமர் நஜீப்தன் ரசாக் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மலேசியாவுக்கு சுற்றுலா வந்த 40 ஆயிரம் இந்தியர்கள் மாயமாகி உள்ளனர். இந்த விவரம் சுற்றுலா விசா காலவதியான பிறகு எடுக்கப்பட்ட அரசின் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் இந்தியா திரும்பி இருக்கலாம் அல்லது இங்கேயே தங்கியிருக்கலாம். இதுபோன்ற பிரச்சினையில் சென்னையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால்தான் ஏற்படுகிறது.
டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து வருபவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவில் இருந்து வரும் பலர் இங்குள்ள கோவில்களில் பூசாரிகளாகவும் மற்றும் சலவை தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.
சென்னையில் இருந்து வருபவர்கள்தான் இங்கு தங்கி விடுகிறார்கள். அவர்களால்தான் பிரச்சினையே ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். மலேசிய பிரதமர் நஜீப் வருகிற 19-ந்தேதி 3 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment