
மாஸ்கோ : விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியான் அசேஞ்சுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என ரஷ்யா பரிந்துரைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட பல்வேறு ரகசியங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது. அமெரிக்காவின் குட்டு உடைபட்டதால் ஏக குஷியில் இருக்கும் ரஷ்யாவில் ஜூலியான் அசேஞ்சுக்கு ஆதரவு கோஷங்கள் தான். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக அரங்கில் முன்வைக்க வேண்டும் என அதிபர் டிமிட்ரி மெத்வேதேவ் அலுவலகத்தில் இருந்தே சிபாரிசுகள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment