Jul 12, 2011

பொறுப்பில்லாத பெற்றோர்கள் பலியான சிறுவர்கள்!

JULY 13, செய்தி 1 : திண்டுக்கல் அருகே கிழக்கு மீனாட்சி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் அருள்நாதன் வயது 8 , அவரது உறவினர் குணசேகரன் என்பவர் மகன் புகழேந்தி வயது 8 இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கிணற்றில் கால் தவறி விழுந்து 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

செய்தி 2 : பவானி ஆற்றில் மூழ்கி பள்ளிச்சிறுவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக இறந்தனர். மேட்டுப்பாளையத்தையடுத்த சிறுமுகை பெட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவனர்கள் விக்னேஷ் (14) மற்றும் சிவராஜ் (12) ஆகியோர் தங்களது நண்பர்களுடன் அருகிலிருந்த பவானி ஆற்றில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கி பலியாயினர்.

சிந்திக்கவும்: ஒரே நாளில் இரண்டு செய்திகள் இப்படி தினமாம் தினம் எத்தனையோ குழந்தைகள் பலியாகின்றன. மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படும் நாடுகளின் இந்தியாவும் ஒன்று. பொறுப்பற்ற பெற்றோர்கள் இவர்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. குழந்தைகளை தேவைக்கு அதிகமாக பெற்றுத் தள்ளுவது பின்னால் அவர்களை பராமரிக்க முடியாமல் இப்படி பொறுப்பில்லாமல் பலி கொடுப்பது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறுவது குழந்தைகள் அதாவது பதினைந்து வயதிற்கு உட்பட்டவர்கள் பெற்றோர்கள் இல்லாமல் வெளியே தனியாக வந்தால், தனியாக விளையாடிக்கொண்டு இருந்தால், பெற்றோர்கள் இல்லாமல் வீட்டில் தனியாக இருப்பது தெரியவந்தால் அந்த பெற்றோர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பார். மீண்டும் அதே தவறை செய்தால் சிறைத்தண்டனை வரை கிடைக்கும்.

குழந்தைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்வரை தாய், தந்தையர் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் அனுமதி இல்லாமல் துணை இல்லாமல் வெளியே போவதோ, வருவதோ இதுபோல் விளைவுகளை ஏற்ப்படுத்தும் பெற்றோர்கள் கவனமாக இருப்பார்களா?

No comments: