
சனா : ஏமன் நாட்டில், அதிபர் பதவி விலக கோரி நேற்று நான்காவது நாளாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ஏமனில், அலி அப்துல்லா சலே 32 ஆண்டுகளாக அதிபராக இருந்து வருகிறார். தற்போது எகிப்து மக்களின் போராட்டத்தை அடுத்து ஏமனிலும் அதிபருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. நேற்று 4வது நாளாக, பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வக்கீல்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர், சனா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புறப்பட்டு அல் தாரிர் சதுக்கத்தை நோக்கி பேரணி நடத்தினர். பேரணியில், அதிபர் பதவி விலக கோரியும், ஊழலை ஒழிக்க கோரியும் கோஷங்கள் இட்டனர். சனாவை போல் ஏடன் மற்றும் டாஸ் ஆகிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்க்ள நடந்தன. டாசில் ஏற்பட்ட மோதலில் எட்டு எதிர்ப்பாளர்கள் காயம் அடைந்தனர்.
No comments:
Post a Comment