Feb 22, 2012

இம்சை அரசன் 2012 ம் புலிகேசி!

FEB 23: இந்தியாவில் விவசாயம் அழிந்து வருகிறது. நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் உணவு தேவையை வரும் காலங்களில் நாம் எப்படி சம்மாளிக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஒருபுறம் விவசாயத்திற்கு தேவையான போதிய மழை இல்லாதது மறுபுறம் உரம், விதை போன்றவற்றின் விலை உயர்வால் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வது அன்றாடம் செய்தி ஆகிவிட்டது.

இதுவரை உரங்களின் விலையை கட்டுபடுத்தி வந்த மத்திய அரசு இனி அதை உர கம்பெனிகளே தீர்மானித்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது. இதை தொடர்ந்து உர நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கொண்டு விலைகளை கண்டபடி உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் உரங்களை பதுக்கல் வியாபாரிகள் கள்ளச்சந்தையில் விற்று கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இந்தியாவில் உற்பத்தியாகும் உரங்களுக்கு மத்திய அரசு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. அதையும் அதிக உற்பத்தி செய்ததாக போலி ஆவணங்களை காட்டி கொள்ளை அடிக்கின்றன இந்த உர நிறுவனங்கள்.

இப்படியாக விவசாயிகளை, விவசாயத்தை கவனிக்காத அரசு! வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய மண்ணுக்கு இறக்குமதி செய்வதிலேயே குறியாக இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் தொழில் சாலைகளை தொடங்கி நமக்கு சமூக சேவை செய்ய வந்திருப்பதாக நிறைய மக்கள் தவறாக புரிந்துள்ளார்கள். அவர்கள் இந்தியா வந்திருப்பதன் நோக்கம் குறைவான ஊதியத்தில் வேலைக்கு ஆட்கள், ஊழியர்களின் மருத்துவம் மற்றும் பாதுகாப்புக்கு செலவிடும் தொகை ஆகியவற்றை மிச்சம் பிடித்து நாட்டை சுரண்டவே.

தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை எங்கு வேண்டுமானாலும் கொட்டிவிடலாம். அதற்காக செலவழிக்கும் தொகை மிகவும் குறைவு போன்ற காரணங்களுக்காகவே அத்தனை நிறுவனங்களும் இந்தியாவை நோக்கி படை எடுக்கின்றன. எதிலும் ஒரு முறையான சட்ட திட்டங்கள் பயன்படுத்தப்படாத, ஒரு ஊழல் நிறைந்த நாட்டில்தான் இது போன்ற நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும். இந்தியாவை மொட்டை அடிக்க வந்த கார்பரேட் நிறுவனங்களை வளப்படுத்த வந்த நிறுவனங்களாக நம் தேசபக்தி கயவர்கள் பெய் பிரச்சாரம் செய்கின்றனர். 

இம்சை அரசன் 23 ம் புலி கேசியில் வரும் அரசனை போன்று நம் மன்மோகன் ஆட்சி செய்கிறார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவின் மதவாதம் ஒருபுறமும் அந்நிய முதலாளிகளுக்கு எடுபிடி வேலை செய்யும் எட்டப்பர்கள் மறுபுறமும் என்று இந்தியா ஒளிர்கிறது.  மாவீரன் திப்புசுல்தான், நேதாஜி, போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வழியில்  மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை தொடங்கும் காலம் வந்து விட்டது. விவசாயத்தை அழித்து கட்டிடங்கள், தொழில்சாலைகள் என்று நிறுவி வரும் சூழலில் பஞ்சம் ஏற்ப்பட்டால் மக்களின் நிலைமை அதோ கதிதான். சிறிய நாடு சோமாலியாவுக்கு உணவு கொடுக்க உலகத்தால் முடியவில்லை நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நமக்கு யார் உணவுதருவார்கள்?. 
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

17 comments:

VANJOOR said...

.
.
.
CLICK TO >>>> மாவீரன் திப்பு சுல்தான்- இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- . <<<<<< READ,
.
.

தமிழ் மாறன் said...

தொழில்சாலைகள் மட்டுமா! கூடங்குளம் அணு மின் நிலையங்கள் போன்று நாடு முழுவதும் நூற்று கணக்கான அணு உலைகளை நிறுவ வெளிநாட்டு கர்பெரெட் முதலாளிகள் பணத்தோடு காத்து கிடக்கிறார்கள். அணு உலைகள் ஆபத்தில்லை என்று சொல்ல அபுல்கலாம் போன்ற விஞ்சனிகளும் எட்டப்பன் எடுபிடி வேலை செய்ய காத்து கிடக்கிறார்கள் இந்த சூழலில் மக்களாக விழித்தால்தான் உண்டு. அரபு நாடுகள் போல் ஒரு மக்கள் புரட்சி ஏற்பட்டாலேயே ஒரு மாற்றம் உண்டாகும். இல்லையேல் ஒரு கள்ளன் போன்றதும் மறு கள்ளன் வருவான்.

இப்னு அப்துல் ரஜாக் said...

விவசாயிகள் உள்ள நாட்டில் விவசாயம் பற்றி கவலைப்படாத பிரதமர்,நல்ல ஜோக்

Anonymous said...

PAAVAM VIVASAAYINGA THAAN...

ROMBA ULAKIRAVANGA AVANGA THAAN AANA AVANGALALUKKU THAAN NIRIYA IMPORTANCE KODUKKANUM ...APPUDI KODUTHTHAA NAAMA NAADU SUPERAA IRUKKUM...


NALLAP PATHIVUKKU NANRI

Anonymous said...

உண்மையில் உள்ளம் துடிக்கிறது .
ரத்தக் கண்ணீர் தான் வருகிறது .
ஏன் யாருக்கும் அக்கறை , கவலை இல்லாமல்
போய் விட்டது ?
நீங்கள் வண்ணமயமாக ஹைலைட் செய்து
செய்தி வெளி இட்டு இருப்பது ..
மிக அருமை.

Seeni said...

உண்மைதான் !
என்ன கொடுமையான
விஷயம்!

இருந்தது பெருமை-
விவசாயி நாட்டுக்கே சோறு-
போட்டது!

நடக்குது கொடுமை-
தன் பசிக்கு எலி -
தின்கிறது!

Anonymous said...

nalla pathivu tholare nanri.

Unknown said...

விவசாயிகள் உள்ள நாட்டில் விவசாயம் பற்றி கவலைப்படாத பிரதமர், சிந்திக்க வேண்டிய வசனம்தான்....

PUTHIYATHENRAL said...

வாஞ்சூர் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

//தொழில்சாலைகள் மட்டுமா! கூடங்குளம் அணு மின் நிலையங்கள் போன்று நாடு முழுவதும் நூற்று கணக்கான அணு உலைகளை நிறுவ வெளிநாட்டு கர்பெரெட் முதலாளிகள் பணத்தோடு காத்து கிடக்கிறார்கள். //

சரியா சொன்னீங்கள் மாறன் நன்றி.

PUTHIYATHENRAL said...

அர அல உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. மன்மோகன் சிங் பெரிய பொரளாதார புலி என்று சொன்னார்கள் அவரால் நாடு முழுக்க அணு உலைகளைத்தான் திறக்க முடிகிறதே தவிர வேறு ஒன்றும் உருப்படியாக நடக்க வில்லை. ஆனால் படிப்பு அறிவு இல்லாதவர் மாடுகளோடு குடும்பம் நடத்துபவர் என்று விமர்சிக்கப்பட்ட லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்து நஷ்டத்தில் ஓடிய இந்தியன் ரயில்வே துறையை பலகோடி லாபம் தருவதாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் படித்து பெரிய பொருளாதார மேதையாக இருக்க வேண்டும் என்பது இல்லை மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதை நிவர்த்தி செய்பவராக இருக்க வேண்டும்.

PUTHIYATHENRAL said...

//பாவம் விவசாயிங்கள்//

வணக்கம் கலை பாவம் ஆம் ரொம்பவும் பாவம். ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான். அப்படி இருக்க அவர்களின் நலனில் அக்கறை காட்டாத அரசு ஒரு அரசா.

PUTHIYATHENRAL said...

//உண்மையில் உள்ளம் துடிக்கிறது .ரத்தக் கண்ணீர் தான் வருகிறது . ஏன் யாருக்கும் அக்கறை , கவலை இல்லாமல்
போய் விட்டது ?//

வணக்கம் ஸ்ரவாணி நலமா. உண்மையிலே எங்களை, உங்களை போன்ற மக்களுக்குத்தான் இரத்த கண்ணீர் எல்லாம் வரும். சுகமாக ஏசி காரில் உலாவரும் பிரதமர்களுக்கும், முதல்வர்களுக்கும், அதில் எங்கே அக்கறை இருக்க போகிறது. இலவசங்களை அள்ளி கொடுத்து ஓட்டை போருக்குவதொடு சரி.

PUTHIYATHENRAL said...

//சிந்திக்க வேண்டிய வசனம்தான்//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர் எஸ்தர் சபி அவர்களே! மீண்டும் வாருங்கள் உங்கள் கருத்துக்களை பதியுங்கள். நன்றி.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் விவசாய நன்மக்கள் அனைவர்களின் உண்டாவட்டுமாக ...,,[கடவுள் எனும் முதலாளி கண்டடெடுத்த தொழிலாளி விவசாயி.].,,இப்படிப்பட்ட வார்த்தைகளை வேறு எந்த தொழிலுக்கும் நாம் சொல்லுவதில்லை இந்த நன்மக்களை இந்த சமூகம் கண்டும்காணாமல் விட்டுவிட்டார்கள் அதன் விளைவுகளை நாம் அறுவடை செய்யப்போகின்றோம் ..,, இந்திய நாட்டுமக்கள் சுயமாக அல்லாமல் கட்டாயமாக சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்பது உண்மைதான்..,, நடுத்தரமக்களின் விழி பிதுங்குகின்றது...,,ஏழைமக்களின் வயிறுகாய்கின்றது..,,விவசாய மக்களின் தற்கொலை நாள்தோறும் நடக்கின்றது ..,,வெள்ளையனை விரட்டிய சமுகம் வறுமைக்கோட்டில் வாழ்கின்றது ..,, அரசு பதவிகளில் கருப்பு ரத்தம் ஒடக்குடியவர்கள் அமர்ந்து விட்டார்கள் ..,, இந்த நாட்டுமக்களின் நலன் கருதி திப்புசுல்தானின் வாள் சுழற்ரப்படனும்..,,இப்படிக்கு ....புனிதப்போராளி

PUTHIYATHENRAL said...

//நடுத்தரமக்களின் விழி பிதுங்குகின்றது...,,ஏழைமக்களின் வயிறுகாய்கின்றது..,,விவசாய மக்களின் தற்கொலை நாள்தோறும் நடக்கின்றது ..,,வெள்ளையனை விரட்டிய சமுகம் வறுமைக்கோட்டில் வாழ்கின்றது ..,, அரசு பதவிகளில் கருப்பு ரத்தம் ஒடக்குடியவர்கள் அமர்ந்து விட்டார்கள் ..,//

வாருங்கள் தோழர் புனிதப்போராளி! உங்கள் வருகைக்கும் பொன்னான கருத்துக்களுக்கும் நன்றி. சரியான வார்த்தைக்களில் சொல்லி இருக்கீங்கள். நன்றி.

Anonymous said...

வால்மார்ட் வந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று ஊடகங்கள் மற்றும் தாராளமயதாசர்களால் கொடிபிடிக்கப்படுகிறது. ‘சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால்தான் நாடு முன்னேற முடியும், நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க முடியும்’ என்று நாட்டை ஆளும் பணியை அன்னிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு போட்டி போடுகின்றனர் ஆளும் காங்கிரசு கட்சியும் அதை எதிர்ப்பது போல பாவனை செய்யும் பாரதீய ஜனதா கட்சியும். by: Azad Nellai