திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற நம் முன்னோர்களின் வாக்குப்படி இந்திய குடிமக்கள் வேலை மற்றும் வியாபாரம் விசயமாக உலகின் பல நாட்டிற்க்கும் சென்று பொருள்தேடி இந்தியாவிற்கு அந்நிய செலவாணி கொண்டு வந்து இந்தியாவின் பெருமையை பார் எங்கும் உயரச் செய்துவருகிறார்கள். இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து வருகின்றன. ஆனால் இந்திய தூதரக சேவை மிகவும் கேடுகட்ட நிலையில் செயல்பட்டு வருவதை வளை குடா நாடுகளில் வேலை செய்யும் இந்திய மக்கள் நன்றாக அறிந்தததே. இந்நிலையில் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இவர்களின் தூதரக சேவை மிகவும் தரம் கேட்டே இருக்கிறது. இதற்க்கு பல சம்பவங்களை சொல்லலாம்.
சமீபத்தில் இந்திய மக்கள் அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் இந்திய கேடுகெட்ட துரக சேவையை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்தியதை செய்திகளில் தெரிந்திருப்பீர்கள். இதை தொடர்ந்து இந்திய மக்கள் அதிகம் வாழும் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் இந்திய துரகமும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. இங்கு பாஸ்போர்ட் புதுபித்தல், மற்றும் பல்வேறு அலுவல் விசயங்களுக்கு போகும் மக்கள் அலைகழிக்க படுகிறார்கள். சான்பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் இந்திய தூதகரத்துக்கு வரும் மக்களை மரியாதை குறைவாக நடத்துவது, அவர்களை கடும் குளிரில் வாசலுக்கு வெளியே நிறுத்தி வைப்பது, பாஸ்போர்ட் புதுப்பித்தல், மற்றும் பணிகளுக்கு போகும் மக்களுக்கு அங்கு படிவங்கள் மறுக்கபடுவது, படிவம் கேட்டால் ஆன்லைனில் படிவம் தரவிறக்கம் செய்து நிரப்பி கொண்டுவாருங்கள் என்று சொல்வது. தூதரத்தில் இந்த படிவங்களை நிரப்ப வைக்கபட்டுள்ள கம்ப்யூட்டர் பழுதடைந்து நிலையில் இருப்பது ஆகியவை இவர்கள் சேவையை பறை சாற்றுகின்றன. தூதரகத்தை அணுகும் மக்களை கனிவோடு பேசாமல் அவர்களிடம் எரிந்து விழுவது இப்படி இவர்களின் சேவை உலகம் முழுவதும் நாறுகிறது. என்று திருந்துவார்களோ? தூதரகங்களை ஒழுங்காக நடத்த முடியாத இவர்கள் ஐநாவில் நிரந்தர உறுப்பினர் இடம் கேட்டு அலைவது கேவலமாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உண்மைதான் பிலிப்பினோ தூதரகத்திற்கு இருக்கும் அக்கறை இவர்களூக்கு இல்லை என்றுதான் சொல்வேன்
என்னங்க இதுக்கு போய் அலுத்துக்கொண்டு.. நம் நாட்டிலேயே சென்னையில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு போய் பாருங்க,வயதான ஆட்கள் உட்கார இருக்கை கூட இல்லாமல் எல்லாம் க்யூ தான். எந்த வரிசை எதுக்கு என்று அருகில் நிற்பவரை கேட்டு தான் தெரிந்துக்கனும்.நானும் 4 நாளாக அலைகிறேன் இன்னும் முடிந்தபாடில்லை.உள் நாட்டு ஆளுக்கே இப்படி என்றால் பக்கத்து ஊரில் இருந்து வருபவர்கள் கதி?
Post a Comment