Jul 21, 2011

பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது!

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற நிலையை மாற்றி, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டதிருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பெண்கள் என்று வருகின்ற இடத்தில் எல்லாம், கிராமப்புற பெண்கள் என வரும் வகையில், அரசியல் சட்டத்தை 110வது முறையாக திருத்தம் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.  பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு தற்போது மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீத இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

இதை மாற்றி, பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பாதிக்கு பாதி இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, பெண்களுக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் மசோதா, பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் பினாமி நில பரிமாற்றங்களை தடுக்க புதிய சட்டம் : பினாமி நில பரிமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கும் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. பினாமி ஆள் என்றால் என்ன? பினாமி சொத்துக்களை அடையாளம் காண்பது எப்படி? என்பது உள்ளிட்ட பல விஷயங்களையும் ஆராய்ந்து, அதன்பிறகு இதற்கான சட்டம் இறுதி பெறும். இந்த சட்டம், சிவில் கோர்ட் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும். இருப்பினும், பரம்பரை சொத்துக்களை அவரவர் தலைமுறைகளில் மாற்றிக் கொள்வதற்கு இந்த சட்டம் எந்த தடையும் செய்யாது.

2 comments:

மகேந்திரன் said...

பஞ்சாயத்து அமைப்புகளுக்கு இதை அனுமதித்த
மத்திய அரசு......
ஏன் பாராளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை??
அதில் அவர்களுக்கு என்ன கஷ்டம்??
ஆண்களை விட பெண்கள் மேலே வந்துவிடுவார்கள் என்ற எண்ணமா??

சிந்தித்து செயல்படட்டும்.
முதலில் இந்த மசோதா செயல்படட்டும் பார்ப்போம்.!!

PUTHIYATHENRAL said...

சரியா சொன்னீங்கள் மகேந்திரன், சும்மா வாய்வார்த்தைக்கு பெண் சுதந்திரம் பேசித்திரியும் இந்த அரசியல்வாதிகள் உண்மையிலேயே பெண்களுக்கு 50 எல்லா துறைகளிலும் கொடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.