Dec 28, 2010

பினாயக் சென்க்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அநீதமானது :அருந்ததிராய்.


புதுடெல்லி,டிச.29:நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட பினாயக் சென்னிற்கு எதிரான ஆதாரங்களை பரிசோதிக்காமலேயே சட்டீஷ்கர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான அருந்ததிராய் தெரிவித்தார். அஞ்சத்தக்க ஏதோ சம்பவிக்கப் போகிறது என்பதன் அறிகுறிதான் பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட தண்டனை. எவரையும் குற்றவாளியாக்கும் வகையில் இந்தியாவின் பல சட்டங்களும் குறைபாடுடையதாக காணப்படுகின்றன.

டாக்டர் பினாயக் சென்னிற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அருந்ததிராய்.
இப்போராட்டத்தை ஆல் இந்தியா விமன்ஸ் ப்ரோக்ரஸிவ் அசோசியேசன் மற்றும் ஆல் இந்தியா ஸ்டுடன்ஸ் அசோசியேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. சென், ப்யூஸ்குஹா, நாராயண் சன்யால் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றுக்கொன்று முரணானது என அருந்ததி தெரிவித்தார்.

பீதி வயப்படுத்தும் ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகின்றது என்பதன் அடையாளம்தான் பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட தண்டனை. கடந்த காலங்களில் சென் அனுபவித்த சிறைவாசமும், சித்திரவதைகளும் அவருடைய வாழ்வையும், பணியையும் சிதைத்துவிட்டன. இவ்வாறு அருந்ததிராய் உரை நிகழ்த்தினார். சென்னின் மீது தேசத்துரோக குற்றத்தை சுமத்தினால் என்மீதும் அந்த குற்றத்தை சுமத்தலாம் என சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார்.

பினாயக் சென் ஆத்மார்த்தமாக பணியாற்றும் நபராவார் என பாராட்டிய அக்னிவேஷ், எவரை உலுக்கச் செய்வதுதான் பினாயக் சென்னிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு என்றும் தெரிவித்தார். பினாயக் சென்னிற்கு நக்ஸலைட்டுகளுடன் தொடர்பிருக்கிறது என்பதற்கு அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தை வாசித்தால் எவரும் சிரித்துவிடுவர். சிறையில் மாவோயிஸ்டுகளை சந்தித்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், சென் சிகிட்சை அளிப்பதற்காகத்தான் அவர்களை சந்தித்தார் என அக்னிவேஷ் தெரிவித்தார்.

நீதியின் கருவை கலைக்கும் தீர்ப்பு என சமூக சேவகரான கவ்தம் நவ்லாகா தெரிவித்தார். இப்போராட்டத்தில் சமூக சேவர்கள், அறிஞர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பினாயக் சென்னிற்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு நகைக்கத்தக்கது என டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் முதன்மை நீதிபதி சச்சார் அஹ்மதாபாத்தில் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு சேவகம் புரிபவர்கள் ஆபத்தில் இருக்கின்றார்கள் என்பதை இந்த தீர்ப்பு தெளிவுப்படுத்துகிறது. இதற்கெதிராக போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாவோயிஸ்டுகளின் சித்தாந்த குருவாக கூறப்படும் சன்யாலை பிரக்யா சென் போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் சந்தித்துள்ளார். அவ்வாறெனில் அங்கு வைத்து எவ்வாறு ரகசிய கூட்டம் நடத்த இயலும்? என நீதிபதி சச்சார் கேள்வி எழுப்பினார். இன்று சென், நாளை சமூக சேவகர்களுக்கெதிராகவும் இத்தகைய வழக்கு பதிவுச் செய்யப்படலாம். அரசுக்கெதிராக எவரும் குரல் எழுப்பினால் அவர்களை இதே குற்றத்தை சுமத்தி சிறையிலடைக்கலாம். இதனை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு சச்சார் தெரிவித்தார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.

No comments: