Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Jan 11, 2015

சூத்திரனை சுகந்திர மனிதனாக்கிய!?

இந்துக்கள் மத்தியில் நிலவிவரும் தப்பெண்ணங்களை நீக்க ஆங்கில ஆசிரியர்: எம்.என்.ராய் எழுதிய “ இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம் “ என்கிற இந்நூல் பெருமளவு உதவும். (சூத்திரனை சுகந்திர மனிதனாக்கிய இஸ்லாம்).

இஸ்லாமை உயர்த்திப் பிடிப்பது எங்கள் நோக்கமல்ல. மாறாக ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள தவறான கருத்துக்களைக் களைந்தெறிய உதவுவது சனநாயக வாதிகளின் கடமை என்ற முறையில் இந்நூலை வெளிக்கொணர்ந்துள்ளோம்.

இந்த வரிகளை படித்தப் பிறகு இப்புத்தகம் எத்தகைய தன்மையுடையது யாரால் எழுதப்பட்டிருக்கும் என்பதை ஊகித்திருப்பீர்கள் இஸ்லாமிய எழுத்தாளர்களைவிட சில சந்தர்ப்பங்களில் மற்று சித்தாந்த கொள்கையுடைய எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு இஸ்லாத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை இப்புத்தகத்தைப் படித்தால் தெரிந்துக் கொள்வீர்கள்.

இப்புத்தகத்தின் சிறப்பம்சம் வரலாற்றுச் சான்றுகளை ஆதாரபூர்வமாக இந்தூல் பேசுகிறது ஒரு விடயத்தை சொன்னால் அதற்கான ஆதாரத்தையும் இந்நூல் சுட்டிக் காட்ட தவறுவதில்லை. இந்நூலின் ஆசிரியரைப் பற்றி...எம்.என்.ராய் அவர்கள்....மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் 1887-ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாளன்று எம்.என்.ராய் பிறந்தார்... ஒரு தீவிர தேசியவாதியாக தன் அரசியல் வாழ்க்கையை துவக்கிய இவர், ஒரு ஆக்கப்பூர்வமான தீவிர மனிதநேயவாதியாக விளங்கினார்.

இஸ்லாமின் நம்ப முடியாத வெற்றிக்கு ஆன்மீக காரணங்கள் இருந்தது போலவே, சமூக –அரசியல் காரணங்களும் இருந்திருக்கின்றன. இந்த முக்கியமான கருத்திற்கு ஜிப்பனின் பின்வரும் கூற்று சான்றாக விளங்குகிறது

"அன்றைய ஜொராஸ்டரின் மதத்தைக் காட்டிலும் மிகத் தூய்மையானதும் மோசஸின். கட்டளையைக் காட்டிலும் மிகத் தாரளப் பன்பும் கொண்டிருந்ததுமான, முகம்மதுவின் மதமானது பகுத்தறிவுக் கருத்தோடு மிகக்குறைவான முரண்பாட்டையும், ஏழாம் நூற்றாண்டின்போது கிறித்துவத்தின் எளிமையை எள்ளி நகையாடி வந்த மாயாவாதம், மூடநம்பிக்கை ஆகிய நம்பிக்கைகளோடு அதிக முரண்பாட்டையும் கொண்டிருந்தாகத் தோன்றுகிறது. (நூல்: ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்).

இஸ்லாமின் கண்கவர் வெற்றிக்கு அதன் தொடக்க காலத் தொண்டர்களின் இராணுவ வலிமையைக் காட்டிலும், அதன் விடுதலை, சமத்துவக் கோட்பாடுகளே காரணமாக இருந்திருக்கிறது என்ற உண்மைக்கு மற்றொரு வரலாற்றாசிரியர்பின்வரும் சான்றை முன் வைக்கிறார்:

“அராபியர்கள் வெற்றி கண்ட ஒவ்வொரு கிறித்துவ நாட்டின் விசயத்திலும் வரலாறு வாய்ப்புக் கேடாக ஒரு செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. அராபியர்கள் முன்னேறிச் செல்ல அந்நாட்டு மக்கள் சாதகமாக இருந்ததே அவர்களது வெற்றிக்குரிய காரணமாக இருந்திருக்கிறது. அரபு வெற்றியாளர்களைக் காட்டிலும் பெரும்பாலான கிறித்துவ அரசுகளின் நிர்வாகம் மிக மோசமான ஒடுக்குமுறை கொண்டதாக இருந்திருக்கிறது என்ற செய்தியானது அந்த அரசுகளுக்கு அவமானம் தரும் ஒரு செய்தியாகும். சிரியா நாட்டு மக்கள் முகம்மதுவின் சீடர்களை வரவேற்றார்கள்.

எகிப்தின் காப்டுகள் (மரபு வழி கிருஸ்த்தவர்கள்) அரபுகளின் ஆதிக்கத்தின் கீழ் தங்களைத் தாங்களே ஒப்படைத்துக் கொண்டனர். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த பெர்பர்கள், ஆப்பிரிக்காவை வெற்றி கொள்ள அரபுக்களுக்கு உதவி புரிந்தனர் இந்த நாடுகள் அனைத்தும் கான்ஸ்டான்டிநோபிள் அரசின் மீது கொண்டிருந்த வெறுப்பின் காரணமாக, தங்களை முகம்மதியர்களின் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துக் கொண்டார்கள். 

“பைசாண்டியப் பேரரசின் வரலாறு)” கிறித்துவ மூட நம்பிக்கையால்.கிரேக்க அறிஞர்கள் பண்டைய கல்வி நிலையப் பதவிகளிலிருந்து  கட்டாயமாக வெளியேற்றப்பட்டர். அவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்த கிரேக்க அறிஞர்களை கலீபாக்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டனர். இவர்களின் பணிக்கு உயரிய மரியாதை கிட்டி வந்தது. அறிவாளிகள் பற்றி கலீபா அல்மேனஸ் சொல்லிருந்த கருத்துக்களை, அரபு வரலாற்றாசிரியரான அபுல்பேரானகயஸ் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.

"அறிஞர்கள்(ஆலீம்கள்) நபிமார்களின் வாரிசுகள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. அவனின் சிறந்த, மிகப்பயனுள்ள ஊழியர்களும் இவர்களே. இவர்கள் பகுத்தறிவு நுட்பங்களை வளர்த்துக் கொள்வதற்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.(நூல்: ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்) இசுலாமும் இந்தியாவும் என்ற அத்தியாயத்தில் பார்ப்பனிய ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைக்குள்ளாகியிருந்த ஜாட்டுகள் இன்னும் இதர விவசாயச் சாதிகளின் உதவியோடு தான் முகம்மது பின் காசிம் சிந்துப் பகுதியை வெற்றிக் கண்டார். (எலியட்:”இந்திய வரலாறு”).

பண்டைய இந்துப் பண்பாட்டின் உறுதியான ஆர்வலரான ஹேவல் முஸ்லிம்கள் மீது அனுதாபமோ அல்லது அவர்கள்பால் இரக்கமோ காட்டதவர். இந்தியாவில் இஸ்லாம் பரவியது குறித்து அவர் முன்வைத்துள்ள சுவையான சான்று பின்வருமாறு: ”இஸ்லாம் மதத்தைத் தழுவிக்கொண்டவர்களுக்கு நீதிமன்றத்தில், ஒரு முஸ்லிம்களுக்குக் கிடைத்த அனைத்து உரிமைகளும் கிடைத்து வந்தன. அங்கு நீதிமன்றங்களில் அராபியச்சட்டங்களையோ பழக்க வழக்கங்களையோ அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. குர்-ஆனே அனைத்து வழக்குகளையும் தீர்மானித்து வந்தது. 

மதமாற்றம் என்ற இந்த வழிமுறையானது இந்துச் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களிடையே குறிப்பாக, பார்ப்பனியத்தின் கடுமையான விதிமுறைகளால் “அசுத்தமான வர்க்கங்கள்” எனக் கருதப்பட்டு வந்த மக்களிடையே வலுவான பாதிப்பைச் செலுத்தி வந்தது.(ஹேவல்- நூல்:இந்தியாவில் ஆரிய ஆட்சி) கடுமையான முஸ்லிம்- எதிர்ப்பு வெறி கொண்ட ஹேவலே கூட வெறுப்போடு ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார். அது பின் வருமாறு ”இந்து சமூக வாழ்வின் மீது முஸ்லிம்கள் அரசியல் கோட்பாடு செலுத்திய பாதிப்புகள் இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தன.

ஒன்று, அது சாதி அமைப்பின் உக்கிரத்தை அதிகப்படுத்தி அதற்கு எதிராக ஒரு கலகத்தைத் தட்டி எழுப்பியது. பெடோயின்களுக்கு(Bedoins காட்டரபிகள்) அது காட்டியிருந்த மனதைக் கவரும் மயக்கத்தைப் போலவே இந்துச் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் எதிர்காலம் குறித்து ஒரு கவர்ச்சியை அது காட்டியிருந்தது. இஸ்லாம் சூத்திரனை ஒரு சுகந்திர மனிதனாக்கி அவனை உள்ளார்ந்த விதத்தில் பார்ப்பனர்களின் எசமானனாக உருவாக்கியது. இதில் சிலர் தங்கள் சுயமான மேதமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். மறுமலர்ச்சியை போலவே இதுவும் சாராம்சத்தில் ஒரு நகர வழிபாடாக இருந்தது. நாடோடிகளை அவர்கள் கூடாரத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது. சூத்திரனை கிராமத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது. 

வாழ்க்கையில் முழு இன்பக் கிளர்ச்சி கொண்ட ஒரு மனிதகுல வகையை இது வளர்த்தியிருந்தது. (ஹேவல்- நூல்: இந்தியாவில் ஆரிய ஆட்சி) இப்படி புத்தகம் முழுவதும் வரலாற்று ஆதராங்களோடு விளக்கியிருக்கிறார் இஸ்லாத்தை ஆய்வுரீதியாக விளங்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் நூலின் பெயர்: இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம் ஆங்கில ஆசிரியர்: எம்.என்.ராய். தமிழாக்கம்:வெ.கோவிந்தசாமி
Source :முகநூலகம்
கீழ்காணும் இடங்களிலும் இப்புத்தகம் கிடைக்கலாம்
1. விடியல் பதிப்பகம் 
மின்-அஞ்சல் :vitiyal2000@eth.net
தொடர்பு எண் :914222576772
முகவரி :11, பெரியார் நகர்
மசக்காளிபாளையம் 
வடக்கு கோவை - 641015

Sep 6, 2011

தமிழா! தமிழா! சிந்தி செயல்படு!! அடிமையல்ல நீ ?


தாழ்த்தப்பட்ட  மக்கள் வழிபடுவதற்கு என்று தனியாக தெய்வங்கள் உண்டு. 

முன்பெல்லாம் இந்த விநாயகரை தாழ்த்த பட்டமக்கள் வழிபட அனுமதிக்க மாட்டார்கள்.ஏன் என்றால் அது, உயர் ஜாதிக்காரர் உடைய தெய்வம் என்று இருந்தது.

ஐயோபாவம்! இன்று எவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்த மக்களை பிரிதார்களோ? வழிபாடு செய்வதை தடுத்தார்களோ?

அந்த மக்களே இன்று விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் அந்த உயர் ஜாதி கார்களின் தெய்வமான அந்த பிள்ளையாரை ரோட்டில் போட்டும்,  ஆற்றில் போட்டும், மிதி மிதி என்று மிதிக்கும் போது, ஒன்று தெளிவாக தெரிகிறது! 

வணங்கு வதற்கு அனுமதி இல்லை!, மிதிப்பதற்கு அனுமதி உண்டு! என்ன மதமோ? என்ன வழிபாடோ? என்னுடைய தாழ்த்தப்பட்ட மக்களே! (பார்ப்பனன் உனக்கு சூட்டிய பெயர்) இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். 

எந்த தெய்வத்தின் பெயரால் உங்கள்ளையும் நம் முன்னோர்களையும் பிரிதார்களோ? எந்த தெய்வத்தை வழிபட உன்னையும், உன் முன்னோர்களையும் தடுத்தார்களோ? அந்த தெய்வம் இன்று நாடு ரோட்டில்! விடாதே! சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்! முடிந்தால் வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த மிதி விழாவை தினமும் கொண்டுவர முயற்சி செய் .மிதி வழிபாடு தொடர வாழ்த்துக்கள்.

இந்த தெய்வ வழிபாட்டை உனக்கு சொல்லி கொடுத்த மும்பை சிவசேனா தலைவனின் மனைவி இறந்த போது அவன் செய்த முதல் வேலை வீட்டில் இருந்த எல்லா பிள்ளையார் சிலைகளையும் எடுத்து வெளியில் எறிந்ததுதான்!இது தான் இவர்களின் தெய்வ வழிபாடு விளங்கிகொள்!

தமிழா! தமிழா! சிந்தி செயல்படு!? அடிமையல்ல நீ !!

Jul 12, 2011

பொறுப்பற்ற போலீஸும் பொறுப்பான ராஜா முகம்மதும்!

JULY 13, மேலூர்: ரோட்டை கடந்தவரை காரை ஏற்றி கொன்று விட்டு தப்பிய நபரை, தனி ஒரு நபராக மூன்று மாதம் தேடி கண்டுபிடித்து, மேலூர் கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுத்தார் இறந்து போனவரின் மகன் ராஜா முகமது. மதுரை மேலூர் அருகில் உள்ளது தும்பைப்பட்டி ஊராட்சி. இவ்வூரைச் சேர்ந்த மீராலெப்பை, 55. சென்னை புரசைவாக்கத்தில் ரெடிமேட் கடை நடத்தி வந்தார்.

விடுமுறையில் தும்பைபட்டிக்கு வந்த அவர், 2011 ஏப்.,17ம் தேதி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள, பெரியகுளம் கண்மாய்க்கு குளிக்க சென்றார். காலை 8.30 மணிக்கு ரோட்டை கடந்தார். அப்போது திருச்சியை நோக்கி சென்ற கிரே கலர் இண்டிகா கார், மீராலெப்பை மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

கார் மோதிய வேகத்தில், காரின் முன்பக்க இண்டிகேட்டர் உடைந்து அந்த இடத்தில் கிடக்க, கார் நிற்காமல் சென்றது. அவ்விடத்திற்கு வந்த மீரா லெப்பையின் மகன் ராஜாமுகமது, 35, அருகில் இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். யாரும் காரின் எண்ணை கவனிக்க வில்லை என தெரிந்தது. போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து என, வழக்கை முடிக்க முயன்றனர்.

அதில் உடன்பாடு ஏற்படாத ராஜாமுகமது, கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித் துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்து ள்ளது தெரிய வந்தது.

ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலை யின் தலைமையகத்திற்கு அலைந்து பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார். இத்தகவலை மேலூர் போலீசாரிடம் அவர் தெரிவிக்க, ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மாடசாமி, டிரைவரை கோர்ட்டில் ரிமாண்ட் செய்தார். திருப்பூரில் டெய்லர் வேலை பார்த்து, தனது குடும்பத்தை காப்பாற்றும் ராஜா முகமது, மூன்று மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு இந்த நீண்ட தேடலை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் மரியம் பிச்சை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை கண்டு பிடிக்க, ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். ஆனால், தனி ஒரு நபராக போராடி வெற்றி பெற்ற ராஜா முகமதை பாராட்டத்தான் வேண்டும்.

பொறுப்பில்லாத பெற்றோர்கள் பலியான சிறுவர்கள்!

JULY 13, செய்தி 1 : திண்டுக்கல் அருகே கிழக்கு மீனாட்சி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் அருள்நாதன் வயது 8 , அவரது உறவினர் குணசேகரன் என்பவர் மகன் புகழேந்தி வயது 8 இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கிணற்றில் கால் தவறி விழுந்து 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

செய்தி 2 : பவானி ஆற்றில் மூழ்கி பள்ளிச்சிறுவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக இறந்தனர். மேட்டுப்பாளையத்தையடுத்த சிறுமுகை பெட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவனர்கள் விக்னேஷ் (14) மற்றும் சிவராஜ் (12) ஆகியோர் தங்களது நண்பர்களுடன் அருகிலிருந்த பவானி ஆற்றில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கி பலியாயினர்.

சிந்திக்கவும்: ஒரே நாளில் இரண்டு செய்திகள் இப்படி தினமாம் தினம் எத்தனையோ குழந்தைகள் பலியாகின்றன. மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படும் நாடுகளின் இந்தியாவும் ஒன்று. பொறுப்பற்ற பெற்றோர்கள் இவர்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. குழந்தைகளை தேவைக்கு அதிகமாக பெற்றுத் தள்ளுவது பின்னால் அவர்களை பராமரிக்க முடியாமல் இப்படி பொறுப்பில்லாமல் பலி கொடுப்பது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறுவது குழந்தைகள் அதாவது பதினைந்து வயதிற்கு உட்பட்டவர்கள் பெற்றோர்கள் இல்லாமல் வெளியே தனியாக வந்தால், தனியாக விளையாடிக்கொண்டு இருந்தால், பெற்றோர்கள் இல்லாமல் வீட்டில் தனியாக இருப்பது தெரியவந்தால் அந்த பெற்றோர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பார். மீண்டும் அதே தவறை செய்தால் சிறைத்தண்டனை வரை கிடைக்கும்.

குழந்தைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்வரை தாய், தந்தையர் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் அனுமதி இல்லாமல் துணை இல்லாமல் வெளியே போவதோ, வருவதோ இதுபோல் விளைவுகளை ஏற்ப்படுத்தும் பெற்றோர்கள் கவனமாக இருப்பார்களா?

Jul 3, 2011

தான் பெற்ற பெண்மக்களை விற்று தாரம் தேடிய தந்தை!

JULY 04, லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள, ராம்பூர் ரகோலியாக் கிராமத்தைச் சேர்ந்தவர் நன்ஹென் ராம், 45. இவருக்கு ஐந்து குழந்தைகள்.

மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ராம், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, தீவிரமாக பெண் தேடி வந்தார். அவருக்கு பெண்கொடுக்க ஒரு குடும்பம் முன்வந்தது.

ஆனால், தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ள தங்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என, பெண்ணின் பெற்றோர் கூறினர். அவ்வளவு பணம் கையில் இல்லாததால், எந்த தந்தையும் செய்யத் துணியாதச் செயலை ராம் செய்யத் துணிந்தார்.

பணம் திரட்டுவதற்காக, தான் பெற்ற இரண்டு மகள்களை விற்றுவிட, ராம் முடிவு செய்தார். பத்து வயதான மகள் மாலதியையும், எட்டுவயதான மகள் ராம்காந்தியையும் பக்கத்து ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம், 15 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசினார். பணத்தைக் கொடுத்துவிட்டு, குழந்தைகளை அழைத்துச் செல்ல, ராஜ்குமார், ராமின் வீட்டிற்கு வந்தார்.

விவரம், கிராம மக்களுக்கு தெரிந்துவிட்டது. மக்கள், ராம் வீட்டை முற்றுகையிட்டு, ராஜ்குமார் மற்றும் அவருடன் வந்தவர்களைப் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். ராம், தப்பி ஓடிவிட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமையும், அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்த பெண்ணையும், தீவிரமாக தேடி வருகின்றனர்.

Jun 10, 2011

பாசத்தை கொடுக்கும் பெற்றோர்கள் எய்ட்சை கொடுத்து வேதனை

ஜூன் 11 ,கொல்கத்தா : இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்தே அவர்களுக்கு பரவியுள்ளது என்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

யுனிசெப் மற்றும் மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சொசைட்டியின் கருத்தரங்கு, மேற்குவங்காளம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது.

இதில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து இந்தியாவுக்கான யுனிசெப் தலைவர் இவான் கேமரோனி நேற்று கூறியதாவது:

இந்தியாவில் பெரும்பாலும் பெற்றோராலேயே குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பரவுகிறது. பாதுகாப்பற்ற ஊசிகள் மற்றும் ரத்தம் செலுத்தும் போது குறைந்த எண்ணிக்கையிலேயே எய்ட்ஸ் தொற்றுகிறது.


