Oct 9, 2010
ஐ.நா அமைப்பின் அறிக்கையில் கஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் சுதந்திர நாடுகள்.
புதுடெல்லி,அக்,9:ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய கழகத்தின் (Food and Agriculture Organisation) அறிக்கையில் இந்தியாவுடன், ஜம்மு-கஷ்மீர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.கிழக்கு ஆசிய நாடுகளின் பட்டியலில்தான் இந்திய மாநிலங்களை நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச பால்பண்னை நிறுவனத்துடன் இணைந்து F.A.O வெளியிட்டுள்ள அறிக்கையில்தான் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் அக்ஷாய்சின் என்ற பகுதியும் சுதந்திர நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்ஷாய்சின் பகுதியை கஷ்மீரின் ஒரு பகுதி என இந்தியாவும், தங்களுக்கு சொந்தமானது என சீனாவும் உரிமைக் கொண்டாடுகின்றன.இந்திய மாநிலங்களை தனி நாடுகளாக குறிப்பிட்டது தவறானது அல்ல என விளக்கமளிக்கிறது F.A.O. சர்ச்சைக்குரிய பகுதிகள் சுதந்திர நாடுகளாகவே எடுத்துக்கொள்வதாக அவ்வமைப்பு கூறுகிறது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.
சிந்திக்க: இந்த பகுதிகள் மட்டும் இல்லை கூடிய சீக்கிரம் இந்தியாவின் பல மாநிலங்களும் இந்த லிஸ்டில் சேரபோவது உறுதி. இவர்கள் பலமத்ததவர் வாழும் ஒரு நாட்டை குறிப்பிட்ட ஒரு மதத்தின் நாடாக அறிவிக்க பாடுபட ஆரம்பித்ததில் இருந்து இது சீக்கிரம் நடக்கும் என்பது வெட்டவெளிச்சமாகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment