Showing posts with label ஹிந்துத்துவா. Show all posts
Showing posts with label ஹிந்துத்துவா. Show all posts

Mar 9, 2016

மோடி அரசு இஞ்சி தின்ற குரங்கு மாதிரி முழிக்கிறது!

டெல்லி "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்ஹையா குமார் தேசத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார் எனக் குற்றம் சாட்டினார்கள். தேசத் துரோகி என்று பார்பன ஹிந்துத்துவா ஊடகங்கள் இவரை கட்டம் கட்டின எழுதின. 
இவர் பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை எழுப்பினார் என்று பிரிவினைவாத குற்றத்தை வீடியோ ஆதாரத்தோடு சுமத்தி கைது செய்தார்கள். ஆனால் அது "தயாரிக்கப்பட்ட வீடியோ"என்று நிரூபனம் ஆனது.
அவர் மிகப் பின்தங்கிய மாநிலமான பிகாரில் இருந்து வந்த மாணவர். இவரது அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார். அம்மா ஒரு கடையில் வேலை செய்கிறார். மிக ஏழ்மையானக் குடும்பம். தன் முயற்சியில் படித்து முன்னுக்கு வந்தவர் தான் இந்த கன்ஹையா குமார்.
இவர் தேர்வெழுதி தேறி, ஜே.என்.யூவில் சேர்ந்தவர். ஜே.என்.யூவிற்கு தனி வரலாறு உண்டு. மத்திய அரசியல் பல நேரங்களில் தறிக் கெட்டு ஓடிய நேரத்தில், அதற்கு மூக்கணாங்கயிறு போட்ட பெருமை இந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கே உண்டு. அந்த அளவிற்கு சுயசிந்தனையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் இடம். 
கன்ஹையா குமாரோ வளரும் போதே, குடும்பத்தாரைப் போலவே கம்யூனிஸ்டாக வளர்ந்தவர். அதனால் தான் டெல்லி வந்தப் போது இன்னும் கூர்மையானார். அகில இந்திய மாணவக் கூட்டமைப்பின் தலைவர் ஆனார். இது இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு. பொறுப்பிற்கேற்றார் போல் இந்துத்துவாவிற்கு எதிராகக் குரல் எழுப்பினார். இதனால் இவரை அடக்கிப் போட மத்திய பாரதிய ஜனதா ஹிந்துத்துவா பயங்கரவாத அரசு முனைந்தது. இதனாலேயே இவர் மீது இத்தனை அராஜகங்களும், அத்துமீறல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.  நடுநிலையாளர்களும், மாணவர்களும், அனைத்து கட்சிகளும் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அவர் விடுவிக்கபட்டார். மோடி அரசு இஞ்சி தின்ற குரங்கு மாதிரி முழிக்கிறது. புதையல் எடுக்க நினைத்து பூதம் வந்த கதையாக திகைத்து போனது. 

Mar 4, 2016

ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!

1). பேராசிரியர் சிவக்குமார்: ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துத்துவம் என்ற வார்த்தைக்கு பதிலாக தேசியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி பிரச்சனைகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது.

2). வழக்குரைஞர் ராஜூ (மக்கள் அதிகாரம் அமைப்பு): இது அறிவியலுக்கும் அறிவற்ற அடிமுட்டாளுக்கும் இடையில் நடைபெறும் யுத்தம் என குறிப்பிட்டார். மேலும் மாங்காய் திருட செல்லும் குரங்கு, கூட்டமாக சென்று மாங்காய் திருடும்போது செய்யும் அட்டகாசத்தால் தோட்டக்காரன் விழிப்படைந்து அதை அடித்து விரட்டிவிடுவான். உடனே அடுத்த தோட்டத்திற்கு இந்த குரங்கு செல்லும். அங்கும் தோட்டக்காரனால் அடித்து விரட்டப்படும். 

பின்னர் அனைவரும் இந்த குரங்கை கண்டறிந்து ஒட்டு மொத்தமாக அடித்து துரத்துவர். அதுபோல் சென்னை ஐ.ஐ.டி-யில் வாலாட்டிய பார்ப்பனிய குரங்கு, இங்கு அடித்து விரட்டப்பட்டு ஐதராபாத் சென்றது. அங்கும் விரட்டப்பட்டு இப்போது டெல்லி சென்றுள்ளது. இனி ஒட்டு மொத்தமாக அனைவரும் சேர்ந்து அதனை விரட்ட வேண்டிய காலம் வந்து விட்டது என் தெரிவித்தார். மேலும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் எப்படி நாட்டாமைகள் போல் நடந்து கொள்கின்றனர் என்பதை விளக்கினார்

3). தோழர் மருதைய்யன் (ம.க.இ.க பொதுச்செயலாளர்): ஜெ.என்.யூ மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு பிணை வழங்கிய நீதிபதி தன் தீர்ப்பில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரை போலவே தீர்ப்பு சொல்லியிருப்பதை அம்பலப்படுத்தினார். ஜெ.என்.யூ வை ஒரு கிருமி தாக்கியிருப்பதாகவும் அது பரவுவதற்குள் அதற்கு நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்படவேண்டுமெனவும், அதைத் தாண்டி போனால் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். முழுக்க பொய்களாலும், மோசடியாலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கில் நிபந்தனை பிணை வழங்கும்போதே குற்றத்தை உறுதிப்படுத்திவிட்டார் அந்த நீதிபதி என்றார்.

மேலும் சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்து போன ராணுவ வீரர்களின் உடலை கொண்டுவந்து வைத்து இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? என ஜெ.என்.யூ மாணவர்களை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? அவர்களை அங்கு அனுப்பியவர்களைத்தானே கேள்வி எழுப்ப வேண்டும். 1947-க்கு பிறகே காஷ்மீர், மணிப்பூர், சிக்கிம் போன்ற மாநிலங்கள் வலுக் கட்டாயமாக இணைக்கப்பட்டன. இன்றும் அதனை ‘தேசபக்தி’ என்ற பெயரில் ராணுவத்தைக் கொண்டு இருத்தி வைப்பதற்காக இது போன்று சியாச்சின் பகுதிகளில் ராணுவ வீரர்களை பலிகொடுக்கிறது இந்த அரசு. உண்மையில் தேசவெறி என்ற பெயரில் இந்துவெறி ஊட்டப்பட்டு முசுலீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்படுகின்றனர். அதே தேசவெறிக்குத்தான் அப்சல் குரு பலியிடப்பட்டார். அதே தேசவெறி – இந்துவெறி ஊட்டப்பட்டுத்தான் மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தி பரப்பப்பட்டு ஒரு முஸ்லிம் முதியவர் அடித்தே கொல்லப்பட்டார்  என்றார்.

உணமையில் எது தேசவிரோதம்? இராமநாதபுரத்தில் பாதியை அதானிக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். தேயிலைத்தோட்டங்களை டாடாவுக்கு இன்னும் பல்வேறு கனிம வளம் நிறைந்த பகுதிகளை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதே இதுதான் தேசத்துரோகம் என பேசினார்.

Mar 2, 2016

RSS ரத்த காட்டேரிகளில் முகத்திரையை கிழிக்கும் காணொளி!


பாரதீய ஜனதா கட்சியின் முகமூடி அணிந்து ஃபாஸிச ஆர்.எஸ்.எஸ் நாட்டை ஆட்சி செய்கிறது என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஒரு வெறி சித்தாந்தம் என்பதையும் மக்கள் முன்னியிலை எவ்வித வெட்கமும் இன்றி பச்சை பொய்களைக் கூறுவதில் ஆர்.எஸ்.எஸ் தயங்கியதே இல்லை என்பதையும் அல் ஜஸீரா தொலைகாட்சி நடத்திய இந்த நிகழ்ச்சியில் அப்பட்டமாக வெளிபபடுகிறது.

இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபியின் ஹிந்துத்துவா பயங்கரவாத முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்திய காணொளி.

Jan 24, 2016

எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம்”!

ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே!

ரோகித் வெமுலா – ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்பு மாணவர். இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவர். இந்தப் பல்கலையில் சேர்ந்ததில் இருந்தே அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து மாணவர்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட போது அதனை எதிர்த்து பல்கலைக் கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்.

இப்படிப்பட்ட போர்க்குணமிக்க போராளியான ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை (17-01-2016) அன்று தனது நண்பரின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக போராடுபவர்களை எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடக்கி, ஒடுக்கி, அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது என்பதற்கு நம் கண் முன் நிற்கும் உதாரணம் தான் ரோகித் வெமுலா.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முசாபர் நகர் குறித்த ஆவணப் படத்தை டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் திரையிட்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி காலிகளைக் கண்டித்தும், யாகூப் மேமன் தூக்கைக் கண்டித்தும், ரோகித் வெமுலா, தோந்தா பிரசாந்த், விஜய்குமார், சேசு செமுடுகுண்டா மற்றும் சுன்கன்னா ஆகிய 5 மாணவர்களும் முன்னணியாக இருந்து அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிராக இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காலிகள் என்று தமது முகநூலில் சாடியிருக்கிறான் அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்து ஏ.பி.வி.பி நிர்வாகி சுசீல் குமார்.
இதனைக் கண்டித்து இந்த 5 மாணவர்களும் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அதிகாரி முன்னிலையில் சுசீல் குமாரை அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மன்னிப்புக் கோர வைத்திருக்கின்றனர். பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய சுசீல் குமார், மறுநாள் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா என்ற அமைப்பில் உள்ள தனது சகோதரனுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் சுமார் 40 பேர் திரண்டு வந்து தங்கள் இருவரையும் தாக்கியதாகப் பொய்ப்புகார் அளித்திருக்கிறான். இதை நிரூபிப்பதற்கு இவர்கள் வேண்டுமென்றே மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளனர்.
இந்த நாடகங்களின் அரங்கேற்றத்திற்குப் பிறகு உள்ளூர் பா.ஜ.க பிரமுகரான ராமச்சந்திர ராவின் அழுத்தத்தின் பேரில் அப்போதைய பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.பி.சர்மா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பேராசிரியர் அலோக் பாண்டேயின் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். இந்தக் குழு விசாரித்து அளித்த அறிக்கையில், இப்பிரச்சினை சுசீல் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்த போதே எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடித்துக் கொள்ளப்பட்டது என்றும் சுசீல் குமாரின் உடலில் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளனர். 
இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகம் விசாரணைக்குழு அறிக்கையை நிராகரித்து விட்டு 5 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக் கழக மாணவர்கள் போராடத் தொடங்கியவுடன், அப்போதைய துணை வேந்தர் ஆர்.பி.சர்மா வேறு வழியின்றி அம்மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்து விட்டு, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பலை சமாதானப்படுத்தும் வகையில் மற்றொரு விசாரணைக் கமிட்டியையும் நியமித்தார். அதோடு ஜூன் மாதம் முதல் இம்மாணவர்களுக்கு வர வேண்டிய கல்வி உதவித் தொகை பல்கலைக்கழக நிர்வாகத்தால் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.
மாநில பா.ஜ.க எம்.பி.யும், மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா, அரசு முத்திரை கொண்ட தனது அலுவலக லேட்டர் பேடில் தேசத்தின் பாதுகாப்பிற்கு எழுந்த பிரச்சினையாக சித்தரித்து ஒரு கடிதத்தை மத்திய ’மனித’ வளத்துறை அமைச்சர், ’(போலி சான்றிதழ் புகழ்)’ ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய மனித வளத்துறையின் பார்ப்பனக் கும்பல், இதற்கு விளக்கமளிக்குமாறு செப். 3 அன்று ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து அப்போதைய நிலையை விளக்கி பல்கலைக்கழகம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் திருப்தி அடையாத மத்திய மனித வளத்துறை அமைச்சகம் பண்டாரு தத்தாத்ரேயாவின் புகாரின் அடிப்படையில் அந்த மாணவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ச்சியாக செப்டெம்பர் 24, அக்டோபர் 6, 20 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் கடிதங்கள் அனுப்பி அழுத்தம் கொடுத்தது.
இந்நிலையில் துணை வேந்தராக இருந்த ஆர்.பி.சர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காவிக் கூட்டத்தின் ஆசி பெற்ற அப்பாராவ் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அடிமை அப்பாராவ் பதவியேற்றதும், எவ்வித விசரணையும் இன்றி இந்த 5 மாணவர்களையும் விடுதியில் இருந்து வெளியேற்ற கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்ட இம்மாணவர்கள் கடுங்குளிரில் விடுதிக்கு வெளியே பல்கலை வளாகத்திற்குள்ளேயே தொடர்ச்சியாகத் தங்கி இவ்வுத்தரவிற்கு எதிராகத் தமது போராட்டத்தை நடத்திய இம்மாணவர்கள் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி துணைவேந்தருக்கு பலமுறை கடிதம் அனுப்பியிருக்கின்றனர். அவர்களது அனைத்து கடிதங்களையும் நிராகரித்தார் அப்பாராவ்.
கடந்த டிசம்பர் 30 அன்று தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து யூ.ஜி.சி.யின் முன்னாள் தலைவர் ’தொரட்’டிடம், தாங்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட 10 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர் இந்த மாணவர்கள். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் தங்களை விடுதியில் தங்க அனுமதிக்காத அப்பாராவிற்கு ரோகித் எழுதிய கடைசிக் கடிதத்தில் ”தலித் மாணவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டது பொய்ப்புகார் என்று தெரிந்தும் எங்கள் மீது நடவடிக்கை எடுத்ததை வைத்தே உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி எங்களை படிப்படியாகக் கொல்வதற்குப் பதில், தலித் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அவர்களுக்கு தாம்ப்புக் கயிறோ, 10 கிராம் சோடியம் அசைடு விஷத்தையோ கொடுத்துவிடுங்கள் அல்லது ஒரேடியாக கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்று எழுதியிருக்கிறார். மத்தியில் ஆளும் பார்ப்பன பாஜக அரசின் நேரடி அழுத்தம், அப்பாராவ் என்ற அடிமையின் வாயிலாக போராளிகளை எந்த அளவிற்கு உளவியல் ரீதியில் பாதித்திருக்கிறது என்பதை இக்கடிதத்தின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும்.
ரோகித் வெமுலாவின் கடைசி வரிகள்: ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே… “
ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது கருத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை. “
“சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.
”எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம்”
ஹைதராபாத் மத்திய பல்கலைகழக மாணவர் ரோகித்தை போன்று இன்னொரு மாணவரை இழக்கக்கூடாது என்றால் ஆ.எஸ்.எஸ் பார்ப்பன பயங்கரவாத கும்பலை நாட்டு விட்டு விரட்டியடிக்கவேண்டும்.
நன்றி: வினைசெய் வினவு. 

Nov 26, 2015

மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நாள்!

நவம்பர் 26/2015: நவம்பர் 26/2008 மாவீரன் ஹேமந்த் கர்கரேவை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா தீவிரவாதிகளால் திட்ட மிட்டு கொலை செய்யப்பட்ட நாள்.


இவர் இந்திய தீவிரவாத தடுப்பு படையின் தலைவராக இருந்த நேரத்தில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தான் காரணம் என்பதை கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்தவர்.  

மாலேகான் குண்டு வெடிப்பு தொடங்கி சம்ஜா ரயில் குண்டு வெடிப்பு வரை இந்தியாவில் நடந்த அத்தனை தொடர் கொண்டு வெடிப்புகளின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இருந்தார்கள் என்பதை கண்டுபிடித்தார்.

தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்து சாமியார்கள் அசிமானந்தா, சாத்வி பிரஞ்யா, முன்னாள் இந்திய ராணுவ லெப்டினன்ட் கர்னல்  புரோகிதையும் கைது செய்ய காரணமாக இருந்தார். 

இதனால் நரேந்திர மோடிஎல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, மற்றும் பல ஹிந்து தீவிரவாத இயக்கத் தலைவர்களின் விமர்சனத்துக்கும் ஆளானவர். ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் இவருக்கு குறி வைத்திருந்தது. இதை தொடர்ந்து மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளோடு நடந்த சண்டையில் இவர் கொல்லப்பட்டார். 

இவரது மரணத்தில் உள்ள சந்தேகம் இன்றும் தெளிவாக்கபடவில்லை. ஒரு தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவரே நேரடியாக சண்டையில் ஈடுபட்டு சாக கூடிய நிலைமை என்பது மிகவும் சந்தேகத்திற்கு உரியது. அதுவும் சாதாரண துப்பாக்கி சண்டையில். இவர்தான் தீவிரவாத எதிர்ப்பு படைபிரிவின் கமான்டிங் ஆபிசர். இவர் புல்லட் புரூப் ஜாக்கெட் வேறு அணிந்திருந்தார். தீவிரவாத எதிர்ப்பு படை பிரிவின் தலைவரையே சுட்டு கொல்லும் அளவுக்கு அங்கே மிகபெரிய துப்பாக்கி சண்டைகள் நடக்கவில்லை. அந்த இடத்தில் ராணுவமும், துணை போலிஸ் படை பிரிவுகளும் இருந்தன. 

இந்த துப்பாக்கி சண்டையை பயன்படுத்தி இவரை இந்திய ராணுவத்தில், அல்லது போலிஸ் துணை படை பிரிவில், அல்லது இவரது தீவிரவாத தடுப்பு படையில் இருந்த யாரோ ஒருவரே இவரை சுட்டிருக்கிறார்கள் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. இதையே இவரது மனைவியும் தெரிவித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

Nov 17, 2015

தொடரும் ஹிந்துத்வாவின் கயமைத்தனம்!

மாவீரன் திப்பு சுல்தானின்  பிறந்த நாள் விழாவை கர்நாடக அரசு  கொண்டாட முடிவு செய்ததை ஓட்டி ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா வெறியர்கள் கர்நாடகாவில் கலவரம் செய்து வருகின்றனர்.
அரசிற்கு ஆதரவாக திப்பு பிறந்தநாள் விழாவை கொண்டாட ஊர்வலமாக சென்றவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா வெறியர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சாகுல் ஹமீது என்ற இளைஞர்  உயிரிழ்ந்துள்ளார். 
இந்த படுகொலைக்கு முன்னர் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் குட்டப்பா முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக ஹிந்துத்துவா இயக்கங்கள் விசமப்பிரச்சாரம் செய்தது பொய் என்று அம்பலமாகியுள்ளது. இது குறித்து விசாரித்த காவல் துறையினர் அவர் 20 அடி சுவரிலிருந்து விழுந்து விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். ஒரு ஹிந்துத்துவா வெறியன் எப்படி செத்தாலும் அதை வைத்து கலவரத்தை எப்படி உண்டாக்கலாம்? என்று யோசித்து கொண்டே இருப்பார்கள் போல் இருக்கிறது. எவ்வளவு கேவலமான செயல். 
காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ். இயக்க பயங்கரவாதி கோட்சே தன் கையில் முஸ்லிம் பெயரை பச்சை குத்தி கொண்டு, காந்தியை கொன்றது முஸ்லிம்கள் என்று சொல்லி அதை வைத்து கலவரத்தை உண்டாக்கியது. இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி அந்த பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி முஸ்லிம் இளைஞ்சர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. கோத்ரா ரயிலை கொளுத்தி அதை வைத்து குஜராத் கலவரத்தை நடத்தியது கோவில்களில் பசுமாட்டு தலைகளை போட்டு பல இடங்களில் கலவரங்களை நடத்தியது. கர்நாடகா மாநிலத்தில் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி அதை முஸ்லிம்கள் தலையில் போடும் முயற்சியில் கையும்களவுமாக பிடிபட்டது,  விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் இவர்களே கல்லை தூக்கி அடித்து கலவரங்களை தூண்டுவது, இப்படியாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். ஹிந்துதுவாவின் கயமைதனம் தொடர்கிறது.  

Oct 24, 2015

தந்தி டிவியா? RSS டிவியா?

தந்தி டிவி ஆதித்தனார் குரூப்புக்கு சொந்தமா? இல்லை RSS குரூப்புக்கு சொந்தமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தந்தி டிவியில் ஆயுத எழுத்து என்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே என்கிற (RSS பாண்டே) சிறுபான்மை மக்களுக்கு எதிரான தனது ஹிந்துத்துவா மதவாத நச்சு கருத்துகளை தொடர்ந்து கக்கி வருகிறார். அதுபோல் ஈழத்தமிலர்களுக்கும், தமிழர் எழுச்சிக்கும் எதிராக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பேசுவதற்கு இந்த தரங்கெட்ட டிவி மேடை அமைத்து கொடுக்கிறது. பொய்களை அரியணை ஏற்றி உண்மைகளை குழிதோண்டி புதைக்க ஆயுத எழுத்து என்கிற பொய்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அந்த வருசையில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரனுக்கு இழைக்கப்பட்டது மிகப்பெரும் அநீதி. அவர் தனது மத (முஸ்லிம்) அடையாளங்களைத் துறந்து மைய நீரோட்டத்தில் பயணிப்பவர். வெகுஜனமக்களுக்காக எழுதுபவர், பேசுபவர். அப்படிப்பட்டவரை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் நிறுத்துவதும், பயங்கரவாதியாக சித்தரிப்பதும் மிகப்பெரும் வன்முறை. 

விவாதத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள், மனுஷ்யபுத்திரனை வேட்டையாடியதை, நெறியாளர் ஹரிஹரன் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் பருந்துக்கும் கோழிக்கும் மையமாக நடந்து கொண்டார். புதிய தலைமுறையில் ஞாநியை, ஒரு பாசிஸ்ட் பகிரங்கமாக மிரட்டினான். நியூஸ் 7 விவாதத்தில்ஆளூர் ஷாநவாஸ் மோடியை விமர்சித்ததற்காக, அந்த டிவிகாரர்களுக்கு போன் போட்டு பாரதிய ஜனதா கட்சி எச்.ராஜா மிரட்டினான்.  

தந்தி டிவி பெரும்பாலும் இந்துத்துவ சக்திகளை எதிர்க்கும் இடத்தில், வலுவற்ற கருத்தாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. தேசிய லீக் பஷீர், ஜவஹர் அலி போன்றோரை எங்கிருந்துதான் தேடிப் பிடிப்பார்களோ தெரியவில்லை. ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு சரியான பதில் கொடுக்கும் மக்கள் கலை இலக்கிய கலை, மற்றும் திராவிட கழக தோழர்கள், பாபுலர் பிரான்ட், எஸ்.டி;பி.ஐ. கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்புனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்களை இந்த தந்தி டிவி அழைப்பதில்லை. யாரன்று அறிப்படாத பொது விவாதங்களில் அந்த அளவுக்கு அறிவு முதிர்ச்சி இல்லாத நபர்களை அழைத்துவந்து ஹிந்துத்துவா தீவிரவாத சக்திகளுக்கு வலுசேர்க்கும் காரியங்களை தந்தி டிவி செய்து வருகிறது. தமிழக மக்களே தந்தி பத்திரிக்கை மற்றும் டிவியை புறக்கணிப்போம்.  

Oct 22, 2015

ஹிந்துத்துவா பயங்கரவாதத்திற்கு பலியான குழந்தைகள்!

அக் /23/2015: ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் தலித் குடும்பத்தினர் மீது உயர் வகுப்பினர் கும்பல் தீ வைத்த சம்பவத்தில் 2 குழந்தைகள் பலியாகினர்; இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பல்லப்கர் போலீஸ் உதவி ஆணையர் புபீந்தர் சிங் கூறும்போது, “பரிதாப்பாத்தில் உள்ளது சம்பெட் கிராமம். இங்கு வசிக்கும் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்தே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிகாலை 3 மணியளவில், வீட்டினுள் 4 பேர் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அவர்கள் படுத்திருந்த கட்டிலுடன் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் 2 வயது குழந்தை ஒன்றும், 10 மாத குழந்தை ஒன்றும் பரிதாபமாக எரிந்து கருகின. அக்குழந்தைகளின் பெற்றோர் தீக்காயங்களுடன் டெல்லி சாப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றார்.
பரிதாபாத் போலீஸ் ஆணையார் சுபாஷ் யாதவ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தலித் குடும்பம் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சன்பெட் கிராமத்தில் காலங்காலமாக ஆதிக்க சமூகத்தினருக்கும் தலித் சமூகத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருவதாகவும், கடந்த ஆண்டு இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Oct 9, 2015

இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஆபத்து!

அக் 10/2015: இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து, சிறந்த எழுத்தாளரும் சிந்தனையாளர்களும் ஆன நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர்களை  கொலை செய்த இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான நீதி மறுப்பு,  உத்திரபிரதேசம் தாத்ரியில் பசு மாட்டிறைச்சி உண்டார் என்று குற்றம் சுமத்தி முஸ்லிம் முதியவர் ஒருவரை அடித்துக் கொன்றது, இந்த பிரச்சினைகளில் மோடி சாதிக்கும் கள்ள மவுனம், மோடியின் அமைச்சர்கள் தவணை முறையில் கக்கி வரும் மதவாத பேச்சிகள் இவற்றை கண்டித்து பல பிரபலமான எழுத்தாளர்கள் தங்கள் பெற்ற இந்திய அரசின் உயர் விருதான சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்து வருகிறார்கள். 

1). ந்தோ-ஆங்கில எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சகல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்துள்ளார். Rich Like Us’ என்ற ஆங்கில நாவலுக்காக 1986-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதை இவர் பெற்றார். இப்பொழுது இவரது வயது 88.

2). இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி அவர்களும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளார். லட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாற்ற முடிகின்ற பிரதமரால் எழுத்தாளர்கள் கொல்லப்படும் போதும், அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படும் போதும், அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை வெளியிடும் போதும் ஏன் அவற்றை கண்டித்து பேச முடியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

3). கன்னட மொழியின் சிந்தனையாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்ட போது சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் திரும்ப கொடுத்தவர் இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ். இவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த பொன்னாடை, பதக்கம், ஒரு லட்ச ரூபாய் என அனைத்தையும் சாகித்திய அகாடமிக்கு நேரில் சென்று கொடுத்து விட்டு வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

4). உதய் பிரகாஷ். கல்புர்கி கொலை குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆவதை கண்டித்து ஆறு இளம் கன்னட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஆறழு சாகித்திய அகாடமி’ விருதை திரும்ப அளித்தனர். வீரண்ண மடிவளர், சதீஷ் ஜாவரே கவுடா, சங்கமேஷ் மீனாசனகை, ஹனுமந்த் ஹலிகெரி, ஸ்ரீதேவி ஆளூர் மற்றும் சிதானந்த் சாலி ஆகியோர் அக்டோபர் 3-ம் தேதியன்று கன்னட சாகித்திய பரிசத்துக்கு சென்று தங்கள் விருதுகளை திரும்பக் கொடுத்தனர்.

5). கன்னட மொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சந்திரசேகர் பட்டீல் தனக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் பம்பா விருதை இதே காரணத்துக்காக திரும்ப கொடுத்தார். கல்புர்கி மற்றும் முகமது அக்லாக்கின் ஓலம் இந்திய அளவில் எழுத்தாளர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது என்றார். 

முக்கிய குறிப்பு: ஆனால் தமிழ் எழுத்தாளர்கள், அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், வைரமுத்து, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், திலகவதி, ஜோ.டி. க்ரூஸ், பிரபஞ்சன், பொன்னீலன் ஆகியோர் ஈழத்தமிழர் படுகொலை முதல் இதுபோன்று நாட்டின் மனச்சாட்சியையே உலுக்கும் செயல்கள் வரை இவர்களின் மவுனம் இவர்களின்  மனசாட்சி அற்ற தன்மையினையும், இவர்களின் விருது மோகத்தையும் காட்டுகிறது.  

மாட்டுக்காக மனிதனை கொன்றவர்கள்!

மாட்டிறைச்சி வீட்டில் வைத்திருந்தார் என்று சொல்லி உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் 55 வயது முகமது இக்லாக் என்ற முதியவர் 200 பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் அவரது மகனும் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார். அவர் குடும்பத்து பெண்களும் தாக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவத்திற்கு, பல அரசியல் கட்சிகள், தலைவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள் எழுத்தாளர்கள், பொதுமக்கள், பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள் என்று பல்வேறு தரப்பில் இந்தியா முழுவதும் கடும் கண்டன குரல்கள் கடந்த சில வாரங்களாக ஒலித்தது  வருகின்றன. 

இந்த விவகாரம் குறித்து இந்திய பிரதமர் மோடி இதுவரை மவுனமாகவே இருந்தார். ஹிந்துத்துவா மோடியின் மவுனம் குறித்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்தியாவை செத்த பிணம் ஆளுகிறது, இந்திய பிரதமர் சந்திர மண்டலம் சென்றிருக்கிறார் போன்ற கடும் கண்டன கணைகளுக்கு மோடி உள்ளானார். இருந்தும் தொடர் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இந்திய ஜனாதிபதியும் கண்டனம் எழுப்பியதும் வாய் திறந்திருக்கிறார். 

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் “முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டுமா? அல்லது வறுமையை எதிர்த்து போரிட வேண்டுமா? என்று, இந்துக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எத்துணை கொடிய பிணம் தின்னி கழுகை நாம் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறோம் என்பதனை மக்கள் யோசிக்க வேண்டும். தனது கட்சியின் எம் பி. சாக்க்ஷி மகராஜ் பசுக்களை காப்பதற்காக கொலை கூட செய்வேன் என்று சொல்கிறார். இக்லாக் வீட்டு பெண்கள் கற்பழிக்க படவில்லையே என்று சந்தோசப்படுங்கள் என்று  பாரதிய ஜனதா பெண் சாமியார் கூறுகிறார். இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் இந்திய பிரதமர் நரபலி நரேந்திர மோடி. இவர் ஆட்சி கட்டில் ஏறியது முதல் நாடே கலவர பூமியாகி போனது என்பதே உண்மை.  

Sep 10, 2015

யார் இவர்கள்? அதிர்ச்சி ரிப்போர்ட்!

1). நான் அவர்கள் மேல் ஆத்திரமாக இருந்தேன். எதற்காக நூறு ரூபாய் மதிப்புள்ள துப்பாக்கித் தோட்டாக்களை வீணாக்க வேண்டும்? என்று எண்ணி என்னிடமிருந்த அரிவாளைப் பயன்படுத்தி ஐந்து பேரின் தலைகளை சீவியெறிந்தேன்” – சந்தகேஷ்வர் சிங்.
2). ”அட.. நீங்க பழுத்த மாம்பழங்களை அடிக்க மா மரத்தின் மேல் கம்பை வீசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. பழங்களும் விழும், சில காய்களும் கூட விழலாம். பழத்தை விட்டு காயை விழ வைத்ததற்காக உங்களை தண்டிக்கவா முடியும்? அதே மாதிரி தான்.. எங்க ஆளுங்களை இளைஞர்களைக் கொல்லத் தான் அனுப்பினோம்… அவங்க அந்த வேலையைப் பார்க்கும் போது சில குழந்தைகளும் கூட செத்திருக்கலாம். இதுக்கெல்லாம் தண்டிக்கவா முடியும்? அப்படியே தண்டிக்கனும் என்றாலும், அதுக்காக அவர்களுக்கு கொடுக்கும்  சம்பளத்தையா பிடித்தம் செய்ய முடியும்?” – ரவீந்திர சவுத்ரி
3). ”எங்க ஆளுங்களை அனுப்பும் போது 36 இன்ஞ்ச் வயிறு இருந்தா போட்டுத் தள்ளுங்கன்னு சொல்லி தான் அனுப்பினோம். அது ஆணோ பெண்ணோ… ஒரு வேளை பெண்ணா இருந்தா அவ வயித்திலேர்ந்து எதிர்காலத்தில பிள்ள பூச்சி எதாவது பிறந்து நக்சலைட்டா ஆயிடுமில்லே?” –சைலேந்திர வாத்சாயன். 
யார் இவர்கள்? எதைப் பற்றிப் பேசுகிறார்கள்? இவர்கள்தான் ரன்வீர் சேனா என்கிற இந்து பயங்கரவாத அமைப்பினர்.
கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி தில்லி பத்திரிகையாளர் மன்றத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார், தெஹல்கா பத்திரிகையைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும், தற்போது கோப்ரா போஸ்ட் என்கிற இணைய பத்திரிகையை நடத்தி வருபவருமான அனிருத் பஹால். இவர் ஸ்டிங் ஆபரேஷன்களின் (குற்றவாளிகளுக்கு தெரியாமல் ரகசிய கேமிராக்களை பொருத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வருவது) தந்தை என்று அறியப்படுபவர். 
1994-ம் ஆண்டிலிருந்து 2000-மாவது ஆண்டு வரை பீகார் மாநிலத்தில் நிலபிரபுக்களின் தனியார் குண்டர் படையான ரன்வீர் சேனா நிகழ்த்திய ஆறு மோசமான படுகொலைச் சம்பவங்களில் நீதி மன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷன் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்காகவே இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் தெஹல்கா பத்திரிக்கையின் நிறுவனர் அனிருத் பஹால்.
பீகார் மாநிலத்தின் சார்த்துரா(1995), பதனி டோலா(1996), லக்‌ஷ்மன்பூர் பதே (1997), இக்வாரி (1997), சங்கர் பிகா (1999), மியான்பூர் (2000) ஆகிய ஆறு இடங்களில் நடந்த கொடூரமான தாக்குதல்களில் சுமார் 144 தலித்துகள் ரன்வீர் சேனா தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். ரன்வீர் சேனா தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல்கள் அடிப்படையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கணக்கில் வராதது எத்தனையோ!
ரன்வீர் சேனா நிகழ்த்திய படுகொலைகளில் ஆறு சம்பவங்களே மேலே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் படுகொலைகள் தொடர்பான சில வழக்குகளில் கீழ்மை நீதிமன்றம் குற்றவாளிகளைத் தண்டித்தாலும், உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீடுகளின் போது குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே, “போதிய சாட்சிகள்” இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை சந்தித்து ’ரன்வீர் சேனா குறித்து திரைப்படம் இயக்க வுள்ளதாகவும், அதற்கான தகவல்கள் தேவை’ என்கிற பெயரில் தெஹல்கா & கோப்ரா போஸ்ட் நிருபர்கள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது தமது ‘சாதனைகள்’ குறித்து ரன்வீர் சேனா பயங்கரவாதிகள் பீற்றிக் கொள்வதை இரகசிய கேமராக்களில் பதிவு செய்துள்ளனர். அதையே ஆகஸ்டு 17-ம் தேதி தில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டனர். 
இந்த வாக்குமூலத்தில் தாங்கள் வழக்குகளை விட்டு வெளிவர பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான முரளி மனோகர் ஜோசி உதவி செய்தார் என்று குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரகசிய ஆவணங்கள் வெளியான பின்பும் குற்றவாளிகள் பகிரங்கமாக வெளியே சுற்றி திரிகிறார்கள். இவர்கள் மேலும், முரளி மனோகர் ஜோசி மீதும் இந்துத்துவா மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா? தலித்மக்கள் இந்துக்கள் இல்லையா இதுவே நமது கேள்வி. 
பதிவின் மூல ஆதாரம் -வினை செய் வினவு.

Jul 31, 2015

ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு எப்பொழுது தூக்குதண்டனை?

ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் இந்த நாட்டில் நடத்திய கலவங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு எப்பொழுது நீதி கிடைக்கும்? இதை நடத்திய ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு எப்பொழுது தூக்குதண்டனை வழங்கும் இந்திய நீதி துறை? 
மாலேகான் குண்டுவெடிப்பு (1): Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்.

மாலேகான் குண்டுவெடிப்பு 2: Sep 29 2008 - 7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள். ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.
சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு:Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் என்று குற்றம் சுமத்தப்பட்டது - (லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:: May 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.
சீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு Oct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.
தானே சினிமா குண்டுவெடிப்பு: Jun 4 2008. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.
கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்: Aug 2008இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி.
கோவா குண்டுவெடிப்பு: Oct 16 2009. குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி.
தமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு : தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.

மேலும் ராம சேனா என்ற அமைப்பின் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.
இன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும், (இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. கர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..
இத்தனை குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய காவி தீவிரவாதிகள் பற்றிய போதிய ஆதாரங்கள் இருந்தும் இன்னும் இந்திய நீதிதுறை இவர்களை தூக்கில் போடாதது ஏன்?

May 21, 2015

ராமகோபாலன் ஏன் காவி குல்லா அணிகிறார்?

திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் சாதி மத சண்டைகள் இல்லாமல் அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் காலூன்ற முடியவில்லை . 
ஆண்டாண்டு காலமாக சாதிய அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிவந்த கூரியூர் முகமது அலி ஜின்னா சாகிப் ,அப்துல்லாஹ் அடிகளார் ,மதுரை ஆசாத் பாய் ,ஜனாப் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் போன்ற தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் , பார்ப்பனியம் கட்டமைத்துள்ள சாதியத்தில் இருந்து தாங்கள் வெளியேறி சமதர்மத்தை போதிக்கும் இஸ்லாத்தில் இணைந்தால் மட்டுமே தமது மக்களுக்கு சாதிக்கொடுமையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று அதில் இணைந்தனர்.

இந்த தலித் இயக்க தலைவர்கள் இஸ்லாத்தில் இணைந்ததோடு , டாக்டர் சேப்பன் போன்றவர்களின் உதவியுடன் மீனாட்சிபுரம் போன்று கிராம கிராமமாக மக்களை இஸ்லாத்திபால் அழைத்துவந்தனர். இவர்கள் அப்பொழுது நடந்த எம்ஜியார் அரசால் தொடர்ந்து மிரட்டப்பட்டும்  அஞ்சவில்லை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான குழு ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறிய போதும் அவர்கள் அதை நிராகரித்து விட்டனர் . [ பின்னாளில் கூரியூர் முகமது அலி ஜின்னா சாகிப் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் வெட்டி கொல்லப்பட்டார்.

ஆண்டாண்டுகாலமாக தங்களால் அடிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அலையலையாக இஸ்லாத்தில் இணைவதின் மூலம் மனுதர்மத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் சவக்குழி தோண்டப்படுவதை அறிந்த RSS இதை தடுப்பதற்காக 1980 பிப்ரவரில் கரூரில் மாநில அளவிலான கூட்டத்தை கூட்டி ஆலோசித்தனர் .வடநாட்டில் நடப்பது போன்று ,இந்துக்களுக்கு எதிராக ஒரு பொது எதிரியை சித்தரித்து ,அவர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து கலவரங்கள் நடத்தி மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தால் மட்டுமே பார்பனீயத்தின் ஆளுமையை தக்கவைக்க முடியும் என்று முடிவு செய்தனர்.

அந்த முடிவின்படி ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களான யாதவராவ் ஜோஷி, சேஷாத்ரி ,சூர்யநாராயணராவ் ஆகியோரின் ஆலோசனைப்படி ராமகோபாலன் அய்யர் துக்ளக் சோ ராமசாமி ஆகியோரால் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற தொழிலதிபர்களின் ஆதரவோடு இந்து முன்னணியை ஆரம்பித்தனர் .காங்கிரசில் இருந்து கொண்டு கிறிஸ்தவ நாடாரான நேசமணியுடன் போட்டியிட முடியாத தாணுலிங்க நாடார் இந்துமுன்னனியின் முதல் மாநில தலைவரானார் .

தமிழக மண்ணில் ஒரு விசவித்து விதைக்கப்படுவதை அனைத்து கட்சிகளும் எதித்தபோது '' முஸ்லிம்களுக்கு ஒரு முஸ்லிம் லீக் இருக்கும் போது ,இந்துக்களுக்கு ஒரு இந்துமுன்னணி இருந்தால் என்ன தவறு ? '' என எம்ஜியார் கூறி இவர்களுக்கு முழுஆதரவு கொடுத்தார். இவர்களின் முதல் இலக்காக கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கும் கன்னியாகுமரியை தேர்ந்தெடுத்தனர் .கன்னியா குமரி மாவட்டத்தை ''கன்னிமேரி '' மாவட்டமாக மாற்ற கிறிஸ்தவர்கள் முயற்சி செய்வதாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்தனர். ஊர்முழுதும் போஸ்டர் அடித்து ஒட்டிகிறிஸ்தவர்களின் மனதில் பயத்தையும் பதட்டத்தையும் கொண்டுவந்தனர்.

1982 இல் நாகர்கோவிலில் இந்து எழுச்சி மாநாடு நடத்தியதோடு அடுத்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது கிறிஸ்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு பலரை கொன்றனர் . 9 கிறித்தவர்கள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர் .[ அன்று விதைத்த விஷவித்து இன்று அங்கு எம்பி தேர்தலில் வெல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது .]

இவர்களின் அடுத்து இலக்காக கோயம்புத்தூர் அமைந்தது: இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகமான யூனிட்கள் செயல்படும் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிரவாத பயிற்ச்சிகள் நடக்கும் ஒரு மாநிலமாக கேரளா இருந்து வந்தது. அதனால் பாலக்காடு போன்ற கேரளா எல்லைகளை தன்னகத்தே கொண்ட கோவையை தங்களது அடுத்த இலக்காக ஆர்.எஸ்.எஸ். தேர்வு செய்தது. இந்துமுன்னணியும் பாஜகவும் வரும்வரை கோவை அமைதியாகத்தான் இருந்தது .70களின் இறுதியில் கோவையில் காலூன்றிய மார்வாடிகள் மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பெருமுதலாளிகளின் ஆதரவோடு இந்த சாத்தான்கள் கோவையில் வேரூன்றினர் .

1982 ஜூன் 20 அன்று ,முதல்முறையாக கோவை வ.உ.சிதம்பரம் பூங்கா மைதானத்தில் நடந்த இந்துமுன்னணி பொதுக்கூட்டத்தில் ,இஸ்லாம் கிறிஸ்தவம் குறித்தும் கன்னிமேரி குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் முஸ்லிம் பெண்களை பற்றியும் ,ஆபாசமாக அறுவருக்கத்தக்கவகையில் பாஜக தலைவரான திருக்கோவிலூர் சுந்தரம், ராமகோபாலன் போன்றவர்கள் பேசினார்கள். இவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்கள் உயிருக்கு மேலானதாக கருதும் பெருமானார் குறித்து பொதுக்கூட்டத்தில் ஆபாசமாக பேசியது கோவை முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மறுபடி 1983 ஜூலை 5 அன்று ,கோவை தேர்நிலைத் திடலில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் திருக்கோவிலூர் சுந்தரம் முஸ்லிம் பெண்களையும் கன்னிமேரியையும் நபிகள் நாயகத்தையும் மிக ஆபாசமாக பேசினார்.

தமிழகத்தில் நிலவும் நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் திட்டமிட்டு விஷப்பிரச்சாரம் செய்துவரும் ராமகோபாலனை கைது செய்யவேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்தும் கூட , எம்ஜியார் அரசின் ஆதரவோடு தங்குதடையின்றி தன் விஷப் பிரச்சாரத்தை தொடர்ந்து வந்தார் ராமகோபாலன். இந்நிலையில்1984 ஜூலை 18 இல் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நபிகள் நாயகத்தையும் முஸ்லிம் பெண்களையும் இழிவாக பேசிவிட்டு ரயிலில் மதுரை சென்றபோது மதுரை ரயில்நிலையத்தில் வைத்து கோவை பாஷா பாய் அவர்களால் தாக்கப்பட்டான் ,இதில் உடனிருந்த ஹைதர் அலியும் கைது செய்யப்பட்டார் .இதனால் தலையில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தை மறைக்கவே ராமகோபாலன் காவிக்குல்லா அணிகிறார். 

குறிப்பு: இன்றுவரை பிள்ளையார் சதுர்த்தி என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் கலவரத்தை உண்டாக்கி மத நல்லிணக்கத்தை கெடுத்து வருகிறார் ராமகோபால ஐயர். இந்த பாசிஸ ஹிந்து தீவிரவாதத்தின் தமிழக வருகையின் எதிர் வினையே அல் உம்மா போன்ற இயக்கங்களின் வருகை ஆகும்.

Dec 9, 2014

இவர்களின் கனவு எதில் முடியும்!

கவத் கீதையை தேசியப் புனித நூலாக விரைவில் அறிவிப்போமென இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 
விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஷ்மா, பகவத் கீதை பகவானால் அருளப்பட்டு 5,151 வருடம் ஆகிவிட்டது. பகவத் கீதை ஏற்கனவே மோடி அரசால் கவுரவிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நூல் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்கபடுவது மட்டும் தான் பாக்கி என்றும் கூறினார்.
அதற்கு உதாரணமாக அமெரிக்கா சென்ற மோடி ஒபாமாவை சந்தித்த போதும், ஜப்பான் சென்றபோது மன்னர் அகிஹிடோவை சந்தித்தபோதும் பகவத் கீதையை பரிசளித்ததை குறிப்பிட்டார். அலெக்ஸ் ஹேலியின் “ரூட்ஸ்” நூலை படித்திருக்கும் அமெரிக்க மக்கள் கீதையின் உண்மையான பொருளை அறிய வரும் போது காறித்துப்புவார்கள் என்பது வேறு விடயம்.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார்கள் ‘இது இந்துக்களின் புண்ணிய பூமி. எனவே ராமனை தேசிய நாயகனாக கொள், விநாயகன் ஊர்வலத்துக்கு முஸ்லிம்கள் வாழும் தெருக்களை திறந்து விடு, கிருஷ்ணன் அருளிய கீதையை தேசியப் புனித நூலாக அறிவி’ என்று எகத்தாளம் போடுகிறார்கள்.
சுஷ்மாவின் கோரிக்கையை ‘மதச்சார்பற்ற’ தேர்தல் அரசியல் கட்சிகள் ஒருங்கே கண்டித்திருக்கின்றன.  பலசமய வழிபாட்டுமுறை கொண்ட இந்தியாவில் கீதையை மட்டும் தேசியப் புனித நூலாக அறிவிப்பது மற்ற சமயத்தவரை புண்படுத்தும் என்பது பிரச்சினையின் ஒரு பகுதி தான். பிரச்சனை பாபர் மசூதி தொடங்கி, காசி, மதுரா போன்ற முஸ்லிம்களின் 4000 பள்ளிவாசல் இந்து கோவில்களாக இருந்தது அதை இடிக்க வேண்டும் என்பதில் தொடங்கி இப்பொழுது  தேஜோ மகாலியா எனப்படும் சிவன் கோயில் இருந்த நிலத்தின் ஒரு பகுதியில் தான் தாஜ் மஹால் கட்டப்பட்டுள்ளது என்பது வரை வந்துள்ளது.
இத்தோடு முடிந்து விடவில்லை இவர்களது கோரிக்கை முஸ்லிம்கள் தங்கள் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும் என்பது வரை நீண்டுள்ளது. மேலும், இந்தியா என்கிற எல்லையோடு அவர்கள் கனவு நிறைவு பெறவில்லை அகண்ட பாரதம் என்கிற பெயரில் ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா வரை பரந்துள்ளது. ஹிந்துதுவாவின் கனவு என்பது மிகபெரிய இரத்தம் சிந்தலில், உள்நாட்டு யுத்தத்தில் போயி முடியப்போகிறது என்பது என்னவோ நிதர்சனமான உண்மை. 

Dec 7, 2014

இது முடிவல்ல தொடர்கதை!

டிசம்பர் 06/2014: சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று  பாபரி மஸ்ஜித் இடிப்பு. 
 தொடர் வன்முறைகள் மூலம் நாட்டை சுடுகாடாக மாற்றி பாபரி மஸ்ஜிதை இடித்து, அதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியத்தை இடித்து தள்ளியவர்கள் இன்று நாட்டின் அதிகாரத்தில் இருக்கின்றனர்.
நிரபராதிகளின் இரத்தத்தின் மூலம் ஹோலியை கொண்டாடிய ரதயாத்திரையின் நாயகன் எல்.கே.அத்வானி, அரசியலில் செல்லாக்காசாக ஆக்கப்பட்ட போதிலும், அத்வானியை விட தீவிர இந்துத்துவத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய நரேந்திர மோடிதான் இன்று இந்தியாவின் பிரதமராக உள்ளார். பாபரி மசூதி குறித்த  நினைவலைகளில் கொடிய சதிகள்தாம் நிறைந்துள்ளன.
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவில் மஸ்ஜிதிற்குள் சிலையை வைத்தது முதல் கொடிய சதிகளின் அரங்கேற்றம் துவங்குகிறது. செய்தியை கேட்ட உடனே மஸ்ஜிதில் இருந்து சிலைகளை அகற்ற பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவிடுமளவிற்கு இந்தியாவின் ஜனநாயக- மதச்சார்பற்ற விழுமியங்கள் அன்று உயிரோடு இருந்தது. அதேநேரம் நேருவின் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு இந்துத்துவ வகுப்புவாதமும் வலுவாக இருந்தது.
நேரு அன்றைய உ.பி. முதல்வர் கோவிந்த பலாஹ் பந்துவிற்கு சிலையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு எழுதிய அவசரக் கடிதத்தில் இவ்வாறு சுட்டிக் காட்டியிருந்தார்.”மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே நடத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நேரு குறிப்பிட்டிருந்தார். ”நேரு கூறியது முற்றிலும் சரியே. அந்த ஆபத்திலிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற நேருவாலோ, அவரது கட்சியாலோ இயலவில்லை.

உயர்சாதியினர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக  வன்முறை அடிப்படையிலான  இந்துத்துவ உணர்வும், பிற மதங்களின் மீதான துவேசமும். குறிப்பாக முஸ்லிம்கள் மீதான துவேசமும் ஊட்டி வளர்க்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் அவர்களுக்கு நல்லதொரு இரையாக மாறியது. தொடர்ந்து பொய்களை பரப்புரைச் செய்தும், கலவரங்களை ஏற்படுத்தியும், ரதயாத்திரைகளை நடத்தியும் முன்னேறினர் RSS  இந்துத்துவானர்.

அரசும், மதச்சார்பற்ற கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவு அல்லது மெளனமான பார்வையாளர்கள் என்ற நிலையிலேயே இருந்து வந்தனர். பிரதமரின் உத்தரவு வந்த பிறகும் பாபரி மஸ்ஜிதில் இருந்து சிலைகள் அகற்றப்படவில்லை. அங்கே முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, வக்ஃப் நிலத்தில் பூஜைக்கான வசதியும் செய்து தரப்பட்டது. மிதவாத இந்துத்துவம் கைவசம் இருப்பது நல்லதுதான் என்று தவறாக புரிந்து கொண்ட ராஜீவ் காந்தி, 1986-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜிதின் வாசல்களை பூஜைக்காக திறந்து விட்டார். அதன்பிறகு நடந்த தொடர் கலவரங்களும், இந்திய அரசியல் சாசனத்திற்கும், சட்டங்களுக்கும் சவால் விடுத்தது. 

இறுதியாக ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் சேர்ந்து பாபரி மஸ்ஜிதை முற்றிலுமாக இடித்துத்து தள்ளினர். இங்கே இடிக்கப்பட்டது ஒரு கட்டிடம் மட்டுமல்ல. இந்தியாவின் மதச்சார்பின்மை, அரசு மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும்தான். அதிகாரிகளின் வாக்குறுதிகளும், நீதிமன்றங்களின் எச்சரிக்கைகளும் வீணாயின. பாபரி மஸ்ஜித் அதே இடத்திலேயே புனர் நிர்மாணிக்கப்படும் என்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதி கொடிய சதிகளின் மூலமாக அமைந்தது. பிற்காலத்தில் நரசிம்மராவ் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மறைமுக உறுப்பினர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. 
மஸ்ஜிதை இடித்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு சின்னஞ்சிறு குழந்தை அனைத்து இந்தியர்களுக்கு பதில் தெரிந்திருந்தது. எனினும், எந்தவொரு குற்றவாளியும் விசாரணைச் செய்யப்படவில்லை, சிறையிலும் அடைக்கப்பட வில்லை. ஆறு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்ட லிபர்ஹான் கமிஷன், 17 வருடங்களை எடுத்துக் கொண்டது. அவ்வளவு நாட்கள் எடுத்து வெளிவந்த அறிக்கை இதுவரை வெளிச்சம் காணாமல் இருண்ட பீரோவுக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறது.

வழக்கை விசாரித்த சி.பி.ஐயோ சங்க்பரிவார் தலைவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் ஆர்வம் காட்டியது. மசூதி குறித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் தீர்ப்போ இந்திய நீதித்துறை வரலாற்றில் விசித்திரமானதாக அமைந்தது. உண்மையான உரிமையாளருக்கும், வன்முறையின் மூலம் நிலத்தை அபகரித்தவனுக்கும், பார்வையாளனாக நின்றவனுக்கும் நிலத்தை சம அளவில் பகிர்ந்து அளித்தது தீர்ப்பு கூறியது நீதி மன்றங்கள் காவிமயமாகி போனதை தெள்ள தெளிவாக பறைசாற்றுகிறது.

மசூதி இடிப்பு என்பது ஏதோ ஒரு உரையைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் எதேச்சையாக இடித்து தள்ளியதல்ல. அச்சுறுத்தி கீழ்படியவைத்து அடிமைகளாக மாற்றும் பிராமண ஆதிக்க சங்க்பரிவார செயல்திட்டத்தின் நீணடகால திட்டங்களின்  ஒரு அத்தியாயம் மட்டுமே பாபரி மஸ்ஜித் இடிப்பு. அந்த பட்டியலின் தொடர்ச்சியே  குஜராத் இனப்படுகொலையும் இந்துத்துவ மயமாக்கலும், காவிமயமாக்கலும் ஆகும்.
ஒரு ஜனநாயகதேசத்தில் வாழும் குடிமக்களுக்கு தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற உணர்வு, நாட்டின் இருப்போடு தொடர்புடையது.’நாங்கள் பாதுகாப்பாக இல்லை.தற்போதைய கட்டமைப்புகளில் தங்களுக்கு நீதி கிடைக்காது போன்ற சிந்தனைகள் அங்கு வாழும் ஒருபகுதி மக்களுக்கு ஏற்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது. இந்த பாதுகாப்பற்ற சூழல் நாட்டை பலகீனப்படுத்திவிடும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நாட்டு நலனை முன் நிறுத்தி செயல்பட எந்த அரசால்தான் முடிந்துள்ளது? என்பது மீளாய்வுச் செய்யப்பட வேண்டிய விஷயம். இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா மீண்டும் ஒரு உடைவை நோக்கி பயணிக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 

Jul 23, 2014

நாட்டை கூறு போட துடிக்கும் ஹிந்துத்துவா!

ஜூலை 23: பெரும்பான்மையினரின் எண்ணங்களை மதித்து நடப்பதற்கு சிறுபான்மை சமூகம் பழகிக் கொள்ள வேண்டும் என்ற வலதுசாரி இந்துத்துவா தலைவர் அசோக் சிங்கால் சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். 

பாரதிய ஜனதா கட்சியின் மோடி ஆட்சிக்கு வந்ததும் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்கள் பெருமளவில் சக்தி பெற்றுள்ளன. பெரும்பான்மை மக்களின் எண்ணங்களை சிறுபான்மை மக்கள் மதித்து நடக்க வேண்டும் என்பது முஸ்லிம்கள் தங்கள் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி வருவதை தவிர உங்களுக்கு வேறு வழியில்லை என்ற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் அஜாண்டாவின் பிரதிபலிப்பே இதுபோன்ற பேச்சுக்கள் மற்றும் மிரட்டல்கள் ஆகும். 

இது ஒரு ஆபத்தான பேச்சு இதை நாட்டில் உள்ள அறிவு ஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், சமூக நலவிரும்பிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். இத்தகைய அறிவீலித்தனமான அறிக்கைகள் மூலம் சிங்கால் மற்றும் தொகாடியா போன்ற ஹிந்துத்துவா தலைவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படைகளுக்கு எதிராக சவால் விட்டு கொண்டும் அரசியல் சாசன விதிகளை கேவலப்படுத்தி கொண்டும் இருக்கின்றனர்.. தேர்தல் வெற்றி என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைகளை எதிர்த்து கேள்வி கேட்பதற்கான அனுமதி கிடையாது என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

*மோடியின் ஆட்சி இதுபோல் தொடர்ந்தால் அது இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி நகர்த்தி செல்லும் என்பதில் எந்த ஐயப்படும் இல்லை* 

Oct 29, 2013

வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க முடியாது! RSS!

Oct 30/2013: வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். விடுத்துள்ள அறிக்கை அமைதியை விரும்பும் இந்திய மக்களுக்கு எதிரான சவால் ஆகும். 

1927-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான கலவரங்களின் மூலம் தன்னை வளர்ந்து வந்த RSS பயங்கரவாத இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் தனது உண்மையான முகத்தை உலகுக்கு காட்டியுள்ளது. 

தேசத் தந்தை காந்தியடிகளையும், பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களையும் கொலை செய்து அவர்களின் இரத்தத்தில் ஹோலி கொண்டாடியவர்கள், இன்று வகுப்புவாத கலவரத் தடுப்புச் சட்ட மசோதா அமுலாக்கப்படுவதை தடுப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

சமூகத்தின் அமைதியை கெடுக்கும் இத்தகைய அற்பர்களின் ஜம்பங்கள் எதுவும் தங்களது துணிச்சலை பாதிக்காது என்பதை பொறுப்புள்ள இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் நிரூபித்து காட்ட வேண்டும். நாம் எல்லோரும் சகோதர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

ஹிந்து, முஸ்லிம், புத்தன் என்று இந்திய மக்களை பிரித்து அதன் மூலம் பிரிவினைவாதத்தை சக்திப்படுத்தும் சங்க்பரிவாரத்தின் சூழ்ச்சிகளை காணாதது போல் நடித்தால் இந்தியாவில் ஒரு மாபெரும் உள்நாட்டு யுத்தத்தை  நாம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஒரு நாட்டிலே வாழும் சிறுபான்மை  மற்றும் ஒடுக்கப்பட்ட  மக்கள் பெரும்பான்மை சமூகத்தால் நசுக்கப்படும் பொழுது அதுவே ஒரு உள்நாட்டு யுத்தமாக மாறுகிறது என்பதை பொறுப்புள்ள யாரும் மறுத்து விட முடியாது.

கொடிய கொலைகளையும், இரத்தத்தை ஓடச் செய்வதையும் தங்களது வரலாறாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம்  மொத்த ஹிந்து சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களை காட்டிக் கொள்வது முரண்பாடானது. ஆர்.எஸ்.எஸ். தேசிய நிர்வாக குழுவில் முஸ்லிம் சமுதாயம் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களும் அறிக்கைகளும் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் மக்கள் விரோத தீவிரவாதச் செயல்களை தோலுரித்துக் காட்டும்.