ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். அங்குள்ள வெளிநாட்டவர்களில் பெரும்பான்மையினராக 17 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். ஏற்கனவே உள்ள வேலை அனுமதிச் சட்டப்படி, ஒரு தொழிலாளர், தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து இன்னொரு நிறுவனத்துக்குச் செல்ல வேண்டுமானால் அவருக்கு ஆறு மாத காலம் தடை விதிக்கப்படும்.இது குறித்து துபாய் வானொலியில் பேசிய அந்நாட்டு தொழிலாளர் துறை செயல் இயக்குனர் ஹூமைத் பின் டீமாஸ் கூறியதாவது, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள, புதிய வேலை அனுமதிச் சட்டப்படி, அந்தத் தடை ரத்து செய்யப்படும்.இதனால் தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து புதிய நிறுவனத்துக்குச் செல்ல உடனடியாக விண்ணப்பம் அனுப்பி, தனது வேலையை தொழிலாளர் மாற்றிக் கொள்ளலாம். இதற்குக் குறைந்தபட்சத் தகுதியாக, ஒரு தொழிலாளர் ஒரு நிறுவனம் அல்லது தொழில் வழங்குவோரிடம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment