Nov 26, 2011

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?

NOV 27: மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள்,  தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள்  என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா?  பார்ப்போம்

விஞ்சான பார்வை: மன்னார் வளைகுடா கடலின் தரைபகுதியில்  70 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு  உடைந்து சரியும் தன்மையைக் கொண்ட வண்டல் குவியல்கள் (slumps) உள்ளன. 1982 ஆம் ஆண்டில் வில்லியம் வெஸ்டால் மற்றும் லௌரீ என்ற இரு ஆய்வாளர்கள் இதை  கண்டுபிடித்தனர். 1994 ஆம் ஆண்டில் இந்த வண்டல் குவியல்களின் அடிப்பகுதியில் எரிமலைகள் இருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டது.

ஏதாவது சிறிய நிலநடுக்கம் ஏற்ப்பட்டாலும் இந்த வண்டல் குவியல்கள் சரிந்து சுனாமி பேரலைகளை உருவாக்கும், அதேநேரம் அந்த மணல் திட்டுகளின் அடியில் இருக்கும் எரிமலையும் வெடிக்ககூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய அணுசக்திக் கழகம் இந்த வண்டல் குவியல்களினால் ஏற்பட உள்ள  பேரிழிவு பற்றி  ஆய்வு செய்ய  இன்றளவும் மறுத்து வருகிறது. இதுதான் கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த ஒரு தெளிவான விஞ்சான பார்வை.

வரலாற்று பார்வை: காமராஜர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராகவும், தமிழக முதல்வராகவும்  இருந்த காலத்தில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அவருக்கு பின்னால் அண்ணா, எம்.ஜி.ஆர்,  கருணாநிதி ஆட்சிகளில் மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. அதனாலேயே கருணாநிதி வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொன்னார்.

அந்த காலகட்டங்களில் பலநல்ல திட்டங்கள் வட மாநிலங்களை  நோக்கி கொண்டு சொல்லப்பட்டன.  அதில் ஒன்றுதான் போபால் ஆனால் போபால் விசவாய்வு கசிவால் விழித்துக்கொண்ட வட இந்தியர்கள்  இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் திட்டங்களை  தமிழகத்தை நோக்கி தள்ளிவிட்டனர். அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்  என்கிற தாமிர உருக்கு ஆலை, மற்றும் ஆறுமுகநேரி DCW என்கிற தாரங்கதாரா கெமிக்கல் வொர்க்ஸ், போன்றவைகள் அடங்கும்.

இந்த ஆலைகளின் முதலாளிகள் குஜராத்திகள் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம். உண்மைகள் இப்படி இருக்க   அணுவுலைக்கு எதிரான இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் கீழ்த்தரமான வேலையை  தினமலர் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த அணுவுலை ஆபத்தானதில்லை என்று போலியான வாதங்களை முன்வைத்தும், அதே நேரம் இந்த போராட்டத்தை பற்றியும் அதை நடத்தும் மக்கள் தலைவர்களை பற்றியும் தினமலர் இழிவான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக அந்த போராட்டத்தின் தலைவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக ஒரு குற்றச்சாட்டையும், அதில் ஈடுபட்டுள்ள ஒரு பாதிரியாரின் சொத்து கணக்கு பற்றியும் அவர்களது வீட்டு முகவரி தொலைபேசி இலக்கங்களையும் தினமலரில் வெளியிட்டு அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்க திட்டமிடுகிறது. இதே அணு உலை காஞ்சி சங்கரமடத்திற்கு அருகாமையிலோ அல்லது  ஸ்ரீரங்கத்திலோ நிருவப்படுமே ஆனால் தினமலரின் வேடம் சேதுசமுத்திர திட்டத்தில் ராமர் பாலம் என்றது போல் கலைந்திருக்கும்.

ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது  தினமலர். அதே நேரம் மும்பையில் தமிழர்களை, குஜராத்திகளை  ஹிந்துத்துவா சிவசேனைகாரர்கள்  அடித்து துரத்தியபோது மவுனம் காத்தது, கர்நாடகா தண்ணீர் தராதபோதும், தமிழகத்துக்கு நன்மைதரும் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த தடையாக ராமர் பாலம் கதை சொல்லியும்  ஹிந்துதுவாவுக்கு ஆதரவாக செயல்பட்டது.

இவ்வளவு நாளும் மவுனம் காத்த மக்கள் இப்போது ஏன் எதிர்கிறார்கள்
ன்று தினமலர் ஒரு பொய்யான கேள்வியை முன்வைகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது முதல் மக்கள் எதிர்ப்பு என்பது இருந்தே வந்தது. விஞ்சான வளர்ச்சி அடைந்த ஜப்பானில் அணு உலையினால் ஏற்ப்பட்ட ஆபத்தை பார்த்ததும் ஜப்பானுக்கே இந்த கதியா என்று அஞ்சிய மக்களின் போராட்டம் மேலும்  வலுவடைந்தது. 

மேலும் போபால் விசவாய்வு கசிவு நடந்து 25 ஆண்டுகளை கடந்தும் அந்த மக்களுக்கு சரியான நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் ரஷ்யாவால் வடிவமைக்கப் பட்ட மற்றைய அணுவுளைகளால் ஏற்ப்பட்ட விபத்துக்கள், கூடங்குளம் பகுதி நிலநடுக்கம், மற்றும் சுனாமிக்கு வாய்ப்புள்ள பகுதி போன்ற காரணங்களே எல்லாராலும் இந்த திட்டம் வெறுக்கப்பட காரணமாக அமைந்தது.

கூடங்குளம் அணுமின் நிலையம் எவ்வளவு ஆபத்தானதோ! அதுபோல் தினமலர் என்கிற விஷ செடியும் தமிழகத்துக்கு ஆபத்தானது. அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தோடு தினமலருக்கு எதிரான போராட்டங்களையும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். தினமலர் என்கிற விஷ மலரை வாங்குவதை தமிழர்கள் நிறுத்த வேண்டும். தமிழர் விரோத இந்த பத்திரிக்கையை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும்.

அன்பான வாசகர்களே! கீழ்க்கண்ட தொலைபேசிக்கு தொடர்புகொண்டு கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு போராட்டத்திற்கு நமது ஆதரவை தெரிவிப்பதோடு தினமலருக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நடத்த சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை வைப்போமாக. S.P. உதயகுமார் இவரது மொபைல் எண்: 98656 83735. இவரது நாகர்கோவில் தொடர்பு எண்: 04652 2406567 இ-மெயில்: drspudayakumar@yahoo.com, spudayakumar@gmail.com.  

இந்த மக்கள் போராட்டம் வெற்றி பெற சிந்திக்கவும் ஆசிரியர்கள் குழு சார்பாகவும் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். 


நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

44 comments:

Anonymous said...

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா? என்று கேள்வி எழுப்பி இருக்கீங்கள் என்னை கேட்டால் தினமலர்தான் என்று சொல்வேன். அணு உலையை விட விஷத்தை கக்குகிறது தினமலம். BY: RAJA

UNMAIKAL said...

CLICK THE LINK AND SEE VIDEO

*****தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது!
தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர். ”ஆர்.எஸ்.எஸ்.“ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது. விடியோ காணவும்
*****

.

supi nagarajan said...

dinamalar,kalaikathir papers 2m tamilai rompave kevalamaga eluthuranga

Anonymous said...

கூடங்குளம் அணு மின் உலையை மக்கள் நெருக்கம் குறைந்த கேரளாவிலோ, கர்னாடகாவிலோ, ஆந்திராவிலோ நிறுவுவது தமிழ் மக்களுக்கு நல்லது..

Anonymous said...

இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடைக்கல்லாக உள்ளது மின்சாரப் பற்றாக்குறை. இந்தக்குறையை நிவர்த்தி செய்யும் பட்சத்தில், இந்தியாவானது மிகப்பெரும் வளர்ச்சியை குறுகிய காலத்தில் எட்ட முடியும். இதை தடுக்கவே வெளி நாட்டு சக்திகள் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சக்திகளின் முயற்சி செல்லாது... RAMAN

Anonymous said...

சூரிய சக்தி/கடல் அலை சக்தி, ... நீதி / நேர்மை/ தமிழன் உயிர் என்று இங்கு சிலர் பினாத்த ஆரம்பிப்பார்கள்...அட பாவிகளா, இந்தியா வல்லரசாகி விட கூடாது என , வளர்ந்த நாடுகள் போடும் பிச்சை காசுக்காக இரையாகாதீர்கள்...மின் வளம் இல்லையேல் தொழில் வளம் இல்லை...உலகம் வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் , என்று வளர்ந்த நாடுகளுக்கு இப்போது தான் புத்தி வந்துள்ளதா? இந்தியாவும் சீனாவும் நம்மை விட முன்னேறிவிட கூடாது என்று பிரான்ஸ், UK , US , ஜெர்மனி போன்ற நாடுகள் திட்டம் போட்டு வேலை செய்கின்றன...மின் உற்பத்தியை தடுத்தல் இந்தியா முன்னேறாது..இது தான் அவர்கள் திட்டம்.

தமிழ் மாறன் said...

தினமலர் தமிழர்களுக்கு எதிரா தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. தினமலருக்கு எதிராக தமிழர்கள் அணிதிரள வேண்டும். தினமலரை தமிழகத்தில் இருந்து அடித்து துரத்த வேண்டும். ஈழ விடுதலையை கொச்சைபடுத்தி எழுதினார்கள், சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்குதண்டனையை பற்றி நடந்த போராட்டங்களை மிகவும் கேவலப்படுத்தினார்கள், இப்படியே இவர்களை விட்டால் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்க்கும் கேடு.

தமிழ் மாறன் said...

//சூரிய சக்தி/கடல் அலை சக்தி, ... நீதி / நேர்மை/ தமிழன் உயிர் என்று இங்கு சிலர் பினாத்த ஆரம்பிப்பார்கள்...அட பாவிகளா, இந்தியா வல்லரசாகி விட கூடாது//

தமிழர் உயிர் என்ன கிள்ளு கீரையா! . இந்தியா வல்லரசா ஆனா என்ன ஆகாட்டி எங்களுக்கு என்ன? நீ வல்லரசு ஆகவேண்டும் என்றால் எல்லோரையும் கொன்று குவித்து அந்த சாம்பலில் நின்று வல்லரசு என்று பட்டம் சூட்டி கொள்வாய். அதுபோல்தான் ஈழத்திலே இரண்டு இலட்சம் மக்களை கொன்று வல்லரசு என்று பீற்றி கொண்டாய் என்ன நடந்தது சீனாகாரன் உனக்கு ஆப்பு வைத்தான். இந்த அணு உலை கேரளாவுக்கு ஒதுக்கப்பட்டது தானே ஏன் மலையாளிகள் அதை எதிர்த்தார்கள் உனக்கு மட்டும் ஏன் மூளை வேலை செய்யவில்லை. கேரளா மட்டும் இந்தியாவில் இல்லையா! இந்தியா வல்லரசா ஆகணும் என்றால் தமிழன்தான் உங்களுக்கு கிடைத்தான.... மூளை இருந்தால் யோசி.

தமிழ் மாறன் said...

உன் வல்லரசு என்கிற வார்த்தையை தூக்கி குப்பையில் போடு! யாருக்கு வேண்டும் உன்வல்லரசு பட்டம்! முதலில் உயிரோடு வாழ விடுங்கடா! மக்களை கொன்று தின்னும் பிணந்தின்னி கழுகுக்கும் உங்கள் வல்லரசு பட்டத்திற்கும் என்னாடா வித்தியாசம். ஈழத்திலே இரண்டு இலட்சம் தமிழன் கொள்ளப்படுறான் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் உன்கொரூர புத்தியை என்னவென்று சொல்வது. நார்வேகாரன் வந்தான் எத்தனையோ நாட்டு காரன் குரல் கொடுத்தான் நீ வேடிக்கைதானே பார்த்தாய்! உன்னை நம்ப முடியாது! உனக்கு வல்லரசு பட்டம் கொடுக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நீயே கூடங்குளம் அனுமிநிலயத்தை வெடிக்க வைத்து தமிழர்களை கொன்று விடுவாய். நீ வடநாட்டு ஹிந்திகாரன்தானே உனக்கு தமிழன் மீது என்று பற்று இருந்தது ஒரு நாளும் இல்லை. தமிழனை தமிழன்தான் ஆள்வான். உங்கள் வட இந்திய ஹிந்தி தலைவர்களை நம்பி சோடை போனது போதும்.

Anonymous said...

பார்பனர்கள் போல் அரசாங்கத்தை நக்கி பிழைக்காமல் தங்கள் உழைப்பை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி வாழும் இலட்ச கணக்கான மக்களின் குரல் இது இதை ஒடுக்க யாராலும் முடியாது தோழரே!! **********பாபு********

Anonymous said...

இந்த இரண்டையும்விட ஆபத்தானது இஸ்லாமிய பயங்கரவாதம்தான்.

UNMAIKAL said...

click and read.

1. **** பயங்கரவாதத்தின் நிறம் காவி! - ஞாநி . குமுதம் "ரிப்போர்ட்டர்" - *****

2. ****அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே" – *****


3. ****உண்மையான பயங்கரவாதிகள். ஒரு பார்வை. Video. - *****


4.****தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ. உரை. கேள்வி-பதில். – *****


5.****அப்பட்டமான உண்மை. 9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால்?. *****


6.****நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்கள். அப்பட்டமான உண்மைகள். - *****

.

Anonymous said...

Very nice article thank u somuch puthiyathenRal. Yours : azad/ nellai

Anonymous said...

Yeedaa naathaari thinamalathththai sonnathum poththukkuttu varutho

guna said...

dinamalar solvathu 100% unmai unmai.

வலிப்போக்கன் said...

கூடன்குளம் பலகாலம் நின்று கொல்லும்
தினமலம் அன்றே கொல்லும்.ஆக.இரண்டுமே கொல்லும் கொல்வதில் !உடனே கொல்வதா! சித்திரவதை செய்து கொல்வதா என்ற
சில அற்ப வித்தியாசங்கள்
மட்டுமே!

Anonymous said...

Mr. Guna where u living in Koodankulam or different state. May be u are not there that's way u can say what ever u want. U have to think about the fisher men's and other poor village people. U r not in Koodankulam u don't have right to say that. Mind ur own business

Anonymous said...

Tamilan mattum thamil naatil eru paarpananai viratti

Unknown said...

@Anony
pear solla kuda thuppu ellamal bayantu ozhinthu kondu ezhuthum bedi payele un kuppaiyai dina'mala'tidam kotu ean enil athuthan kakuse!!

Anonymous said...

Nalla pathivu vaalthukkal.

Anonymous said...

Dinamalarukku nalla seruppadi kodutheengal...... Nanri

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே வருகை புரிந்தமைக்கு நன்றி! இந்த பதிவு கூடங்குளம் மக்கள் பிரச்னையை பேசுவது! அதில் தினமலர் செய்தது விசமத்தனம் தினமலர் தொடர்ந்து தமிழர் நலனுக்கு விரோதமாக நடந்து வருகிறது என்பதை விளக்கும் பதிவு இது. உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்கள் கூடங்குளம் மின்நிலையத்தை, ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ அல்லது அதில் இருக்கும் அரசியல் பிரச்சனைகள் குறித்தோ அல்லது தினமலருக்கு ஆதரவு தெரிவித்தோ இருந்தால் பரவாயில்லை தனிப்பட்ட முறையில் மதத்தை வைத்து இங்கு மோதிக்கொண்டு பதிவின் நோக்கத்தை கெடுக்க வேண்டாம். ஆகவே பதிவுக்கு சம்மந்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறேன். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

Anonymous said...

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா? மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள், தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள் என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா? பார்ப்போம் please go to visit this link. thank you.

Anonymous said...

/தனிப்பட்ட முறையில் மதத்தை வைத்து இங்கு மோதிக்கொண்டு பதிவின் நோக்கத்தை கெடுக்க வேண்டாம்/ ஆமா கரெக்ட்...அப்புறம் குஜராத்துல ஆர்.எஸ்.எஸ் அராஜகம் பத்தியும் பேச வேண்டியிருக்கும். வி.புலிகள் முஸ்லிம்களை அடுச்சுத் துரத்தினது பத்தியும் பேச வேண்டியிருக்குமே...

மலர்விழி said...

பேச்சிப்பாறை அணையிலிருந்தும், கோதையாறு அணையிலிருந்தும் தண்ணீர் எடுத்து தான் அணு உலைகளை குளிர்வித்து இயக்க முடியும் என்றுள்ளபோது, ஏற்கனவே வறட்சியால் தவிக்கும் தென் மாவட்டங்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் எங்கு போவர்கள்.

Anonymous said...

கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றுதல், மற்ற மாவட்டக் காரர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகும். இதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் உள்ளன. குமரி மாவட்டம் நீண்ட நெடுங்காலம், மலையாள ஆட்சியில் இருந்தது. இங்கு மலையாள மொழியின் நெருக்குதலில் ஒவ்வொரு நாளும் சிக்கித் தவித்தவர்கள் இவர்கள். பள்ளிகளில் மலையாள மொழிக்கே முதலிடம். தமிழ்மொழி இங்கு தாழ்த்தப்பட்ட வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற காரணங்களே, இங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ் மொழி யின் மீது கூடுதல் பற்று ஏற்படக் காரணமாக இருந்தது.

கன்னியா குமரி தமிழ் மக்களுக்காக மொத்த தமிழகமும் அணி திரள வேண்டும். கூடங்குளம் பிரச்சனை என்பது மக்கள் பிரச்சனை இதில் ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து நாம் தமிழர்கள் என்று ஒன்று படவேண்டும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்! அன்புடன்: யேசுதாஸ். கூட்டப்பனை.

Anonymous said...

தினமலர் பத்திரிகைக்கு நன்றாக தெரியும் அணுமின் நிலையத்தால் ஆபத்து உண்டு என்று . தினமலர் தன ஹிந்துத்துவா வாழ்வதற்கு இதற்க்கு மத சாயம் பூசி செய்திகளை திரிக்கிறது. கூடங்குளம் பகுதியில் உள்ள கிறஸ்தவ மக்கள்தான் அங்கு சர்ச் இருப்பதால் அதை பாதுகாக்க நாட்டின் நலனுக்கு இடையூறு செய்வதாக வதந்திகளை பரப்புகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் அணுமின் நிலையம் அமைக்க அந்த மக்கள் விடவில்லை .அதற்காக அந்த மக்களை இந்து மக்கள் என்று சொன்னதா? இல்லையே! பிறகு ஏன் கிறித்தவர்கள் இங்கு குழப்பம் உண்டாகிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் இதே மாதிரி அந்த மக்கள் எதிர்த்தார்களே அதை ஹிந்து மக்கள் என்று என்று சொல்லி எழுதியதா தினமலர் இல்லையே. கடவுள் ஒருவரே அவர் தமிழ் கடவுள் முருகரா இருந்தாலும் ,ஏசுவாக இருந்தாலும் சரி. எனவே மதவாதம் பேசும் தினமலர் புறக்கணிக்கப்பட வேண்டிய பத்திரிகை. தினமலரை தமிழகத்தை விட்டு துரத்தியடிக்க வேண்டும் என்று ஆசிரியர் சொன்ன கருத்தை நான் வழி மொழிகிறேன். தேக்லா பர்னாந்து - உவரி.

தமிழ் மாறன் said...

இந்த கூடங்குளம் அனுமிநிலயம் கேளத்துக்கு போன திட்டம் அதை மொத்த கேரளமக்களும் ஜாதி, மத, அரசியல் வேறுபாடுகளை களைந்து எல்லோரும் ஒன்றாக நின்று விரட்டி அடித்து விட்டார்கள். தமிழன் இளிச்சவாயன் கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் மின்சாரம் கொடுக்க தமிழக மக்களை அணு அணுவாக கொல்வார்கலாம். தமிழக நீர் ஆதாரங்களை உருஞ்சுவார்கலாம், தமிழர்கள் நெருப்பை வயற்றில் கட்டி கொண்டு வாழனும் மற்ற மாநிலத்துகாரன் சந்தோசமா இயற்கையை ரசித்து கொண்டு இருப்பானாம்! நல்ல இருக்குடா உங்க கதை! உடனே மன்மோகன் சிங் ராணுவத்தை கொண்டு வருவாராம்! என்னடா பூச்சாண்டி காட்டுற! டர்பன கட்டிக்கிட்டு ஓடு பஞ்சப்பை நோக்கி. படிப்பறிவு இல்லாத முட்டாள் வடஇந்தியாகாரனுவ பண்ண்பாடும் அறிவும் மிக்க தமிழனுக்கு பாடம் சொல்ல வந்துட்டனுவ........

Anonymous said...

அணு உலையை அதாரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வசிக்கும் இடத்தில அணு உலை வந்தால் அப்போது எதிர் பேச்சு பேசவே செய்வார்கள்....

வலியும், வேதனையும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதே இதில் உண்மை. கூடங்குளத்தில் அவஸ்தை பட போவது ஏழை எளிய கடலுக்கு போயி மீன் பிடித்து தொழில் நடத்தும் மக்களும், விவசாயிகளுமே. தினமலருக்கு என்ன ஊட்டியில் பங்களா இருக்கும். அங்கே போயிடுவான். சாவ போறது ஏழை மக்களே. RAJA

Anonymous said...

இந்த கூட்டத்தை பிடித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வெளியே வர முடியாத படி உள்ளே வைத்து லாடம் கட்டினால் சரி ஆகி விடும் இலையேல் இவர்கள் இப்படித்தான் புலம்பி தீர்ப்பார்கள். RAVI

மலர்விழி said...

பல விதமான தீமைகள் கூடங்குளம் அணு உலையால் ஏற்பட உள்ளது ... இது தொடர்பாக தெகல்காவில் வெளி வந்த செய்தியை படிங்கள் please go to visit this link. thank you.

மலர்விழி said...

பல விதமான தீமைகள் கூடங்குளம் அணு உலையால் ஏற்பட உள்ளது ... இது தொடர்பாக தெகல்காவில் வெளி வந்த செய்தியை படிங்கள் please go to visit this link. thank you.

Anonymous said...

தினமலர் என்கிற பயங்கரவாத பத்திரிக்கையை தமிழர்கள் வேரோடு அழிக்க வேண்டும்.

Anonymous said...

தினமலரின் தோலுரிக்கும் நல்ல பதிவு! தினமலர் பார்பன வெறி கொண்ட நாளேடு. அதன் உயர்ஜாதி வெறியினால் ஏழைமக்கள் பதிப்பை பற்றி அது ஒருபோதும் கண்டு கொள்ளாது. - ரேவதி

Anonymous said...

Every one wanna fight aginst the dinamalar! Roja.

தலைத்தனையன் said...

ஜாம்பவான் ஜப்பானே தப்பவில்லை.
கழுதைக்கு கற்பூர வாசனை தெரிந்தால் என்ன
தெரியாவிட்டால் நமக்கென்ன
உண்மைதனை சொல்லாது வேறுவேலை எனக்கென்ன?

அடப்பாவிகளா ! அணு வெடித்தால்
அதை விட வேகமாய் பறக்கஉனக்கு மனமுண்டு
அணுவுக்குள் சுற்றி வரும் ப்ரோடான் போன்ற
கந்தசாமிக்கும், காதருக்கும் இந்நிலம்விடின் எங்கேடா இடமுண்டு?

வல்லான் வகுத்தது வாழ்க்கை என்றால் இந்நீண்ட நிலத்தில்
மோடிக்கும், பக்சே உக்கும், கோட்சே உக்கும் மட்டுமே
வாழ்கை உண்டு. நல்லான் வகுத்ததே நாடு என்பதனால்,
நல்லாருக்கும் நலமாய் நாடுண்டு.

ஜப்பானில் நடந்ததுபோல் இங்கு நடந்தால்
மக்கள் மண் புழுக்களாய் மாற விடுவர்
தலைவனெல்லாம் தம் மக்களோடு நாடு விடுவர்
சேர்த்த செல்வங்களை தன் செல்லங்களோடு சேர்த்திடுவர்

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.
தும்பை விடுத்து வாலைப்பிடிக்கும் துட்ட குணம் அதை நீ
செய்யாதே. எல்லை மீறிவிட்டால், எமனுக்கு நான் இரை.
எல்லை மீறும் வரை எனக்கு நீ இரை.

Anonymous said...

Wow thalaithanayan u did very greatr comment, but we are number one in the world u guys everybody down Of our thought. We can do every think in India u can't do nothing, ha....ha.... Just u can write like this is not go to make nothing...... Bye bye.... Ha.... Ha.... Yours leaders

Anonymous said...

Tamil... Tamil... U guys only know this Tamil we know every think in the world that's way we are in the top always .... Ok think about that come and learn Hindi, English, Malayalam ....

Anonymous said...

ThalIthanaya u write every think in pure Tamil oh my god I can't understand man.... That's way I don't like Tamil It's funny man....

Anonymous said...

Anonymous said...
இந்த இரண்டையும்விட ஆபத்தானது இஸ்லாமிய பயங்கரவாதம்தான்..////உன் முஞ்சில என் பிஜ்சங்க்கைய வைக்க +++++RSS எதிரி

இப்னு அப்துல் ரஜாக் said...

அணு உலையை விட விஷத்தை கக்குகிறது தினமலம், and rss

Anonymous said...

It's my opinion idinamalar is the dangerous....... Yours ::: murugan

Anonymous said...

Not dinamalar! Every one want to say dinaMalam.

Anonymous said...

Koodankulam is a boon for our Tamil people. It is a major solution for our power needs. All small shops/businesses are getting affected by 6-7 hours power cut.

The Udhaykumar and Two Christian priests are unnecessarily spreading rumors and fear among the people. THis project started 20 years back.

Udhaykumar doesnt have Nuclear physics background. The other two are religious Christian priests who have no idea about nuclear reactors.

All their questions have been answered by the scientific community but still they r opposing. It means they have some conspiracy behind their protest.

All the major fears
* protection from Tsunami
* Radiation leak is only the amount of one Xray radiation for 20 years.

* Before leaving the sea water back to ocean, they cool it down and let it out.

* The sea water is used only for cooling purpose

*No marine life is affected

* There will be more guards and protection. SO it affects only Terrorists and smugglers not true Fishermen

*In case of power failure, there are 4 generators, Wind generated energy facilities etc

Are the scientific community fools to have their houses/housing board near the reactor, wont they want to protect their lives/families if there was a risk?

Stop blindly opposing this.