Nov 13, 2011

மானம்கெட்ட கடல்படையும் அதன் கமாண்டரும்!

NOV 15: தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் இந்திய கப்பல் படை கமாண்டர் பிஜ்ரானியா எச்சரிக்கை விடுத்தார்.


சிந்திக்கவும்:  இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல. அன்றாடம் வாயிற்று பிழைப்பை தேடி உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க சொல்கிறார்கள் தமிழக மீனவர்கள். உங்களை மாதிரி பெரிய, பெரிய கப்பலில் எல்லாவிதமான பாதுக்கப்பு உபகரணங்களுடன்  ஊர்வலமா போகிறார்கள் எம்குல மீனவர்கள்.

சிறு சிறு படகுகளில், கட்டு மரங்களில், மீன்பிடிக்க பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில்  மீன்பிடிக்க சொல்கிறார்கள் நமது மீனவர்கள். சூராவ்ளிகாற்று, மழை, சுனாமி, சிங்கள பயங்கரவாத படை இப்படி தினம்,  தினம் உயிரை கையில் பிடித்து கொண்டு தங்கள் ஒருஜான் வயிற்ரை நிறைக்க பாடுபடும் மீனவ பெருமக்களின்  துன்பத்தை  நினைத்தால் கண்கள் கலங்குகின்றன.

வெளிநாடுகளில் மீன்பிடி என்பது ஒரு சிறந்த வியாபாரம். அவர்களுக்கு என்று கடல்படை பாதுகாப்பு கப்பல்கள், ஹெலிஹோப்டேர்கள், மீன்பிடி படகுகளிலே வயர்லஸ் கருவி, பாதுகாப்பு உபகரணங்ககள் ஆகிய லைப் ஜாக்கெட், மிதவைகள், பிராணவாய்வு சிலிண்டெர்கள், சிறியரக ராடர்கள் என்று எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏதாவது ஒரு பிரச்சனயில் மீன்பிடி படகுகள் மாட்டிகொண்டால் உடனே அவர்களை மீட்க்க "கோஸ்ட் கார்ட்" என்று அழைக்கப்படும் கடற்கரை பாதுகாப்பு கப்பல்களும், ஹெலிஹோப்டேர்களும் விரைந்து சொன்று அவர்களை பாதுகாக்கின்றன. அவர்களுக்கு என்று சிறந்த காப்பீடு திட்டம், மருத்துவம் என்று பட்டியல் நீள்கிறது.

இங்கே என்னவென்றால் உள்ளதும் போச்சே என்று சொல்லும் அளவுக்கு உள்ளது நிலைமை. நீ என்ன கடலில் எல்லை கோடா போட்டு வைத்திருக்கிறாய். அன்றாடம் பிழைப்புக்கு அல்லல் படும் மீனவர்களிடம் என்ன ரெடேர்களா இருகின்றன. அவர்கள் ஒரு குத்து மதிப்பாக வானிலை கணித்து காற்று போகும் திசையில் படகை செலுத்தி மீன்பிடிகிரார்கள். அவர்கள் வைத்திருக்கும் சிறிய ரக விசை படகுகளை வைத்து அவர்கள் கடலுடன் போராடும் உள்ளம் எல்லாம் பதறுகிறது.

தினம் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் திரும்பி வந்தால்தான் நிஜம். அவர்கள் குடும்பத்தார் கடலை பார்த்தபடி கவலையோடு அமர்ந்திருப்பதும் வேதனையான விஷயம். கடலை கரையில் இருந்து பார்க்கும்போதே பயமாக இருக்கு. ஆர்பரிக்கும் கடலில் மீன்பிடிக்க சென்று கோர அலைகளோடு தினம் தினம் உயிர்போராட்டம் நடத்துகிறார்கள் மீனவர்கள். உங்களுக்கு என்ன ஊரான் வீட்டு வரிபணத்தில் சொகுசு பயணம் போகும் வெத்து வேட்டுகள்தானே. இந்த வீர முழக்கத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல.

மீன்பிடிக்கும் மக்களின் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் மானம் கெட்டவர்களே இவர்களை பாதுகாப்பதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை. கடல் எல்லைகளில் உங்கள் கப்பலை நிறுத்தி வைத்து எல்லைத்தாண்டும் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கலாமே திரும்பி போங்கள் நீங்கள் இந்திய எல்லையை தாண்டி போகிறீர்கள் என்று சொல்லலாமே.

இந்திய கடல் எல்லைகளில் சென்சார் பொருத்தப்பட்ட மிதவைகளை போடலாமே, அல்லது உன் சிங்கள முதலாளியின் காலை பிடித்து கெஞ்சலாமே தமிழக மக்களின் வரி பணமும் எங்கள் உடம்பில் ஓடும் ரேத்ததில் கலந்திருக்கிறது, நாங்கள் பவனிவரும் கப்பல்களில் கலந்துள்ளது அதனால் தயவுசெய்து தமிழர்கள் மேல் கைவைக்க வேண்டாம். அவர்கள் தப்பி தவறி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க வந்துவிட்டால் திரும்பி போகும்படி கப்பலில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு கொடுங்கள் என்று சொல்லலாமே.

இப்படி எத்தனையோ வழிகள் இருக்க மீனவர்களை எச்சரிக்கிறார்கலாம் எச்சரிக்கை!. உங்கள் வீரத்தை இலங்கை கடல்படையிடம் காட்ட வேண்டியதுதானே. அதற்க்கு துப்பு இல்லை, துணிவும் இல்லை. ஏழை மீனவர்களிடம் தான் உங்கள் வீரம் எல்லாம். இதில்வேறு வல்லரசு புல்லரசு என்று கூப்படுவேறு. தமிழர்களின் மானம் காக்கவும், தமிழர்கள் அடிமைகள் இல்லை என்பதை உரக்க சொல்லி சுதந்திர காற்றை சுவாசிப்போம் வாருங்கள்.

ரௌத்திரம் பழகு
...ஈழப்பிரியா...

9 comments:

Anand said...

உண்மையில் தமிழர்களுக்கு சூடு சொரணை இல்லை, பெரும்பாலோனோர் சுயநலவாதிகளாக உள்ளனர்

Anonymous said...

சிறந்த பதிவு யாழினி வாழ்த்துக்கள்! தொடர்ந்து ரௌத்திரத்தோடு பதிவுகள் எழுதுறிங்க வாழ்த்துக்கள் யாழின். உங்கள் பணி சிறப்பானது தொடரட்டும். BY: RAJA

தமிழ் மாறன் said...

தமிழக மீனவர்கள் இந்தியா என்ற நாட்டினால் படும் தொல்லைகள் குறித்து விளக்கினீர்கள். வடநாட்டு காலனி ஆதிக்கத்தில் இருந்து தமிழகம் விடுதலையடைய தமிழர்கள் ஒரு சுதந்திர போராட்டத்தை தொடங்கவேண்டும்.

தமிழ் மாறன் said...

எப்படி வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடி ஒரு நாட்டை பெற்றோமோ அதுபோல் வடநாட்டு காலனி ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அறிஞ்சர் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் கண்ணியமாய் அண்ணல் சொன்னதை செய்வோம். அண்ணா என்ன சொன்னார்? தமிழ் நாடு தனி நாடு என்று.

மலர்விழி said...

நல்லபதிவு தோழி வாழ்த்துக்கள் ரௌத்திரம் பழகலாம் என்று நினைக்கிறன் முடியலையே தோழி. உங்களின் எழுத்துக்களை படித்தே நானும் எழுத ஆரம்பித்துள்ளேன். வாழ்த்துக்கள் தோழி.

மலர்விழி said...

நல்லபதிவு தோழி வாழ்த்துக்கள்! உங்களுடன் இருந்து ரௌத்திரம் பழகலாம் என்று நினைக்கிறன் முடியலையே தோழி. உங்களின் எழுத்துக்களை படித்தே நானும் எழுத ஆரம்பித்துள்ளேன். வாழ்த்துக்கள் தோழி.

Anonymous said...

கொடுத்த காசுக்கு நல்லாவே கூவுறீங்க...

நடத்துங்க..

தமிழ் மாறன் said...

நண்பரே பெயரில்லா பிச்சையே யாரு யாருக்கு காசு கொடுத்த கூவ...... உங்களை மாதிரி பெயர் சொல்ல கூட தயங்கும் தமிழர் விரோதிகள் இப்படித்தான் கூவி கொச்சை படுத்துவீர்கள். தமிழனுக்காக குரல் கொடுத்தால் அவர்கள் காசு வாங்கிகொண்டு கூவுகிறார்கள் என்று அர்த்தமா? உங்களுக்கு என்ன இந்திய உளவு துறை காசு கொடுக்கிறதா கூவ சொல்லி.

தமிழ் மாறன் said...

உங்களை இப்படி தமிழர்களுக்கு எதிராய் பேசும்படியும் அப்படி பேசினால் அரசு துறையில் நல்ல வேலையும் இன்ன பிற வசதிகளும் செய்து தருகிறேன் என்று சொல்லி நீங்கள் இப்படி பெயர் இல்லாமல் வந்து கூவிவிட்டு போறீங்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.