Jul 22, 2011

வெடிகுண்டு மிரட்டலை போலீஸ் எப்படி கண்டு பிடித்தது?

JULY 23, அதிமுக பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிக்கும் என கட்சித் தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த, எலக்ட்ரிகல் கடை உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, ராயப்பேட்டை,  அவ்வை சண்முகம் சாலையில், அ.தி.மு.க., அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கடந்த 17ம் தேதி, பிற்பகல் 3.30 மணிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், "அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடக்கும் இடங்களில் குண்டு வெடிக்கும்' என, மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதியப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

திண்டுக்கல், செம்பட்டி, பச்சமலைக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய ஜெயகணேஷ் என்பவர், பாண்டியம்மாள் என்பவரின் அடையாளச் சான்றை, திண்டுக்கலைச் சேர்ந்த பாலாஜி மற்றும் கார்த்திக் ராஜாவிடம் ஒப்படைத்துள்ளார் . பின்னர், அந்த சான்றிதழை இருவரும் சேர்ந்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில், போலியாக சிம் கார்டு வாங்குவதற்கு துரைராஜ் என்பவரிடம் கொடுத்துள்ளனர். துரைராஜ், சிம் கார்டு வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதை பயன்படுத்தி, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிக்கும் என்று அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கார்த்திக் ராஜாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில், மிரட்டல் விடுக்க பயன்படுத்திய மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்த கார்த்திக் ராஜா, திண்டுக்கல் நாகல் நகரில் மொபைல் மற்றும் எலக்ட்ரிகல் கடை வைத்துள்ளார்.

No comments: