Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Jul 26, 2011

சீமான் பேட்டி பாலியல் புகாரை சந்திக்க தயார்!

July 27,சென்னை : நடிகை விஜயலட்சுமி கூறியுள்ள பாலியல் புகாரை சட்டரீதியாக சந்திப்பேன் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், பேராசிரியர் தீரன், சாகுல் அமீது, அய்யநாதன், சிவகுமார் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று சட்ட பேரவையில் தீர்மானம் நிறை வேற்றியதற்கு நன்றி தெரிவிக்க முதல்வரை சந்தித்தோம். இலங்கை தமிழர் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவாக இருப்போம்.

காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதால் இந்திய இறையாண்மை கெட்டு விடாது. இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நடிகை விஜயலட்சுமி என் மீது பாலியல் புகார்தான் சொல்லியுள்ளார். வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்தால் அதை சட்ட ரீதியாக சந்திப்பேன். இவ்வாறு சீமான் கூறினார்.

இந்திய அரசால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்!

JULY 27, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும்.

அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.

அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால் - இன்னும் மத்திய அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் பதில் சொல்வார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது. முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு.

இக்குழு இந்தியா முழுவதும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு 404 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்திய நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையின் அவலங்கள் இவ்வறிக்கையின் மூலம் வெளிப்பட்டபோது முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பல மாநிலங்களில் கல்வி, பொருளாதார நிலைகளில் தலித் மக்களை விடவும், துப்புரவுத் தொழிலாளர்களை விடவும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின் தங்கியிருப்பதும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை முஸ்லிம் சமூகத்திற்கு மறுக்கப்பட்டு வரும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

நாடு முழுவதும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. இதனால் முஸ்லிம்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 15 அம்சத் திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இதன்படி முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற 90 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் பொதுவாக முஸ்லிம்களை கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது மத்திய அரசு.

சச்சார் அறிக்கையில், ஓரளவு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள மதத்தைக் காரணம் காட்டி, வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கையிலெடுத்திருக்கும் மத்திய அரசு, ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து வருகிறது. இந்த வரைவுத் திட்டத்தின்படி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது வாடகைக்கு வீடு தர அல்லது வீட்டு வசதியை மறுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.

இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித பயனும் விளையப் போவதில்லை. முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தரவில்லை என்றால் சட்டப்படி அது தவறு என்பதை விளங்கிக் கொள்ளும் வீட்டின் உரிமையாளர், வாடகைத் தொகையையும், முன் பணத்தையும் வேண்டுமென்றே கூட்டிச் சொல்லி தானாகவே முஸ்லிம்கள் விலகிக் கொள்ளும் வகையில் நடந்து கொண்டால் சட்டத்தால் அவர்களை என்ன செய்து விட முடியும்?

ஒரு வேளை அதிக வாடகை இருந்தாலும் ஓ.கே. என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சிலரால் வீட்டு உரிமையாளருக்குத்தான் ஆதாயம் ஏற்படும். இதுமட்டும்தான் இச்சட்டத்தால் ஏற்படும் பயனாக இருக்க முடியும். இதுபோன்ற வீண் நடவடிக்கைகளை விட்டு விட்டு முஸ்லிம்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தித் தர மத்திய அரசு முன் வர வேண்டும். இது ஒன்றுதான் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டமாக இருக்கும். இதுவல்லாமல் 15 அம்சத் திட்டம் என்ன 80 அம்சத் திட்டம் போட்டாலும் அது - தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்ற மட்டுமே உதவும்.

Jul 24, 2011

தலித் கிறிஸ்தவர்கள் 4 நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் பேரணி!

JULY 25, தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி டெல்லியில் நாளை முதல் 4 நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் பேரணி நடத்தப் போவதாக தலித் கிறிஸ்தவர்களுக்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கர்த்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சின்னப்பா, ஆயர் பேரவை எஸ்சி, எஸ்டி பணிக்குழு ஆணையர் பிஷப் நீதிநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியிலில் சேர்க்க வலியுறுத்தி புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நாளை முதல் 27ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டமும், 28ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியும் நடத்த எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்களும் 100 கத்தோலிக்க ஆயர்களும், இஸ்லாமிய சிறுபான்மை அமைப்பினரும் கலந்துகொள்கிறார்கள்.

இதையொட்டி, தமிழகத்தில் உள்ள எல்லா கிறிஸ்தவ ஆலயங்கள், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், வீடுகளில் சிறப்பு பிராத்தனை நடைபெறுகிறது’’என்று கூறப்பட்டுள்ளது.

Jul 18, 2011

சமச்சீர் கல்வி! மூக்கு உடைபட்ட அம்மா!

JULY 19, சென்னை:தமிழ்நாட்டில் முந்தைய தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் தொடரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது மாநிலத்தில் நிலவிலுள்ள மெட்ரிக் உள்பட நான்கு பாடத்திட்டங்களுக்கு பதிலாக 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வியை வழங்கும் நோக்கில் சமச்சீர் கல்வி என்ற திட்டம் கொண்டு  வரப்பட்டது.

இந்த கல்வியாண்டின் துவக்கத்திலிருந்து இத்திட்டம் துவங்கப்பட இருந்தது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க அரசு மீதான மக்கள் எதிர்ப்பு அலையின் பலனாக அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

பதவியில் அமர்ந்த உடனேயே மாணவர்கள் நலனையும், மக்கள் வரிப்பணத்தையும் கணக்கில் கொள்ளாமல் காழ்ப்புணர்வில் சமச்சீர் கல்வி உள்பட முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்கள் பலவற்றை ரத்துச் செய்தார் ஜெயலலிதா. இதற்காக சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.சமச்சீர் கல்வி ரத்து செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் பொது நலமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் அம்மா நிறைவேற்றிய சட்டத்திருத்தம் செல்லத்தக்கதல்ல என்றும்  ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படியும் ஒரு காதல்!

JULY 19, வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் எழில்மாறன். ஸ்ரீபெரும் புதூரில் தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக உள்ளார். இவரது நண்பர் ஒருவர் வேலைக்காக ஒரு செல்போன் எண்ணை கொடுத்திருந்தார்.

இந்த எண் மூலம் கடந்த மாதம் தொடர்பு கொண்டபோது அது ராங்காலானது. எதிர்முனையில் பேசிய சிவகங்கை மாவட்டம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி தனலட்சுமிக்கு போய்வுள்ளது. வேணும்ன்னே போனை போட்டு கலாய்க்கறயா என சத்தம் போட அய்யய்யோ உண்மையிலயே ராங்நம்பர் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். .

இதன்மூலம் அவர்களுக்கு இடையே செல்போன் நட்பு தொடர்ந்தது. தினம் தினம் பேசும் அளவுக்கு போய்வுள்ளது இவர்களது நட்பு. கடந்த வியாழக்கிழமை திடீரென போன் செய்த தனலட்சுமி, என் வீட்ல ரொம்ப டார்ச்சர் செய்றாங்க அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். ஸ்ரீபெரும்புதூரில் ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்தால் எனது முடிவை மாற்றிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அவருக்கு எழில்மாறன் ஆறுதல் கூறி நீ திருச்சி வா நான் வந்து உன்னை அழைச்சிம் போய் வேலை வாங்கி தர்றன் என்றுள்ளார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி வந்த தனலட்சுமியை, எழில்மாறன் முதன்முதல் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்குள் காதல் அரும்பியது. எழில்மாறன், தனலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு தனலட்சுமி ஒப்புக் கொள்ளவே, இருவரும் வேலூர் வந்தனர்.

எழில்மாறன் வீட்டில், பெண்ணின் வீட்டில் சம்மதம் கேட்க தொடர்பு கொண்டபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பயந்த எழில்மாறன் பெற்றோர் அவரிடம், ‘பெண்ணை எங்கிருந்து அழைத்து வந்தாயோ அங்கேயே விட்டுவிடு’ என்று கூறியுள்ளனர். ஆனால், தனலட்சுமியை இன்று காலை சேண்பாக்கம் விநாயகர் கோயிலில் எழில்மாறன் திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு கேட்டு வேலூர் மகளிர் காவல்நிலையத்தில் காதல் மனைவி தனலட்சுமியுடன் தஞ்சம் அடைந்தார். அங்கு மகளிர் போலீசார், எழில்மாறன் பெற்றோரை அழைத்து பேசியதை தொடர்ந்து எழில்மாறன் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்

சிந்திக்கவும்: காதலுக்கு கண்ணில்லே என்று சொன்னார்கள் ஆனால் அறிவும் இல்லை என்பது இது போல் சம்பவங்கள் மெய்பிக்கின்றன. இது போல்தான் ஒருவர் போனில் ஒரு பெண்ணை காதலித்து பின்னால் அந்த பெண்ணை நேரில் பார்க்கும் போது அவர் இவரை விட வயதில் மூத்தவர் அழகும் இல்லை என்பதை தெரிந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண் பார்க்க அழகாக மனதுக்கு பிடித்தவராக இருந்ததால் கல்யாணத்தில் போயி முடிந்தது இல்லை என்றால் என்ன நடந்திருக்குமோ? செல்போன் என்ற ஒரு அறிய கண்டுபிடிப்பு இப்படி தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதே வருத்தபடும் செய்தி.

Jul 16, 2011

பிளாஸ்டிக் இல்லாத உலகம் நாமும் போராடுவோம்!

JULY 17, மேட்டுப்பாளையம்: பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்கக் கோரி, சைக்கிள் வீரர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை, பிரசார பயணம் மேற்கொண்டார்.

ஊட்டி சைக்கிள் வீரர் பிரசாத், நேற்று மேட்டுப் பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டார். வழிநெடுக பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்கக் கோரியும் பிரசாரம் செய்தார்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு, அனைத்து வணிகர் சங்க அமைப்பாளர் ஹபிபுல்லா தலைமை வகித்தார். நகராட்சி வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஷாஜஹான், சிட்டி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜுலு கொடியசைத்து துவக்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் வதூத், சைக்கிள் வீரர் அறிவழகன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். யுவராஜ் வரவேற்றார். ஜாகீர் உசேன் நன்றி கூறினார்.

Jul 14, 2011

பாலக்காட்டை கலக்கும் பன்றி காய்ச்சல்! பொதுமக்களே உஷார்!

JULY 15, பாலக்காடு மாவட்டத்தில் கட்நத 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 60 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று சென்றனர். இவர்களில் 140 போலீசாருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ளதாக மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி பிந்து தோமஸ் தெரிவித்துள்ளார்.

’’பாலக்காடு மாவட்டத்தில் டைபாய்டு, டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் பல ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தவர்களை பரிசோதனை செய்ததில் 5 பேர் பன்றிக்காய்ச்சலாலும், 7 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பாலக்காடு முட்டிக்குளங்கரை போலீஸ் முகாமில் உள்ள போலீஸ்காரர்கள் காய்ச்சலால் அவதிப்படுவதாக மருத்துவத்துறைக்கு தகவல் வந்தது. அவர்களை பரிசோதித்தபோது 140 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. காய்ச்சல் பாதித்த 140 போலீசாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொண்டை வலி, சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறியாகும். நோய் தாக்கியவர்கள் வெளியில் நடமாட வேண்டாம். வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற வேண்டும். வீட்டிலும் வாயை துணியால் மூடியபடி இருப்பது நல்லது. பன்றிக்காய்ச்சல் குணப்படுத்தக் கூடியது. உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் நோய் குணமாகும்’’என்று கூறினார்.

Jul 6, 2011

ஆண்மை குறைவும் பெருகி வரும் விவாகரத்தும்!

JULY 07, திருமணம் நிச்சயிக்கப்படும் போதே, விவாகரத்து மனுவும் தயாராகி விடுகிறது. அவசரமான உலகில், குடும்ப வாழ்க்கை சிலருக்கு அவசியமல்லாதது ஆகி வருகிறது.

பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, உறவினர்கள் வாழ்த்துடன் தான் வாழ்க்கையை இளம் தம்பதியர் துவக்குகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் திருமணமான அடுத்த நாளே சிலரிடம் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.

இதற்க்கு பலவிதமான காரணங்களை சொல்லலாம். பெரும்பாலான கணவன் - மனைவிகள் குடும்ப சொத்து, சம்பாத்தியம், வகிக்கும் பதவி ஆகியவற்றால், "ஈகோ' கொள்கின்றனர். இதனால், ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, பிரிகின்றனர்.

மேலும் இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, ஐ.டி., துறையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் எப்போதும் கம்ப்யூட்டரே வாழ்க்கைத் துணை என நினைக்கின்றனர்.

பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், கட்டிய கணவரையோ, மனைவியையோ கண்டு கொள்வதில்லை. இதனால், இருவருமே சட்டப்படி பிரிந்து கொள்ள கோர்ட்டை நாடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, "ஆண்மை குறைவு' விவாகரத்துக்கு அதிகளவு காரணமாக உள்ளது.

பணத்தாசை, ஆண்மை குறைவு, போதிய அன்பு இல்லாமை, இவை இன்றைய திருமண முறிவுகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்றைய கால ஆண்களிடம் பெருகி உள்ள குடி, போதை மருந்து, புகை பிடித்தல், போன்ற பழக்கவழக்கங்கள் இவர்களிடம் ஆண்மை குறைவை ஏற்படுத்துகின்றன. இதுவே அவர்களின் திருமண உறவு முறிய முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

Jul 5, 2011

இந்தியன் ரயில்வே! புதிய இ- டிக்கெட் சேவை ஆரம்பம்!

JULY 06, இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. தனிப்பட்ட நபர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

புதிய இ-டிக்கெட் சேவையின்படி, தனிப்பட்ட வாடிக்கையாளர்கள்  தாங்களாகவே பதிவுசெய்து கொண்டு இந்த சேவையைப் பெறலாம். பதிவுசெய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

தொடக்கத்தில் ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 8 பரிமாற்றங்கள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 5 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 10 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஐஆர்சிடிசியில் தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 10 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 20 ரூபாயும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய சேவையை www.indianrailways.gov.in  இணையதளத்தின் மூலம் பெறலாம். இந்த சேவை தொடங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். பகல் 12.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

Jul 4, 2011

செல்போன் உண்டாகும் பாதிப்புகளும், கலாச்சார சீரழிவுகளும்!

ஜூலை 05, சென்னை: செல்போனில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.

ஆசிரியர்களும் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், மாணவ, மாணவிகள் பலர் தடையை மீறி செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்களுடன் பேசுவது, மெசேஜ் அனுப்புவதுமாய் இருக்கின்றனர். செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகி விட்டனர்.

செல்போனில் பேசுவது, மெசேஜ் செய்வது, கேம்ஸ் ஆடுவது, பாடல் கேட்பது மட்டு மின்றி ஆபாச படங்களை டவுண்லோடு செய்து பார்க்கின்றனர். இந்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். சில நேரங்களில் வகுப்புகளுக்கு செல்லாமல் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகின்றனர்.

தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டுப்பாடு இருப்பதால் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவது ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி, கல்லூரியில் சரியான கட்டுப்பாடு இல்லாததால் மாணவ, மாணவிகள் வகுப்பறையிலேயே செல்போன் பயன்படுத்து கின்றனர். இதை ஆசிரியர்களும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தினால், படிப்பில் கவனம் செல்லாது. எந்த நேரமும் செல்போனிலே கவனம் இருக்கும். இதனால், அவர்களின் கல்வி பாதிக்கும். சுயமாக சிந்திக்கும் திறன் தடைப்படும். அறிவு திறன் பாதிக்கப்படும். சாதிக்கும் எண்ணம் வராது.

செல்போன்களில் தொடர்ந்து பேசும் போதும், பாடல் கேட்கும் போதும், அதில் இருந்து வரும் கதிர் வீச்சுகளால் செவி திறன் செயலிழந்து, கேட்கும் திறன் பாதிக்கப்படும். மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, மனநிலை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எப்போது பார்த்தாலும் மாணவ, மாணவிகள் செல்போனில் மெசேஜ் செய்து கொண்டே இருக்கின்றனர்.

இளம் வயதில் கைவிரல்கள் மென்மையாகவும் எளிதில் மடக்க கூடியதாக இருக்கும். தொடர்ந்து மெசேஜ் செய்து கொண்டே இருந்தால் விரைவில் கை விரல்கள் செயலிழந்து விடும். செல்போன்களில் ஆபாசப்படங்களை பார்க்கும் போது, முற்றிலும் மனநிலை பாதிப்படையும். எண்ணம் செக்ஸ் என்ற விஷயத்தை நோக்கியே இருக்கும். இதனால், விரும்பத்தகாத தீய செயல் களில் ஈடுபடவும் தொடங்குவார்கள்.

Jun 28, 2011

மாணவியை கெடுத்த பொருக்கி இன்ஸ்பெக்ட்டர் தப்பி ஓட்டம்!

JUNE 29, கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுதீர். இவரது மகள் விஜயா. 14 வயதான இவர் பள்ளியில் படித்து வந்தார். அப்போது விஜயாவை சினிமா நடிகையாக்குவதாக கூறி தந்தையே விபசாரத்தில் தள்ளினார்.

சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் அந்த மாணவி விருந்தாக்கப்பட்டார்.  பெற்றோரின் பண ஆசையால் செக்ஸ் சித்ரவதைக்குள்ளான மாணவி அவர்களின் பிடியில் இருந்து தப்பி எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

தந்தையே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடுமையை போலீசாரிடம் கூறி கதறி அழுதார்.  200-க்கும் மேற்பட்டோர் பலவந்தப்படுத்தி தன்னை கற்பழித்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள சட்டசபையிலும் இது எதிரொலித்தது.

இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் பெற்றோர் சுதீர், உடனடியாக கைது செய்யப்பட்டனர்.  தொடர்ந்து மாணவியை கற்பழித்த மலையாள நடிகர் விஜயன், கம்யூனிஸ்டு பிரமுகர் தாமஸ் வர்க்கீஸ் மற்றும் பெண் புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவி தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைதானார்கள். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மின் வாரிய அதிகாரி முருகேசன், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும் 9 அதிகாரிகள் மாணவியை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் கோவையில் முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையே மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குமரி - கேரள எல்லையில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது காண்டிராக்டர் மணிகண்டனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

அப்போது மணிகண்டன் மீதான வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மணிகண்டன் அவருக்கு மாணவியை விருந்தாக்கியுள்ளார். மணிகண்டன் கைதானதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பற்றிய விவரத்தை கேரள போலீசாரிடம் தெரிவித்தார்.  இதையடுத்து கேரள போலீசார், குமரி மாவட்ட இன்ஸ்பெக்டரை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

ஆனால் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் சிக்காமல் தலைமறைவானார். இந்த தகவல் பரவியதும் இன்ஸ்பெக்டர், குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்துக்கான நியமன ஆணையைகூட அவர் வாங்கவில்லை. கேரள போலீசார் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அவரை தேடி வருகிறார்கள்.

Jun 23, 2011

கண்ணிருந்தும் குருடர்கள்! இது காதலா காமமா!

JUNE 24, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாறு அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீசார் ஓடிச் சென்று தூக்கில் தொங்கிய அவரை தாங்கி பிடித்தனர்.

பின்னர் தூக்கு கயிரை கழற்றி அவரை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பது தெரிய வந்தது. பெங்களூரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்த திருப்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த லூர்துமேரி என்ற பெண் போன்மூலம் அறிமுகமானதாக தெரிகிறது.

இவர்கள் போன் மூலமாகவே பேசி நட்பை, காதலை  வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வி என்ற பெண்ணுக்கும் திருப்பதிக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் போன் மூலம் பழக்கமான லூர்துமேரியை அண்மையில் திருப்பதி நேரில் சந்தித்ததாக தெரிகிறது.

அப்போது லூர்துமேரி 60 வயது மூதாட்டி என தெரிய வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட திருப்பதி ஒகேனக்கல் சின்னாற்றின் அருகே தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவு ரைகள் கூறினார்கள். பின்னர் குடும்பத்தாருடன் அவரை அனுப்பி வைத்தனர்.

Jun 22, 2011

தாய் பாலுக்கு இணையான பால்!

JUNE 23, உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்துகுளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம்புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால்தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

இப்பசுவின் மரபணுக்களில்இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவைதாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை.

இந்த மரபணுக்கள்பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசுமனிதர்களின் தாய்ப்பாலைப் போலவிட்டமின்கள் கொண்டபாலைத் தரும்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி,  பிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.எஸ்.ஏ.எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிறக்கும் போதே 45 கிலோவுக்கும் அதிகமாக இருந்ததால்அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் முதன் முறையாக மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டு குளோனிங் மூலம் ரோசிட்டா ஐ.எஸ்.ஏ.உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பால்தாய்ப்பாலில் உள்ள விட்டமின்களைக் கொண்டிருக்கும்எனதெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பசு உருவாக்கத்திற்கான முயற்சியை இந்நிறுவனமும்சான்மார்ட்டின் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டன.
-உஸ்மான்-

வேலியே பயிரை மேயும் கொடுமை!

JUNE 22, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி தலைமை ஆசிரியரை 10ஆம் வகுப்பு மாணவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளிக்கு பந்த் காரணமாக 21.06.2011 அன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதுதெரியாமல் பள்ளிக்கு வந்த மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பள்ளிக்கு திரண்டு வந்த அவரது உறவினர்கள் தலைமை ஆசிரியரை ஆடைகளை கழற்றி, ஜட்டியுடன் நிற்க வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியும் தனது பங்கிற்கு தலைமை ஆசிரியரை, தனது செருப்பால் அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கூறப்பட்டதையடுத்து, தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Jun 20, 2011

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று சொல்வது இதனால் தானோ!

ஜூன் 20,ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், குரங்குகளுக்கு திருமணம் செய்து வைக்கும், விநோதமான நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக, பத்திரிகை அடிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தல்வாஸ் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அனுமன் கோவிலில் புரோகிதராக இருப்பவர் நிரஞ்சன் பஞ்சோலி. இவர், இரண்டு வயது நிரம்பிய, சிங்கி என்ற பெண் குரங்கை வளர்த்து வருகிறார்.

அதேபோல், டோங்க் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்த் சைனி என்ற ஆட்டோ டிரைவர், ராஜு என்ற ஆண் குரங்கை வளர்த்து வந்தார். மூன்று வயது நிரம்பிய, இந்த குரங்கிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக, தகுந்த பெண் குரங்கை தேடி வந்தார்.

தல்வாஸ் கிராமத்தில் சிங்கி என்ற குரங்கு இருப்பதாக தெரிந்ததும், தன் விருப்பத்தை, நிரஞ்சன் பஞ்சோலியிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இரண்டு குரங்கிற்கும், அடுத்த மாதம் 6ம் தேதி, திருமணம் செய்து வைப்பது என, இருவரும் முடிவு செய்தனர். இந்த திருமணத்தை விமரிசையாக நடத்துவது என்றும் முடிவு செய்தனர்.

திருமணத்துக்காக, 200 பத்திரிகைகள் அடிக்கப்பட்டு, முக்கிய விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரஞ்சன் பஞ்சோலி," இந்த திருமணத்துக்காக, மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை எதுவும் கொடுக்கப்படவில்லை' என, மிகவும் "சீரியஸ்'ஆக பதில் அளித்தார்.

Jun 17, 2011

உப்புமாவுக்கு வந்த வாழ்வு!

ஜூன் 18, நியூயார்க் : அமெரிக்காவில் முன்னணி சமையல்காரர்களுக்காக நடந்த உணவு தயாரிப்பு போட்டியில், இந்தியர் ஒருவர் உப்புமா தயாரித்து, 46 லட்சம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றார். இப்பரிசை, புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

பொதுவாக உப்புமா என்றாலே பலரும் முகம் சுளிப்பர். பெண்களுக்கு எளிதாக வேலை முடிய வேண்டுமானால், உப்புமாவை கிண்டி வைத்து விடுவர். இந்த உப்புமாவையும், விரும்பி சமைத்தால், அதன் ருசியே தனி தான் என்பதை, அமெரிக்காவில் நடந்த உணவு தயாரிப்பு போட்டியில், அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் நிரூபித்து, முதல் பரிசாக 46 லட்சம் ரூபாய் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் எளிதாக சமைக்கப்படும் உணவுக்கான போட்டி, ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்த மேரி சூ மில்லிகென் வெற்றி பெற்று வந்தார். ஆனால், நடப்பாண்டில் நடந்த போட்டியில், அமெரிக்கா வாழ் மும்பையைச் சேர்ந்த இந்தியரான பிளாய்ட் கார்டோஸ், ரவை, காளான் கொண்டு உப்புமா தயாரித்தார்.

பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு இல்லை. ஆனால், "பிரவோ' சேனலில், இவர் தயாரித்த உப்புமாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்ட போது, இவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். நடுவராக செயல்பட்டவரும், "சாவேர்' இதழின் தலைமை எடிட்டருமான ஜேம்ஸ் ஓஸ்லாந்து கூறுகையில், "மிகவும் திறமையாக, மறக்க முடியாத அளவிற்கு கார்டோஸ் உணவு தயாரித்து இருக்கிறார்' என, பாராட்டினார்.

14 வயது சிறுமியை கற்பழித்த 150க்கு அதிகமான காமக்கழுகுகள்!

JUNE 18, கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுதீர் (48) என்பவர் தனது 14 வயது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது சமீபத்தில் தெரியவந்தது.

சினிமா பிரபலங்கள், விஐபிக்கள், பிரபல தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சிறுமியிடம் செக்ஸ் வைத்தது தெரியவந்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகாவிலும் பல விஐபிக்களின் பெயர் இதில் அடிபடுகிறது.

சினிமா பிரபலங்களின் உதவியுடன் அந்த சிறுமியை சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் சுதீர் நடிக்க வைத்தார். பின்னர், துணை நடிகை என்று சொல்லி விபசார புரோக்கர்களிடமும் அவளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது சமீபத்தில் அம்பலமாகி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி என்பதால் இதை பலாத்கார வழக்காக பதிவு செய்து கேரள மாநிலம் பரவூர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கடும் விசாரணையில் தந்தை சுதீர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் முதலில் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை சீரழித்த முக்கிய பிரபலங்கள் பெயர் பட்டியல் போலீசுக்கு கிடைத்தது.

இதற்கிடையே சிறுமியை குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (42) என்ற கான்ட்ராக்டர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கண்ணுமாமூட்டில் உள்ள தனது கெஸ்ட்ஹவுசில் வைத்திருந்தார் என்று தெரியவந்தது.

சிங்கப்பூர் தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்த மணிகண்டனை சென்னை ஏர்போர்ட்டில் எர்ணாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிஜோ அலெக்ஸாண்டர் தலைமையிலான போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். சிறுமி உள்பட பலரையும் அவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாத்கார வழக்கில் 150 பேர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தன்னுடன் இருந்தவர்களை நன்றாக ஞாபகம் இருப்பதாக மாணவி ( 9ம் வகுப்பு) கூறியுள்ளார். தங்கியிருந்த லாட்ஜ், பங்களா, கெஸ்ட்ஹவுஸ் ஆகியவற்றையும் கூறுகிறார். அவர் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Jun 1, 2011

மாற்று எரிபொருள் இருக்க பெட்ரோல் இறக்குமதி ஏன்?

JUNE 2, "எத்தனால்" இது கரும்பு, மக்காசோளம், போன்றவற்றில் இருந்து தாயாரிக்கப்படுகிறது.

இதை பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக உபயோகிக்கலாம். 

இன்னும் சொல்லப்போனால் இது பெட்ரொலை விட சிறந்தது என்றே சொல்லாம். அதுமட்டுமல்லாது இதன் விலையோ மிக குறைவு.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால் இன்றைய இந்தியாவில் "எத்தனால்" உற்பத்தி 4,80,000 டன்தான்.

"எத்தனால்" உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் "எத்தனால் பம்ப்" தனியாக இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் "எத்தனாலைக்" கலந்து கொள்ளலாம். "எத்தனாலில்" மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு.

"எத்தனாலின்" விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, "எத்தனால்" அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம்.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

May 29, 2011

நடிகர் மோகன்லாலும், துபாய் புர்ஜ் கலிஃபா உல்லாச வீடும்!!

May 30, உலகின் மிக உயரமான கட்டிடமாகிய (துபாய் நாட்டில் உள்ள) புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி,

இந்த குடியிருப்பில் மூன்றரை கோடி ரூபாயில் வீடு வாங்கியுள்ளார் மலையாள நடிகர் மோகன்லால்.

கடந்த வாரம் தனது 51 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். தனக்கு தானே பிறந்தநாள் பரிசளித்துக் கொள்ள விரும்பினார்.

துபாயில் புர்ஜ் கலிஃபா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முடிவு செய்தார்.

முதலில் துபாய் சென்று வீட்டை பார்வையிட்டார். 29&வது மாடியில் 940 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள வீடு அவருக்கு பிடித்திருந்தது.

மூன்றரை கோடி ரூபாய் கொடுத்து அந்த வீட்டை வாங்கினார். கொச்சின், திருவனந்தபுரம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள இவரது வீடுகள் கலைநயத்துடன் கட்டப்பட்டவை.

அதேபோல் புர்ஜ் கலிஃபா வீடும் கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு நாட்களை துபாயில் உல்லாசமாக கழிப்பதுதான் மோகன்லாலின் வழக்கம்.

ஏற்கனவே அவருக்கு அங்கு பங்களா உள்ளது. இதே குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு,

அவரது கணவர் முதலாண்டு திருமண நாள் பரிசாக வாங்கித் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் பலரும் இந்த குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளனர்.

சிந்திக்கவும்: ஒரு மனிதன் வாழ வசதியாக ஒரு வீடு போதாதா? எத்தனை வீடுகள் வாங்குவார்கள் இவர்கள். ஓவ்வொரு மனிதனும் "தான்" வசதியாக வாழ ஒரு வீடு, ஒரு கார், போதிய அளவு பொருளாதாரம் இவைகள் போதாதா?

மற்ற பணத்தி இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தால் என்ன? துபையில் அதுவும் மூன்றரை கோடி ரூபாய்க்கு வீடு, அதிலும் இவர் நிரந்தரமாக வசித்தாலும் பரவாயில்லை இவர் விடுமுறையை கழிக்கத்தான் அதுவும்.

இப்படி பட்ட சமூக சிந்தனை அற்ற சினிமா கூத்தாடிகளை பார்த்துதான் இந்த மக்கள் மதி மயங்கி கிடக்கின்றனர். ஒவ்வொரு இந்திய குடிமகனின் பணமும் துபையில். "நமக்கு கீழே உள்ளவர்கள் கோடி நினைத்து பாரு" புரியுமா இந்த கூத்தாடிகளுக்கு.

May 28, 2011

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

May 29, கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.

அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.

அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.

நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.

நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.

மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.

ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.

இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.

ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.

இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.

வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.

சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.