
கனடாவில் குடியேறியவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரை அழைப்பதற்கான விசா எண்ணிக்கையை குறைப்பது என கனடா தேசிய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவால் கனடாவில் குடியேறியவர்கள், தங்களது பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. குடும்பத்தினருடன் மீண்டும் இணைவது குறித்த விசாக்கள் 16 ஆயிரம் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 11 ஆயிரம் விசாக்களை மட்டும் அனுமதிப்பது என கனடா குடியரசு முடிவு செய்துள்ளது. கனடாவில் வசிக்கும் தங்களது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ இதுவரையிலும் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெற்றோரை கனடாவுக்கு அழைத்தவர இன்று விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்கள் கனடாவுக்கு வர 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
No comments:
Post a Comment