Feb 8, 2013

தமிழர்களுக்கு எதிராக தொடரும் இந்தியாவின் துரோகம்!

பிப் 08/2013: கொடுங்கோலன் இராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல் நிலையத்தை "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70க்கும் மேற்ப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். 

இதனால் தபால் நிலையம் இழுத்து மூடப்பட்டது. மேலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்சே ஆகியோரின் கொடும்பாவிகள் அண்ணா சாலையில் கொளுத்தப்பட்டன. இத்துடன் இலங்கையின் தேசியக்கொடியும் கொளுத்தப்பட்டன.

சிந்திக்கவும்: தமிழர்கள் ஒன்றுபட்டு சிந்திக்க வேண்டிய காலம் இது, இலங்கை இறுதி யுத்தத்தை நடத்தியதே இந்தியாதான். இந்தியாவின் முழு ஆதரவோடும், ஆசியோடுதான் இனப்படுகொலையே அரங்கேறியது.

தமிழர்களின் விடுதலை போராட்டம் வலு பெற்று வரும் நேரம், அமைதி படை ஒன்றை அனுப்பி விடுதலை போராட்ட வீரர்களோடு சண்டை இட்டு போராட்டத்தை நசுக்க நினைத்தது இந்தியா இதை தமிழர்கள் மறந்து விடவில்லை. 

பஞ்சாப் பொற்கோவில் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்ட பொழுது அந்த ராணுவத்தில் தமிழர்கள் அதிகம் இருந்தார்கள். அதனால் ஈழத்திற்கு அமைதி படையாக சென்ற இந்திய ராணுவத்தில் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் அதிகம் அனுப்பப்பட்டனர். அவர்களிடம் சொல்லப்பட்டது இதுதான் உங்களுக்கு பழிவாங்கும் சரியான நேரம் என்று.

ஈழப்போராட்டத்திற்கு எதிராக, இந்த அளவுக்கு மோசமான கீழறுப்பு வேலைகளை செய்தது இந்திய அரசு. இந்தியாவை பொருத்தவரை ராஜபக்சே இந்தியாவின் நண்பர், அதனால் வரை தலைக்கு மேல் வைத்துதே கொண்டாடும். இனி தமிழர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் நமக்கு இந்தியா என்கிற ஒரு நடுவண் அரசு தேவையா என்பதை? 

தமிழக மீனவர் படுகொலைகளை இன்றுவரை கண்டு கொள்ளாத ஒரு அரசோடு நாம் ஏன் இணைந்திருக்க வேண்டும். நாம் முதலில் போராட வேண்டியது ராஜபக்சேவுக்கு எதிராக அல்ல, இந்தியாவில் இருந்து விடுதலை பெறுவதற்காக நாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு கழிந்து விட்டது, இந்தியாவின் பிரதமராக ஒரு தமிழனுக்கு கூட தகுதி இல்லையா? 

தமிழர்களே சிந்திப்பீர்! செயல்படுவீர்!

No comments: