காந்திஜி நடத்திய இந்திய சுதந்திர போராட்டத்தில் அவருக்கு துணையாக அபுல்கலாம் ஆசாத், முஹம்மது அலி, ஷவுக்கத் அலி,ஹஸ்ரத் மொஹானி, ஸெய்புத்தீன் கிச்லு, டாக்டர்.எம்.எ. அன்ஸாரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அறிஞர்களுடன் ஒன்றிணைந்தார். அதன் பயனாக, 1920 ஆம் ஆண்டு கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்கள் உருவாகின.
கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்களின் முக்கிய செயல்திட்டமாக ஆங்கிலேய அரசுக்கு வரி செலுத்தமாட்டோம் என பிரகடனப்படுத்தினார் காந்திஜி. இந்திய குடிமக்களை பொருளாதார ரீதியாக சுரண்டும், துயரத்தில் ஆழ்த்தும் அந்நிய ஆக்கிரமிப்பு அரசுக்கு வரி கட்டாதீர்கள் என்ற வேண்டுகோளை பெரும்பாலானோர் நடைமுறைப்படுத்தியது ஆங்கில அரசுக்கு சவாலாக விளங்கியது.
இதனை எழுதும் வேளையில் நம்முன்னால் நிழலாடுகிறது ஒரு நிகழ்வு. ஏகாதிபத்திய சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் முதன்முதலாக வரி செலுத்தமாட்டோம் என பிரகடனப்படுத்தியது காந்திஜியோ அல்லது கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்களோ அல்ல என்பதுதான்.இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களின் எங்கோ ஒரு மூலையில் கவனிப்பாரற்று கிடக்கும் ஓர் தீரமிக்க முஸ்லிம் தலைவர்தான் அவர். ஆம், காந்திஜியும், அவரது தோழர்களும், அவர்கள் உருவாக்கிய இயக்கங்களெல்லாம் ஆங்கிலேயனுக்கு எதிராக போராட துணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் கேரளாவின் தெற்கு மலபாரில் பொன்னானி தாலுகாவில் ஒரு தீரமிக்க முஸ்லிம் வீரர் உமர்காழிதான் அவர்.
ஆங்கிலேயனுக்கு வரிசெலுத்தமாட்டோம் என அறிவித்த காரணத்தினாலேயே சிறைவாசத்தை அனுபவித்தவர் அவர். அரபு மொழியிலும், மலையாளத்திலும் அழகான கவிதைகளை வடித்துள்ள மார்க்க அறிஞரான உமர்காழியை இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறிலிருந்து மாற்றி நிறுத்தவே முடியாது என்பதுதான் உண்மை. துரதிர்ஷ்டவசத்தால் அவர் இந்திய மக்களிடம் பிரபலமடையாமல் போனார்.
காந்திஜி உள்ளிட்ட கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இது இயக்கத் தொண்டர்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியது.
போராட்டம் நாள் செல்லச் செல்ல தீவிரமடையத் துவங்கியது.அரசு கல்விக் கூடங்களையும், நீதிமன்றங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்பது இப்போராட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் உள்ளிட்டோர் படிப்பை உதறினர். ஜமால் இபுராஹீம் சாஹிப் என்பவர் மிக உயர்ந்த கெளரவ மாஜிஸ்ட்ரேட் பதவியை 1920 ஆம் ஆண்டு ராஜினாமாச் செய்தார்.
தேச விடுதலைக்காக, ஆங்கிலேயருக்கு தங்களது தார்மீக எதிர்ப்பை காட்டுவதற்காக தங்கள் பதவிகளையும், அந்தஸ்துகளையும் துறந்த முஸ்லிம்கள் பலர் உள்ளனர். கல்வி நிலையங்களை விட்டு வெளிவந்த பலரும் கல்வியில் சிறந்து விளங்கியவர்கள். இவர்கள் தங்கள் கல்வியைத் தொடரவேண்டும் என்பதற்காக குஜராத் வித்யா பீடம், காசி வித்யா பீடம், ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா போன்ற கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டன.
இந்த நேரத்தில் நாம் முக்கியாமாக ஒன்றை நினைவு கூற வேண்டியது உள்ளது. காந்திஜி நடத்திய சுதந்திர போராட்டத்திற்கு முஸ்லிம்கள் தங்கள் படிப்பையும், உயர் பதவிகளையும் துறந்துவிட்டு உறுதுணையாக இருந்தார்கள். ஆனால் இந்த பிராமண வந்தேறி பாசிச ஹிந்துத்துவா சிந்தனை படைத்தவர்களோ வெள்ளைகாரர்களுக்கு சேவகம் செய்து உயர் பதவிகளில் இருந்து கொண்டு வெள்ளையர்களுக்கு சுதந்திர போராட்டவிரர்களை காட்டி கொடுத்தார்கள். பின்னர் தங்கள் ஹிந்து ராஜிய கனவுக்கு காந்திஜி இடைஞ்சலாக இருப்பார் என்று அவரையும் சுட்டு கொன்றார்கள்.
வெளிநாட்டு ஆடைகள் புறக்கணிப்பு, மதுவை ஒழிப்பு ஆகியவையும் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய பகுதிகளாக விளங்கவேண்டுமென காந்திஜியும், மெளலானாக்களும் தீர்மானித்தனர். ஏராளமானோர் தங்களுடைய விலைமதிப்புள்ள ஆடைகளை தீக்கிரையாக்கினர். பிரிட்டீஷ் துணி ஆலை முதலாளிகளை தோற்கடிக்கவும், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மைக்கு ஓரளவு பரிகாரம் காணவும் எல்லா இந்தியர்களும் கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைகளையே அணியவேண்டும் என காந்திஜி உபதேசித்தார். இவ்வாறு நெய்யப்பட்ட ஆடை கடினமாக இருந்தாலும் மதிப்புடன் அதனை அணியத் துவங்கினர் இந்திய மக்கள். இந்த ஆடைக்கு கத்ராடை எனப் பெயரிட்டவர், என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன என்று காந்திஜியால் வர்ணிக்கப்பட்ட அலிசகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள்தான். அவர்தான் தான் கைராட்டையில் நெய்த துணியை காந்திஜிக்கு அளித்து, இதனை கத்ராக(கெளரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் இந்த ஆடைக்கு கதர் ஆடை என பெயர் வந்தது.
ஒரு கோடி ரூபாயை திலகர் சுயராஜ்ஜிய நிதிக்கு வழங்கியதற்காக, முஸ்லிம் தொழிலதிபர் உமர் சுப்ஹானியின் ஆலைத்தொழிலை முடக்குவதற்கு ஆங்கிலேய அரசு செய்த சதியால் சுப்ஹானிக்கு அன்று ஏற்பட்ட இழப்பு மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம்.
அந்நியத்துணி புறக்கணிப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்த வேளையில், "அந்நியத் துணிகளை உங்கள் ஆலைகளில் எரியூட்டலாமா?" எனக்கேட்ட காந்திஜியிடம், உமர் சுப்ஹானி அளித்த பதில் இதுதான்: "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படவாப் போகிறது" என்பதாகும். அந்நியத்துணிகளை புறக்கணிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.
மது வியாபாரத்தின் மூலம், அதன் உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலேய அரசுக்கும் வரிகள் மூலம் ஏராளமான தொகை போய் சேர்ந்தது. இதனைத் தடுக்கும் நோக்கில் மது ஒழிப்பு பிரச்சாரத்துடன் வெளிநாட்டு மதுபானக்கடைகள், கள்ளுக்கடைகள் மறியல் போராட்டம் நடத்துவோம் என காந்திஜி உத்தரவிட்டார். அதனை செயல்படுத்திய ஹாஜி முஹம்மது மெளலானா சாஹிப் உள்ளிட்ட பலரும் சிறைச் சென்றனர்.
நாடுமுழுவதும் அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகத்தின் துவக்கமாக 1930 ஆம் ஆண்டு மே ஆறாம் நாள் காந்திஜி கைதுச் செய்யப்படுகிறார்.அதனைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்றனர். இவ்வாறு இந்தியாவில் சுதந்திரத்திற்காக காந்திஜி நடத்திய அகிம்சை போராட்டங்களுக்கு பெரும் ஆதரவை அளித்தவர்கள் முஸ்லிம்கள். அதனால்தான், காந்தி ஒருமுறை கூறினார், இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா உமரின் ஆட்சி இந்தியாவிற்கு தேவை என்று. ஆம், அமைதியான தேசமாக இந்தியா உருவாக வேண்டும் என்பதுதான் காந்தியின் நோக்கம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கும் விஷ விருட்சமாக வளர்ந்த ஹிந்துத்துவா பாசிசம் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவின் தேசத் தந்தையான காந்திஜியை சுட்டு வீழ்த்தியது. சாகும்பொழுது ‘ஹே ராம்! ஹே ராம்! என அவர் முனகியதாக கதைக் கட்டியது ஒரு கூட்டம். பின்னர் இது பொய் என நிரூபணமானது.
காந்தியை சுட்டுவீழ்த்திய கூட்டம்தான் பாப்ரி மஸ்ஜிதையும் தகர்த் தெறிந்தது. இந்தியாவில் வாழும் ஆயிரக்கணக்கான சிறுபான்மை இனத்தவரின் உயிர், உடைமைகளை கலவரங்களின் மூலம் பறித்ததும் இக்கூட்டம்தான். காந்தி கொலையில் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்ற வீரசாவர்க்கரின் உருவப்படத்தை பாராளுமன்றத்தில் காந்தியின் படம் இடம் பெற்றிருக்கும் இடத்தில் வைத்து அவமானப்படுத்தியது பாசிச கும்பல். காந்தியை நினைவுக்கூறும் வேளைகளில் பாசிச கும்பலின் சதி வேலைகளையும் நினைவுக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ஏனெனில் காந்தி விரும்பியது ஹிந்து ராஷ்ட்ரம் அல்ல! அமைதியான இந்தியாவை!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Dear br please put it source
aduththavarkalin muyarchikku chontham kondaduvathu maarkkaththil haraam. so pls put it source. avarkalin kadina muyarchiyai veenaakkaatheerkal. muthalil media tharmaththai arinthukollavum. thankalin pani thodara vaazththukkal
Dear brother நீங்கள் தவறாக புரிந்திருகிரீர்கள் . source யில் யார் பெயரை போடுவது என்பதுதான் இபோது கேள்வி. யாராவது தங்கள் சொந்த கருத்தாக்கத்தால் எழுதப்பட்ட கட்டுரைகளை source இல்லாமல் போடுவது தவறுதான். அப்படி எதுவும் இருந்தால் சொல்லுங்கள். இந்த செய்திக்கு நான் சொந்தகாரன் என்று சொல்லவில்லை. அதை நான் எழுதியதாகவும் குறிப்பிடவில்லை. இதை முழுமையாக நான் உருவாக்காவிட்டாலும் அதில் இந்த கட்டுரையில் நிறைய திருத்தங்களை நான் செய்துள்ளேன். நான் நிறைய திருத்தங்களை செய்து அதை அந்த குறிப்பிட்ட நபர் எழுதியதாக போடுவது சரியில்லை என்ற காரணத்தால் தான் அதில் source குறிபிடப்படவில்லை. அடுத்து நான் நிறைய செய்திகளுக்கு source குறிப்பிட்டு உள்ளேன். உதாரணத்துக்குதிற்கு நிறைய சொல்ல முடியும். தேஜஸ் இல் வந்த செய்திகளுக்கு, அது போல் பசுமை பக்கங்கள் என்ற ப்ளோகில் வந்ததற்கு ஆசிரியர் படத்துடன் செய்தி போட்டிருந்தேன். விந்தை மனிதர்கள் ப்ளோகில் வந்ததற்கு அதன் பெயர் போட்டிருந்தேன். இதில் வரும் படங்கள் எல்லாம் நான் டிசைன் செய்து போடுவது. அது போல் நிறைய செய்திகளை பார்க்க முடியும். நீங்கள் குறிப்பாக எந்த செய்தி என்று சொன்னால் என்னால் விளக்கம் அளிக்க முடியும். நான் நிறைய செய்திகள் தினமலர், தினமணியில் இருந்தும் எடுத்து போடுகிறேன் அதற்க்கு நான் soure போட முடியாது. ஏன் என்றால் அந்த செய்திகள் ஒன்றும் அவர்களின் சொந்த செய்திகள் இல்லை அவர்கள் b b c யில், c n n இருந்து எடுத்து போடுவதுதான். மற்றபடி இது வியாபார நோக்கில் நடத்தபடுவதும் இல்லை. சகோதரின் ஆலோசனைகள் விமர்சனங்கள் தொடர்ந்து வரவேற்க படுகிறது. நீங்கள் எதையாவது குறிப்பிட்டு source போடச்சொன்னால் அதற்க்கு போடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
Post a Comment