May 27, 2011

படையப்பா சிகிச்சைக்காக சிங்கப்பூர் படையெடுப்பு !!!

சென்னை, மே. 27-நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் மயிலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

கடந்த 13-ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் நவீன சிகிச்சை அளித்து வருகின்றனர். அமெரிக்கா டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். சிறுநீரக பாதிப்பு இருந்ததால் “டயாலிசிஸ்” சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ரஜினியை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று நவீன சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் விரும்பினர். லண்டனுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் அங்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஆகும் என்றும் ரஜினி உடல் நிலை அதற்கு ஒத்துக்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 4 மணி நேரம் பயண தூரம் உள்ள சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள் ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல டிக்கெட் பதிவு செய்யப்பட்டு உள்ளது. “வீல் சேர் பயணியாக” ரஜினி செல்வதற்கு அனுமதி வாங்கப்பட்டு உள்ளது. “சிவாஜிராவ்” என்ற பெயரிலான தனது பாஸ்போர்ட்டில் ரஜினி பயணப்படுகிறார்.

விமான படிக்கட்டு வரை ஆம்புலன்சை கொண்டு செல்ல அனுமதி பெறும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட உள்ளார். அமெரிக்க டாக்டர்களும் அங்கு வருகின்றனர்.

சிந்திக்கவும்: ரஜினி காந்தை பார்க்க அமெரிக்க டாக்டர்கள் இருக்கிறார்கள். சிங்கபூர் மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன. அவர் பயணம் செய்ய தனிவிமானமும் உள்ளது.

ஆனால் இந்தியாவில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் எத்தனை? மருத்துவ மனைகள் உள்ளன. கோடிக்கணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவுக்கு ஏங்கும் நாடாக இருக்கிறது.

பணக்காரர்கள் அடையும் இதுபோல் வசதிகள் கூட வேண்டாம். குறைந்த பட்சம் சாதாரண சிகிச்சையாவது இந்த ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவேண்டும்.

இப்படியும் நாம் சிந்தித்து பார்த்தால் என்ன? ஒவ்வொரு மந்திரியையும், டாட்டா, பிர்லா, அம்பானி, ரஜினி போன்ற பெரும் பணக்கார்கள் இவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போகும்போது சென்னை அரசு மருத்துவமனியில் ஒரு நாள் சிகிச்சைக்கு அனுமதித்தால். இந்த ஏழை மக்கள் படும் அவதியை குறைந்த பட்சம் இவர்களால் உணரவாவது முடியும்.

கருணாநிதி திருவாரூரில் இருந்து பண்டாரமாக, திமுக கட்ச்சிக்குள் நுழைந்தார் இன்று அவர் குடும்பத்தினர்தான் ஆசியாவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்களாக மாறிவிட்டார்கள். இந்த கொள்ளைகார ஆட்சியாளர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் இங்கு நடத்தப்பட வேண்டும்.

ஆட்சி அதிகாரம் படித்த, பண்புள்ள இளைஞ்சர் சமுதாயத்திடம் கொடுக்கப்படவேண்டும். இந்த அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினர் ரவுடிகள், கைநாட்டுகள், முறையற்ற வழிகளில் சம்பாதித்தவர்கள் இப்படி பட்ட பழம்பெருச்சாளிகள்தான் அரசியலுக்குள் வரமுடியும் என்ற நிலை மாறவேண்டும்.

அடுத்து வயோதிகர்கள், தொந்தி பெருத்து, உடல்நிலை சரியில்லாமல் வீல்சேரில் வரும் சுகவீனமுற்றோர் போன்றோர் பதவிகளில் வீற்றிருக்கும் அவலத்தையும் பார்க்க முடிகிறது. இப்படி ஆரோக்கியம் இல்லாத, படிப்பறிவு இல்லாத இவர்களால் எப்படி மக்களுக்கு ஒழுங்காக சேவை செய்ய முடியும்.

என்ன, எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் படித்தவர்களா? என்று நீங்கள் கேட்பதை விளங்க முடிகிறது. எந்த தகுதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தது நல்லவர்கள் ஆக இருந்தாலும் நாம் ஒத்துக்கொள்ளலாம் அதுவும் இல்லை என்பதே வருத்தமான உண்மை.

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ரஜினி ரசிகர்கள் கூறி திரிவதும், அவர் படம் வெளியாகும் போது கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்வதுமாக, தங்கள் குடும்பங்களை கவனிக்காமல் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை. இதுபோல் கூத்துக்கள் உலகில் எந்த நாட்டிலும் நடக்காது, இந்த போன்ற கொடுமைகளை குறிப்பாக தமிழகத்திலேயே பார்க்க முடிகிறது.

1 comment:

Unknown said...

நன்றாக இருங்கள் :)