May 1, 2011

தமிழக தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை: ப. சிதம்பரம்!!

May 2, மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

வெற்றியோ, தோல்வியோ, தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறினார்.

சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன.

ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.
இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும். தமிழகத்தில் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

1 comment:

Nalliah said...

இலவசம் என்னும் லஞ்சம் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஒரு தடவை ஏமாற்றலாம், தொடர்ந்து ஏமாற்றமுடியாது என்பதை கருணாநிதி இந்த தேர்தல் தோல்வி மூலம் உணர்ந்து கொள்ளவிருக்கிறார். கட்டற்ற ஊழல் எல்லா மட்டங்களிலும் தாண்டவமாடியதையும், கருணாநிதியின் குடும்பத்தினர் அதிகார முறைகேடுகளினால் பெரும் லாபம் அடைவதையும் மக்கள் சகிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும்

நல்லையா தயாபரன்