Feb 14, 2011

மருத்துவ சேவையில் கியூபா & இந்தியா: ஒரு சமூக பார்வை!!

ஹைத்தியில் நடைபெற்ற இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றிய அவர்கள் தான் உண்மையான உலகின் நாயகர்கள். தன் நாட்டுக்கு மிக அருகிலேயே நடைபெற்ற இந்த மனிதப் பேரழிவிலிருந்து மக்களை காப்பது தான் எங்கள் கடமை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியேற்ற போதிலும், அவர்களை காப்பாற்றியது என்னவோ அமெரிக்கா எதிரியாக கருதும் கியூபாதான். 1,200 கூபர்களைக் கொண்ட ஒரு மருத்துவப் படையணி நிலநடுக்கத்தாலும், காலராவாலும் பாதிக்கப்பட்ட ஹைத்தி முழுக்க பணியாற்றி வருகின்றார்கள்.

கியூபாவில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ள மருத்துவ மையமான‌‌ Escuela Latinoamericana de Medicina en cuba (Elam)வில் 1998லிருந்து 550 ஹைத்தி மருத்துவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துள்ளது. மேலும் பணம் இல்லாத காரணத்தினால் தனது நாட்டில் மருத்துவம் படிக்க முடியாத திறமையான 400 மாணவர்கள் இன்று கியூபாவில் மிக மிக குறைந்த செலவில் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றார்கள். கியூபாவில் மருத்துவ பயிற்சி ஆறு ஆண்டுகாலமாகும் (இங்கிலாந்தை விட ஒரு ஆண்டு அதிகம்). பயிற்சி முடிந்த பின்னர் ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவர்களாக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வேலை செய்யவேண்டும். இவர் வாழும் சமூக கூட்டமைப்பில் உள்ள 150லிருந்து 200 மக்களுக்கு மருத்துவம் பார்க்கவேண்டும், இவருக்கு உறுதுணையாக ஒரு செவிலியர் இருப்பார். இந்த திட்டத்தின் மூலமாக கியூபா உலகில் எந்த நாடும் அடைய முடியாத பல்வேறு மருத்துவ முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

சிந்திக்கவும்: இந்தியா கியூபா விடம் இருந்து பாடம் படிக்குமா? மருத்துவ படிப்பு என்றால் இந்தியாவில் எத்தனை இலட்சம் செலவழிக்கவேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகள் எல்லாம் பணகார்களுக்கு மட்டும்தான். ஏழைகளுக்கு மருத்துவ படிப்பு என்பது இயலாத ஒன்று. இந்த பணக்கார்களும் படித்து முடித்து அந்த புனிதமான மருத்துவ துறையை சேவை மனப்பான்மையோடு செய்யாமல் அதை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். இந்தியாவில் டாக்டர் என்பவர்கள் இப்போது சேவை செய்யவில்லை அந்த படிப்பை வைத்து வியாபாரம் பண்ணுகிறார்கள். உடல்நலம் சரியில்லை என்று போனால் ரத்த பரிசோதனை முதல் எஸ்ரே, ஸ்கேன் வரை எல்லா பரிசோதனைகளையும் செய்ய சொல்லி மக்களை அட்டை பூச்சிகள் போல் உறிஞ்சி எடுக்கிறார்கள். ஒரு சில சேவை செய்யும் வினைக் சென் போன்ற டாக்டர்களுக்கு ஆயூள் தண்டனை கொடுகிறது நமது துப்புகெட்ட அரசு. இதையெல்லாம் எதிர்த்து இந்த மக்கள் என்று போராட போகிறார்களோ? என்று இந்த மக்கள் விழிப்பார்கள்.

No comments: