Jul 23, 2011

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உடன் சுப்ரமணிய சுவாமிக்கு தொடர்பு!

JULY 24, புதுடெல்லி: அரசியல் கோமாளியாக முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கஷ்மீர் சுதந்திரத்திற்காக பாடுபட ஐ.எஸ்.ஐ அளித்த பணத்துடன் கைதுச் செய்யப்பட்டதாக கூறப்படும் டாக்டர். குலாம் நபி ஃபாய் உடன் கஷ்மீர் தொடர்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கில் சுப்ரமணியம் சுவாமி கலந்துக்கொண்டுள்ளார். 2003-ஆம் ஆண்டு வாஷிங்டனில் அமெரிக்க செனட் கட்டிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய சுப்ரமணிய சுவாமி கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்தினார்.

குலாம் நபி ஃபாயியின் தலைமையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கஷ்மீர் அமெரிக்க கவுன்சில்தான் கருத்தரங்கை ஏற்பாடுச்செய்தது. ஆனால் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என தெரியாமல் கருத்தரங்கில் கலந்துக் கொண்டதாக சமாளிக்கிறார் கோமாளி சுவாமி. இந்நிகழ்ச்சியைக் குறித்து இந்திய தூதரகத்தில் விசாரணைச் செய்தபோது இந்தியாவிற்கு எதிரான அமைப்பு என பதில் கிடைத்ததாகவும், ஆனால் ஐ.எஸ்.ஐ தொடர்பு கிடையாது என தெரிவித்ததாகவும் சுவாமி கூறுகிறார்.

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் வகையில் அரசியல் புகலிடம் இல்லாமல் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் தஞ்சம் அடைந்துள்ள சுப்ரமணியம் சுவாமி எழுதிய கட்டுரை பெரும் விவாதத்தை கிளப்பிய வேளையில் ஐ.எஸ்.ஐ நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது. சுப்ரமணியம் சுவாமி முஸ்லிம்களுக்கு எதிராக துவேசமான கட்டுரையில், சில ஆண்டுகளில் தாலிபான் பாகிஸ்தானை தனது ஆளுகைக்கு கொண்டுவருமாம்.

பின்னர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ்லிம்கள் முயல்வார்கள் என எழுதியுள்ளார். மேலும், இந்திய அரசியல் சட்டத்தையும், சட்டத்தையும் மீறி ஹிந்துக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைய முன்வர வேண்டுமாம். முஸ்லிம்களின் நோக்கம் ஹிந்துக்களை கொல்வதும், கோயில்களை தகர்ப்பதும்தான். இந்தியா ஹிந்து நாடு என அங்கீகரிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்- என தொடர்கிறது அரசியல் அனாதையாகி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் அனுதாபத்தை பெற துடிக்கும் சுப்ரமணிய சுவாமியின் கட்டுரை. இக்கட்டுரையின் பெயரில் சுப்ரமணிய சுவாமியின் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக மும்பை போலீஸ் நேற்று முன்தினம் கூறியிருந்தது.

பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா ரூ.1 லட்சம் கோடி ஊழல்!

பெங்களூர், ஜூலை 24: சட்ட விரோத சுரங்கத் தொழில் ஊழல் விவகாரம் தொடர்பான லோக் ஆயுக்த அறிக்கையில் எடியூரப்பா பெயர் இடம் பெற்றுள்ளதால், முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்யக் வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை தர்னா நடைபெற்றது.

சுதந்திரப் பூங்காவில் நடைபெற்ற இப் போராட்டத்தை மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வர் தொடக்கி வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது சித்தராமையா பேசியது: கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சட்டவிரோத சுரங்கத் தொழிலின் மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்றார்.

மேலும் பாரதிய ஜனதா ஆட்சியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாகவும், எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகவும் குறிப்பிட்டார். கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது.

பாரதிய ஜனதா கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, பள்ளிகளில் பகவத் கீதையைப் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வந்தது. இதற்க்கு பதில் அளித்த அவர் பள்ளிகளில் பகவத் கீதையைப் படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதை சிலர் எதிர்க்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் பேசாமல் நாட்டை விட்டு வெளியேறி விடலாம்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கக் கல்வியின் தரமே இந்தியாவின் எதிர்காலம்! கலாம்!

உதய்பூர்,  ஜூலை 24: தொடக்கக் கல்வியின் தரத்தைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.

ஆரம்பக் கல்வியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும்.  படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்பக் கல்வியை மாற்றி அமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

மேலும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகள் அனுபவித்துப் படிக்கும் வகையிலும், தங்களை முழுவதுமாக அதில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்றார்.

மேலும், லட்சியத்தை அடைவதற்கு மிகவும் அடிப்படையான நேர மேலாண்மை குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருவது அவசியம். அதன்படி, சிறு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோளை ஏற்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை அடைவதற்கான ஊக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது, பயங்கரவாதம்,  ஊழல்,  இந்திய-பாகிஸ்தான் உறவு ஆகியவை குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அப்துல் கலாம் பதிலளித்தார்.

திமுக இரும்பு கோட்டை அதை அசைக்க முடியாது! கருணாநிதி!

JULY 24, திமுக செயற்குழு கூட்டம் கோவையில் அறிஞர் அண்ணா வளாகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர், ’’எப்படிப்பட்ட முக்கியமான நேரத்திலே நாம் இங்கே கூடியிருக்கின்றோம் என்பதை நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இன்று நான், இங்கே எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம் பார்க்கின்றேன்.

அவர்களைப் பார்த்து, எப்போது வந்தீர்கள் என்று கேட்பதற்குக்கூட என்னுடைய மனம் அவ்வளவு துணிவைப் பெறவில்லை. அந்தளவிற்கு தேடப்படுபவர்களாக, வேட்டையாடப் படுபவர்களாக விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் வா என்று அழைக்கப்படுவர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தார் - அண்ணாவின் தம்பிகள் இங்கே அமர்ந்திருக்கின்ற காட்சியை நான் காணுகின்றேன்.

அதற்காக நாம், நிலைகுலைந்து போய்விடவில்லை. இந்த நிலையிலும்கூட, நம்முடைய செயற்குழுக் கூட்டத்திற்கு, இந்த மண்டபம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு, இங்கே வந்திருக்கின்றீர்கள் என்றால், தி.மு.க.வை யாரும், எந்த நேரத்திலும் அழித்துவிட முடியாது. எவரும் அழிக்க முடியாது.

சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என, எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்க்கட்சியாகக் கூட இல்லாமல், எதிர்க்கட்சி குழுக்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளோம்.  யாரால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை விட, நாமே தேடிக் கொண்ட முடிவு என்பதே உண்மை. இந்த உண்மையை கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், நான், அன்பழகன் மற்றும் கட்சியினுடைய முன்னோடிகள் அனைவரும் புண்பட்டிருக்கிறோம்.

தி.மு.க.,வின் ஆற்றல் பெருகி மீண்டும் வருவோம். தேர்தல் வெற்றியைக் கணக்கிட்டு தி.மு.க.,வை ஆரம்பிக்க வில்லை. நமது இனம் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக துவக்கினோம்.  ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியைக் கொண்டு, அக்கட்சியினுடைய கொள்கையை நிர்ணயிக்க முடியாது. இருந்தாலும், இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கும் தோல்வி.

அதனால், தி.மு.க.,வை அழித்து விட்டோம் என, முழங்கிக் கொண்டுள்ளனர். தி.மு.க., சந்திக்காத தோல்வியே இல்லை. மீண்டும் நாம் ஆட்சி அமைக்கும் காலம் வராமல் போகாது.  தி.மு.க., எக்கு கோட்டை. அதை ஆட்டவோ, அசைக்கவோ யாராலும் முடியாது. அண்ணாதுரை காலத்திலிருந்து எவ்வளவோ அக்கிரமங்களை, போட்டிகளை சந்தித்துள்ளோம். இன்றும் அதை எதிர்கொள்ள உள்ளோம்’’என்று பேசினார்.

Jul 22, 2011

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு! பாபுலர் ஃ ப்ரண்ட் ஆலோசனை!

JULY 24, முஸ்லிம் சமுதாயத்தின் நியாயமான பிரச்சனையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் சிறுபான்மை துறை அமைச்சர் சல்வாம் குர்ஷித் அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனைகள் முடிவுக்கு வந்துவிட்டது, அனைத்து அமைச்சரகம், அரசு நிறுவனத்தின் இறுதி ஆலோசனையை கேட்ட பின்பு உள்துறை அமைச்சகம் இறுதி அறிக்கையை சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது என அமைச்சர் சொன்னதை கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கம் மற்றும் ஆலோசனை இந்த நாட்டில் வாழ்ந்து வரும் எல்லா முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதை உள்ளடக்கியதாகும். அதே சமயத்தில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட். இ.எம் அப்துர் ரஹ்மான் அவர்களின் கடிதத்தின் சாராம்சம்,

1. எல்லா மாநிலங்களிளுள்ள அனைத்து முஸ்லிம்களையும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (SEBC) என்றோ அல்லது ஒட்டுமொத்தமாக இதர பிற்படுத்தப்பட்ட (OBC) வகுப்பினர் என்றோ அறிவிக்க வேண்டும்.

2. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையின்படி மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் இதர மத சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசு ஆணையைக் கொண்டு மத்திய அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

3. பணி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கையின் போது முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் வரக்கூடியவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர்களை விட முஸ்லிம்களாக வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

4. அரசியல் சாசன பிரிவு 341, 1950 சட்ட திருத்தத்தின்படி தலித்துகளுக்கு இணையான தொழில்புரியும் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், பட்டியல் வகுப்பினரின் மொத்த இடஒதுக்கீட்டை விகிதாச்சாரத்திற்கேற்றாற் போல் மேம்படுத்த வேண்டும்.

5. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பட்டியலில் இருந்து பிரித்து முஸ்லிம்களுக்கு 10% தனி இட ஒதுக்கீடு தர வேண்டும். 27% உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டால் முஸ்லிம்களின் விகிதத்திற்கு ஏற்றாற் போல் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

6. அதிகரிக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட (OBC Quota ) வில் முஸ்லிம்கள் சேர்க்கப்ட்டால் கேரளா, கர்நாடகத்தில் பின்பற்றப்படுவதைப் போல் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ரோஸ்டர் சுழற்சி அடிப்படையில் சேர்க்கையும், பணி நியமனமும் அமைய வேண்டும்.

7. இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் 50% உச்சவரம்பை தமிழகத்தில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டைப்போல் சட்ட திருத்தங்கள் (சட்டமன்ற நடவடிக்கைகள்) மூலம் சரிசெய்யலாம். ஏற்கனவே இருக்கக்கூடிய 49.5% இட ஒதுக்கீட்டில் (sc/st 22.5% and obc 27% ) புதிய 10% முஸ்லிம் இட ஒதுக்கீட்டை இணைக்க இது அவசியம்.

27% இருக்கும் ஓ.பி.சி பட்டியலை அதிகரிக்காமல் தற்போது ஓ.பி.சி பட்டியலில் இல்லாத முஸ்லிம்களை அந்த பட்டியலில் இணைக்க முயற்சி செய்தால் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்; இது முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு உகந்த சூழலை ஏற்படுத்தாது என்று பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவிலும் அவர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் முஸ்லிம் என்று புதிய பிரிவை இணைத்தாலும் இதே பிரச்சனைதான் ஏற்படும் எனபதையும் சுட்டிக்காட்டினார். எனவே இடஒதுக்கீட்டிற்கான அடுத்த கட்ட போராட்டத்தை, இப்பிரச்சினையில் ஆர்வமுள்ள பிற சமுதாய மற்றும் சமூக இயக்கங்களுடன் இணைந்து நடத்த வேண்டும் என சமீபத்தில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஜாதிக்காய் அதன் மருத்துவகுணமும் !!!

July 23,பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்: ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா - டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

அம்மை கொப்புளங்கள் சரியாகும்: அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்: ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தசைப்பிடிப்பை நீக்கும்: ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்­ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

மனித உரிமை போராளியை எதிர்த்த மனிதகுல விரோதிகள்!

JULY 23,  திருச்சூர் : கேரளாவின் கலாச்சார நகரமாக கருதப்படும் திருச்சூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகைத்தந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய்க்கு எதிராக பா.ஜ.கவை சார்ந்த  ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சூரில் சாகித்ய அகாடமி அரங்கில் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு வருகைத்தந்தார் அருந்ததிராய். அவருக்கு எதிராக பா.ஜ.க பாசிச  ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கறுத்த முகமூடி அணிந்து கொண்டு வெளியே போ (GO BACK )’ என கோஷம் எழுப்பி கொண்டு அவரை தாக்க முயற்சி செய்தனர்.

அருந்ததிராய் பேராசிரியர் ஸாரா ஜோசப்புடன் அரங்கிற்கு வரும்பொழுது பா.ஜ.கவினர்’ கஷ்மீர் இந்தியாவின் தலைப்பாகை’ என எழுதிய போர்டுகளுடன் வந்து காஷ்மீருக்கு ஆதரவு தெரிவிக்கும் அருந்ததியே வெளியேறு’ என கோஷமிட்டனர்.

சிந்திக்கவும்: இந்த ஹிந்துத்துவா பண்டாரங்கள் அருந்ததிராய் பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கிறது. அவர் உலகம் போற்றும் சிறந்த சமூக சிந்தனையாளர், மனித உரிமை ஆர்வலர். இவர்களோ உலகம் தூற்றும் ஹிட்லரின் பாசிச சிந்தனை படைத்த ஹிந்துத்துவா சிந்தனை வாதிகள்.

அருந்ததிராய் ஒரு மனித உரிமை போராளி இவர்களோ மனிதர்களை மதக்கலவரங்கள் நடத்தி வேட்டையாடும் நரபலி நாயகர்கள். சூரியனை பார்த்து நாய் குலைத்ததாம் என்ற தமிழ் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. பழமொழி சொன்னா சும்மா ஏன் எதுக்கு என்று கேட்கக்கூடாது பழமொழி சொன்னா அனுபவிக்கனும். அப்படியே அனுபவிச்சி பாருங்கள் புரியும்.
நட்புடன் மலர்விழி.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அசத்தும் அரசு பள்ளிக்கூடம்!

JULY 23, மேட்டுப்பாளையம்: "டிப்-டாப்' சீருடை, லேப்-டாப் கம்ப்யூட்டர், பவர்-பாயின்ட் படிப்பு, நுனி நாக்கில் ஆங்கிலம் என அசத்துகின்றனர், அந்த பள்ளியின் மாணவர்கள். இவர்கள் யாரும் ஊட்டி சர்வதேச பள்ளிகளில் படிக்க வில்லை கோவை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் தான்.

தனியார் பள்ளிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஹைடெக் ஆக வளர்ந்து வருகிறது, இந்த பள்ளி. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தன்னை அடையாளம் காட்டி வருகிறது. மாணவர்கள் அழகான சீருடை அணிந்து, மிடுக்கான தோற்றத்துடன், பள்ளிக்கு வருகின்றனர். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், பவர் பாயின்ட் புரோஜக்டரில் ஆசிரியர்கள் ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர்.

மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, மாணவர்கள் ஆங்கிலம் பேசுவது அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியை கூறியதாவது: இப்பள்ளியில் காந்தவயல், காந்தையூர், உளியூர் ஆகிய மலைவாழ் கிராமங்கள் மற்றும் லிங்காபுரத்தை சேர்ந்த குழந்தைகள் படிக்கின்றனர். மொத்த மாணவர்களில், 50 சதவீதம்பேர் மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள்.

நன்கொடை பெற்று அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.  தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்கை, நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் திறன் வளர்க்க அறிவியல், கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் உள்ளன. "டிவிடி' புரோஜக்டரில் திரையிட்டு கற்பிக்கப்படுவதால், நன்கு ஆங்கிலம் கற்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வம் குறையாமல் வருகின்றனர்.

வாழ்க்கை கல்வியை வளப்படுத்தும் வகையில் களப்பயணம், யோகா, ஸ்போக்கன் இங்க்லீஷ், ஓவியப் பயிற்சி, இசையுடன் கூடிய கூட்டு உடற்பயிற்சி, கணிதக் கல்வி, ஆடல்பாடல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்தாண்டு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள்,  பரிசுகள் பெற்றனர்.  ஆசிரியர்களின் கடும் முயற்சியால், இன்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. ஆசிரியர்கள் நன்கு பாடம் சொல்லி கொடுப்பதால், மூன்று மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

15 ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் கடவுள்!

JULY 23, பாட்னா:  பீகார் மாநிலத்தில், கடந்த 15 ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் அனுமன் சிலையை விரைவில் மீட்டு வந்து, கோவிலில் வைப்பதாக, முன்னாள் போலீஸ் அதிகாரி களமிறங்கியுள்ளார். பீகார் மாநிலம், போஜ்புரி மாவட்டத்தில் பாதாரா பகுதியில் உள்ள கவுண்டி கிராமத்தில், 175 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்காஜீ கோவில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள பழமையான அனுமன் சிலை, கடந்த 1994ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கொள்ளையடிக்கப்பட்டது. எனினும், தீவிர விசாரணை நடத்திய கிருஷ்ணா நகர் போலீசார், குற்றவாளிகளை கைது செய்ததுடன், அனுமன் சிலையையும் உடனடியாக மீட்டனர். பின்னர், அந்த சிலை கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டது.

இந்த சிலை கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், மீட்கப்பட்ட அனுமன் சிலையை, கோவிலில் பழைய இடத்திலேயே வைக்க, ஊர்க்காரர்கள் முடிவு செய்து கோர்ட்டை அணுகினர். சர்வதேச மார்க்கெட்டில், அந்த சிலையின் விலை 3 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 எனவே, 45 லட்ச ரூபாய் பிணைய தொகையை கோர்ட்டில் கட்டிவிட்டு, சொந்த பொறுப்பில் சிலையை எடுத்துச் சென்று கோவிலில் வைக்கலாம் என்று, கோர்ட் கூறிவிட்டது. அவ்வளவு பெரிய தொகையை, யாரும் சொந்த செலவிலிருந்து செலுத்த முன்வரவில்லை.  எனவே, கடந்த 15 ஆண்டுகளாக, அனுமன் சிலை போலீஸ் பாதுகாப்பில், கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது.

சிந்திக்கவும்: அனுமாருக்கு வந்த சோதனையா? கடவுளே போலீஸ் பாதுகாப்பில் இருந்தால் இந்த உலகை காப்பாற்றுவது யார்? தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாத ஒரு கடவுள் எப்படி மனிதர்களை பாதுகாக்கப்போகிறார் தெரியவில்லை. இந்து கடவுள்களை திருடி வெளிநாட்டுகாரர்களுக்கு விற்றுவிடுகிறார்கள் இந்த இந்துமத கடவுள்களும் வெள்ளைக்காரன் வீட்டு வரவேற்ப்பு அறையை அலங்காரம் செய்கிறார். இதை சொன்னால் நாத்திகன் என்று சண்டைக்கு வருவார்கள். எதற்கு வீண் வம்பு!

வெடிகுண்டு மிரட்டலை போலீஸ் எப்படி கண்டு பிடித்தது?

JULY 23, அதிமுக பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிக்கும் என கட்சித் தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த, எலக்ட்ரிகல் கடை உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, ராயப்பேட்டை,  அவ்வை சண்முகம் சாலையில், அ.தி.மு.க., அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கடந்த 17ம் தேதி, பிற்பகல் 3.30 மணிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், "அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடக்கும் இடங்களில் குண்டு வெடிக்கும்' என, மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதியப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

திண்டுக்கல், செம்பட்டி, பச்சமலைக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய ஜெயகணேஷ் என்பவர், பாண்டியம்மாள் என்பவரின் அடையாளச் சான்றை, திண்டுக்கலைச் சேர்ந்த பாலாஜி மற்றும் கார்த்திக் ராஜாவிடம் ஒப்படைத்துள்ளார் . பின்னர், அந்த சான்றிதழை இருவரும் சேர்ந்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில், போலியாக சிம் கார்டு வாங்குவதற்கு துரைராஜ் என்பவரிடம் கொடுத்துள்ளனர். துரைராஜ், சிம் கார்டு வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதை பயன்படுத்தி, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிக்கும் என்று அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கார்த்திக் ராஜாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில், மிரட்டல் விடுக்க பயன்படுத்திய மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்த கார்த்திக் ராஜா, திண்டுக்கல் நாகல் நகரில் மொபைல் மற்றும் எலக்ட்ரிகல் கடை வைத்துள்ளார்.

இலங்கைக்கான நிதியுதவி ரத்து: அமெரிக்கா முடிவு!!!

ஜூலை 23,வாஷிங்டன்: இலங்கையில் 2009ல் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால், அந்நாட்டிற்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது.

இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் நிகழ்ந்த இறுதிக் கட்டப் போரில், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாகவும், போர்க் குற்றங்களில் சிங்கள ராணுவம் ஈடுபட்டதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. போர்க் குற்றங்கள் தொடர்பாக, பிரிட்டனின் "சேனல் 4' செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சிகள், இக்குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுவளித்தன.

இந்நிலையில், 2010ம் நிதியாண்டில் இலங்கைக்கு 13 மில்லியன் நிதியுதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டது. அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகம் வந்த போது, முதல்வர் ஜெயலலிதா இலங்கை விவகாரம் குறித்த, தனது கவலையைத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அமெரிக்கா உதவும் என, ஹிலாரி உறுதியளித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி, மனித உரிமை மீறல் விவகாரத்தின் அடிப்படையில், இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான ஓட்டெடுப்பு நடந்த போது, "சேனல் 4' வெளியிட்ட வீடியோ காட்சிகள் எம்.பி.,களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

இந்தத் தடையை வரவேற்றுள்ள பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி, 2009 போர் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு தான் பொறுப்பு என, திட்டவட்டமாகத் தெரிவித்தது. இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்; பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்; காணாமல் போன பத்திரிகையாளர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.

இவற்றில் இலங்கை அரசின் நேர்மையான செயல்பாடுகளை ஒபாமா அரசு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், அமெரிக்கா தனது நிதியுதவியை மீண்டும் வழங்கும். போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்பட மாட்டாது.

Jul 21, 2011

பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது!

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற நிலையை மாற்றி, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டதிருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பெண்கள் என்று வருகின்ற இடத்தில் எல்லாம், கிராமப்புற பெண்கள் என வரும் வகையில், அரசியல் சட்டத்தை 110வது முறையாக திருத்தம் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.  பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு தற்போது மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீத இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

இதை மாற்றி, பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பாதிக்கு பாதி இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, பெண்களுக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் மசோதா, பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் பினாமி நில பரிமாற்றங்களை தடுக்க புதிய சட்டம் : பினாமி நில பரிமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கும் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. பினாமி ஆள் என்றால் என்ன? பினாமி சொத்துக்களை அடையாளம் காண்பது எப்படி? என்பது உள்ளிட்ட பல விஷயங்களையும் ஆராய்ந்து, அதன்பிறகு இதற்கான சட்டம் இறுதி பெறும். இந்த சட்டம், சிவில் கோர்ட் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும். இருப்பினும், பரம்பரை சொத்துக்களை அவரவர் தலைமுறைகளில் மாற்றிக் கொள்வதற்கு இந்த சட்டம் எந்த தடையும் செய்யாது.

இலங்கையை புறக்கணிப்போம் விழ்ப்புணர்வு போராட்டம்!

JULY 22, சிறிலங்காவை புறக்கணிப்போம் எனும் விழிப்புணர்வு போராட்டம், புலம்பெயர் தமிழர்களால் வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட இந்த விழிப்புணர்வு போராட்டம் பலரது கவனத்தை கவர்ந்தது. ஏற்கனவே, சென்னையில் உள்ள பெருவர்த்தக மையங்களுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டம் முன்னெடுப்பு, இந்தியாவின் பல முன்னணி ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது.

சென்னையைத் தொடர்ந்து டெல்லி, மும்பை என இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த விழிப்பூட்டல் பரப்புரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். பள்ளிமாணவர்கள,; பல்கலைக்கழக சமூகம் என இளைஞர்களை முன்னிறுத்திதான ஒரு மக்கள் இயக்கமாக, இப்பரப்புரையை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருதாகவும் தெரிவித்தார். பொருட்கள், ஆடைகள்,  விளையாட்டு, விமானசேவை, உல்லாச பயணம் உட்பட பலவகையிலும் சிறிலங்காவை புறக்கணிக்கும் விழிப்பூட்டல் பரப்புரைகள், இக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

முஸ்லிம் பெண்களை குறிவைக்கும் பஜ்ரங்தள் அமைப்பு!

JULY 22, கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர். மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங்தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர்.

புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள் தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.

கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார். இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களையும் அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் நீதியில் துன்புறுத்தியதையும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளான்.

தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விகாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார் .மேலும், இதை போலீசில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்று விடப்போவதாக தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர். புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சிந்திக்கவும்: முஸ்லிம் பெண்களே உசார்! ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஒரு அஜண்டாவே இருக்கிறது முஸ்லிம் பெண்களை காதலித்து திருமணம் செய்து அவர்களை மதம் மாற்றுவது, அல்லது கைவிடுவது. ஹிந்துவா இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வித வெறியை தங்கள் இயக்கத்தினரிடம் வளர்த்து வருகின்றனர். எதாவது ஒரு விசயத்தில் முஸ்லிம்களை நஷ்டப்படுத்தி, துன்பப்படுத்தி அதில் இன்பம் காண்பது. ஒருவகையில் இவர்கள் ஹிந்த்துதுவா வெறி பிடித்த சைகோகள் என்று சொல்லலாம்.

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்!

மும்பை ஜூலை-22: மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் குண்டு வைத்ததாக கருதப்படும் நபரைக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த விபரம் கிடைத்துள்ளதாக மஹாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு படை அறிவித்துள்ளது.

போலீஸ் தயார் செய்த வரைபடத்திலிருந்து முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நாட்டின் மத்திய பகுதியையோ அல்லது வடக்கு பகுதியையோ சார்ந்தவராவார். இவரை பிடிக்க மத்தியபிரதேஷ், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் போலீஸ் குழுக்களை அனுப்பியுள்ளதாக மூத்த ஏ.டி.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை குண்டுவெடிப்பு வழக்கை புலனாய்வு செய்துவரும் 12 குழுக்களில் தேர்வுச்செய்யப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டிருந்தது. விசாரணையின் ஒரு பகுதியாக ஒருலட்சத்திற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. இதில் சில எண்கள் கண்காணிப்பில் உள்ளன. மத்திய பிரதேசம், கொல்கத்தா ஆகிய இடங்களுக்கோ, குஜராத்திற்கோ சந்தேகத்திற் கிடமான தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன. மலோகேன் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் மும்பை குண்டு வெடிப்புகளையும் நடத்தி இருப்பார்கள் என்றே புலனாய்வுதுறை நம்புகிறது.

தமிழக பஸ்களில் எலக்ட்ரானிக் டிக்கெட் முறை!

JULY 22, அரசு பஸ்களில் எலக்ட்ரானிக் மிஷின் மூலம் டிக்கெட் வழங்க தமிழக முதல்வர் ஜெ‌யலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் முதல்கட்டமாக ரூ.10 கோடி செலவில் 5 ஆயிரம் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின்கள் வாங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்காக பல்லவன் போக்குவரத்துக் கழக ஆலோசனை குழுவிற்கு ரூ.10 கோடி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின்கள் வாங்குவதற்கு மத்திய அரசு சார்பில் ரூ.9.37 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நித்திக்கு செருப்படி கொடுத்த பெண்கள் விடுதலை முன்னணி!

JULY 22, சேலம் பெரியார் சிலை அருகே திடு திடுப்பென சிவப்பு சேலையுடன் திரண்ட பெண்கள் 'நித்யானந்தா படத்தையும் ரஞ்சிதா படத்தையும் செருப்பால் அடித்தனர்.

சிலர் கையில் கொண்டு வந்த விளக்குமாறால் அடிக்க நாம் அவர்களிடம் பேசினோம் 'நாங்கள் பெண்கள் விடுதலை முன்னணி' சேர்ந்தவர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாச கூத்து நடத்தி வருகிறார் நித்யானந்தா.

ஆன்மிகம் என்ற போர்வையில் வியாபாரம் செய்தும், நடுத்தர வர்க்க மக்களை சிந்தனை ரீதியாக மழுங்கடித்தும் வருகிறார் நித்யானந்தா. அதை கண்டிக்கும் விதமாக நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றபடியே மீண்டும் செருப்பால் அடிக்க தொடங்கினர்.

இதை வேடிக்கை பார்த்த மக்களும் நல்லா அடிக்கனும்ங்க கடவுள் பேருல காம களியாட்டம் நடதுரானே என்று முனு முணுத்தபடி சென்றனர். சேலம் மாவட்ட செயலாளர் காந்தம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டனர்.

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் : உ.பி., கிராமத்தில் அதிசயம்!!!

ஜூலை 21லக்னோ : ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர், இரட்டைக் குழந்தைகளாக பிறந்திருந்தாலே, அவர்களைப் பார்த்து எல்லோரும் வியப்படைவர். ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளில் 108க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் அருகே உள்ள உம்ரி கிராமத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்கு மனிதர்கள் மட்டும் இரட்டையர்களாகப் பிறக்கவில்லை. கிராமத்தில் உள்ள விலங்கினங்களும் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. இதற்கான காரணத்தை கண்டறிய, விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களும் முயற்சி மேற்கொண்டும் பலனில்லை.

ஐதராபாத், டில்லி, கோல்கட்டா, சென்னை மற்றும் மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் பலரும், சமீப காலங்களில் உம்ரி கிராமத்திற்கு சென்று, சோதனை மேற்கொண்டுள்ளனர். எனினும், உரிய காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை.

உம்ரி கிராமத்தை சேர்ந்த இரட்டையர்களில் ஒருவரான குடு என்ற சிறுவன் கூறுகையில், "" தற்போது கிராமத்தில் உள்ள இரட்டையர்களில், 16 ஜோடி இரட்டையர்கள் மட்டுமே ஒரே மாதிரியாக இருப்பர். அவர்களில் ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பது கடினம்,'' என்றான். குடுவின் தாத்தா கூறுகையில், ""80 ஆண்டுகளுக்கு முன், கிராமம் முழுவதும் இரட்டைக் குழந்தைகள் அதிகளவு நிறைந்திருந்தன,'' என்றார்.
இவ்வகையில், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் தங்கள் ஊரின் பெயரைப் பதிவு செய்வது என, உம்ரி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

உழைப்பாளிகளுக்கு வரபிரசாதம் இதோ ஏர்கண்டிசன்” சட்டை !!!

லண்டன், ஜூலை 21 , உடலை குளிர வைக்கும் ஏர்கண்டிசன் சட்டையை ஐப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆபீசில், வீட்டில் ஏர்கண்டிசனில் இருந்தே பழக்கப்பட்டவர்கள் வெளியே வெயிலில் செல்லும்போது மிகவும் சிரமப்படுவர்.

வெயிலின் தாக்கம் அவர்களை கடுமையாக பாதிக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கும், வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த குச்சோபுடு என்னும் அந்த நிறுவனம், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, ஏர்கண்டிசன் சட்டையை தயாரித்துள்ளது.

மழைக்கோட்டு போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டையில் உள் பகுதியில் 2 மின்சார விசிறிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அவை உயர் சக்தி கொண்ட பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பேட்டரிகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் தாக்குப் பிடிக்கும், பேட்டரிகள் மூலம் இயங்கும் மின்சார விசிறிகள் ஒரு நிமிடத்துக்கு 20 லிட்டர் காற்றை உற்பத்தி செய்து, சட்டையின் உள்பகுதி முழுவதும் பரவச் செய்கிறது.

இந்த காற்று உடனக்குடன், சட்டையின் கழுத்துப் பகுதி மற்றும் கையின் மணிக்கட்டு வழியே வெளியேற்றப்படுகிறது. இதனால், உள்ளே சுழலும் காற்று, சூடாகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. குளிர் தன்மை அப்படியே பராமரிக்கப்படுகிறது. இந்த சட்டையை அணிந்து கொண்டால், ஏர்கண்டிசனில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தொடர்ந்து 11 மணி நேரம் பயன்படுத்த முடியும்.

 மற்ற ஏர்கண்டிசனுடன் ஒப்பிடும்போது, இதை இயக்கச் செய்ய ஆகும் செலவு குறைவு. தனி நபர் ஏர்கண்டிசன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டையின் விலை குறைந்த பட்சம் 87 பவுண்டுகள் ஆகும். இதை விட அதிகமான விலைக்கும் சட்டைகள் உள்ளன. இந்த சட்டைக்கு ஜப்பானில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மேலும் பல நிறுவனங்கள் ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

தந்தையின் அருகிலேயே பலாத்காரம் மாணவி வாக்குமூலம்!!!

ஜூலை21 நாகர்கோவில்: பாலியல் ரீதியாக தன்னை தொடர்ந்து 20 மாதங்கள் கொடுமைப் படுத்தியதாக கேரள மாணவி, ஆலுவா நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பள்ளி மாணவி விபசாரத்தில் தள்ளப்பட்டு, பலரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்த கான்ட்ராக்டர் மணிகண்டன் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேரை மாணவி, நீதிபதியிடம் அடையாளம் காட்டியுள்ளார். இந்நிலையில், ஆலுவா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது, மாணவி கூறியதாவது:

பாலியல் ரீதியாக நான் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டேன். 20 மாதங்களாக தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டேன். அதிருப்பள்ளி என்ற இடத்தில் ஒரு வீட்டுக்கு என்னை புரோக்கருடன் என் தந்தை அழைத்து சென்றார். அங்கு சென்றபோது அங்கிருந்தவருக்கு அடியாட்களாக மேலும் 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். என்னுடன் வந்தது யார் என்று அவர்கள் கேட்டனர், அப்போது, எனது தந்தை என்று கூறினேன்.

அவர்கள் தந்தையிடம் நான் யார் என்று கேட்டனர். தனக்கு தெரிந்த பெண் என்று மட்டும் அவர் கூறினார். எல்லா இடங்களிலும் இப்படித்தான் கூறினார். ஆனால், அங்கிருந்த நபர் என்னை நம்பினார். எனது செல்போனில் இருந்த குடும்ப போட்டோவையும், அங்கிருந்த நபரிடம் காண்பித்தேன். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் எனது தந்தையை தாக்கினர். புரோக்கரையும் விரட்டியடித்தனர். பின்னர் எங்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.

பணம் சம்பாதிப்பதற்காக எனது தந்தை என்னை, அவரது பைக்கில் அமர்த்தி கோழிக்கோடு வரை அழைத்து சென்று பலருக்கும் விருந்து படைக்க செய்தார். ஒருமுறை பெங்களூரில் தந்தையின் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது மற்றொரு நபர் என்னை பலாத்காரம் செய்தார். எனது தந்தை அதனை கண்டும் காணாதது போன்று தூங்கிக் கொண்டிருந்தார். நான் பலமுறை தந்தையை தட்டி எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்க வில்லை.

ஒரு கட்டத்தில் உறவினர் ஒருவரிடம் எனக்கு நடந்து வரும் கொடுமைகளை தெரிவித்தேன். அவர் சொன்னபடி உறவினர்களிடம் தெரிவித்தேன். அதன்பின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர்தான் இந்த கொடுமையில் இருந்து வெளியே வந்தேன். இவ்வாறு மாணவி கூறியுள்ளார்.

Jul 20, 2011

ரஜினி மாயையை ஊட்டி வளர்க்கும் விஜய் TV!

JULY 21, விஜய் TV ன் சூப்பர் சிங்கர் பாட்டு போட்டியில் இப்பொழுது நடைபெறுவது ரஜினி சுற்று. இதில் அவர் உங்களுக்கு யார் என்று கோபிநாத்தால் உள்ளே அமர்ந்திருக்கும் விசேச பார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பித்து வைக்கிறார் திருவாளர் ஸ்ரீனிவாஸ் என்ற பிரபலமான பாடகர். அவர் இந்த பாடல் போட்டியின் ஒரு நடுவர்.

விஜய் TV ஒரு ஜன ரஞ்சகமான செய்தி, மற்றும் பொழுதுபோக்கு ஊடகம். எந்த ஊடகமும் பொருளாதார இலாபத்தை மையமாக வைத்துத்தான் ஆரம்பம் செய்யப்படுகிறது. ஆனால் அதில் அந்த பிராந்தியத்தின் மொழி, தேசம், இனம் சார்ந்த பண்புகளை கட்டிக்காக்கக்கூடிய பொறுப்புணர்வும், பகுத்தறிவும் கலந்திருக்க வேண்டும்.

ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததினால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாய் வந்திருக்கிறாள். அவளும், ரஜினியை கடவுள் என்கிறாள்,  ரஜினி நலம் பெற மொட்டைகள் அடித்துக்கொண்டு சில புத்திசாலிகள் இப்படி ஆரம்பிக்கிறது நிகழ்ச்சி.  என்ன நடக்கிறது இங்கே? யாரை வேண்டுமானாலும் கடவுளாக்கி விடும் அளவுக்கு இவ்வளவு அறிவு வறட்சி எப்படி வந்தது எம் தமிழ் இனத்துக்கு? 

கோபிநாத் கேள்வி கேட்கும் தொனியிலே அறிவுடைய மக்களுக்கு புரியும் இந்த மக்கள் எவ்வளவு புத்தி மழுங்கி விட்டார்கள் என்பது. கோபிநாத், "ஒரே மனிதரை, எத்தனை வகையில் மக்கள் மதிக்கிறார்கள்? ஒருவர் என் கடவுள் என்கிறார் ஒருவர் மனிதக்கடவுள் என்கிறார் ....., ஒருவர் என் ஆத்மா என்கிறார்...., ஒருவர் என் உயிர் என்கிறார்....., ஒருவர் என் வாழ்வு என்கிறார்...., நான் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டேன் என்று ஒருவர்.... அடேங்கப்பா" என்று கோபிநாத் சொல்லும்பொழுது அவரால் வெளிப்படுத்த முடியாத ஒரு அங்கலாய்ப்பும் இவ்வளவு அறிவு கெட்டு விட்டார்களே என்ற விசனமும் உள்ளூரதெரிகிறது.

இதுபோன்ற காட்சிகளும், தொடர்களும் ஒரு பக்குவமற்ற, கடைநிலை பார்வையாளர்களை, சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. ரஜினியை "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பம் செய்து வைத்த ஸ்ரீ நிவாஸ் என்ற பாடகர் இதே போன்ற நிகழ்ச்சியை விஜய் TV ரஜினி போன்ற புகழ் பெற்ற நடிகருக்கு கேரளாவில் நடத்தி இருந்து அவரிடம் இதே கேள்வியை கேட்டிருந்தால், "ரஜினி ஒரு கடவுள் என்று சொல்லி இருப்பாரா? அப்படி சொல்லி இருந்தால் ஸ்ரீ நிவாசை நிம்மதியாக தூங்க விட்டிருப்பார்களா கேரள மக்கள்?  ஸ்ரீ நிவாசுக்குத் தெரியும் தமிழகம் வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வாழ்வோர் வாந்தி எடுத்தாலும் அது நல்ல உணவு என்று ஏற்றுக் கொள்ளும் என்று.

இந்த பாட்டு போட்டி சுற்றுகளில் ஆன்மீகச்சுற்று என்று ஒன்று வைத்தார்கள். அதில் அனைத்தும் இந்துமத ஆன்மீக பாடல்களே போட்டியாளர்களால் பாடப்பட்டது. இந்த ஆன்மீக சுற்று போட்டியாக நடத்தப்படாமல் ஒரு ஷோவாகவே நடத்தப்பட்டது. அந்த சுற்றுக்கு மதிப்பெண்களும் இல்லை வெளியேற்றமும் இல்லை. அப்படி இருக்கையில் அதில் குறைந்த பட்சம் ஒரு இஸ்லாமிய பாடல் மற்றும் ஒரு கிருஸ்தவ பாடலையாவது பாடச்சொல்லி ஒளிபரப்பி இருக்கலாம். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எல்லா மதத்தினராலும் பார்க்கப்படுகிற ஒரு பொது ஜன ஊடகத்தில் இப்படி ஒரு மத சார்ப்பு, அதே நேரம் மனிதனை கடவுள் என்று சொல்ல வைப்பது, தற்கொலையை ஊக்கப்படுத்துவது போல் உள்ள பேச்சுகளை சென்சார் இல்லாமல் அப்படியே வெளியிடுவது போன்றவை விஜய் டிவிக்கு அழகல்ல.

அதுபோல் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் இந்த விஞ்சான யுகத்தில் மக்களை ஏமாற்றும் சாமியார்களை அவர்களுக்கு அதிசய சக்தி இருக்கிறது என்பது போல் காட்டுவது, ஒரு கோவிலில் காய்ந்த மிளகாயை போட்டு ஒரு யாகம் நடத்தப்படுகிறது அதற்க்கு சக்தி இருக்கிறது என்று கோபிநாத் புலம்புவது, இப்படி நடந்தது என்ன என்று உண்மை சம்பவத்தை காட்டாமல் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கோபிநாத் தன் பேச்சாற்றல் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறார். இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களை மேலும் மூட பழக்க வழக்கத்தில் மூழ்க செய்வதற்கே உதவும் என்பதை விஜய் டிவி புரிந்து கொள்ளுமா? நீயா நானா போன்ற நல்ல நிகழ்சிகளை அளிக்கும் விஜய் டிவி இதுபோல் உள்ள குறைகளை கலையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சி.பி.ஐ விசாரணை தேவை!

JULY 21, புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான விசாரணையின் போது போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த ஃபயாஸ் உஸ்மானியின் மரணத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்,

 என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவத்தில் குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என குண்டு வெடிப்புகளை கண்டித்த எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் குறித்த தெளிவான ஆதாரங்கள் கிடைக்கும் வரை புலனாய்வு ஏஜன்சிகளும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ஊகங்களை பரப்புரைச்செய்வதை நிறுத்தவேண்டும்.

மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர்தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவார அமைப்புகளின் பங்கு தெளிவானபிறகும் புலனாய்வு அதிகாரிகள் முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகங்களை எழுப்புகின்றனர் என இ.அபூபக்கர் குறிப்பிட்டார்.

பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம்களையும் அவர்களின் உறவினர்களையும் புதிய குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புபடுத்தி விசாரணை செய்வது கேலிக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவை அதிர்ச்சில் ஆழ்த்திய சேனல்-4 ஆவணப்படம்!

JULY 21, அமெரிக்கா: சிறிலங்கா அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் நெருக்கடியைக் தோற்று வித்துவரும் சேனல் -4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைகளம் ஆவணப்படம், அமெரிக்க கொங்கிரஸ் Capitol Hill மண்டபத்தில் திரையிடப்பட்டது.

Human Rights Watch, Amnesty International-USA, The International Crisis Group, And Open Society Foundations * ஆகிய சர்வதேச அமைப்புக்களின் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அமெரிக்க அரசியல் பிரதிநிதிகள், கல்வி யாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டளர்கள், அரசியல் அறிவியல் பீட பல்கலைக் கழக மாணவர்களோடு உள்ளுர் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளான சான் சுந்தரம், பொன்னுத்துரை, பிரபாகரன் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் மனித உரிமை அமைப்பின் இணைத் தலைவருமாகிய *Jim Mc Govern* அவர்கள், ஆவணப்படம் குறித்ததான அறிமுக உரையை வழங்கினார். குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்பு கூற வைக்கும் சுந்திரமான விசாரணைகளுக்கு போதுமான வலுமிக்க ஆதரமாக, இந்த ஆவணப்படம் இருப்பதாக கருத்துரைத்த அவர்கள், சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூற தவறின் அனைத்துலக சமூகமே இதற்கு பதிலளிக்க வேண்டுமென Jim McGovern தெரிவித்தார்.

இந்நிகழ்வவு குறித்து கருத்துரைத்த நா.த.அரசாங்கப் பிரதிநிதி சான் சுந்தரம் அவர்கள், காங்கிரஸ் சபையின் மூத்த உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் என பல உயர்மட்ட பிரதிநிதிகளால் நிறைந்திருந்த மண்டபத்தில், ஆவணப்பட திரையிடலின் போது, சூழ்ந்திருந்த ஆழ்ந்த அமைதிக்குள், விம்மிய அழுகைச் சத்தங்களை கேட்ககூடியதாக இருந்ததென குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறிலங்கா தூதரக அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்குகளும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்ததோடு, உண்மைக்கு புறம்பான கருத்துக் களையும், கேள்விகளையும் முன்வைத்து, நிகழ்வை திசைதிருப்ப முனைந்த போதும், அது சாத்தியமற்றுப் போனதாக, சான் சுந்தரம் அவர்கள் தெரிவித்தார். ஆவணப்பட திரையிடலைத் தொடர்ந்து, பிரநிதிகளின் தலைமையில் கருத்துப்பரிமாற்றமும் இடம்பெற்றிருந்தது.

திமுகவினர் மீது அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் கருணாநிதி!

JULY 21, சென்னை: "திராவிட இளைஞர்கள் ஓரணியில் நிற்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித் துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: குற்றங்கள், தவறுகள், கொள்ளைகள், கொலைகள் எங்கே நடந்தாலும், அவற்றை யார் நடத்தினாலும், அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்ற இமாலய தவறை, தி.மு.க., என்றைக்கும் செய்ததில்லை.

ஆனால், அ.தி.மு.க., அரசு, அராஜகத்தை ஆபரணமாகவும், அடக்குமுறையை தமது போர்வாளாகவும் கொண்டு செயல்படுகிறது. எதிர்க் கட்சிகளை, குறிப்பாக தி.மு.க.,வினர் குற்றம் செய்யாதிருந்தாலும், அவர்களை சகட்டுமேனிக்கு குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தவும், சட்டத்தின் பெயரைச் சொல்லி சவுக்கடி கொடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என, எல்லோரிட மிருந்தும் அவர்களை பிரித்து தனிமைப்படுத்தும் காட்சிகளையும் நித்தமும் நாம் காண்கிறோம். தான் நினைத்தபடியெல்லாம் திட்டங்களை அறிவித்து, பள்ளி மாணவர்கள் எள்ளி நகையாட, எல்லா அறிவிப்புகளுமே நீதிமன்றத்தில் தூள் தூளாக நொறுங்கிப் போவது கண்டு, ஆளுங்கட்சியினர் எரிச்சல் அடைந்துள்ளனர்.

அந்த எரிச்சலும் எதிர்க்கட்சியினர் மீது காட்டப்படுகிறது. "பழைய கள், புதிய மொந்தை' என்ற பழமொழிக்கேற்ப, அ.தி.மு.க., அரசின் அராஜக ஆட்டம் மீண்டும் தொடர்கிறது. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. இதை எதிர்த்து போராட, திராவிட இளைஞர்கள் ஓரணியில் நிற்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான் என்கிற பல மொழிக்க ஏற்ப கருணாநிதியின் ஊழல் ஆட்சி, குடும்ப அரசியல் ஒழிந்து இருக்கிறது. திமுக ரவுடிகளை, அவர்கள் கட்சிகாரர்கள் செய்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மனோகராவில் வசனம் எழுதியது மாதிரி ஒரு அறிக்கை விடுகிறார் கருணாநிதி. ஆட்சி மாறினால் பழைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போக வேண்டும் என்று மிஸ்டர் கிளீன் கருணாநிதி சொல்கிறார் போல இருக்கிறது.

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார் பாடகர் மனோ!

JULY 21, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினர்.

இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனை ஏற்று இன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்தது.

நாங்கள் கொழும்பில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம். கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் நன்றி.  இவ்வாறு மனோ கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய யுரேனிய சுரங்கம் கண்டுபிடிப்பு!!

July 20, ஆந்திராவின் துமலபள்ளி பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள யுரேனிய சுரங்கத்தில் 1.5 லட்சம் டன் வரை யுரேனியம் தாதுக்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கமாக இருக்கலாம் என அணுசக்தி துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மின்சார தேவை அதிகரித்து வருவதால், அணுசக்தி மின்சார உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து, யுரேனியம் எரிபொருள் சப்ளை செய்யும்படி இந்தியா வேண்டுகோள் விடுத்தது. ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட அணு கசிவு விபத்துக்குப்பின் அணுசக்தி திட்டங்களை மேம்படுத்துவதில் சில நாடுகள் ஆர்வம் காட்ட வில்லை.

ஆனால் அணு மின்சக்தியை பாதுகாப்புடன் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையில்,  இந்தியா அணுமின்சக்தி திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ரவத்பதா என்ற இடத்தில் புதிய அணுமின் உலை அமைப்பதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் அணுசக்தி துறை செயலாளர் ஸ்ரீகுமார் பானர்ஜி பேசியதாவது:

ஆந்திர மாநிலம் துமலபள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியம் சுரங்கத்தில் 49 ஆயிரம் டன் யுரேனியம் தாதுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், அங்கு அதைவிட 3 மடங்கு அளவுக்கு அதிகமாக யுரேனியம் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. சுமார் 1.5 லட்சம் டன் யுரேனியம் தாது அங்கு இருந்தால், அது உலகின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கமாக இருக்கும். இந்த அளவு யுரேனியம் இருந்தால், 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள அணுமின் நிலையத்துக்கு 40 ஆண்டுகளுக்கு எரிபொருள் சப்ளை செய்ய முடியும்.

புதிய சுரங்கத்தில் யுரேனியம் வெட்டி எடுக்கும் பணி இன்னும் 6 மாதத்தில் தொடங்கும். தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு யுரேனிய சுரங்கங்கள் உள்ளன. ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சுரங்கத்தையும் சேர்த்து கணக்கிட்டால் 1.7 லட்சம் டன் யுரேனியம் தாதுக்கள் நம் நாட்டில் உள்ளது. இதன் மூலம் யுரேனியம் எரிபொருள் தேவைக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறையும். பிரான்ஸ் மற்றும் கஜகஸ்தானிலிருந்து நாம் தற்போது யுரேனியம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஒப்பந்தம் நீண்ட காலத்துக்கு இல்லை.

220 மெகா வாட் திறனுள்ள அணுமின் நிலையத்துக்கு ஆண்டுக்கு 45 டன் யுரேனியமும் 700 மெகாவாட் திறனுள்ள அணுமின் நிலையமாக இருந்தால் ஆண்டுக்கு 100 டன் யுரேனியமும் தேவை. ஆனால் நம் நாட்டில் 1.7 லட்சம் டன் அளவுக்கு யுரேனியம் தாது உள்ளது. இதை வைத்து நாம் அதிக அளவில் மின்உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.

Jul 19, 2011

இந்தியா உடைந்து சுக்கு நூறாவாதை யாராலும் தடுக்க முடியாது!

JULY 20, பெங்களூர்: கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடாகாவை கற்காலத்திற்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவின் கல்வி அமைச்சர் பகவத் கீதையை படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வெறித்தனமாக பேசியுள்ளார். கர்நாடகா மாநிலம் கோலாரி நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு பேசிய கர்நாடகா கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, பள்ளிகளில் பகவத் கீதையைப் படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதை சிலர் எதிர்க்கின்றனர்.

அப்படிப்பட்டவர்கள் பேசாமல் நாட்டை விட்டு வெளியேறி விடலாம்’ என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரின் பேச்சைக் கண்டித்து சமதா சைனிக் தள மாணவர் சங்கம் காகேரியின் கொடும்பாவியைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.

அமைப்பின் மாநிலத் தலைவர் கோவிந்தய்யா இதுகுறித்துக் கூறுகையில், கர்நாடக அரசு அனைத்துப் பள்ளிகளையும் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். முகாம்களாக மாற்ற முயற்சிக்கிறது. எங்களுக்கு பகவத் கீதையின் அத்தியாயங்கள் எதையும் கற்றுத் தர வேண்டாம். அதற்குப் பதிலாக அரசியல் சாசனத்தின் அத்தியாயங்களை கற்றுக் கொடுங்கள் என்றார்.

கர்நாடக தலித் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மாரிசாமி கூறுகையில், நூலகங்கள், சிறந்த உணவு, தூய்மை ஆகியவற்றை பள்ளிகளுக்குத் தர வேண்டும். அதை விட்டு விட்டு பகவத் கீதையை கற்றுக் கொடுப்பதால் என்ன லாபம் என்று வினவினார்.

இதேபோல பல்வேறு கட்சியினரும் காகேரியின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறுகையில், காகேரி மீது முதல்வர் எதியூரப்பா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும் என்றார்.

சிந்திக்கவும்: இந்தியா ஒரு மதசார்ப்பற்ற நாடு. இந்த நாட்டில் மற்றைய மத மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது, அவர்களுக்கு எதிரான திட்டமிட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி அவர்களை பயமுறுத்தி மீண்டும் ஹிந்து மதத்திற்கு கொண்டு வருவது அல்லது நாட்டை விட்டே துரத்துவது, இல்லையேல் அவர்களை கலவரங்கள் மூலம் அழித்தொழிப்பது இதுவே ஹிந்துதுவாவின் திட்டமாகும்.

இதை தடுத்து நிறுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். இல்லையேல் இந்தியா சிதறுண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதம் ஏற்ப்படுத்திய அடக்கு முறையே 35 வருட ஆயுத போராட்டம். அது இன்றளவும் முடிவுக்கு வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை சிறிய நாடாக இருந்ததால் இந்தியா, சீனா போன்ற பெரும் வல்லரசுகள் உதவிதால் பெரிய பொருளாதார பிரச்சனைகள் இல்லாமல் தப்பியது. 120 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் ஒரு உள்நாட்டு யூத்தம் நடந்தால் அதை எண்ணி பார்க்கவே பயமாக இருக்கிறது. இதை என்ன விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லையேல் இந்தியா சுக்குநூறாக சிதறி போவதை யாராலும் தடுக்க முடியாது. இலங்கை பிரச்சனையில் இந்தியா தமிழர்களை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த கொடுமைக்குதான் வைகோ சொன்னார் இந்தியா சுக்குநூராவதை யாராலும் தடுக்க முடியாது என்று. இந்தியாவில் வாழும் முஸ்லிம், மற்றும் கிருஸ்தவ, சீக்கிய, புத்த, பழங்குடி, தலித் போன்ற மக்கள் கிளர்ந்தெழுந்தால் திரும்பவும் ஒரு மன்னர் ஆட்சிகாலத்தில் இருந்த இந்தியா மாதிரி போய்விடும் என்பதே உண்மை. இந்திய அரசு இதை புரிந்து கொண்டு பாசிச ஹிந்து பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?  
-நட்புடன் மலர் விழி-

மூக்குத்தி அணிந்த இந்து பெண்ணுக்கு பள்ளியில் அனுமதி மறுப்பு!

நெவாடா:  சுவீடன் நாட்டு பள்ளி ஒன்றில், இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூக்குத்தி அணிந்து சென்றதால், அனுமதி வழங்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சுவீடன் நாட்டின் மத்தியில், ஓரிபுரோ என்ற இடத்தில், பொது நிதியில் இயங்கும் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் சேருவதற்காக, இந்து மதத்தைச் சேர்ந்த 13 வயது இளம்பெண் சென்றார். இவர் மூக்குத்தி அணிந்து சென்றதால், பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கவில்லை.

வீட்டிற்குச் சென்று மூக்குத்தியை கழற்றி வைத்து விட்டு வந்தால் தான் அனுமதி வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பெண்ணின் தாய், பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார்.

சிந்திக்கவும்: "மூக்கு குத்திக் கொள்வது, மூக்குத்தி அணிவது இந்தியாவைச் சேர்ந்த பெண்களின் பாரம்பரிய கலாச்சாரம். மேற்க்கத்திய கலாச்சார பெண்கள் தொப்புளில், பெண்களின் மர்ம உறுப்புகளில் மூக்கு குத்துவது போல் குத்தி அணிகலங்கள் அணிகிறார்கள். இதை எல்லாம் வரவேற்கும் இவர்கள் மூக்குத்தி அணிகலன்கள் அணிவாதால் அவர்களுக்கு என்ன கேடு வந்ததோ.

எனவே, அந்நாட்டின் சட்டத்தில், இதற்கு திருத்தம் கொண்டு வரவேண்டும்'. ஒரு காலச்சாரத்தை வெறுப்பதோ அதை தடை செய்வதோ வேறு கலாசாரத்தை சார்ந்தவர்களுக்கு உரிமை இல்லை. இது போல்தான் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு மேற்கத்திய நாடுகளில் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடனில் மூழ்கும் அமெரிக்கா கவலையில் சீனா!

JULY 20, பீஜிங்: அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளன. பெரும் கடன் சுமையில் அமெரிக்கா மூழ்குவதை இரண்டாண்டுகளுக்கு முன்பே சீனா உணர்ந்திருந்தது.

2009, மார்ச் 12ம் தேதி உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோ,"அமெரிக்காவுக்கு பெரிய அளவில் கடன் அளித்துள்ளோம். அதுபற்றி எங்களுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் நான் கவலையில் ஆழ்ந்துள்ளேன். அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்வதானால், நம்பகத் தன்மையை நிலை நிறுத்துங்கள். சீனச் சொத்துக்களின் பாதுகாப்புக்கு உறுதியளியுங்கள்' என்று, வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ,"முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பொறுப்பான கொள்கை முடிவுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என நம்புகிறோம்' என்றார். சீனாவிடம் தற்போது அன்னிய செலாவணி இருப்பு, 3 டிரில்லியன் டாலர். பிற நாடுகள் எதுவும் இந்தளவுக்கு அன்னிய செலாவணி இருப்பை மேற்கொள்ளவில்லை. இந்த இருப்பில் பெரும்பான்மை டாலர் வடிவில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நித்யானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்குமா?

JULY 20, ரஞ்சிதா நிதியானந்தாவுடன் சேர்ந்திருக்கும் காட்சிகளை ரகசிய கேமிரா வைத்து எடுத்துத்திருந்தார். பின்னர் ரஞ்சிதா அமெரிக்கா போய்விட்டார்.  நித்யானந்தா அவருக்கு வாக்களித்திருந்த பணங்களை கொடுக்காததால் அந்த வீடியோவை வெளிப்படுத்தினார்.

இதனால் ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். என நான் நித்யானந்தாவிடம் சொன்னேன் என்று வழக்கறிஞசர் ஸ்ரீதர் தெரிவித்தார். இதனால் அமெரிக்கா போன ரஞ்சிதாவிடம் பணத்தை செட்டில் செய்து, இந்தியாவுக்கு வரவழைத்தார்கள்.

ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்த நித்யானந்தா, எனது அட்வைஸை கரெக்டா செய்துவிட்டார்.  ரஞ்சிதாவை கூடவே வைத்துக்கொள்வதுதான் பாதுகாப்பானது என்று நான் மட்டும் அல்ல, நித்யானந்தா பார்த்த பல வழக்கறிஞர்களும் அவரிடம் சொன்னார்கள்.

அதனால் அதை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் நித்யானந்தா. ரஞ்சிதா மட்டும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து, சிடியில் இருப்பது தானும், நித்யானந்தாவும் தான் என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டால் பிரேமானந்தாவாக, நித்யானந்தா ஆகிவிடுவார் என்றார்.

சிந்திக்கவும்: நித்யானந்தா எப்பொழுது பிரேமானந்தாவாக மாறுவார். இவரை சட்டம் தண்டிக்குமா? இவருக்கும், கொலைகார சங்கராசாரி, மற்றும் அவர்வழி வந்த சாமியார்களுக்கும் பிரேமானந்தா மாதிரி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினால்தான் இதுபோல் கயவர்கள் மீண்டும் உருவாகாமல் இருப்பார்கள். சட்டம் தன் கடமையை செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மு.க.அழகிரியின் கோட்டை காலியாகிறது!

JULY 20, மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷும், திமுக மதுரை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் திருமங்களம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், திமுக முக்கிய பிரமுகர் தாய் முகாம்பிகை சேதுராமன் ஆகிய நான்கு பேர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு இன்று (19.7.2011) இரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள், ஜே.எம் -1 நீதிபதி முத்துக்குமரன் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். மதுரை திருமங்களத்தை சேர்ந்த சிவனாண்டி அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை எஸ். பி. அஸ்ராஹாக்கியிடம் கொடுத்த புகாரில், தங்களது 5 ஏக்கர் நிலத்தை இந்த 4 பேரும் மிரட்டி வாங்கியதாக தெரிவித்திருந்தனர்.

இந்தப்புகாரின் அடிப்படையில் நான்கு பேருக்கும் சம்மன் அனுப்பி யிருந்தார் எஸ்.பி. இன்று காலை நான்கு பேரும் எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜார் ஆனார்கள். இவர்களிடம் தொடர்ந்து 10மணி நேரமாக விசாரணை நடைபெற்று வந்தது. எஸ்.பி.ஐ பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை

நடைபெற்றுக்கொண்டிந்த நிலையில் இவர்கள் மீது மேலும் பல புகார்கள் குவிந்த வணணம் இருந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது. பதட்டம் நிலவுவதால் மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Jul 18, 2011

சனாதன் சன்ஸ்தா நடத்திய தீவிரவாத பயிற்சி முகாம்!

JULY 19, கொச்சி: கோவா குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு தேசத்திற்கு விரோதமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புதான் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கம். இவ்வியக்கத்தின் சார்பாக கடந்த ஜூலை 15-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பகிரங்கமான பயிற்சி முகாமிற்கு அழைப்பு விடுத்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

இப்பயிற்சி முகாமின் பெயர் குருபூர்ணிமா மஹோட்சவ் என்பதாகும். சுவரொட்டியில் கூறப்பட்டிருந்த வாசகங்களே இந்நிகழ்ச்சி பகிரங்கமான தேசத்திற்கு எதிரானது என்பதை வெளிப்படுத்தியது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்குவது எப்படி என்பதை சிந்திக்கும் வகையிலான மூளைக்கு வேலை அளிக்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.

மேலும் தற்காப்பு நிகழ்ச்சி என்ற பெயரால ஆயுத பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி எர்ணாகுளம் எஸ்.எஸ் கலாமந்திர் அருகிலுள்ள டி.டி கோயிலில் வைத்து நடைப்பெற்றுள்ளது. ஆனால் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசோ போலீஸாரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

முன்பு பானாயி குளம் என்ற இடத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்திய முஸ்லிம் இளைஞர்களை போலீஸார் கைதுச் செய்தனர். ஊடகங்கள் இந்நிகழ்ச்சியை குறித்து மாநில முழுவதும் தொடர்ந்து கட்டுக்கதைகளை பரப்பி வந்தன. ஆனால், பகிரங்கமாக ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் நடத்தப்படும் தேசவிரோத நிகழ்ச்சி குறித்து எந்த ஊடகமும் பரபரப்பு செய்தியை வெளியிடவும் இல்லை.வாய் மூடி மெளனிகளாக உள்ளனர்.

இதுக்குறித்து எர்ணாகுளம் டிவிசனின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் ஷியாது கூறுகையில்,’இம்மாதிரியான தேசவிரோத நிகழ்ச்சிகள் மக்களிடையே வெறுப்பையும், சந்தேகத்தையும் பரப்பவே உதவும்.  சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பு சந்தேகத்திற்கு இடமில்லாத தீவிரவாத அமைப்பாகும். இவ்வமைப்பின் உறுப்பினர்களை கோவா மாநிலம் மட்கான் குண்டுவெடிப்பு வழக்கில் கோவா தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைதுச் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி அளித்ததன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.’ என்று கூறினார்.

சமச்சீர் கல்வி! மூக்கு உடைபட்ட அம்மா!

JULY 19, சென்னை:தமிழ்நாட்டில் முந்தைய தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் தொடரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது மாநிலத்தில் நிலவிலுள்ள மெட்ரிக் உள்பட நான்கு பாடத்திட்டங்களுக்கு பதிலாக 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வியை வழங்கும் நோக்கில் சமச்சீர் கல்வி என்ற திட்டம் கொண்டு  வரப்பட்டது.

இந்த கல்வியாண்டின் துவக்கத்திலிருந்து இத்திட்டம் துவங்கப்பட இருந்தது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க அரசு மீதான மக்கள் எதிர்ப்பு அலையின் பலனாக அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

பதவியில் அமர்ந்த உடனேயே மாணவர்கள் நலனையும், மக்கள் வரிப்பணத்தையும் கணக்கில் கொள்ளாமல் காழ்ப்புணர்வில் சமச்சீர் கல்வி உள்பட முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்கள் பலவற்றை ரத்துச் செய்தார் ஜெயலலிதா. இதற்காக சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.சமச்சீர் கல்வி ரத்து செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் பொது நலமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் அம்மா நிறைவேற்றிய சட்டத்திருத்தம் செல்லத்தக்கதல்ல என்றும்  ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படியும் ஒரு காதல்!

JULY 19, வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் எழில்மாறன். ஸ்ரீபெரும் புதூரில் தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக உள்ளார். இவரது நண்பர் ஒருவர் வேலைக்காக ஒரு செல்போன் எண்ணை கொடுத்திருந்தார்.

இந்த எண் மூலம் கடந்த மாதம் தொடர்பு கொண்டபோது அது ராங்காலானது. எதிர்முனையில் பேசிய சிவகங்கை மாவட்டம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி தனலட்சுமிக்கு போய்வுள்ளது. வேணும்ன்னே போனை போட்டு கலாய்க்கறயா என சத்தம் போட அய்யய்யோ உண்மையிலயே ராங்நம்பர் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். .

இதன்மூலம் அவர்களுக்கு இடையே செல்போன் நட்பு தொடர்ந்தது. தினம் தினம் பேசும் அளவுக்கு போய்வுள்ளது இவர்களது நட்பு. கடந்த வியாழக்கிழமை திடீரென போன் செய்த தனலட்சுமி, என் வீட்ல ரொம்ப டார்ச்சர் செய்றாங்க அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். ஸ்ரீபெரும்புதூரில் ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்தால் எனது முடிவை மாற்றிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அவருக்கு எழில்மாறன் ஆறுதல் கூறி நீ திருச்சி வா நான் வந்து உன்னை அழைச்சிம் போய் வேலை வாங்கி தர்றன் என்றுள்ளார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி வந்த தனலட்சுமியை, எழில்மாறன் முதன்முதல் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்குள் காதல் அரும்பியது. எழில்மாறன், தனலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு தனலட்சுமி ஒப்புக் கொள்ளவே, இருவரும் வேலூர் வந்தனர்.

எழில்மாறன் வீட்டில், பெண்ணின் வீட்டில் சம்மதம் கேட்க தொடர்பு கொண்டபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பயந்த எழில்மாறன் பெற்றோர் அவரிடம், ‘பெண்ணை எங்கிருந்து அழைத்து வந்தாயோ அங்கேயே விட்டுவிடு’ என்று கூறியுள்ளனர். ஆனால், தனலட்சுமியை இன்று காலை சேண்பாக்கம் விநாயகர் கோயிலில் எழில்மாறன் திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு கேட்டு வேலூர் மகளிர் காவல்நிலையத்தில் காதல் மனைவி தனலட்சுமியுடன் தஞ்சம் அடைந்தார். அங்கு மகளிர் போலீசார், எழில்மாறன் பெற்றோரை அழைத்து பேசியதை தொடர்ந்து எழில்மாறன் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்

சிந்திக்கவும்: காதலுக்கு கண்ணில்லே என்று சொன்னார்கள் ஆனால் அறிவும் இல்லை என்பது இது போல் சம்பவங்கள் மெய்பிக்கின்றன. இது போல்தான் ஒருவர் போனில் ஒரு பெண்ணை காதலித்து பின்னால் அந்த பெண்ணை நேரில் பார்க்கும் போது அவர் இவரை விட வயதில் மூத்தவர் அழகும் இல்லை என்பதை தெரிந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண் பார்க்க அழகாக மனதுக்கு பிடித்தவராக இருந்ததால் கல்யாணத்தில் போயி முடிந்தது இல்லை என்றால் என்ன நடந்திருக்குமோ? செல்போன் என்ற ஒரு அறிய கண்டுபிடிப்பு இப்படி தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதே வருத்தபடும் செய்தி.

சுவாமி நித்தி படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்!

JULY 19, சென்னை:  2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான சாமியார் நித்யானந்தா  நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின.

இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சுவாமி நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச் சாட்டை கூறினார். இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம்.

வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் சுவாமி நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்,  எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன்.நான் எந்தக் கட்சியையும் சாராதவன்.

சுவாமி நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட்.  நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும் போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்.  தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லைபடு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும்.

அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க.  அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார்.

சிறுமிகளை ஆபாச புகைப்படம் எடுத்த டாக்டர்! பெற்றோர்களே உசார்!

JULY 18, இந்தியாவைச் சேர்ந்தவர் ராகேஷ் பூன் (53). இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் குழந்தைகள் நல டாக்டராக பணி புரிகிறார்.

இவர் தன்னிடம் சிகிச்சை பெற வரும் சிறுமிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என தனியாக அழைத்து செல்வார்.

 பின்னர் அவர்களை நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து கொள்வார். அந்த போட்டோவுடன் தனது நிர்வாண படத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து வைத்து இருந்தார்.

இதை தொடர்ந்து அவர் மீது நியூயார்க் போலீசில் செக்ஸ் புகார் கூறப்பட்டது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது 60 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சிந்திக்கவும்: முன்னொரு காலத்திலேயே வைத்தியர்கள் இருந்தார்கள் அந்த தொழிலை சேவையாக நினைத்து செய்தார்கள். இப்பொது இந்த ஆங்கில மருத்துவ டாக்டர்கள் மருத்துவத்தை வியாபாரமாக ஆக்கி அதை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து மக்களை கொள்ளை அடித்து வருகிறார்கள். இவர்களிடம் வேலை செய்யும் நர்சுகள் கதியோ அம்போ பரிதாபம். இந்தியாவில் இவர்கள் பெருமை நாறுகிறது இது போதாதென்று அமெரிக்கா போயி தங்கள் வேலையை காட்டி நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளார்கள். இவர்களை புகழை பேச ஆரம்பித்தால் சாமியார்கள் லிஸ்டில் இவர்களையும் சேர்க்க வேண்டி வரும்.

Jul 17, 2011

மும்பை குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா தொடர்பா?

JULY 18, புதுடெல்லி:மும்பை தொடர் குண்டு வெடிப்பிலும், ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிலும் ஒரே வெடிப்பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளது என கருதப்படுகிறது.

அம்மோனியம் நைட்ரேட், குரூட் ஆயில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெடிக்குண்டுதான் மும்பை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளின் பயன்பாடும் கண்டறிந்தால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுதான் மும்பையிலும் வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறலாம்.

மத்திய தடவியல் சோதனைக்கூடத்தில் நடத்திய பரிசோதனை அறிக்கை ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்படவில்லை என கூறிய பொழுதிலும், ஓபரா ஹவுஸில் வெடித்த குண்டின் சிதிலங்களை கலினா தடவியல் விஞ்ஞான சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டதை நிராகரிக்கவில்லை.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் அரசு தடவியல் சோதனைக்கூடத்தின் அறிக்கையை முடிவாக கொள்ளவேண்டாம் என புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டதால் தான் ஓபரா ஹவுஸில் இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என மும்பை போலீஸ் கருதுகிறது. 2007 பெப்ருவரியில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ், அம்மோனியம் நைட்ரேட், குரூட் ஆயில் ஆகிய உபயோகித்த வெடிக்குண்டு பயன்படுத்தப்பட்டது.

ஆனால்,இவ்விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்க ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிச்செய்யவேண்டும். ஆகையால், கலினா தடவியல் சோதனைக் கூடத்தின் விரிவான அறிக்கைக்காக காத்திருப்பதாக மும்பை தீவிரவாத எதிர்ப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அம்மோனியம் நைட்ரேட்டை ஆர்.டி.எக்ஸில் கலந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியதையும் போலீஸ் நிராகரிக்கவில்லை.

டி.என்.டி வெடிப்பொருளை உபயோகித்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி கருதுகிறது. பாறையை தகர்ப்பது உள்ளிட்டவைகளுக்கு உபயோகிக்கப்படும் இந்த வெடிப்பொருளின் சக்தி குறிப்பிட்ட இடத்தில் குறைவாக இருக்கும்.ஆனால் ஆர்.டி.எக்ஸ் பெரும் சேதத்தை விளைவிக்கும். ஓபரா ஹவுஸ், ஜவேரி பஸ்ஸார், தாதர் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் எல்லாம் பெரும் சேதம் விளைந்துள்ளது.

குண்டுவெடிப்பிற்கு அம்மோனியம் நைட்ரேட்டின் உபயோகத்தை அனைத்து ஆய்வுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.குண்டுவெடிப்பிற்கு உபயோகித்த டைமர் குறித்து மும்பை ஏ.டி.எஸ் இதுவரை இறுதி முடிவுக்கு வரவில்லை. மோட்டார் சைக்கிளில் குண்டை பொருத்திய முறையையும் போலீஸ் பரிசோதித்துவருகிறது. மலேகானிலும், மொடாஸாவிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகளிலும் மோட்டார் சைக்களில் தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது.