இந்தியாவில் நீதிமன்றம்
சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி
நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று
யாராவது நம்பினால்…?
அயோத்தி தீர்ப்பே அந்த எண்ணத்திற்கு ஆப்பு!
“சர்ச்சைக்குரிய இடம்” யாருக்குச் சொந்தம்?
சட்டப்படி தீர்ப்பு சொல்லு என்றால்,
சர்ச்சைக்குரிய பிறவி ராமனுக்கே அது சொந்தம்
என்று கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை சொல்கிறான் என்றால்..
இது நீதிமன்றமா… சங்கரமடமா!
இவன் நீதிபதியா… சங்கராச்சாரியா!
ஹிந்து மதவெறியன் கடப்பாரையில்
இடித்துச் சொன்னதை… “பார் அட்லா” சுத்தியலால்
அடித்துச் சொல்லியிருக்கிறான்..
வேறுபாடு கருவியில்தான்
மற்றபடி இந்திய நீதித்துறை
எப்போதும் போல் பார்ப்பன படித்துறைதான்.
உழைக்கிற உழவுமாட்டுக்கு சூடு,
திரிகிற கோயில் மாட்டுக்கு தீனி, அகத்திக்கீரை!
இதுதான் இந்து தர்மம்!
உழைக்கும் மக்கள் அர்ச்சகராகி
கருவறைக்குள் நுழைய எதிர்ப்பு!
சந்நிதானத்திலேயே சங்கரராமனை போட்டுத்தள்ளிய
ஜெயேந்திரனுக்கு சட்டம் ஒரு செருப்பு!
இதுதான் அரசியல் சட்டம்!
இவனிடமா நீதி கிடைக்கும்?
பிரியங்கா போட்மாங்கே என்ற
தாழ்த்தப்பட்ட பெணணை
கும்பலாக வன்புணர்ந்து
பிணமான பின்பும் அவளைக் கடித்துக் குதறி,
அவள் பிறப்புறுப்பில் கட்டையைச் செருகிய
ஆதிக்கசாதி வெறிநாய்கள் மேல்,
வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்காட முடியாது என
அரசியல் சட்டத்தை அவள் பிணத்தில் செருகிய
ஆதிக்கசாதி பயங்கரவாதிகள்தான் இந்த நீதிபதிகள்.
இந்தியாவின் முகத்தின் மேல்
என் கழிவை இறக்குவேன்…
அதன் வேதிவினை பற்றி
விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கில்லை..
இது எங்கள் தொழில் ரகசியம் என
கொக்கரிக்கும் கோக்கோ கோலாவிடம்
பேசாமல்… சட்டப்புத்தகத்தால்
தன் பின்வாயைப் பொத்திக் கொள்ளும் நீதித்துறை
‘பந்த்’ வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என
போராடும் தொழிலாளர்கள் மேல் பாய்கிறது!
புரிகிறது… இளிச்சவாய் இந்தியனென்றால் விடாது இ.பி.கோ.!
பன்னாட்டுக் கம்பெனி என்றால்
நீதிமன்ற தராசையும் எடுத்துக்கோ!
முப்பதாயிரம் இந்தியர்களை
போபாலில் படுகொலை செய்த
அமெரிக்க யூனியன் கார்பைடு நச்சுப் புகையின்
வேதியியல் பெயர் “மெத்தில் ஐசோ சயனேட்
அதன் அரசியல் பெயர் “இந்தியன் பீனல் கோட்
அமெரிக்க ஆண்டர்சனின்
சிகரெட் குவளைக்குள் கிடக்கிறது
இந்திய நீதிமன்றங்களின் சாம்பல்
யூனியன் கார்பைடின் இலாபத் தாரசின்
எடைக்கு எடை இந்திய நீதிபதிகள்
இன்றும் கூட.. போபாலில்
உதடுகள் பிளந்து, கண்கள் பிதுங்கி,
மரபணு சிதைந்து…பிறக்கும் குழந்தைகளின்
முகத்தில் விகாரமாய்த் தெரிகிறது நீதித்துறை!
இந்திய பாசிச ஹிந்து காவித்துறை.
ஆந்திரா தேர்வு மையத்தில் காப்பியடித்து..
அலகாபாத் நீதிமன்ற ஊழியர்களின்
ஓய்வூதியத்தை கொள்ளையடித்து,
மாட்டிக் கொண்டவர்களை மடக்கிப் பிடித்தால்
அத்தனை பேரும் நீதிபதிகள்
இந்திய பாசிச ஹிந்து காவித்துறை.
நன்றி: வினவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment