Mar 26, 2012

நீதி மறுக்கும் நீதித்துறைகள்!

March 27, சென்னை: 1). போலீஸ் அராஜகம்: மெரினா கடற்கரையில் தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் தமிழக பெண்கள் செயற்கழகம் ஆகியவை இணைந்து  அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

அவர்கள் அணு உலையின் பாதிப்பை விளக்கும் பதாதைகளை ஏந்தி போராட்டடம் செய்தனர். இதை பொறுக்காத காவல் துறை எட்டு மாத கை குழந்தை முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது.  இதில் கலந்து கொண்ட குழந்தைகள் அணு உலையின் பயங்கரத்தை விளக்கி முழக்கம் இட்டது பொது மக்கள் அனைவரையும் கவர்ந்தது.

2) அரசின் எடுபிடியாகி போன நீதித்துறை: கலெக்டரின் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர்கள் டாக்டர் வி.சுரேஷ், புகழேந்தி, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர், மனு தாக்கல் செய்தனர். ராதாபுரம் தாலுகாவில் உள்ள, 50 கிராம மக்களை, வீட்டுச் சிறையில் அடைத்தது போல் உள்ளது என்றும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கும் வகையில், தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டது. ஆனால் அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

3). சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படும் நீதி: பாபர் மசூதி இடிப்பு வழக்கு முதல் குஜராத் இனப்படுகொலைகள் வரை சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே நீதித்துறை செயல்பட்டு வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் இனப்படுகொலை வழக்கில், முதல்வர் மோடிக்கும் தொடர்புள்ளது. இது தொடர்பாக விசாரித்து வரும் நானாவதி கமிஷன் கலவரத்திற்கு காரணம் மோடி தான் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நானாவதி கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. குஜராத் கலவரத்தை ஒரு தளபதிபோல் மோடியே முன்னின்று நடத்தினார் இது உலகம் அறிந்த உண்மை ஆனால் இது நமது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தெரியவில்லை போலும்.  

3 comments:

Seeni said...

paavikale!

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நீதியாளர்களின் மீது உண்டாவட்டுமாக.....பாதிக்கப்பட்டவனின் கண்ணீருக்கு அநீதியாளர்கள் கண்டிப்பாக வருந்தும் காலம் வராமல் போகாது ...நீதிபதிகளில் யாராவது நல்லவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்கும் என்று பொறுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை நீதிபதிகள் அரசுத்துறையில் அமர்ந்திருக்கும் அதிகாரிகள் உணரனும் இவர்களில் சில நல்லமனிதர்கள் இருப்பதினால்தான் இந்தியா இருளாமல் இருக்கின்றது....,,வினைவிதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி மோடி விதைத்ததை மோடி அறுவடை செய்யத்தான் போகின்றான் இது இந்தியமக்கள் பார்க்கத்தான் போகின்றனர்..,,,ஆயுத பலம் கொண்ட அரசாங்கம் அடக்குமுறைக்கு மக்களை உள்ளாக்குகின்றது இதை மக்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள் மக்கள் புரட்சி வெடிக்கும் அநிதியாளர்கள் அரை டவுசருடன் திரியப்போகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் .....இவன்..புனிதப்போராளி

VANJOOR said...

பாலக விபசாரிகள், கொடூரமாக தெருவில் கொல்லப்படும் ஆதிவாசி தொழிலாளிகள்.

கதற கதற நொறுக்கப்படும் சிறுமி, கற்பழிக்கப்பட்ட பெண்கள். , மேல் சாதியினரால் நாக்கு அறுக்கப்பட்ட கீழ் சாதியினர்கள்.
பிராமிணர்களின் எச்சில் இலை மேல் உருளும் கீழ் சாதியினர்கள்.

Brahmanism, "Mar jao Katuo" (die you muslim).
Sign of brutality of communal fascism in Meerut of India,

Tamil Police Corruption caught on camera, Tamil Nadu Police Real Face,

நாம் திருந்துவது எப்போ? நாம் பிறரை குறை சொல்லுமுன் நம்மை நாம் சிந்திப்போமா?

இக்காரியங்களுக்கு எந்த மதத்தின் மீதாவது சாயம் பூச முடியுமா?


CLICK >>>>>>>>
இதுதான் சுதந்தர இந்தியாவா ? கண்டிருக்கிறீர்களா இந்த கொடூரத்தை? நாம் திருந்துவது எப்போ?
<<<<<< TO READ

.