எய்ட்சால் பாதிக்கப்படும் பெண் மூலம் அவரது குழந்தைக்கும் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெற்றோர் மூலம் ஆண்டுதோறும் 21 ஆயிரம் குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கின்றனர். இதை தடுக்க தேவையான மருந்துகள், உதவிகளை யுனிசெப் செய்து வருகிறது.இவ்வாறு இவான் கூறினார்.

May 27, 2011

படையப்பா சிகிச்சைக்காக சிங்கப்பூர் படையெடுப்பு !!!

சென்னை, மே. 27-நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் மயிலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

கடந்த 13-ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் நவீன சிகிச்சை அளித்து வருகின்றனர். அமெரிக்கா டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். சிறுநீரக பாதிப்பு இருந்ததால் “டயாலிசிஸ்” சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ரஜினியை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று நவீன சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் விரும்பினர். லண்டனுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் அங்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஆகும் என்றும் ரஜினி உடல் நிலை அதற்கு ஒத்துக்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 4 மணி நேரம் பயண தூரம் உள்ள சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள் ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல டிக்கெட் பதிவு செய்யப்பட்டு உள்ளது. “வீல் சேர் பயணியாக” ரஜினி செல்வதற்கு அனுமதி வாங்கப்பட்டு உள்ளது. “சிவாஜிராவ்” என்ற பெயரிலான தனது பாஸ்போர்ட்டில் ரஜினி பயணப்படுகிறார்.

விமான படிக்கட்டு வரை ஆம்புலன்சை கொண்டு செல்ல அனுமதி பெறும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட உள்ளார். அமெரிக்க டாக்டர்களும் அங்கு வருகின்றனர்.

சிந்திக்கவும்: ரஜினி காந்தை பார்க்க அமெரிக்க டாக்டர்கள் இருக்கிறார்கள். சிங்கபூர் மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன. அவர் பயணம் செய்ய தனிவிமானமும் உள்ளது.

ஆனால் இந்தியாவில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் எத்தனை? மருத்துவ மனைகள் உள்ளன. கோடிக்கணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவுக்கு ஏங்கும் நாடாக இருக்கிறது.

பணக்காரர்கள் அடையும் இதுபோல் வசதிகள் கூட வேண்டாம். குறைந்த பட்சம் சாதாரண சிகிச்சையாவது இந்த ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவேண்டும்.

இப்படியும் நாம் சிந்தித்து பார்த்தால் என்ன? ஒவ்வொரு மந்திரியையும், டாட்டா, பிர்லா, அம்பானி, ரஜினி போன்ற பெரும் பணக்கார்கள் இவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போகும்போது சென்னை அரசு மருத்துவமனியில் ஒரு நாள் சிகிச்சைக்கு அனுமதித்தால். இந்த ஏழை மக்கள் படும் அவதியை குறைந்த பட்சம் இவர்களால் உணரவாவது முடியும்.

கருணாநிதி திருவாரூரில் இருந்து பண்டாரமாக, திமுக கட்ச்சிக்குள் நுழைந்தார் இன்று அவர் குடும்பத்தினர்தான் ஆசியாவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்களாக மாறிவிட்டார்கள். இந்த கொள்ளைகார ஆட்சியாளர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் இங்கு நடத்தப்பட வேண்டும்.

ஆட்சி அதிகாரம் படித்த, பண்புள்ள இளைஞ்சர் சமுதாயத்திடம் கொடுக்கப்படவேண்டும். இந்த அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினர் ரவுடிகள், கைநாட்டுகள், முறையற்ற வழிகளில் சம்பாதித்தவர்கள் இப்படி பட்ட பழம்பெருச்சாளிகள்தான் அரசியலுக்குள் வரமுடியும் என்ற நிலை மாறவேண்டும்.

அடுத்து வயோதிகர்கள், தொந்தி பெருத்து, உடல்நிலை சரியில்லாமல் வீல்சேரில் வரும் சுகவீனமுற்றோர் போன்றோர் பதவிகளில் வீற்றிருக்கும் அவலத்தையும் பார்க்க முடிகிறது. இப்படி ஆரோக்கியம் இல்லாத, படிப்பறிவு இல்லாத இவர்களால் எப்படி மக்களுக்கு ஒழுங்காக சேவை செய்ய முடியும்.

என்ன, எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் படித்தவர்களா? என்று நீங்கள் கேட்பதை விளங்க முடிகிறது. எந்த தகுதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தது நல்லவர்கள் ஆக இருந்தாலும் நாம் ஒத்துக்கொள்ளலாம் அதுவும் இல்லை என்பதே வருத்தமான உண்மை.

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ரஜினி ரசிகர்கள் கூறி திரிவதும், அவர் படம் வெளியாகும் போது கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்வதுமாக, தங்கள் குடும்பங்களை கவனிக்காமல் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை. இதுபோல் கூத்துக்கள் உலகில் எந்த நாட்டிலும் நடக்காது, இந்த போன்ற கொடுமைகளை குறிப்பாக தமிழகத்திலேயே பார்க்க முடிகிறது.

Apr 1, 2011

கிரிக்கெட் விவகாரம்: மாடல் பூனம் மீது வழக்கு!!!

போபால், ஏப்.1- உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால், தான் நிர்வாணமாக ஓடுவதாக அறிவித்த மாடல் அழகி பூனம் பாண்டே மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆர்.கே. பாண்டே என்னும் வழக்கறிஞர் போபால் முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

மாடல் பூனம், தனது நடவடிக்கையின் மூலம் குறிப்பிட்ட சமூகத்தினரை கேவலப்படுத்துகிறார் என்று அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

"பூனம் கூறியது போல் அவர் நிர்வாணமாக ஓடவில்லை என்றாலும், குறிப்பிட்ட சமூகத்தினரை கேவலப்படுத்திய அவரை தண்டிக்க வேண்டும். இந்தியக் கலாசாரத்தையும் அவர் அவமானப்படுத்திவிட்டார்." என்று வழக்கறிஞர் ஆர்.கே. பாண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் "கிங்பிஃஷர்" நிறுவனம் வெளியிட்ட காலண்டரில் புகைப்பட மாடலாக பூனம் தோன்றியுள்ளார்.

இதையடுத்து, பூனம் நிர்வாணமாக ஓடுவதற்கு மல்லையாவும் தூண்டுதலாக இருந்தார் என்றதன் அடிப்படையில் அவரது பெயரையும் தனது மனுவில் ஆர்.கே. பாண்டே குறி்ப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Mar 31, 2011

கோயில் கட்ட இடம் தானம் ! மகபூப் பாஷா !!!

மதுரை: ஏப்ரல் 1, மதுரை எம்.கே.புரத்தில் முனியாண்டி கோயில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள, 200 சதுர அடி இடத்தை தானமாக வழங்கி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வலுசேர்த்திருக்கிறார் மகபூப்பாஷா(40). இப்பகுதியைச் சேர்ந்த இவர், பீரோ தயாரிப்பு கம்பெனி நடத்துகிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்துக்கள் செல்வதற்காக தனது இடத்தை தானமாக வழங்கி அப்போதே ஒற்றுமையை வெளிப்படுத்திஇருக்கிறார் இவரது தாத்தா நீருஉசேன். இவருக்கு சொந்தமான இடத்தில், சிலர் முனியாண்டி கோயிலை சிறியதாக கட்டினர். இக்கோயிலை விரிவுப்படுத்த திட்டமிட்ட நிர்வாகிகள் இடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்து மகபூப்பாஷாவை அணுகினர்.

அவர் "மதங்கள் வேறாக இருந்தாலும், சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கோயிலுக்கு இடத்தை தானமாக வழங்கினால் தான் சரியாக இருக்கும்' என்றார். இதை தொடர்ந்து, நேற்று மதியம் அரசரடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கோயில் நிர்வாகிகள் தங்கச்சாமி, கருப்பையா, ராஜூ ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை சார்' என்று நம்மை நெகிழ வைத்தார்.

பேஸ்புக்’, 'டிவிட்டர், பற்றி ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் !!!!

சில புரட்சிக்கு வழி வகுத்த சமூக வலைதளங்களான ஃபேஸ்புக்’, 'டிவிட்டர் போன்றவற்றை எண்டெர் டெய்ன்மெண்டுக்காக பயன்படுத்துபவர்கள் அவசியம் படியுங்கள்.

ஆர்குட்’, 'ஃபேஸ்புக்’, 'டிவிட்டர்’... இவையெல்லாம்தான் இன்றைய ஃபேஷன் பரபரா!
நீ எந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருக்க..?' என்ற கேள்விக்கு, ''எதுலயும் எனக்கு அக்கவுன்ட் இல்ல...' என்று சொல்பவர்களை, டெக்னோ உலகில் இருந்து ஏதோ கண்காணாத தொலைவில் இருப்பவர்களைப் போல பரிகாசத்துடன் பார்ப்பதுதான் இப் போதைய நிலைமை!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவில் இருந்து... பக்கத்து வீட்டு ப்ளஸ் டூ பெண் வரை ஆண்களையும், பெண்களையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் தொழில் நுட்ப ஜனரஞ்சக ஹீரோவான இந்த சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் ஆரம்பிக்கும் ஒருவர்... அதில் தன் புகைப்படம், இ-மெயில் ஐ.டி, தொலைபேசி எண் போன்றவற்றை விரும்பினால் கொடுக்கலாம்.

அதைப் பார்த்து அந்த வலைதளத்தில் உலவும் மற்றவர்கள் (பள்ளி, கல்லூரி, அலுவலக நட்புகள் என ஏற்கெனவே அறிமுகமானவர்களும் இருக்கலாம், புதியவர்களும் இருக்கலாம்), அவருடன் ஃப்ரெண்ட்ஷிப் வைக்க விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்புவார்கள். ஏற்பதும்... ஏற்காததும் அவரவர் விருப்பம்.

ஏற்றுக்கொண்டால்... புகைப்பட பரிமாற்றங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், வாழ்த்துப் பரிமாற்றங்கள் என்று அந்த நட்பு கலகலதான்! இத்தகைய நட்பு... ஓர் எல்லையோடு இருந்தால் பிரச்னை இல்லை. எல்லை தாண்டும்போது... லகலகதான்! குறிப்பாக, பெண்கள் பலரும் அந்த இணைய உலகின் முட்கரங்களில் சிக்கிக் கொண்டு சீரழியும் செய்திகள் பகீரிடச் செய்கின்றன.

அமெரிக்காவில் ஒரு பெண், 'குடும்பத்துடன் டூர் போறேன் கைஸ்! ஒரு வாரம் ட்விட்டர் ஃப்ரெண்ட்ஸுக்கு பை!’ என்று 'ட்விட்’ செய்துவிட்டுச் சென்றார். டூர் முடிந்து வீடு திரும்பியவருக்கு... அதிர்ச்சி! துடைத்து வைத்தாற்போல வீடு திருடப்பட்டிருந்தது.

கொள்ளையனை வலைவீசி காவல்துறை பிடித்தபோது, ''ட்விட்டர்ல நான் அவங்க ஃப்ரெண்ட். ஒரு வாரம் வீட்டுல இருக்க மாட்டேன்னு 'ட்வீட்’ செஞ்சிருந்ததைப் படிச்சுட்டு, பிளான் பண்ணினேன்'' என்றான் கூலாக!

தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன்.

மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் செல்வி.

கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.

''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று செல்வி படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் செல்வியின் அப்பா.

பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், செல்வியின் வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் செல்வியின் அப்பா. செல்வியிடம் இருந்தே தொடங்கினோம் விசாரணையை.

''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்’ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.

அந்த வீக் எண்ட்...செல்வி இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான்.

அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்...செல்வி! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.

''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் செல்வி.

ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம். அவனுக்கு செல்வி மீது அப்படியென்ன வெறுப்பு?

''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல’னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா.

ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன்.

ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன்.

அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம். 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்’னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் செல்வி!

ஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!

Dec 30, 2010

உணவுக்கு இல்லாமல் சாகும் மக்கள் ஒருபுறம்: உணவை தீயில் இட்டு கொளுத்தும் பார்ப்பனீயம் மறுபுறம்.

யாகம் என்னும் கலாச்சாரம்! யாகம் என்ற பெயரால் தீயில் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது ஆரியர்களின் கலாச்சாரம். ஆரியர்களின் இந்தத் தாக்கத்தால் தமிழ் அரசர்களும் கெட்டுக் குட்டிச் சுவர் ஆனதும் உண்டு. சிலப்பதிகாரத்திலும் பார்ப்பன யாகக் கடை விரிக்கப்பட்டுவிட்டது. பார்ப்பனர்களின் இந்த யாகத்தை எதிர்த்து கவுதமப் புத்தர் 2500 ஆண்டுகளுக்குமுன் போர்க் கொடி தூக்கினார். ஆடு, மாடுகளைத் தீயில் பலி கொடுத்து சொர்க்கம் போக முடியும் என்றால், உமது தகப்பனாரை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி, நேரடியாக மோட்சம் போவதுதானே? என்ற அறிவு சார்ந்த வினாவை நாக்கைப் பிடுங்கும்படிக் கேட்டார்.

தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகம், யாகப் புரோகிதர்களுடன் பட்டத்தரசிகளை அனுப்பி வைத்து அவர்கள்மூலம் கர்ப்பமாக்க வைத்த காரியம்தான் இந்து மதக் கலாச்சாரத்தின் உச்சகட்டம்.ஆரியர்களின் யஜுர் வேதம் என்பது முழுக்க முழுக்க உயிர்க் கொலை யாகங்கள் பற்றியே பிரஸ்தாபிப்பதாகும். 30 வகை யாகங்கள்பற்றிக் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அஸ்வ, மனுஷ்ய, அஜ, கோ பசுப்ர சமஸா என்பதாகும். குதிரை, மனிதன், ஆடு, மாடு முதலிய உயிர்களைக் கொன்று யாகம் நடத்துவதாகும்.

அரிச்சந்திரன் என்ற அரசன் புத்திரப் பேறில்லாது வருந்திக் கொண்டிருந்தபோது வருண தேவனின் கட்டளைக்கிணங்கி அஜூகர்த்த முனிவரின் புத்திரனான சுன சேபன் என்பவனை விலைக்கு வாங்கி, அவனைக் கொன்று நரமேத யாகம் செய்த தகவல் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. விசுவாமித்திரனின் சகோதரியின் மகன் அச்சிறுவன்; கடைசி நேரத்தில் தன் தவ வலிமையால் காப்பாற்றினாராம் முனிவர்.

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்த பவுத்தர்களையும், சமணர்களையும் படுகொலை செய்தது பார்ப்பனியம். எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிய கொலைகார மதம்தான் இந்தப் பார்ப்பன இந்து மதம்.வேத வேள்வியை நிந்தனை செய் துழல்,ஆத மில்லிய மனோடு தேரரை,வாதில் வென்றழிக்க திரு வுள்ளமே என்ற மந்திரத்தை கூறி வேதங்களை யாகங்களைப் பழிக்கும் சமணர்களை வென்று அழித்திட அருள்புரிவாயாக என்று கடவுளுக்கு விண்ணப்பம் போடுகிறான் தேவார திருஞான சம்பந்தர். யாகங்களை பவுத்த சமணர்கள் எதிர்த்ததும், அவர்களைப் பார்ப்பனர்கள் அழித்ததும் நமது வரலாறாகும்.

இவ்வளவு பீடிகையும் எதற்காக? அண்மைக்காலமாகப் பார்ப்பனர்கள் யாகக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறார்கள். உலக க்ஷேமத்தை யாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
எத்தனை எத்தனை ஆண்டுகாலமாக இத்தகைய யாகங்களை நடத்தி வருகிறார்கள்? நாட்டில் அமைதி தாண்டவம் ஆடிவிட்டதா? இதோ ஒரு செய்தி: கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பையடுத்த குமாரகுடியில் ஏகாதசி மகா ருத்ர யாகமாம். இதில் ஜப்பான் நாட்டினர் நூறு பேர்கள் கலந்து கொண்டனராம். (முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது).

150-க்கும் மேற்பட்ட வேதப் பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நடத்தினார்களாம். ஸ்ரீ அகத்திய நாடி ஜோதிட நிலையம் மற்றும் ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனமும் இணைந்து உலக நன்மை வேண்டி இந்த யாகத்தை நடத்தினவாம். எவ்வளவு உணவுப் பொருள்கள் பாழாகி இருக்கும்? எவ்வளவுப் பட்டுச் சேலைகளைக் கொளுத்தியிருப்பார்கள்? உற்பத்தி நாசம் செய்யும் இந்தக் கொடியவர்களைத் தண்டிக்க வேண்டாமா? வேதப் பார்ப்பனர்கள் மக்களை சுரண்டிக் கொழுத்து, பார்ப்பனக் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இத்தியாதி யாகங்கள். சிந்திக்கும் திறனிருந்தால் சிந்தியுங்கள்.

நன்றி : விடுதலை நாளிதழ்

தமிழீழம் அமைவதை ஏன் பார்பனர்கள் எதிர்கிறார்கள்?


தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை!
தமிழீழம் அமைப்பதற்காக ஆயுத வழியில் போராடினார்கள். அந்த போராட்டம் சென்ற வருடம் முடிவுக்கு வந்தது. இதனை அனைவரும் அறிவோம். இலங்கையில் தனி நாடு கேட்பதால் இலங்கையரசு எதிர்கிறது. இதில் ஒரு நியாயம் உள்ளது என்று சொல்ல முடியும். ஆனால், தமிழீழம் அமைவதை பார்பனர்கள் ஏன் எதிர்கிறார்கள்?(உதாரணம்:சோ,ராம்,சு சுவாமி,ராம‌ கோபாலன்) இது நாள் வரை பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. தமிழீழ நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, தமிழர்கள் திராவிடர்கள் அவர்களை எதிர்ப்பது, அழிப்பது பார்பனர்களின் 'மத கடமை' என்றார். இது சரியான பதிலா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நான் பேசிய வகையில் பல தமிழர்களுக்கு தெரியவில்லை.உங்கள் பதில் தமிழீழ போராட்டத்தை அறிய விரும்புவோருக்கு உதவியாக அமையும்!

Dec 16, 2010

அகில இந்திய அளவில் நுளைவுத்தேர்வா?

ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி பெற்ற சமூக நீதிக்கான உரிமைகளை பார்ப்பன அதிகாரவர்க்கம் கொல்லைப்புறம் வழியாகத் தட்டிப் பறிக்கும் சதியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இதனைப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தி, அதன் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மருத்துவக் குழு ஒரு முடிவை எடுத்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவக் கல்வி உட்பட எந்தக் கல்வியிலும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் வகையில் தனி சட்டமே இயற்றப்பட்டு விட்டது.

அகில இந்திய மருத்துவக் குழுவின் நுழைவுத் தேர்வினை ஏற்கும் வகையில் இருந்த மத்திய அரசும்கூட, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்குப் பிறகும், முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் குறுக்கீட்டுக்குப் பிறகும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக நடக்கும் வழக்கில் திமுக அரசு தம்மையும் இணைத்துக் கொண்ட நிலையில் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டது.

இத்தகு நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று முன்னாள் (13.12.2010) வழங்கிய தீர்ப்பில் அகில இந்திய மருத்துவக் குழுவின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறியிருப்பது - ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் மத்தியில் பேரதிர்ச் சியை ஏற்படுத்தி விட்டது.

அரசின் எத்தனை எத்தனையோ கொள்கை முடிவுகளில் தலையிட்டுள்ள நீதிமன்றங்கள், சமூக நீதிப் பிரச்சினை என்று வருகிறபோது மட்டும் இப்படியெல்லாம் வழுக்கிக் கொண்டு போவதைக் கவனிக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வழி வகுத்தால் - பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் தான்.

இந்தப் பகுதிகளிலிருந்து பெரும்பாலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், அகில இந்திய மருத்துவக் குழு, உச்சநீதிமன்றம் போன்றவை - அதன் உயிர் நாடியின் கழுத்தில் சுருக்குப் போடும் வகையில் நடத்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது.

இந்த நுழைவுத் தேர்வினை ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதலாம் என்கிற வாய்ப்பு - ஏற்பாடு வட இந்திய மாணவர்களுக்குக் கூடுதல் சலுகைகளை அளிக்கக் கூடியதாகி இந்தி பேசாத மக்களை வஞ்சிக்கும் இன்னொரு வகையான சதியாகும்.

நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களைச் சேர்க்கும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட கேடுகள் என்னவென்று மருத்துவக் குழுவோ, உச்சநீதிமன்றமோ விளக்குமா?

நெருக்கடி நிலை காலத்தில் (1976) கல்வியை மாநில அரசின் பட்டியலிலிருந்து பொதுப் பட்டிய லுக்குக் அபகரித்துக் கொண்டு செல்லப்பட்டதால் ஏற்பட்டுள்ள பல கேடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இன்னொரு கொடுமை ஏற்கெனவே நிகழ்த்தப் பட்டுக் கொண்டும் இருக்கிறது. மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்விக்கான இடங்களில் (எம்.பி.பி.எஸ்.) 15 விழுக்காடு இடங்களை மத்திய தொகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அது 25 விழுக் காடாக உயர்த்தப்பட வேண்டும் என்ற அழுத்தமும் கொடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவக் கல்விக்கான மேற்பட்டப் படிப்பில் (Post Graduate) 50 விழுக்காடு இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

ஒரு மாநில அரசின் பொருளாதாரத்தில் நடக்கும் கல்லூரிகளிலிருந்து இடங்களை இப்படிக் குண்டுக் கட்டாகத் தூக்கிச் செல்லும் அதிகாரத்தைத் தனக்குத் தானே நடுவண் அரசு எடுத்துச் சென்றிருப்பது கண்டிப்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையே கடிக்கும் கதைபோல மாநிலங்களி லிருந்த இடங்களைக் கவர்ந்து சென்றதோடு அல்லாமல், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்களைச் சேர்க்கவேண்டும் என்று உத்தரவிடும் ஆணவத்தை என்னவென்று சொல்லுவது?

தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்பதில் அய்யமில்லை. இந்தப் பிரச்சினையை வெறும் பார்வையாளராக இருந்து தமிழ்மண் கவனிக்காது களத்தில் இறக்கிப் போராடும் ஒரு நிலையை திராவிடர் கழகம் உருவாக்கும் என்று எச்சரிக்கிறோம்.

அசுரன் திராவிடன்

Dec 13, 2010

எச்சில் இலைகள் மீது உருளும் தலித் மக்கள்: இந்தியாவில் தொடரும் சாதிக் கொடுமை.

மங்களூர் அருகே உள்ள ஒரு கோவிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டு முடித்த எச்சிலைகளின் மேல் தலித்துகளும், மற்ற சாதியினரும் உருண்டு செல்கிறார்கள். அப்படி சென்றால் அவர்களுக்கு தோல் சம்பந்தப் பட்ட வியாதிகள் ஏதும் வராது என்பது நம்பிக்கையாம். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பழக்கம் கடந்த 400 வருடங்களாக கடைபிடிக்கப் படுகிறது என்பதும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் அடிக்கடி இக்கொவிலுக்கு விஜயம் செய்வது வழக்கம் என்பதும்தான். அரசுக்கு தெரிந்தே இது போல‌ மனிதர்களை சாதி ரீதியாக வர்க்கம் பிரிக்கும் முயற்சிகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதுதான்.

இத்தனைக்கும் அங்கே சாப்பிட்டவர்கள் யாரும் துறவிகளோ முனிவர்களோ கிடையாது. சாப்பிட்டவனும், அந்த எச்சிலையின் மேல் உருண்டவனும் ஒரே பள்ளியில் படிப்பவர்களாகவோ அல்லது ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவோ கூட இருக்கக் கூடும். இங்கே ஒருவனை உயர்ந்தவனாகவும், மற்றொருவனைத் தாழ்ந்தவனாகவும் ஆக்கி வைத்திருப்பது மனுதர்மத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. சாமியார், சாமி என்பதை எல்லாம் கூட அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என விட்டுவிட்டாலும், இது போன்ற சம்பவங்களை எந்த அடிப்படையில் அனுமதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் நிறைய இளைஞர்கள் இருந்தனர். உருண்டவர்களிலும்தான். இதுபோன்ற மனுதர்மம் சார்ந்த நம்பிக்கைகள் அடுத்த தலைமுறையினரிடமும் தொடர்கிறது என்பது வேதனை அளிக்கும் விஷயம்.

நன்றி : Mr. அன்பு

Dec 4, 2010

கழுதைக்கு பெயர் முத்து மாலையாம்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜியாஸ் டேனியல்ஸ் (வயது 40). இவருடைய காதலி சாரா மோரே (39). இவர்கள் இருவரும் திருமணமாகா விட்டாலும் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் ஒரே விதமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செக்ஸ் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவுவதே இவர்களது தொழில்.“செக்ஸ்”சில் யாராவது திருப்தி அடையாமல் இருக்கும் பெண்களுக்கு உதவுவதை ஜியாஸ் டேனியலும், ஆண்களுக்கு உதவுவதை சாராமோரேவும் தொழிலாக கொண்டுள்ளனர். இந்த வகையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு “செக்ஸ்” மசாஜ் செய்வதுடன் அவர்களுடன் உறவும் வைத்து கொள்வார்கள்.

இந்த தொழில் மூலம் இதுவரை 3,323 ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருப்பதாக சாராமோரே கூறி இருக்கிறார். ஜியாஸ் டேனியல் 2,161 பெண்களுடன் உறவு வைத்து இருப்பதை கூறி இருக்கிறார். தொழிலை செய்வதற்காக உலகம் முழுவதும் சுற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த தொழில் செய்வதால் நாங்கள் விபசார தொழில் செய்வதாக கருதி விடக் கூடாது. இது ஒரு மருத்துவ தொழில் என்றும் அவர்கள் கூறினார்கள்.

Dec 3, 2010

பாரதிய ஜனதாவின் ஊழல் பெரிச்சாளிகள் மீது நடவைக்கை இல்லை: ராசா தலித் என்பதால் நடவைக்கையா?

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் பாரதிய ஜனதா ஊழல் பெரிச்சாளிகளான மத்திய அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்கள் உயர் ஜாதிக்கார்கள் என்பதால் அவர்கள் மீது நடவைக்கை இல்லையா? ராசா தலித் என்பதால் அவர் மீது நடவைக்கையா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது மக்கள் விரோத செயலாகும்.

பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோர் ராசாவை தனிமைப்படுத்தி பழிவாங்க துடிக்கின்றனர்.ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்களின் போக்கு தலித் விரோத போக்கு.

Dec 1, 2010

10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் வெளியாகிறது.


அம்பேத்கர் விருது பெற்றவருமான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி நடைபெற்றும், தமிழகத்தில் டாகடர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம்.ஒரு “தலித்” வாழும்போது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பின்னரும் சாதி ஆதிக்கத்தின் பிடியில் அவலம் நேரத்தான் செய்கிறது. இந்திய அரசியல் அமைப்பையே உருவாக்கிக் கொடுத்தவரும், இந்திய சமூக நீதிப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான டாக்டர். பி.ஆர். அம்பேத்கருக்கும் இந்த நிலைதான் என்பது எத்தனை மோசமானது.

ஆம், ஜபார் படேல் இயக்கிய “டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் தயாரிக்க கடந்த 1991 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு ரூ.7.7 கோடி ஒதுக்கியது. ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பார்த்து, பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டார்.
ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது. மிகத் துல்லியமான ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் கொண்டாடின. இதனால் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.

ஆனால், இத்தனைச் சிறப்புகளைப் பெற்ற அந்தப்படம், சேரவேண்டிய மக்களை அடையவில்லை. “இதற்கு காரணம் பெரும்பாலான தியேட்டர்கள் சாதி ஆதிக்க உணர்வு படைத்தவர்கள் வசம் இருப்பதே” என்று அன்றே தலித் விடுதலைப் போராளிகள் வருத்ததுடன் கூறினர்.

சுதந்திர இந்தியாவின் சட்டத்தை இயற்றியவருக்கே அநீதியா?” என்று நாம் கேட்கலாம். அது அப்படித்தான், இன்னும் வர்ணாசிரம கொள்கைகளே இந்தியாவில் ஆட்சி செய்கிறது என்பதையே பார்க்கமுடிகிறது. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகம் நடக்கிறது. ஆயிரத்து 800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன. ஆனாலும், ஒரு தலித் விடுதலைப் போராளியின் வரலாறு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது.

10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் அம்பேத்கர் இப்போது டிசமபர் 3ம் தேதி வெளியாக இருக்கிறார். இதுபற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகியும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் நீலவேந்தன் கூறுகையில், “இந்தியா முழுவதும் செய்ததைப் போல, தமிழகத்திலும் ஆதிக்க எண்ணம் கொண்ட சக்திகள் திரையரங்குகளில் படத்தை இருட்டடிப்பு செய்யக்கூடும். அதனை முறியடித்து, இந்தப் படத்தையே ஒரு இயக்கமாக்க வேண்டும்” என்றார்.

Nov 26, 2010

தமிழா, தமிழா... தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.

தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள். தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம். இது மட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.

சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை வடித்தனர். சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்…‘ஏ… காவல் காக்கும் அம்மா… என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு… எங்கள் ஊருக்கு மழையைக் கொடு… என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.

ஏன் என்று கேட்டால்… சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச் சத்தம் போட்டால் தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும். அப்போது தான் நமது கோரிக்கை நிறைவேற்றப்படும்… என்பது நம்பிக்கை. இப்படியே கொஞ்ச காலம் போக… ஒருவன் சொன்னான் நாம் நமக்குள் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா?

க்ரீம் த்ரீம் ப்ரீம்… என அடி வயிற்றிலிருந்து அதிரும்படியான சொற்களை உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும் என்றான்.இந்த உரத்த வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க தமிழர்களுக்கு கைகூப்ப கற்றுக் கொடுத்தார்கள் பிராமணர்கள். எப்படி?

தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில் மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல… அப்போது தாஸே இனத்தவர்கள் ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து… ‘இனி உங்களை தாக்கமாட்டோம் என அடிபணிந்தனர்.அதுபோல வைத்துப் பாருங்கள் கும்பிடுவது போல் தோன்றும். அந்த ‘தாஸே‘ இனப் பெயரிலிருந்து தான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது. தங்களை அன்று கும்பிட்ட ‘தாஸே‘ இன மக்கள் மாதிரியே… பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக் கொடுத்தனர் பிராமணர்கள்

கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக… தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.“நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். தவிர மனிதர்களுக்குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப்படி பேசுவீர்கள்?.. என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள்.

புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள் தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால்… கடவுளுக்கு உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உபதேசிப்பது என்னவென்றால்… “கடவுளுக்கு உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாதது தான் உண்மையான உருவம். வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.

தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு… தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா’ தொடங்கியது படையல் பண்பாடு. நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டியலில் பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன.

தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது. வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக வேண்டியதுதானே நியதி?… உண்டானது.கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.

இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை அதென்ன களவியல்? பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள் உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகையிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.

இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான். சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு… அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்?

பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.

ருதுவான மங்கை மாய மாய்ப்போன பின்னே… தேடுகிறார்கள். சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது. கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம். பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது. கையும் களவுமாக பிடித்த பின் என்ன தண்டனை தெரியுமா?

(தொடரும்)

நன்றி : பாண்டிச்சேரி வலைப்பூ

Nov 25, 2010

நவம்பர் 26 வரதட்சணை தடுப்பு தினம்: உறுதிமொழி எடுப்போம்.

நவம்பர் 26 என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் வரதட்சணை தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு அலுவலகம், பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் வரதட்சணை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படவேண்டும், வரதட்சணை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவேண்டும் என்று தமிழக அரசு 2004ம் ஆண்டு ஆணை வெளியிட்டிருக்கிறது.

இதுவரை யாருக்காவது அதுபற்றி தெரியுமா? இதுவரை உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அது யாருடைய குற்றம்? உங்களது குற்றமா அல்லது மக்களிடையே இந்த சட்டங்களைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாத அலுவலர்களின் குற்றமா? இவற்றைக் கண்டும் காணாததுபோல இருக்கும் அரசாங்கத்தின் குற்றமா? இந்த தினத்தில் இளஞ்சர்கள் ஒவ்வொர்வரும் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம்.

Nov 21, 2010

திருமணம் புளித்துப் போய்விட்டது, 39 சதவீத அமெரிக்கர்களுக்கு ?

வாஷிங்டன்:அமெரிக்கா திருமணத்தை மறந்துவிடுமா? என்றதொரு கேள்வி எழுந்துள்ளது.
இந்த சந்தேகத்திற்கு காரணம், சமீபத்தில் டைம் இதழுடன் இணைந்து அமெரிக்காவில் வியூ ரிசர்ச் செண்டர் நடத்திய ஆய்வில் 39 சதவீத அமெரிக்கர்களுக்கும் திருமணம் புளித்துப்போன பழங்கஞ்சியாக மாறிவிட்டது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு குடும்பங்களில் நடத்திய இந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பெற்றோர்களுடன் வாழும் 18 வயதிற்கு கீழான குழந்தைகளைக் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் 29 சதவீதம் பேர் திருமணம் முடிக்காத தாய் அல்லது தந்தையுடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. 39 சதவீத அமெரிக்கர்களும் திருமணத்தை பழைய கலாச்சாரமாக கருதுகின்றனர். 15 சதவீத குழந்தைகள் விவாகரத்துப் பெற்ற பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகையில் 14 சதவீத குழந்தைகள் திருமணம் முடிக்காத பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

குடும்பமாக வாழ திருமணம் தேவையில்லை என்பதை இவ்வாய்வு தெரிவிக்கிறது.