Jul 22, 2011

15 ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் கடவுள்!

JULY 23, பாட்னா:  பீகார் மாநிலத்தில், கடந்த 15 ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் அனுமன் சிலையை விரைவில் மீட்டு வந்து, கோவிலில் வைப்பதாக, முன்னாள் போலீஸ் அதிகாரி களமிறங்கியுள்ளார். பீகார் மாநிலம், போஜ்புரி மாவட்டத்தில் பாதாரா பகுதியில் உள்ள கவுண்டி கிராமத்தில், 175 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்காஜீ கோவில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள பழமையான அனுமன் சிலை, கடந்த 1994ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கொள்ளையடிக்கப்பட்டது. எனினும், தீவிர விசாரணை நடத்திய கிருஷ்ணா நகர் போலீசார், குற்றவாளிகளை கைது செய்ததுடன், அனுமன் சிலையையும் உடனடியாக மீட்டனர். பின்னர், அந்த சிலை கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டது.

இந்த சிலை கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், மீட்கப்பட்ட அனுமன் சிலையை, கோவிலில் பழைய இடத்திலேயே வைக்க, ஊர்க்காரர்கள் முடிவு செய்து கோர்ட்டை அணுகினர். சர்வதேச மார்க்கெட்டில், அந்த சிலையின் விலை 3 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 எனவே, 45 லட்ச ரூபாய் பிணைய தொகையை கோர்ட்டில் கட்டிவிட்டு, சொந்த பொறுப்பில் சிலையை எடுத்துச் சென்று கோவிலில் வைக்கலாம் என்று, கோர்ட் கூறிவிட்டது. அவ்வளவு பெரிய தொகையை, யாரும் சொந்த செலவிலிருந்து செலுத்த முன்வரவில்லை.  எனவே, கடந்த 15 ஆண்டுகளாக, அனுமன் சிலை போலீஸ் பாதுகாப்பில், கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது.

சிந்திக்கவும்: அனுமாருக்கு வந்த சோதனையா? கடவுளே போலீஸ் பாதுகாப்பில் இருந்தால் இந்த உலகை காப்பாற்றுவது யார்? தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாத ஒரு கடவுள் எப்படி மனிதர்களை பாதுகாக்கப்போகிறார் தெரியவில்லை. இந்து கடவுள்களை திருடி வெளிநாட்டுகாரர்களுக்கு விற்றுவிடுகிறார்கள் இந்த இந்துமத கடவுள்களும் வெள்ளைக்காரன் வீட்டு வரவேற்ப்பு அறையை அலங்காரம் செய்கிறார். இதை சொன்னால் நாத்திகன் என்று சண்டைக்கு வருவார்கள். எதற்கு வீண் வம்பு!

No comments: