May 18, 2011

மக்களின் திரட்சியே, மாற்றத்திற்கான புரட்சி!!

May 19, முள்ளிவாய்க்கால் முடிவல்ல திருப்பம், ஒன்றாய் எழுவோம் - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகப் பிரிவுக்கு செவ்வி வழங்கிய ; உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், போர்க்குற்றம் என்பதில் இருந்து இன அழிப்பு, இனப்படுகொலை நடந்தது என்பதை உலகம் ஏற்கும் இட்டுச்செல்லும் பாரிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்காலில் தமிழ் உறவுகள் படுகொலை செய்யப்பட்ட பேரவல நிகழ்வை தமிழ் மக்கள் எவரும் மறந்துவிட முடியாது எனவும், மறக்கக்கூடாது என்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மக்கள் பதைக்க பதைக்கப் படுகொலை செய்த பாதர்களை தண்டிக்கும் பொறுப்பு தமிழ் மக்களிற்கு இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கனலாக, அனலாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எந்த இலட்சத்தியத்திற்காக எமது மக்கள் உயிர்களை ஈகம் செய்தார்களோ, அந்த இலட்சியத் தீயை அனைவரும் ஏந்திப்பிடித்து முன்னேற வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

மக்களின் திரட்சியே, மாற்றத்திற்கான புரட்சி – செந்தமிழன் சீமான், ஈழத்தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ்வதா?, அல்லது பிரிந்து சென்று சுதந்திரமாக வாழ்வதா? என்பதை ஈழத்தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என, செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழர் அரசை நிறுவதன் ஊடாக இந்தியாவையும், உலக நாடுகளை தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்க வைக்க முடியும் எனவும் சீமான் சுட்டிக்காட்டினார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பை நினைவுகொள்ளும் இந்த நாளில், தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்த போராடடத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

முள்ளிவாய்க்கால் போன்ற பேரவலத்தை நான் பார்க்கவில்லை - தமிழிழன உணர்வாளர் சத்தியராஜ், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது ஏற்பட்ட துக்கம் போன்ற கவலையை வாழ்நாளில் அனுபவிக்கவில்லை என தமிழின உணர்வாளரும், நடிகருமான சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

லண்டனில் வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் நாளை லண்டனில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

1 comment:

Anonymous said...

WHAT HAPPENED TO KHUSHBOO? CAN'T SHE SHUT HER MOUTH? SHE WAS A SPOILED CHILD IN HER YOUTH. BECAUSE OF HER ROTTEN FAMILY BACKGROUND, SHE HAD TO LIVE WITH DIFFERENT PARTNERS AND CHANGED HER FAITH. SHE IS NO WAY FIT TO COMMENT ABOUT ANY DAMN MATTER IN THIS WORLD UNLESS AFTER PENITANCE OTHERWISE. - MOHAMED THAMEEM