Sep 21, 2010

திருக்குர்ஆனை எரிக்க அழைப்புவிடுத்த பாஸ்டருக்கு பாதுகாப்பு செலவீனங்களுக்கான அபராதம்.

நியூயார்க்,செப்.21: செப்.11 தாக்குதலின் நினைவுத் தினத்தையொட்டி புனித திருக்குர் ஆனின் பிரதியை எரிக்க அழைப்புவிடுத்த ஃப்ளோரிடா சர்ச்சின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ்க்கு 180000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கெய்ன்ஸ் வில்லா கமிட்டிதான் பாதுகாப்பு வகையில் செலவானத் தொகையை டெர்ரி ஜோன்ஸிடம் பெற்றுக் கொள்ளும் வகையில் அபராதம் விதிக்க தீர்மானித்தது. திருக்குர்ஆன் பிரதியை எரிக்க அழைப்புவிடுத்த டோவ் வேர்ல்டு சர்ச்சிற்கும் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரு மாதம் பாதுகாப்பு அளித்ததாக கெய்ன்ஸ்வில்லா போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஷார்னா ஸென் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: இந்தியாவில் பெருன்பான்மை சமூகத்துக்கு ஒரு சார்பு நீதி பாராட்டபடுகிறது. இந்திய நீதி துறை, காவல் துறை களவாணிகள் இவர்களிடம் இருந்து பாடம் கற்பார்களா?

No comments: