Apr 18, 2011

தேர்தல் ஆணையம் திமுகவிற்கு எதிராக செயல்பட்டது!!

ஏப்ரல் 18, தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திமுக கூட்டணிக்கு எதிராக உள்ளது என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பதில் அளித்தார்.

கேள்வி: தேர்தல் முடிவுகள் எப்படி அமையும்? பதில்: தமிழகத்தில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்

கேள்வி: திமுக வன்முறையில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளாரே? பதில்: எந்தக் கட்சிக்காரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நேரில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

கேள்வி: மதுரை மேற்கு தொகுதியில் மறுதேர்தல் நடத்துமாறு புகார் எழுப்பட்டுள்ளதே?
பதில்: தேர்தல் ஆணையத்தின் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம் என்றார். மேலும் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திமுக கூட்டணிக்கு எதிராக உள்ளது என்றார்.

No comments: