பீஜிங் : மேற்கத்திய நாடுகள் சீனாவை தனிமைப்படுத்த முயல்வதாக, சீன ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. சீன அரசுக்கு எதிராக போராடி வரும், லியூ ஷியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறையில் இருக்கும் லியூவை விடுதலை செய்யவும் அந்நாடு மறுத்துவிட்டது. நோபல் பரிசு வழங்கும் விழாவை, சீனா உட்பட அதன் 18 நட்பு நாடுகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதில் தற்போது இலங்கையும் அடக்கம்.
நோபல் பரிசுக்கு போட்டியாக, சீன தத்துவஞானி கன்பூசியஸ் பெயரில்," கன்பூசியஸ் அமைதி பரிசு' வழங்கப்போவதாகவும் சீனா அறிவித்தது. இந்த பரிசுக்கு தைவான் நாட்டு முன்னாள் துணை ஜனாதிபதி லியான் சான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இதனிடையே, மேற்கத்திய நாடுகள் சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, என்ற சீனாவின் அரசு ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.லியூ ஷியாபோ, சீன அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவருக்கு சில மேற்கத்திய நாடுகளில் உள்ள அமைப்புகள் உதவி செய்கின்றன, என்று அவை கூறியுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment