Oct 20, 2011

தமிழா! இனி நீ இந்தியாவுக்கு அந்நியன்!

OCT 20, ஈழத்தமிழர்களின் 35 வருடகால போராட்டத்தை ஒரு சிலநாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த பெருமை நமது வ(பு)ல்லரசு இந்தியாவுக்கே சேரும்.

இலங்கையின் பயங்கரவாதி ராஜபக்சே தலைமையில் ஒரு ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள தமிழர்கள் அனுதினமும் தங்கள் இன்னுயிரை கையில் பிடித்தபடி வாழ்கிறார்கள். பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள். கிரீஸ் மனிதன் என்கிற பெயரில் சிங்கள பயங்கரவாதிகள் தமிழ் பெண்களின் மானத்தை பறிக்கின்றனர்.

தமிழர்கள் மானத்தோடு வாழவேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கில் மாவிரர்கள் (போராளிகள்) தங்கள் இன்னுயிரையும் கொடுத்தனர். அவர்கள் வாழவேண்டிய வயதில் தங்கள் இன்னுயிர்களை ஏன்? கொடுத்தார்கள். அவர்களின் தியாகம் வீண் போய்விட்டதா? அந்த மாவிரர்கள் செய்த தவறுதான் என்ன? தமிழர்கள் மானத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தது தவறா?

இலங்கை தமிழர்களின் தாய் மண். சிங்கள காடையர்கள் அந்த நாட்டின் வந்தேறிகள். வந்தேறிகள் அந்த நாட்டை ஆக்கிரமித்து கொண்டு மண்ணின் மைந்தர்களை அடிமைபோல் நடத்தினார்கள். அதுமட்டுமில்லாது கலவரங்கள் மூலம் அவர்களை கொன்றும் குவித்தார்கள். இந்தியாவில் எப்படி ஹிந்துத்துவா வந்திரிகள் முஸ்லிம்களை கலவரங்கள் மூலம் கொன்று குவிக்கிறார்களோ அதுபோல.

இதை எதிர்த்து தமிழர்கள் அகிம்சை வழியில் பல்லாண்டுகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டங்களை சிங்கள நாசி அரசாங்கமும், அதன் எவலாளிகளும் தங்கள் கால்களில் போட்டு நசுக்கினார்கள். இதை பொறுக்க முடியாமல் தமிழர்கள் ஒரு ஆயுத போராட்டத்தை கட்டி எழுப்பி தமிழர்களுக்கு என்று ஒரு நாடும் அமைத்து சிங்கள பயங்கரவாதிகள் தமிழர்களை கண்டு நடுங்கும் அளவுக்கு சிறப்பாக ஆட்சியையும் செய்தார்கள். அதை கண்டு பெருக்கமுடியாத இந்திய கழுகு சிங்களர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்து அந்த போராட்டத்தை முடிவுக்கும் கொண்டுவந்தது.

ஈழத்தமிழர்கள் கொல்லப்படும்போது தமிழகத்து உறவுகளால் வெறுமனே வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. இது வரலாற்றில் இந்திய தமிழர்கள் மேல் ஒரு கரையாகவே படிந்து விட்டது. தமிழர்கள் என்பது ஒரு இனம்தானே பின்னே ஏன்? நான் இந்தியா தமிழன், இலங்கை தமிழன் என்று பிரித்து சொல்கிறேன் என்றால் அப்படி சொல்லும் அளவுக்குத்தான் இந்திய தமிழகர்கள் நடந்து கொண்டார்கள். அவர்களால் தங்கள் இனமக்கள் கொல்லப்படும்போது பாரிய அளவில் எதிர்ப்புகளை காட்டமுடியவில்லை. தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி தமிழர்களும் அன்று ஒரு முடிவு எடுத்திருக்கவேண்டும். இந்தியா ஈழத்தமிழர்கள் விசயத்தில் சரியான முடிவெடுக்கவில்லை என்றால் தமிழகம் இந்தியாவோடு இல்லை என்பதை அறுதியிட்டு சொல்லியிருக்க வேண்டும் அதை செய்யாததால் வந்த வினையே இத்தனையும்.

தமிழா இனி நீ இந்திய தமிழன் இல்லை. உனக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன் இனமக்களை கொல்ல உறுதுணையாக இருந்த இந்தியாவுடன் உனக்கு எந்த ஓட்டும் இல்லை உறவும் இல்லை. இனிமேல் நீ இந்தியாவுக்கு அந்நியன். தமிழா! உன்மேல் படிந்த கரையை துடைக்கும் பொறுப்பு உனக்குண்டு. அதை நீ மறுக்கவும், மறக்கவும் முடியாது. ஈழத்து தமிழர்கள் தங்கள் விகிதாசாரத்துக்கு அதிகமாக ரத்தம் சிந்திவிட்டனர். அவர்களால் மீண்டும் இந்த போராட்டத்தை வடிவமைக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே. தமிழகத்து தமிழர்களே உங்கள் மீது உள்ள கரையை துடைக்க நீங்கள்தான் இனி ஈழத்து போராட்டத்தை எல்லா முனைகளிலும் முன்னெடுக்க கடமைப்பட்டவர்கள். வெறும் ஜனநாயகத்தை நம்பி, வெற்று அரசியல்வாதிகளின் மாய்மாலங்களில் ஏமாந்து விடாமல் வீரத்தோடும், விவகத்தொடும் செயல்படும் ஒரு மக்கள் இயக்கம் தமிழகத்திலே கட்டியமைக்கப்பட வேண்டும்.

இந்த தமிழர் இயக்கமே பிற்காலத்தில் இலங்கையை கைபற்றபோகும் ஒரு இயக்கமாக வளரவேணும். இதற்குண்டான எண்ணமும், சிந்தனையும் உள்ள இளஞசர்கள், சிந்தனையாளர்கள் ஒன்று திரள வேண்டும். இதுவே நமது ஆவல். ஈழத்தின் சுதந்திரத்திற்க்காக உயிர்த்தியாகம் செய்த மாவிரர்களின் தியாகங்களை மனதில் கொண்டு வீரத்தோடு எழுந்து நிற்ப்போம். தமிழா! ஒன்றுபடு.
-நட்புடன் மலர்விழி-

38 comments:

Anonymous said...

வணக்கம் மலர்விழி உங்களுடைய தமிழீழ சிந்தனை, மற்றும் கனவுகளுக்கு வாழ்த்துக்கள்! ஈழம் மலரும். by - raja

Anonymous said...

நிச்சயமாக தமிழர்களுக்கு பொறுப்புண்டு! நிச்சயம் தமிழர்கள் இந்தியாவை புறக்கணிப்பர். தமிழ்நாடும், ஈழமும் சேர்ந்து தனி நாடாகும். இதுவே ஒவ்வொரு தமிழனின் கனவு. கனவு பலிக்கும் தோழி கவலையை விடு.

நட்புடன் - ரேவதி.

நிவாஸ் said...
This comment has been removed by the author.
நிவாஸ் said...

இது ஒவ்வொரு உண்மைத் தமிழனுக்கும் தோன்ற வேண்டிய சிந்தனை. நல்ல பதிவு

வவ்வால் said...

புதிய தென்றல் , மே/பா. கீழ்ப்பாக்கம், சென்னை.10 என்று பதிவில் இல்லை, அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது இந்த பதிவு.

உங்கள் கூற்றுப்படியே வருவோம், இந்திய தமிழன் கடமையை செய்யவில்லை ஓ.கே....அப்போ கடமையை செய்த தமிழன் யாரு தான் பார்ப்போமே!

போர் சூழலில் ... அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி,நார்வே,இங்கிலாந்து, கனடாவுக்குலாம் போக எப்படி பலருக்கு அனுமதி கிடைத்து இருக்கும்?

இப்போ நான் சென்னைல இருந்து அமெரிக்கா போக ... ஒரு டூரிஸ்ட் விசா வாங்க கூட சில மாதங்கள், அல்லது வாரங்கள் முன் திட்டமிடனும். அதான் உண்மை. மேலும் விமானக்கட்டணத்துக்கு காசு வேணும், ஏற்கனவே பாஸ்போர்ட் இருக்கணும். வெளிநாட்டுக்க்கு போனது எல்லாம் கிரிமீ லேயர்!

எனவே இந்த அளவுக்கு முன் தயாரிப்புடன் தூர தேசம் சென்றவர்கள் எல்லாம் யார் , தமிழர்கள் இல்லையா?

ராமேஷ்வரம் , மண்டபம் முகாமுக்கு வந்தவர்கள் யார் ? தமிழர்கள் இல்லையா? அவர்கள் மட்டும் ஏன் படகு பிடித்து இங்கே வரணும், விமானம் பிடிக்க முடியவில்லை.(ராமேஷ்வரம்-மண்டபம் முகாமில் ஒரு நாள் இருக்க மாட்டாங்க இந்த புலம் பெயர்ந்த தமிழர்கள்)

எனவே தமிழக தமிழன் கடமை தவறிட்டான் என்று சொல்வது சரியா?

மேலும் இலங்கை தமிழர் பிரச்சினை என இலங்கை ஆட்களிட்ம் சொல்லி இருக்கிங்களா, ஈழத்தமிழர் பிரச்சினைனு சொல்ல சொல்வாங்க! அங்கே ஒரு அரசியல் உள்ளாதை அறிவீர்களா?( ஈழத்தமிழன் வேறு இலங்கை தமிழன் வேறு அய்யா)

ராசபக்சே இந்த பிரிவினையை வைத்து தான் சுகம் காண்கிறான்.

ஜெயவர்த்தனே இந்திராகாந்தி ஒப்பந்தம் என்று ஒன்று உண்டு, அதன் பின்னால் யார் இருந்தார்கள், அதன் விளைவு என்ன என்று தெரியுமா?

நெல்லை கபே said...

உணர்ச்சி வேகத்தில் எழுதப்பட்ட கட்டுரை. இதை நீங்கள் புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருக்கிற ஈழத்தமிழனிடமும் சொல்லுங்க. அவன் போராட்டத்தை கைவிட்டு விட்டு அடுத்த தலைமுறையை கவனிக்க சென்று விட்டான். ப்ளாக் டிக்கெட்டில் $300,$400 கொடுத்து விட்டு தமிழ் படம் பார்த்து விட்டு விஸில் அடிக்கிறான். ஈழத்தமிழன் தமிழகத் தமிழனிடம் என்ன எதிர்பார்க்கிறான்? என்பது என்றைக்கும் தெளிவாக இருந்ததில்லை. உன் வேலையை எல்லாம் விட்டு விட்டு ஈழத்தமிழருக்காக போராடு என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. ஒன்று சாத்தியம். Photoshop-ல் தமிழ்நாட்டை Cut செய்து அப்படியே இழுத்துக் கொண்டு போய் இந்தியப் பெருங்கடலில் தூரமாக ஒரு நாடை உருவாக்கலாம். தனி இலங்கையும் இழுத்துக் கொண்டு வந்து சேர்த்துக் கொள்ளலாம். தமிழக அரசியல்வாதிகளை என்றும் நம்பாதீர்கள். இலங்கைத் தமிழரிடமும் உள்ள பிரிவுகளை குறைக்க முயலுங்கள். அதை செய்ய இயலாமல் பொது எதிரி அல்லது பொதுவான எதிர்க்கருத்து ஒன்றை உருவாக்கி மோதிக்கொண்டே இருப்பது..காயத்தை சொரிந்து விட்டுக் கொண்டு அந்த சுகத்தை அனுபவிப்பதற்கு சமம். பொது எதிரி ஏற்கனவே இருக்கிறான். அதனால் பொது எதிர்க்கருத்து ஒன்றையும் உருவாக்குகிறீர்கள். அதுதான் இந்திய தமிழன் ஒன்றும் செய்யவில்லை என்பது.தமிழக தமிழனுக்கு தலையாய பிரச்னை உண்மையிலேயே இலங்கைப் பிரச்னைதானா?

Anonymous said...

வவ்வால் ......திசை தெரியாமல் பறக்கிறார். தமிழர்கள் என்பது ஒரே இனம்தான் அதை பிரித்து பேசி நீங்கள் உங்கள் கருத்தை நிலை நிறுத்த வேண்டாம். ஈழத்திலே தமிழர்கள் தங்கள் உயிர்களையும், மானத்தையும் சிங்கள வெறியர்களிடம் இருந்து காத்து கொள்ளவே ஒரு போராட்டத்தை தொடங்கினர். இந்தியாவுக்கு அங்கு என்ன வேலை? அகதிகளாக புலம் பெயர்ந்த மக்களை பற்றி கேவலமாக பேசவேண்டாம். அவர்கள் ஒன்று உடலளவிலோ, மனதளவிலோ முடியாதவர்கள் புலம் பெயர்ந்தார்கள். அப்படி புலம்பெயர்ந்தவர்களும்
ஈழபோராட்டத்திர்க்கு பொருளாதார ரீதியில் உதவினார்கள்.

உங்கள் இந்தியாவில் உள்ள அண்டை மாநிலமான "கர்நாட்டகா" காரன் நீங்கள் தண்ணீர் கேட்டால் அடிக்கிறான். தனி தெளுங்காகா கேட்டு ஆந்திராவில் ஒரு பகுதியை இஸ்தம்பிக்க வைக்கிறான் ஒரு கூட்டம், தன்னை கைது செய்தால் மும்பையே பற்றி எறியும் என்று சொல்கிறான் ஒரு பால்தாக்ரே என்கிற ரவுடி.

இப்படி இருக்க தங்கள் இன ஒரு மொழி பேசும் ஒரு சகோதரனுக்கு பாதிப்பு என்று சொல்லும் போது நீங்கள் என்ன செய்தீர்கள். மனித சங்கிலி போராட்டம் என்று உப்பு சப்பில்லாத போராட்டங்களை நடத்தி வேடிக்கை பார்த்தீர்கள். ஒரு பால்தாக்ரேயை பார்த்து மொத்த இந்தியாவும் நடுங்குகிறது. ஆறரை கோடி தமிழனின் கோரிக்கைக்கு இந்தியா தலை சாய்க்கவில்லை. இது உங்களின் பலவீனம், இதை மலர்விழி அருமையாக சொல்லி இருக்கார். அதை விட்டு நீங்கள் கருத்தை திசை திருப்ப வேண்டாம்.

தண்ணீர் தர மறுக்கும் "கர்நாட்டகா" காரன் மேல் கைவைத்து பார் அப்போ தெரியும் உன் வீரம் என்ன வென்று. தண்ணீர் கேட்டதற்கு பெங்களூரில் உள்ள தமிழர்கள் பட்ட பாடு மறந்து விட்டதா?

ஈழப்ப போராட்டத்திற்காக தங்கள் இன்ன்யிர்களையும் கொடுத்த மாவிரர்களை கொச்சை படுத்தாதீர்கள். உங்கள் கேடுகெட்ட "அமைதி படை" அமைதியை ஏற்படுத்த போகிறோம் என்று சொல்லி அங்குள்ள தமிழ் பெண்களை கற்பழித்தவர்கள் தானே! போரில் சொந்த பந்தங்களை இழந்து புலம் பெயர்ந்த மக்களை கொச்சை படுத்த வேண்டாம். வலியும் வேதனையும் உங்களுக்கு வந்தால்தான் புரியும்.

உங்கள் சொந்தங்களை நீங்கள் இழக்கவில்லை அதனால் அதன் வேதனை உங்களுக்கு புரியவில்லை, உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் விமானத்தில் வந்து குண்டு போடவில்லை அதனால் அதன் வேதனை உங்களுக்கு எங்கே புரிய போகிறது. தமிழகத்தில் உள்ள கடமை மறந்த தமிழர்களில் நீங்களும் ஒருவர் என்பதே எனது கருத்து. மலர் விழியின் கருத்தே எனது கருத்தும் கூட. இந்தியா தமிழர்களின் அண்டை நாடு. அந்நிய நாடு, மட்டுமல்ல வைரி ( எதிரி நாடு) .

நட்புடன் - தமிழ் மாறன்.

Anonymous said...

மாயன் said... உணர்ச்சி வேகத்தில் எழுதப்பட்ட கட்டுரை. இதை நீங்கள் புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருக்கிற ஈழத்தமிழனிடமும் சொல்லுங்க. அவன் போராட்டத்தை கைவிட்டு விட்டு அடுத்த தலைமுறையை கவனிக்க சென்று விட்டான். ப்ளாக் டிக்கெட்டில் $300,$400 கொடுத்து விட்டு தமிழ் படம் பார்த்து விட்டு விஸில் அடிக்கிறான்.
----------------------------------------------------------------------
தமிழ் மாறன் said....தமிழர்கள் என்பது ஒரே இனம்தான் அதை பிரித்து பேசி நீங்கள் உங்கள் கருத்தை நிலை நிறுத்த வேண்டாம். ஈழத்திலே தமிழர்கள் தங்கள் உயிர்களையும், மானத்தையும் சிங்கள வெறியர்களிடம் இருந்து காத்து கொள்ளவே ஒரு போராட்டத்தை தொடங்கினர். இந்தியாவுக்கு அங்கு என்ன வேலை? அகதிகளாக புலம் பெயர்ந்த மக்களை பற்றி கேவலமாக பேசவேண்டாம். அவர்கள் ஒன்று உடலளவிலோ, மனதளவிலோ முடியாதவர்கள் புலம் பெயர்ந்தார்கள். அப்படி புலம்பெயர்ந்தவர்களும்
ஈழபோராட்டத்திர்க்கு பொருளாதார ரீதியில் உதவினார்கள்.

உங்கள் இந்தியாவில் உள்ள அண்டை மாநிலமான "கர்நாட்டகா" காரன் நீங்கள் தண்ணீர் கேட்டால் அடிக்கிறான். தனி தெளுங்காகா கேட்டு ஆந்திராவில் ஒரு பகுதியை இஸ்தம்பிக்க வைக்கிறான் ஒரு கூட்டம், தன்னை கைது செய்தால் மும்பையே பற்றி எறியும் என்று சொல்கிறான் ஒரு பால்தாக்ரே என்கிற ரவுடி.

இப்படி இருக்க தங்கள் இன ஒரு மொழி பேசும் ஒரு சகோதரனுக்கு பாதிப்பு என்று சொல்லும் போது நீங்கள் என்ன செய்தீர்கள். மனித சங்கிலி போராட்டம் என்று உப்பு சப்பில்லாத போராட்டங்களை நடத்தி வேடிக்கை பார்த்தீர்கள். ஒரு பால்தாக்ரேயை பார்த்து மொத்த இந்தியாவும் நடுங்குகிறது. ஆறரை கோடி தமிழனின் கோரிக்கைக்கு இந்தியா தலை சாய்க்கவில்லை. இது உங்களின் பலவீனம், இதை மலர்விழி அருமையாக சொல்லி இருக்கார். அதை விட்டு நீங்கள் கருத்தை திசை திருப்ப வேண்டாம்.

தண்ணீர் தர மறுக்கும் "கர்நாட்டகா" காரன் மேல் கைவைத்து பார் அப்போ தெரியும் உன் வீரம் என்ன வென்று. தண்ணீர் கேட்டதற்கு பெங்களூரில் உள்ள தமிழர்கள் பட்ட பாடு மறந்து விட்டதா?

ஈழப்ப போராட்டத்திற்காக தங்கள் இன்ன்யிர்களையும் கொடுத்த மாவிரர்களை கொச்சை படுத்தாதீர்கள். உங்கள் கேடுகெட்ட "அமைதி படை" அமைதியை ஏற்படுத்த போகிறோம் என்று சொல்லி அங்குள்ள தமிழ் பெண்களை கற்பழித்தவர்கள் தானே! போரில் சொந்த பந்தங்களை இழந்து புலம் பெயர்ந்த மக்களை கொச்சை படுத்த வேண்டாம். வலியும் வேதனையும் உங்களுக்கு வந்தால்தான் புரியும்.

உங்கள் சொந்தங்களை நீங்கள் இழக்கவில்லை அதனால் அதன் வேதனை உங்களுக்கு புரியவில்லை, உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் விமானத்தில் வந்து குண்டு போடவில்லை அதனால் அதன் வேதனை உங்களுக்கு எங்கே புரிய போகிறது. தமிழகத்தில் உள்ள கடமை மறந்த தமிழர்களில் நீங்களும் ஒருவர் என்பதே எனது கருத்து. மலர் விழியின் கருத்தே எனது கருத்தும் கூட. இந்தியா தமிழர்களின் அண்டை நாடு. அந்நிய நாடு, மட்டுமல்ல வைரி ( எதிரி நாடு) .

நட்புடன் - தமிழ் மாறன்.

Anonymous said...

மலர் உங்களின் இந்த பதிவை படித்து உண்மையிலே நான் தமிழன் என்று சொல்லி கொள்ள வெட்கப்படுகிறேன். இலங்கையிலே தமிழர்கள் கொல்லப்படும்போது அதற்க்காக வேண்டி ஒரு துரும்பை கூட அசைக்காத தமிழக தமிழர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கையில் உண்மையிலேயே நான் வெட்கப்படுகிறேன், வேதனை படுகிறேன். நீங்கள் சொன்ன ஒவ்வொரு வரிகளும் உண்மை. தமிழர்கள் சிந்திக்க கடைமைபட்டுள்ளார்கள். என்னை உணர வைத்ததற்கு நன்றி. நன்றி!

by : முத்து கிருஷ்ணன்... தூத்துக்குடி.

வவ்வால் said...

இங்கே அனானி அப்புறம் தமிழ் மாறன் இரண்டும் ஒன்றா இல்லை ஒன்றல்லவா?

சரி ... நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா உங்களிடம்... சும்மா சுத்தி வளைத்து இனம் மொழி ஜல்லிகள் வேண்டாம் நிறைய பார்த்தாச்சு!

//அவர்கள் ஒன்று உடலளவிலோ, மனதளவிலோ முடியாதவர்கள் புலம் பெயர்ந்தார்கள்.//

தூர தேசம் சென்றவர்கள் எல்லாம் உடல், மன அளவில் இயலாதவர்கள், ராமேஷ்வரம் - மண்டபம் முகாம் வந்தவர்கள் எல்லாம் உடல் மன அளவில் தெம்பானவர்கள், அவர்களுக்கு சொந்த பந்தங்கள் இழப்பு இல்லை... அப்படித்தானே நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.(இப்படி தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 63 முகாம் இருப்பதாக கேள்விப்பட்டேன் சரியாக தெரியவில்லை)

//ஒரு சகோதரனுக்கு பாதிப்பு என்று சொல்லும் போது நீங்கள் என்ன செய்தீர்கள். மனித சங்கிலி போராட்டம் என்று உப்பு சப்பில்லாத போராட்டங்களை நடத்தி வேடிக்கை பார்த்தீர்கள்.//

வெட்கமா தான் இருக்கு... நாங்க செய்ததது உப்பு சப்பில்லாத ஒன்று தான்,காரணம் என்னைப்போல எல்லாருமே சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே. மேலும் நீங்கள் இங்கே நம்பும் அரசியல்வியாதிகள் தானே அதை நடத்தினாங்க.

//அப்படி புலம்பெயர்ந்தவர்களும்
ஈழபோராட்டத்திற்கு பொருளாதார ரீதியில் உதவினார்கள்.//

இது ரொம்ப உப்பு சப்பான செயலோ? ஆக மொத்தம் காசு கொடுத்தாப்போதும், ரைட்..இனிமே இங்கேயும் காசு கொடுக்க சொல்லிடலாம்.

கர்நாடகா,மற்றும் பால் தாகரே எல்லாம் சம்பந்தம் இல்லாத ஒன்று. அமெரிக்கா ஏன் அப்கான், இராக் மேல போர் தொடுக்குதுனு புலம் பெயர்ந்தவர்கள் எல்லாம் கேள்விக்கேட்கிறாங்களா? இல்லையே ஆனால் அங்கே வாழலையா? உங்க வீரத்தை காட்டிப்பாருங்களேன் ,இப்படி சம்பந்தம் இல்லாமல் கேட்க எனக்கும் வரும்.

இப்பவும் நான் எழுப்பிய கேள்விகள் அப்படியே நிக்குது, அதுக்கு என்ன பதில் கை வசம் இருக்கு, தெரிந்தால் சொல்லவும் இல்லையேல் அமைதி காக்கவும்.

Anonymous said...

ஐயா வவ்வால் உங்கள் என்ன கேள்வி தொக்கி நிக்கிறது. ஒரு நாட்டில் போர் நடந்தால் அந்த நாட்டில்
உள்ள மக்கள் பக்கத்து நாட்டுகளுக்கு அகதிகளாகத்தான் போவார்கள் இது உலக நடப்பு. நீங்கள் இந்த பொல்லாத சட்டத்துக்கு கட்டுப்பட்டவர் என்றால் அதற்க்கு நான் பொறுப்பில்லை. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது தவறு என்று நீங்கள் சொல்லவருவது வேடிக்கையாக உள்ளது.

/// போர் சூழலில் ... அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி,நார்வே,இங்கிலாந்து, கனடாவுக்குலாம் போக எப்படி பலருக்கு அனுமதி கிடைத்து இருக்கும்?

இப்போ நான் சென்னைல இருந்து அமெரிக்கா போக ... ஒரு டூரிஸ்ட் விசா வாங்க கூட சில மாதங்கள், அல்லது வாரங்கள் முன் திட்டமிடனும். அதான் உண்மை. மேலும் விமானக்கட்டணத்துக்கு காசு வேணும், ஏற்கனவே பாஸ்போர்ட் இருக்கணும். வெளிநாட்டுக்க்கு போனது எல்லாம் கிரிமீ லேயர்!
எனவே இந்த அளவுக்கு முன் தயாரிப்புடன் தூர தேசம் சென்றவர்கள் எல்லாம் யார் , தமிழர்கள் இல்லையா?

ராமேஷ்வரம் , மண்டபம் முகாமுக்கு வந்தவர்கள் யார் ? தமிழர்கள் இல்லையா? அவர்கள் மட்டும் ஏன் படகு பிடித்து இங்கே வரணும், விமானம் பிடிக்க முடியவில்லை.(ராமேஷ்வரம்-மண்டபம் முகாமில் ஒரு நாள் இருக்க மாட்டாங்க இந்த புலம் பெயர்ந்த தமிழர்கள்)எனவே தமிழக தமிழன் கடமை தவறிட்டான் என்று சொல்வது சரியா? /////////

இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் முதலில் தெளிவா சொல்லுங்கள். ஒரு நாட்டில் போர் நடந்தால் அந்த நாட்டில் உள்ள மக்கள் பக்கத்து நாட்டுகளுக்கு அகதிகளாகத்தான் போவார்கள் இது உலக நடப்பு. இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

அங்கு மலர்விழி சொல்லியது ஆறரை கோடி தமிழ் மக்கள் இருந்துகொண்டு ஈழத்திலே தமிழர்கள் கொள்ளும் படும்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது தமிழர்களின் கையாலாகாத தனம் இல்லாமல் வேறு என்ன. இலங்கை ஒன்றும் அமெரிக்கா மாதிரி வல்லரசு இல்லை. உங்கள் இந்தியா புல்லரசு நினைத்திருந்தால் இந்த போரை தடுத்திருக்க முடியும். ஆனால் வேண்டும் என்றே ஆயுதம் கொடுத்து உதவியது. இதை ஆறரை கோடி தமிழர்களும் ஒரே குரலில் ஒரு எழுச்சியை உண்டாக்கி இருந்தால் இது நடந்திருக்காது. தமிழர்களை மதிக்காத, உணர்வுகளை மதிக்காத இந்தியா எனக்கு அந்நிய நாடுதான்.

///மேலும் இலங்கை தமிழர் பிரச்சினை என இலங்கை ஆட்களிட்ம் சொல்லி இருக்கிங்களா, ஈழத்தமிழர் பிரச்சினைனு சொல்ல சொல்வாங்க! அங்கே ஒரு அரசியல் உள்ளாதை அறிவீர்களா?( ஈழத்தமிழன் வேறு இலங்கை தமிழன் வேறு அய்யா)/////

இப்படிஎல்லாம் நீங்கள் பேசி தமிழர்களையும், அவர் போராட்டங்களையும் மழுங்கடிக்க முடியாது.
நட்புடன் - தமிழ் மாறன்.

Anonymous said...

வவ்வால்+மாயன் சொன்னவை சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்.
இலங்கை தமிழர்கள் புலம்பெயர், ஈழத்தமிழர்கள் வேறு.தமிழக தமிழனுக்கு தலையாய பிரச்னை தனது இந்தியாவில் எவ்வவேளா உண்டு.

pmk2k7 said...

நான் தயார்,யார் முன் எடுப்பது.
எப்போது எப்படி?

pmk2k7 said...

நீங்கள் சொல்வது உண்மை.நான் தயார் இந்த போராட்டத்துக்கு.யார் தலைமை? எப்போது? எப்படி?

நெல்லை கபே said...

//இந்தியா தமிழர்களின் அண்டை நாடு. அந்நிய நாடு, மட்டுமல்ல வைரி ( எதிரி நாடு)// இதில் தமிழர்கள் என்று தாங்கள் சொன்னது இலங்கைத் தமிழர்களைத்தானே! நாங்கள் அப்படியே இருந்து விட்டு போகிறோம். ஏகப்பட்ட பிரிவினைகள் இலங்கைத் தமிழரிடம்.விரட்டப்பட்ட முஸ்லிம்கள் என்று தனிப்பிரிவு வேறு. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேறு. ஆனால் இந்தியாவில் எவ்வளவு பிரிவு பார்த்தீர்களா என்கிறீர்கள். போர் என்று வந்தவனே ஒன்று கூட வில்லை. இப்போது விடுதலைப்புலிகளிடம் போட்டியே மீதி இருக்கும் சொத்துக்களை எப்படி பங்கிடுவது என்பதுதான்.ஆனால் இந்தியாவில் நடப்பதைப் பற்றி பேசுகிறார்.விடுதலைப்புலிகள் உருப்படியாக தமிழகத்தில் ஒரு கருத்தொற்றுமையை உண்டாக்க முயற்சி எடுத்ததுண்டா...?

Anonymous said...

மாயன், வவ்வால் சொல்வது விரக்கதி அடைவது இதேவே இன்றைய எல்லா தமிழர்களிடமும் காணப்படுகிறது.
நமக்கு இப்பொது தேவை சேகுவாரா மாதிரி ஒரு தலைவர். அவர் எப்போது பிறப்பார் என்று கேட்பதை விட இன்றைய
வாலிபர்கள் முன்வரவேண்டும், மாணவர்கள், வாலிபர்கள் இவர்கள் உண்டாக்கிய புரட்சி தானே எகிப்தில் பெரும் புரட்சியாக மலர்ந்தது கொடுங்கோலனை விரட்ட காரணமாக அமைந்தது. அதனால் யார்? யார் செய்வார்கள் என்று கேட்பதை விட நாம் தயாராக வேண்டும் முதலில். இந்த எண்ணம் முதலில் ஒவ்வொரு தமிலர்களிடத்திலும் வரவேண்டும். அது ஒன்றும் ஒரு மேஜிக் ஆக நடக்காது. நாம் தொடர்ந்து எழுதுவதும் குருத்து ஒத்துமை உடைய ஒரு குழுவாக முதலில் சேர்வதுமே இதன் முதல் பங்களிப்பாக இருக்கும்.

நட்புடன் - தமிழ் மாறன்.

வவ்வால் said...

தமிழ் மாறார்,

இன்னும் எதுக்கும் பதிலே வரலை,ஆனால் சூப்பரா இருக்கு உங்க பேச்சு!


//அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது தவறு என்று நீங்கள் சொல்லவருவது வேடிக்கையாக உள்ளது.//
இங்கே யாரும் அநீக்கு எதிராக குரல் கொடுப்பதை தவறு என்று சொல்லவில்லை, நாங்களும் கொடுத்துகொண்டு தான் இருக்கோம், ஆனால் அது உப்பு சப்பில்லாத ஒன்றாக தெரியுதே!
புலம்பெயர் தமிழர் கஷ்டம், இழப்பு இதனை உணர்கிறோம், அதனை எதுவும் விமர்சிப்பதுவுமில்லையே. அவர்கள் சீக்கிரம் சுகம் பெற வேண்டும் ஆசைப்படுகிறோம்.

ஒருத்தன் என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா ஏன் இன்னும் உன் பொண்டாட்டி ஓடாம இருக்கா, தொரத்திவிடுனு சொன்னானாம்! இதான் தேவை இல்லாதது.

//ஒரு நாட்டில் போர் நடந்தால் அந்த நாட்டில் உள்ள மக்கள் பக்கத்து நாட்டுகளுக்கு அகதிகளாகத்தான் போவார்கள் இது உலக நடப்பு. //

அண்ணே கைய கொடுங்கண்ணே இத்தினி நாளும் இங்கிலாந்து, யெர்மனி,நோர்வே,பிரான்சு,கனடா,அமெரிக்கா எல்லாம் இலங்கைக்கு பக்கத்தில தான் இருந்து இருக்குனு தெரியாம போச்சு எனக்கு.

எனக்கு காட்டின மேப்ல யாரோ கிராபிக்ஸ் பண்ணி பக்கத்தில இந்தியா படத்தை போட்டாங்க. இரு இரு அவனுங்கள தமிழ்மாறன் அண்ணேன் கிட்டே புடிச்சுக்கொடுக்கிறேன்!

அண்ணே அண்ணே எனக்கு இன்னொரு டவுட்ண்ணே... உங்க முழு பெயர் "கிரிஸ்டோபர் கொலம்பஸ் தமிழ்மாறருங்களா"?

நெல்லை கபே said...

இலங்கையில் அமைதி திரும்பி அங்கே உரிமைகள் கிடைக்கணும் என்பது எல்லாரும் ஆசைதான். ஆனால் இங்கே தமிழ்நாடும் இலங்கை மாதிரி ஏன் ஆகலை என்ற தொனியில் பேச்சு நடந்து கொண்டு இருக்கிறது. நீங்க எல்லாரும் தனித்தமிழ்நாடு வாங்கிட்டு வாங்க...நாங்க கை தட்டுறோம் என்கிறீர்கள்.இங்கேயும் எல்லாரும் துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு நாசமாப் போங்க என்கிற மாதிரிதான் பேச்சு இருக்கு. இப்போதும் பிரபாகரன் இறந்து விட்டார் என்று அறிவித்துவிட்டு அடுத்து என்ன என்று யோசிப்பது விவேகம்.அப்போதுதான் வேறு ஒரு தலைமைக்கு வழி கிடைக்கும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வசனம் பேசியை கட்சியை நடத்துகிறவர்கள் நினைவிருக்கட்டும்.

Anonymous said...

//வவ்வால் said...புலம்பெயர் தமிழர் கஷ்டம் இழப்பு இதனை உணர்கிறோம்//
இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழன் கஷ்டபடுகிறான். உண்மை. மறுக்க முடியாது.கனடா இங்கிலாந்து புலம்பெயர்ந்த இலங்கை தமிழன் அந்த மாதிரி என்ஜொய் பண்ணுகிறான்.கற்பனை தமிழீழம் கிடைத்தாலும் திரும்ப போவது இல்லை. யாருக்கு வேண்டும் இந்த தமிழீழம்?கனடா இங்கிலாந்து புலம்பெயர் தமிழனின் பொழுது போக்கிற்காகவா?

Anonymous said...

சரிதான் அரசியல் வாதிகளை நம்பி காரியம் இல்லை.

Anonymous said...

இதில் வருத்தப்படும் ஒரு நிகழ்வு உண்டு ஆயிரம் ஆயிரம் மாவிரர்கள் தங்கள் இன்னுயிர்களை கொடுத்து உருவாக்கிய ஒரு ஈழம் இன்று கனவாக போயிவிட்டது. இதை அனுமதிக்க முடியாது. அத்துணை வீரர்களின் உயிர் தியாகங்களை நமக்குள் இருக்கும் பிரிவினைகளை பேசி கொச்சை படுத்தி விட முடியாது. மீண்டும் சக்திகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அது முடியும். நம்பிக்கை இருந்தால்............
.......... நட்புடன் தமிழ் மாறன்.

Anonymous said...

//ஒருத்தன் என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா ஏன் இன்னும் உன் பொண்டாட்டி ஓடாம இருக்கா, தொரத்திவிடுனு சொன்னானாம்! இதான் தேவை இல்லாதது.//

ஐயா வவ்வால் நீங்கள் சொல்வது சரிதான் இதுக்கு இந்தியா அந்நிய நாட்டு விசயத்தில் தலையிடனும். இவர்கள் வேலையே பார்த்துகொண்டு போக வேண்டியதுதானே. 35 வருடகாலம் ஒரு இனம் போராடி உண்டாக்கிய ஈழத்தை கெடுப்பதில் இவர்களுக்கு என்ன சுகம். இதே தமிழ் மொழி பேசாத ஹிந்தி பேசும் மக்கள் இலங்கையில் இருந்திருந்தால் மொத்த இந்தியாவும் கொதித்து எழுந்திருக்கும். அதை புரியுங்கள் ஐயா.
உங்கள் தேசபக்தி முக மூடிதான் உங்களை தமிழர்களின் நலன்களுக்கு வேண்டி போராட தடையாக இருக்கிறது. இதை உண்மை என்பதை சீக்கிரம் உணர்வீர்கள் ஐயா! நல்ல விதமான உதாரணங்களை சொல்லுங்கள் இப்படி இவன் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா அவன் பொண்டாட்டி ஓடிட்டா என்று உங்கள் ஆண் வர்க்க மேலாதிக்கத்தை பறை சாற்ற வேண்டாம். ஏன் இவன் புருஷன் ஓடிட்டான் அவன் புருஷன் ஓடிட்டான் என்று அடைமொழியை மாற்றி சொல்லி பழகுங்கள். நன்றி

நட்புடன் - தமிழ் மாறன்.

Unknown said...

வணக்கம் மலர்விழி!
இக்கருத்தை என் வலையில்
பல கவிதைகள் மூலம் வலியுறுத்தி
யுள்ளேன்
நேரமிருப்பின் ஒரு முறை
பாருங்கள்.

புலவர் சா இராமாநுசம்

வவ்வால் said...

தமிழ் மாறார்,

//ஐயா வவ்வால் நீங்கள் சொல்வது சரிதான் இதுக்கு இந்தியா அந்நிய நாட்டு விசயத்தில் தலையிடனும். இவர்கள் வேலையே பார்த்துகொண்டு போக வேண்டியதுதானே.//

அப்போ 1980 களில் இந்தியா தலையிடனும்னு கோரிக்கை வச்சத எல்லாம் மறந்துடிங்களா? இல்லை மண்டைல அடிப்பட்டு போச்சா?

இப்போவும் வாழும் கலைஞர், வைகோ, பழ.நெடுமாறன் எல்லாம் இந்தியா தலையிட சொல்லி சம்மன் அனுப்புனவங்களே, என்ன ஒன்று இந்தியா தலையிட்டப்பின் இன்னும் மோசமா ஆச்சு.

//தமிழா இனி நீ இந்திய தமிழன் இல்லை. உனக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன் இனமக்களை கொல்ல உறுதுணையாக இருந்த இந்தியாவுடன் உனக்கு எந்த ஓட்டும் இல்லை உறவும் இல்லை. இனிமேல் நீ இந்தியாவுக்கு அந்நியன். தமிழா//

நாங்களாம் தலையிடனும் சொல்றிங்க, நாங்களாம் இந்தியாவில தானே இருக்கோம், அப்புறம் உங்களை யார் தலையிட சொன்னானு கேட்டா?

எங்களை விடுங்க , சொரணைக்கெட்டவங்க, நீங்கள் நம்பும் பழ நெடுமாறன், வைக்கோ, திருமா, கலைஞர் இவர்கள் நான்கு பேரையும் நாங்க இந்திய தமிழர் அல்லனு ஒரே ஒரு அறிக்கை விட சொல்லுங்க, நான் என் ரேஷன் கார்ட், வோட்டர் ஐடி, பாஸ்போர்ட் எல்லாம் தூக்கிப்போடுறேன்.

ஊரக்கூட்டி கூப்பாடு போடுறதவிட ஒரு நான்கு பேரிடம் ஸ்டேட்மெண்ட் வாங்க முடியாதா சாமி!

இந்தப்பதிவே டுபாக்கூர் பதிவுனு எனக்கு தெரியும், ஹிட்ஸ்காவும், பரபரப்புக்காகவும் எதாவது எழுதி , திரிசமன் செய்தி எப்போதும் தமிழ்மண முகப்பில் இருப்பதையும் அறிவேன்.

கமெண்ட் போட்டகாரணமே உங்களுக்கு உன்மைல எதாச்சும் தெரியுமானு பார்க்க தான், ஜெயவர்த்தனே-இந்திராகாந்தி ஒப்பந்தம் கூட தெரியலை அப்புறம் என்ன பேச, எனவே வழக்கம் போல நீங்க பிளிரலாம் இனிமே நான் எதுவும் பின்னூட்டமாட்டேன்.

ஆகவே தமிழ் மாறார் அவர்களே உங்கள் வேலையை நீங்க பாருங்க, ஆமாம் நீங்க தான் இந்த பதிவ போட்டிங்களா? மாஞ்சு மாஞ்சு பதில் சொல்றிங்க?

ஆணாதிக்கம்லாம் நீங்க ஏன் பேசுறிங்க,அதுலாம் தப்பு! பேசக்கூடாது! அது வேற டிபார்ட்மெண்ட், முதல ஒழுங்க பதிவ அவங்க சார்பில போடுங்க!பதிவப்போட்ட மூதேவிகளே பேசட்டும் இடையில என்ன வக்கோலு!

PUTHIYATHENRAL said...

\\\\இந்தப்பதிவே டுபாக்கூர் பதிவுனு எனக்கு தெரியும், ஹிட்ஸ்காவும், பரபரப்புக்காகவும் எதாவது எழுதி , திரிசமன் செய்தி எப்போதும் தமிழ்மண முகப்பில் இருப்பதையும் அறிவேன்.///

வணக்கம்: அன்புள்ள வாசகர் வவ்வால் அவர்களுக்கு உங்களுக்கு கருத்து சொல்ல திட்ட உரிமை உண்டு. அதுதான் கருத்து சுதந்திரம். ஆனால் மேலே சொல்லியுள்ள உங்கள் கருத்துக்கு பதில் சொல்ல ஆசிரியர் என்கிற முறையில் எனக்கு கடமை உண்டு. மலர்விழி அவர்களது மன ஆதங்கத்தை பதிவா சொல்லி இருக்காங்கள். ஹிட்ஸ்காவும், பரபரப்புக்காகவும் எழுதுவதாக சொல்வது உங்களது கற்பனை. எங்களுக்கு நிறைய வேலைகள் உண்டு நாங்கள் பொழுது போகமால் கணனியில் உட்கார்ந்திருப்பவர்கள் அல்ல. எங்களது சொந்த பணத்தை உபயோகப்படுத்தி, நேரங்களை செலவிட்டு சமூக விழிப்புணர்வுக்காக நடத்தும் ஒரு இணையமே சிந்திக்கவும். மற்றபடி நீங்கள் சொல்வது போல் எதுவும் இல்லை. மக்கள் செய்யும் ஹிட்ஸ்சாலும் , பரபரப்பாலும் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை.

///திரிசமன் செய்தி எப்போதும் தமிழ்மண முகப்பில் இருப்பதையும் அறிவேன்.////

ஐயா வவ்வால் நீங்கள் சொல்வது மாதிரி இல்லை ஐயா! தமிழ்மணம் முகப்பில் வரக்காரணம் அது கட்டண பதிவு ஐயா. வீணாக புழுதியை அள்ளி வீச வேண்டாம்.


நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

தமிழ் மாறன் said...

///அப்போ 1980 களில் இந்தியா தலையிடனும்னு கோரிக்கை வச்சத எல்லாம் மறந்துடிங்களா? இல்லை மண்டைல அடிப்பட்டு போச்சா? இப்போவும் வாழும் கலைஞர், வைகோ, பழ.நெடுமாறன் எல்லாம் இந்தியா தலையிட சொல்லி சம்மன் அனுப்புனவங்களே, என்ன ஒன்று இந்தியா தலையிட்டப்பின் இன்னும் மோசமா ஆச்சு.///

நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான் இந்தியாவில் தமிழர்கள் வாழும் ஒரு மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்று இருப்பதாலும், அதில் ஆறரை கோடி தமிழர்கள் வாழ்வதாலும் நமக்கு நன்மை செய்வார்கள் என்று நம்பியே இந்தியாவை உதவிக்கு அழைத்தார்கள். ஆனால் இந்தியா செய்தது என்ன? இந்திரா காந்தி இருக்கும்வரை அவர் நாடாளு மன்றத்திலே சொன்னார் தமிழர்கள்தான் அந்த நாட்டின் போர்வீக குடிமக்கள் என்றும், அவர்களது பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும்! ஆனால் என்ன நடந்தது ராஜீவ் காந்தி வந்தார் அமைதி படை என்கிற பெயரில் ஒரு அரசு பயங்கரவாத படையை அனுப்பினார் அந்த படை ஈழத்து பெண்களை கற்பழித்து நாசகார வேலை செய்தது.

அத்தோடு முடிந்ததா என்று பார்த்தால் இப்போது பயங்கரவாதி ராஜபக்சேக்கு ஆயுதமும், ஆலோசனையும் கொடுத்து போரை மறைமுகமாக நடத்தி ஈழத்து மக்களை கொன்று குவித்து 35 வருடகாலம் பல்லாயிரக்கணக்கில் மாவிரர்கள் உயிர் தியாகங்கள் செய்து கட்டி அமைத்த தனி தமிழீழத்தை சிதைத்து எல்லோரையும் கொன்றார்கள் கயவர்கள் இதை பற்றி பேசினால் உங்களுக்கு தேசபக்தி பெருக்கெடுக்கும். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

இனி தமிழ்நாடு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை இதை உரக்க சொல்ல வைப்போம் ஒவ்வொரு தமிழரையும். இந்தியா தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிறிப்பதே அதற்க்கு சரியான தண்டனை.

அதுதான் லேட்ச்ச கணக்கான மாவிரர்களின் உயிர் தியாகத்திற்கும், மானம் இழந்த பெண்களின் மன குமரலுக்கும், அனாதைகளான குழந்தைகளின் மனவலிக்கும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் ஆத்மாக்களுக்கும், ஒரு அர்த்தமாக விளங்கும்.

இந்தியா தமிழர்களுக்கு செய்த துரோகத்தை தெளிவாக எடுத்துரைத்த சகோதரி மலர்விழிக்கு நான் சல்யூட் செய்கிறேன். இதுபோல் தமிழர் சிந்தனை பதிவுகளை தொடர்ந்து வெளியிடும் சிந்திக்கவும் இணையத்திற்கு என்மனமாந்த வாழ்த்துக்கள், வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

என்றும் நட்புடன் - தமிழ் மாறன்.

வவ்வால் said...

புதிய தென்றல்,

இது கட்டண சேவை தளம் என தெரியாது, அப்படி கட்டண சேவை எனத்தெரியாமல் போனதுக்கும் நான் காரணம் அல்ல, இந்த தளம் ஏன் கட்டண சேவை அறிவிப்புடன் தமிழ்மணத்தில் வரவில்லை, வராத போது ஏதொ திரிசமன் செய்வதாக தானே புதிதாக படிபோருக்கு தோன்றும்.

எங்க சந்தேகம் சொன்னால் அது புழுதிவாரி தூற்றுவதா? சந்தேகம் வராதவாறு வெளிப்படையாக செயல்படலாமே.

மேலும் தவறான தகவல்கள் கொண்டே இதில் பதிவுகள் வருகின்றன. இப்போது கூட அகோரிகள் பற்றியப்பதிவில் அவர்கள் மனிதர்களை கொன்று சாப்பிடுவதில்லை, சுடுகாட்டில் இறந்த உடல்களை சாப்பிடுகிறாகள்.

அகோரிகள் செய்வது காட்டுமிராண்டித்தனம், நாகரீகமற்றது தான் அதை சுட்டி கட்டுரை எழுதாமல் கூடுதலாக சொந்த சரடையும் சேர்ப்பதும் உங்கள் கடமையா?

வவ்வால் said...

தமிழ் மாறர்,
வணக்கம்,

முதலில் நன்றாக இலங்கை தமிழர் போராட்டம், அதற்கான சூழல், இன்ன பிற விடயங்களைப்படித்து வாருங்கள். தப்பு தப்பா பேசிட்டு , நான் சுட்டிக்காட்டியதும் ஜகா வாங்கிக்கொண்டு புதித்ஆக வேறு ஒரு தவறான கதையளப்பதும் , நான் சரி செய்வதுமாக இந்த ஆட்டம் போரடிக்குதுங்கோ.

அப்புறம் போனப்பின்னூடத்திலேயே கேட்டது, பதிலே இல்லை,ஆனால் மீண்டும் ஒவ்வொரு தமிழனையும் அப்படி சொல்ல வைப்பேன் சொல்றிங்க. நான் சொன்ன ஆளுங்கள் எல்லாம் தெலுங்கா அப்போ? கூட சீமானையும் சேர்த்துக்கோங்க.
//எங்களை விடுங்க , சொரணைக்கெட்டவங்க, நீங்கள் நம்பும் பழ நெடுமாறன், வைக்கோ, திருமா, கலைஞர் இவர்கள் நான்கு பேரையும் நாங்க இந்திய தமிழர் அல்லனு ஒரே ஒரு அறிக்கை விட சொல்லுங்க, நான் என் ரேஷன் கார்ட், வோட்டர் ஐடி, பாஸ்போர்ட் எல்லாம் தூக்கிப்போடுறேன்.//

நான் ஏற்கனவே சொன்னது தான் உயிர்ப்பலியானது, அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக நாங்களும் வருத்தப்பட்டு வேதனைப்படுகிறோம். ஆனால் இந்தப்பதிவில்
சொல்வது போன்ற கருத்துக்களைத்தான் சரியில்லை என்கிறோம்.

உங்களுக்கும் விடயம் தெரியவில்லை எனக்கோ நேரம் இல்லை எல்லாத்தையும் சொல்லிக்கொடுக்க, எனவே பேசிபபயன் இல்லை. வேலையைப்போய் பாருங்களேன்.

PUTHIYATHENRAL said...

//இது கட்டண சேவை தளம் என தெரியாது, அப்படி கட்டண சேவை எனத்தெரியாமல் போனதுக்கும் நான் காரணம் அல்ல, இந்த தளம் ஏன் கட்டண சேவை அறிவிப்புடன் தமிழ்மணத்தில் வரவில்லை, வராத போது ஏதொ திரிசமன் செய்வதாக தானே புதிதாக படிபோருக்கு தோன்றும்.//

//மேலும் தவறான தகவல்கள் கொண்டே இதில் பதிவுகள் வருகின்றன. இப்போது கூட அகோரிகள் பற்றியப்பதிவில் அவர்கள் மனிதர்களை கொன்று சாப்பிடுவதில்லை, சுடுகாட்டில் இறந்த உடல்களை சாப்பிடுகிறாகள்.//

1.வணக்கம் வவ்வால் அவர்களே , அதை நீங்கள் சந்தேகமாக கேட்டால் பரவாயில்லை நீங்கள் ஆரம்பிக்கும் போதே குற்றச்சாட்டோடு ஆரம்பித்தீர்கள் பரவாயில்லை, ஏன் கட்டண சேவை அறிவிப்புடன் வரவில்லை என்பதை எங்களிடம் கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும், அது அவர்கள் நிர்வாகம் சம்மந்தமாக உள்ள விசயங்கள் அவர்களிடமே கேட்கவேண்டும்.

2) வணக்கம் வவ்வால் சுட்டி காட்டியமைக்கு நன்றி! அதுகுறித்து இளங்கோவன் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது அவர்கள் அதற்க்கு அவர்களும் மனிதநேயம் கொன்று நரமாமிசம் சாப்பிடுவதை என்று சொல்ல வந்ததை மனிதர்களை கொன்று என்று தவறுதலாக எழுதிவிட்டதாக் சொன்னார். அந்த தவறு உடனே திருத்தப்பட்டுள்ளது. சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. நட்புடன் - ஆசிரியர் புதியதென்றல்.

Anonymous said...

புலவர் சா இராமாநுசம். ஐயா உங்கள் பதிவுகளை படித்தேன் உங்களது எழுத்துக்கள் அருமையாக இருக்கு, உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் - ராஜன்.

Anonymous said...

கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் இனி இந்தியாவுக்கு அன்னியனே!!!!!!!!!!!!!!!!!!!!!

PUTHIYATHENRAL said...

//இது கட்டண சேவை தளம் என தெரியாது, அப்படி கட்டண சேவை எனத்தெரியாமல் போனதுக்கும் நான் காரணம் அல்ல, இந்த தளம் ஏன் கட்டண சேவை அறிவிப்புடன் தமிழ்மணத்தில் வரவில்லை, வராத போது ஏதொ திரிசமன் செய்வதாக தானே புதிதாக படிபோருக்கு தோன்றும்.//

சிந்திக்கவும் பதிவுகள் தமிழ்மணம் கட்டண சேவை என்கிற தலைப்பின் கீழ்தான் உள்ளது. நீங்கள்தான் தவறாக விளங்கி இருக்கீங்கள்.

PUTHIYATHENRAL said...

//இது கட்டண சேவை தளம் என தெரியாது, அப்படி கட்டண சேவை எனத்தெரியாமல் போனதுக்கும் நான் காரணம் அல்ல, இந்த தளம் ஏன் கட்டண சேவை அறிவிப்புடன் தமிழ்மணத்தில் வரவில்லை, வராத போது ஏதொ திரிசமன் செய்வதாக தானே புதிதாக படிபோருக்கு தோன்றும்.//

சிந்திக்கவும் பதிவுகள் தமிழ்மணம் கட்டண சேவை என்கிற தலைப்பின் கீழ்தான் உள்ளது. நீங்கள்தான் தவறாக விளங்கி இருக்கீங்கள்.

Anonymous said...

///முதலில் நன்றாக இலங்கை தமிழர் போராட்டம், அதற்கான சூழல், இன்ன பிற விடயங்களைப்படித்து வாருங்கள். தப்பு தப்பா பேசிட்டு , நான் சுட்டிக்காட்டியதும் ஜகா வாங்கிக்கொண்டு புதித்ஆக வேறு ஒரு தவறான கதையளப்பதும் , நான் சரி செய்வதுமாக இந்த ஆட்டம் போரடிக்குதுங்கோ.///

மிஸ்டர் வவ்வால் நான் ஈழத்தமிழர் போராட்டம் குறித்து நான் நன்றாக தெரிந்தே பேசுகிறேன். நீங்கள் ஒவ்வொருத்தரை பற்றியும் குறை சொல்வதிலேயே இருகிறீர்கள். அது ரொம்பவும் இலகுவானது. நாம் இங்கு கதைப்பது கருணாநிதி, பழநெடுமாறன், வைகோ, சீமான் குறித்து அல்ல. அவர்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர்கள் குறித்து நீங்கள் அவர்களிடமே கேட்க்க வேண்டும். நான் என்னைப்பற்றியே சொல்ல முடியும். நான் இந்தியாவுக்கு அன்னியனே! அதை என்னால் உறுதிபட சொல்ல முடியும்.

//அப்புறம் போனப்பின்னூடத்திலேயே கேட்டது, பதிலே இல்லை,ஆனால் மீண்டும் ஒவ்வொரு தமிழனையும் அப்படி சொல்ல வைப்பேன் சொல்றிங்க. நான் சொன்ன ஆளுங்கள் எல்லாம் தெலுங்கா அப்போ? கூட சீமானையும் சேர்த்துக்கோங்க.எங்களை விடுங்க , சொரணைக்கெட்டவங்க, நீங்கள் நம்பும் பழ நெடுமாறன், வைக்கோ, திருமா, கலைஞர் இவர்கள் நான்கு பேரையும் நாங்க இந்திய தமிழர் அல்லனு ஒரே ஒரு அறிக்கை விட சொல்லுங்க, நான் என் ரேஷன் கார்ட், வோட்டர் ஐடி, பாஸ்போர்ட் எல்லாம் தூக்கிப்போடுறேன்.//

நீங்கள் தவறா புரிந்து இருக்கீங்கள் ஒவ்வொரு தமிழனும் இந்தியாவுக்கு அந்நியன் என்று சொல்ல வைப்போம் என்பது எதிர்கால வினை சொல். அப்படி சொல்ல வைப்பதே என்னை போன்ற தமிழர்களின் சிந்தனை. உங்களையோ, மற்றவர்களையோ தெலுங்கன் என்று யாரும் சொல்லவில்லை. என்ன விஷயம் பேசப்படுகிறதோ அதற்க்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள் அதை விட்டு விட்டு சொல்லாததை சொன்னதாக ஏன் சொல்கிறீர்கள். நீங்கள் என்னிடம் கருணாநிதி, பழநெடுமாறன், வைகோ, சீமான், திருமா தங்களை இந்தியாவுக்கு அந்நியன் என்று சொன்னால் நான் ஏன் ஒட்டு ஐடியை கிழித்து போடுவேன் என்று சொல்வது சின்னபிள்ளை தனமாக இருக்கு.

நான் சொல்கிறேன் நான் இந்திய தமிழன் இல்லை இந்தியா எனக்கு அந்நிய நாடே, நானும் மலர் விழியின் கருத்தை ஆதரிக்கிறேன் வழிமொழிகிறேன். முடிந்தால் உங்கள் ஓட்டு ஐடியை கிழித்து போடுங்கள். நான் எப்போவோ போட்டாச்சி. ஒவ்வொரு போராட்டமும் சிந்தனை களமும் தனி மனிதனில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். எனக்கு ஒன்றும் கருணாநிதி, பழநெடுமாறன், வைகோ, சீமான், திருமா முன்னோடி இல்லை. புரிந்தால் சரி.

நட்புடன்: தமிழ் மாறன்.

வவ்வால் said...

புதிய தென்றல்,

திரிசமன் செய்து முன்னணியில் இருப்பது எப்படினு எல்லாம் பதிவு கூட போட்டு இருக்காங்க, அப்படி ஏதோ ஒன்று தான் இது என முன்னர் இருந்து ஒரு சந்தேகம், ஏன் எனில் உங்கல் பதிவை சில நாட்களாக படித்தும் வருகிறேன். எனவே தான் எடுத்ததும் அப்படிக்கேட்டேன்.குறையாக சொன்னது பிழை தான் மன்னிக்கவும்.

மேலும் இப்போது கூட கட்டண சேவை என்ற டேக் இல்லாமல் தான் "மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இந்தியா" என்ற பதிவும் தமிழ்மணத்தில் வந்திருக்கு. ஒரு வேளை என் பிரவுசரில் மட்டும் அப்படி தெரியுதா? :-))
-------------------------------------------------------------

தமிழ்மாறர்,

உங்கள் தமிழ் ஞானம் இவ்வளவு மோசமா இருக்கும்னு நின்னைக்கவில்லை, ஒவ்வொரு தமிழனும் அப்படினா அதில எல்லாரும் அடக்கமே, எதிர்கால வினைச்சொல் என்று இப்போ சொல்றிங்க அப்போ எதிர்காலத்தில அவங்க இருக்க மாட்டாங்க அல்லது மாநிலம் மாறிடுவாங்க அப்படியா :-))

நீங்க அவங்களை நம்பாம இருக்கலாம், ஆனா அவங்க தானே கூட்டம் போட்டுகிட்டு இருக்காங்க, உங்களுக்கு அவங்க மேல நம்பிக்கை வரலை, சரி அதே போல உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இல்லைனு வச்சுக்கோங்க, அப்போ ஏன் நீங்க சொல்றத கேட்கணும்.நீங்களும் எங்களுக்கு முன்னோடி அல்ல.

அப்புறம் தப்பு தப்பா சொன்னா அது தப்புனு சொல்லத்தான் செய்வாங்க ,அதை குறை கூறுவதாக புலம்புவது நாம இப்படி எக்ஸ்போஸ் ஆகிட்டோமே என்ற வருத்தமாகவே இருக்கும் :-))

PUTHIYATHENRAL said...

//திரிசமன் செய்து முன்னணியில் இருப்பது எப்படினு எல்லாம் பதிவு கூட போட்டு இருக்காங்க,
அப்படி ஏதோ ஒன்று தான் இது என முன்னர் இருந்து ஒரு சந்தேகம், ஏன் எனில் உங்கல் பதிவை சில நாட்களாக படித்தும் வருகிறேன். எனவே தான் எடுத்ததும் அப்படிக்கேட்டேன்.குறையாக சொன்னது பிழை தான் மன்னிக்கவும்.//

//மேலும் இப்போது கூட கட்டண சேவை என்ற டேக் இல்லாமல் தான் "மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இந்தியா" என்ற பதிவும் தமிழ்மணத்தில் வந்திருக்கு. ஒரு வேளை என் பிரவுசரில் மட்டும் அப்படி தெரியுதா? //

1 ) ஐயா வவ்வால் உங்களுக்கு திட்ட, பேச உரிமையுண்டு, அப்போதான் நாங்களும் எங்களிடம் தவறு இருந்தால் திருத்தி கொள்ள முடியும். இடித்து உரைப்பவனே உண்மையான நண்பன். நன்றி ஐயா!.

2 ) ஐயா தமிழ்மணம் ஒவ்வொரு பதிவுக்கும் கட்டண பதிவு என்று தனியாக தலைபிடவில்லை கட்டணபதிப்பு என்கிற தலைப்பின் கீழ்தான் அந்த பதிவு உள்ளது. நன்றி ஐயா!.

நட்புடன் - ஆசிரியர் புதியதென்றல்.

PUTHIYATHENRAL said...

//இந்த வரிசையிலேயே இந்த பதிவுகள் எல்லாம் வருகின்றன.//

ஏழாம் அறிவு- விமர்சனம்

தமிழ்மணம் கட்டண சேவை


சுவிற்சர்லாந்தில் சூப்பர் சிங்கர்ஸ் 2012 தெரிவுப் போட்டிகள்
சூப்பர் சிங்கர்ஸ் ஐரோப்பா 2012 நிகழ்ச்சிக்கான தெரிவு நிலைப் போட்டிகள் 29.10.11 சனிக்கிழமை ...
உங்கள் இடுகை இங்கே...


கைப்பேசி பேசினால் .... !
கலாம் காதிர்
கைப்பேசி பேசினால் !! நான் செய்த புரட்சிகள் : தத்திச் சென்ற தந்தியை வென்றேன் ...
0 மறுமொழிகள்

கூகிள் விளையாட்டு மைதானம்-Google Code Playground
மழை | You Tube | ப்ளாக்கர் | Blogger
கூகிள் விளையாட்டு மைதானம்-Google Code Playground HTML கோட்களில் விளையாட கூகுள் அமைத்து கொடுத்திருக்கும் ஒரு சிறந்த தளம் ...
0 மறுமொழிகள்

ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (4) – விடுதலை ...
பெரியார்தளம் | பெரியார் முழக்கம் | முதன்மைச்செய்திகள் | இந்தியா
ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் ...

தியானமும் யோகாவும் -ஒருங்கிணைந்த ஆழ்மனத்தின் சக்திகள்.
andkm | தியானம்-யோகா
பகிராத எண்ணத்தை உணர முடியுமா ? ...
0 மறுமொழிகள்

குறிப்பறிவுறுத்தல்:அதிகாரம் 128/133 இன்பத்துப்பால்:கற்பியல்

சாம்பார் - சில குறிப்புகள்!
நொந்தகுமாரன் | அனுபவம் | பேச்சிலர் சமையல் | சமூகம்
சகஜமாய் பழகுகிற யாரிடமும் இயல்பாய் கேட்கும் கேள்வி 'சாம்பார்' எப்படி வைப்பீங்க?' வெடி சாம்பார், திடீர் சாம்பார், மிளகு சாம்பார் ...
0 மறுமொழிகள்

நன்றி சொல்லவேண்டிய தருணமிது!

நினைவு உன்னை அடைவது போல..♥
மகேந்திரன் மகி | புறா | கவிதை | கூடு
புறா கண்களை கட்டி எங்கு விட்டாலும் தன் கூடு ...
0 மறுமொழிகள்

பிரபாவதி பாஸ்கர் இனி எந்த சத்தியாலும் பிரிக்ககூடாதுங்க ! ~மகேந்திரன்

அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது
துவாரகன்
-துவாரகன் ...
0 மறுமொழிகள்

அணு உலை ஆபத்து.
சுரன் | அணு
கூடங்குளம் அணுமின் நிலையம் மின் உற்பத்தியை துவங்கும் நிலையில் அதன் பணிகளை திடீரென நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று ...
0 மறுமொழிகள்

முத்தத்தை கேட்டால் வெட்கத்தை தருகிறாயே - ஏன்?
நிரூபன் | உரைநடை | மொழி | காதல்
மனதினுள் ஒரு படபடப்பு, என் உள்ளத்தினுள் ஒரு குறு குறுப்பு. இன்றைக்கு எப்படியாச்சும் அவளிடம் போன தடவை கொடுத்த கடிதத்தில் சொல்லியதைப் பற்றி ...
12 மறுமொழிகள்


மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இந்தியா?
PUTHIYATHENRAL | மனித நேயம்
OCT 30: அருணாச்சாலப்பிரதேசத்தில் பாலம் அறுந்து விழுந்ததில் 50 பேர் ...


உள்ளே இதயம்-கவனத்துடன் கையாளவும்..
மயிலன் | காதல் வருடல்கள்..
துளித்துளியாய் சிந்தி செல்லும் ...
0 மறுமொழிகள்

வவ்வால் said...

//2 ) ஐயா தமிழ்மணம் ஒவ்வொரு பதிவுக்கும் கட்டண பதிவு என்று தனியாக தலைபிடவில்லை கட்டணபதிப்பு என்கிற தலைப்பின் கீழ்தான் அந்த பதிவு உள்ளது. நன்றி ஐயா!.

நட்புடன் - ஆசிரியர் புதியதென்றல்.//

நன்றி!
இப்போ நீங்க சொன்ன பிறகு தான் அவையும் கட்டண சேவைனு தெரியுது, காரணம் உங்க பதிவதான் படிச்சு இருக்கேன், மற்ற பதிவுகளைப்படிக்காததால் அவை என்ன மாதிரினு எனக்கு தெரியவில்லை.(படிச்சு இருந்தா உங்க கிட்டே கேட்டத அங்கேயும் கேட்டிருப்பேன்)

படிச்சது தப்பா போச்சு போல :-)) இதுக்கு தமிழ்மணம் தான் சொல்லனும், ஒரு சில கட்டனசேவைனு வரலைனா என்னப்போலா தான் எல்லாம் நினைச்சுக்குவாங்க. கட்டண சேவை தவறில்லை, ஆனால் அறிவிப்பு இருந்தால், இப்படி கேள்விக்கேட்க தோணாது.எப்படிப்பட்டப்பதிவா இருந்தாலும் உள்ளடக்கம் நல்லா இருந்தாப்படிப்பேன், குறைந்த பட்சம் திட்டுற அளவுக்காவது எதாவது எழுதி இருந்தா சரி தான் :-))

நான் தப்பா சொல்லிட்டேன்னு வருத்தப்படாதிங்க எனக்கு புரியறாப்போல எதுவும் தெரியலை அதான் ..காட்சிப்பிழை!