Sep 2, 2012

கயமையே உன்பெயர்தான் உளவுத்துறையா?


Sep 03: அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் முக்கிய  பிரமுகர்களை கொலைச் செய்ய திட்டமிட்டதாக சில நாட்களுக்கு முன் பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் சில படித்த முஸ்லிம் இளஞ்சர்கள் கைது செய்யப்பட்டனர். 
இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட  வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திகளை கொடுத்துள்ளது  உளIவுத்துறை. அச்செய்திகளுக்கு வழக்கம் போல கண், மூக்கு, காது வைத்து திரித்து எழுதி சிறுபான்மை எதிர்ப்பு உணர்வை தீர்த்து கொண்டன நமது மேல்ஜாதி பார்பன ஊடகங்கள்.
இந்த இளஞ்சர்களை பிடித்து சென்ற காவல்துறை இவர்களை எங்கே வைத்திருக்கிறோம், இவர்கள் மீது என்ன வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் அவர்களை தவிக்கவிட்டுள்ளனர். மேலும் இவர்களை சட்ட பூர்வமாக ஜாமீன் எடுக்கும் முயற்ச்சியை முடக்க பிர் நகலை கொடுக்க மறுத்துள்ளனர். இதன் மூலம் ஜனநாயக மற்றும்  சட்ட ரீதியான உரிமைகள் கூட முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் முஸ்லிம்களின் வாழும் அடிப்படை உரிமைகள் கூட கேள்வி குறியாகி உள்ளது.   மேலும் இந்த இளஞசர்கள் இதுவரை எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட்டவர்கள் இல்லை. இதில் ஒருவர் டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர் மற்றும் ஒருவர் என்கிற மத்தியஅரசின் கீழ்வரும் துறையில் வேலை செய்பவர், மேலும் இருவர் பிரபல முஸ்லிம் மதகுருவின் பேரப்பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்திய பயங்கரவாத உளவுத்துறை சிறுபான்மை மக்களுக்கும், தலித்களுக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான சதிவலைகளை பிண்ணி வருகிறது. முஸ்லிம்களை மனோரீதியாக ஒரு குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதே இதன் நோக்கம். தேர்தலில் ஜெயிக்க வேண்டுமா சிறுபான்மை மக்களில் சிலரை பிடித்து உள்ளே போடு பின்னர் அவர்களை நாங்கள் விடுதலை செய்கிறோம் பேர்வழி அதனால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லி ஒருபுறத்தில் கயமை அரசியல் மறுபுறம் ஹிந்துத்துவா சிந்தனை படைத்த காவல்துறை மற்றும் உளவுத்துறையால் இந்திய முஸ்லிம்கள் படும் துயரம் சொல்லில் அடங்காதது. முஸ்லிம்களின் கடைசி புகலிடமான நீதிமன்றங்களோ தொடர்ந்து முஸ்லிம்களை வஞ்சித்தே வந்துள்ளது. இந்த நிலை தொடருமேயானால் அது இந்தியாவை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயம் இல்லை.
*மலர்விழி*

2 comments:

மர்மயோகி said...

குஜராத் பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த செய்தியிலிருந்து மக்களை திசை திருப்ப இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவே படுகிறது...வாழ்க ஜன நாயகம்

Anonymous said...

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற கனவோடு பாரதிய ஜனதா அரசு சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை இவ்வாறு செய்கிறது பாரதிய ஜனதா அரசு மண்ணை கவ்வுவது நிச்சயம் .