May 19, 2011

படையப்பா........ படுத்திரியப்பா!!!!

May 20, செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள்.

யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்?

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம். (sinthikkavum@yahoo.com).

அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?

செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன் இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்?

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களைப்போய் பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள், முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன்... பேசினேன்... இப்படி அறிக்கைகள் பறக்கின்றன. மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள்.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போய் பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு(!) கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட இல்லை.

இதை பற்றி எழுதுங்கள், கவலைப்படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை எப்போது மாறும்? நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

இந்த பத்திரிக்கைகள்தான் ஆதிக்க சக்திகளின் கைகளில் போய்விட்டது என்று பார்த்தால், மீதம் இருக்கும் இந்த வலைத்தலங்கலாவது உருப்படியாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசும் என்றால்...? இவர்களும் சினிமாவிற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நல்ல பதிவர்கள் கூட சினிமா செய்திகளை போட்டால்தான் தங்கள் இணைய தளத்தையும், தான் போடும் போஸ்ட்களையும் முன்னுரிமை தருவார்கள் என்ற மனநிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்களோ என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.

"எந்திர" தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.
அன்புடன்: ஆசிரியார் புதியதென்றல் (sinthikkavum.net)

49 comments:

Diamond said...

நான் உங்களின் ஆதங்கத்தை ஆதரிக்கிறேன் தோழரே

மிகவும் அருமையான பதிவு மக்களும் மற்ற பதிவர்களும்

சிந்திக்கவேண்டும்...

Anonymous said...

இதை ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து பார்க்கவேண்டிய விஷயம். அதுபோல் திரட்டி நடத்தும் நண்பர்கள் இதுபோல உள்ள பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவது பதிபவர்களை உற்சாகப் படுத்தும். அதுபோல் நிறைய மக்கள் படித்து பயன் பெற வசதியாக இருக்கும்.

Anonymous said...

அருமையான பதிவு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Vasudevan said...

அருமையான பதிவு , மேன்மையான சிந்தனை , வாழ்த்துக்கள்

நர்மதன் said...

முற்றிலும் உண்மை

Anonymous said...

ரஜினிக்கு உடல் நிலை சரியில்லை என்ற துக்கத்தில் ஒரு ரசிகன் தற்கொலை செய்து கொண்டானாம். ஒரு செய்தி படித்தேன் எப்ப திருந்த போறாங்களோ தெரியல.

Anonymous said...

very good artical i like it.

Anonymous said...

OVVORU THAMILANUM SINTHIKKA VENDIYA VISAYAM ITHU.

nakkeeran said...

அன்புடன் சிந்திகவும் விதியாசமாக எழுதி பெயர் வாங்க இது நல்ல முயற்ச்சி. திரு ரஜினி நல்ல மனிதர்.வாய்பு இருந்தும் அரசியலுக்கு வராமல் இருந்ததெ மிக நல்ல செயல். இது எந்திர தனமில்லை மனிதாபிமானம். பிராதிப்பது தவறில்லை. நல்ல மனம் வேண்டும். நட்புடன் நக்கீரன்

Anonymous said...

WELLDONE TO SINTHIKKAVUM.COM. IT IS SIMPLY AWESOME. IT IS AWAKENING THE BRAIN WASHED ALL CINE FANS OF TAMIL NADU.

ALL OTHER WEBSITE RUNNERS, PLEASE HAVE SOCIAL REFORMING SENSE FROM THIS BLOG

-MOHAMED THAMEEM

PUTHIYATHENRAL said...

அன்புள்ள நக்கீரன் அவர்களுக்கு, அவருக்கு வாய்ப்பு இருந்தும் அரசியலுக்கு வரவில்லை என்பதால் யாருக்கு நஷ்டம்! அது அவருக்குதான் நஷ்டம். அவர் அரசியலுக்கு வந்தால் அவர் செய்யும் மக்கள் சேவைக்கு தகுந்தமாதிரி மதிக்கப்படுவார்.

எனக்குதான் நல்ல மனது இல்லை பரவாயில்லை. நல்ல மனது உள்ள ரஜினிகாந்த் தமிழக மக்களுக்காக என்ன செய்தார் அதுதான் நம் முன்னே நிற்கும் கேள்வி.

ஈழதமிழர்கள் கொல்லப்படும் போது, அண்ணா காஸாரே போல் அட்லீஸ்ட் ஒரு உன்னாவிரதமாவது இருந்தாரா? இல்லை!! தமிழக மக்களை, தங்கள் ரசிகர்களை ஒன்று கூட்டி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தாரா? அதுவும் இல்லை.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது அவர் துயர் துடைக்க குரல் கொடுத்தாரா? அதுவும் இல்லை. தமிழ் நாட்டில் இவரை காட்டிலும் எத்தனையோ நல்லமனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் உடல் சரியில்லை என்றால் நீங்கள் இப்படித்தான் கூப்பாடு போடுகிறீர்களா?

ஏன் அவர்கள் ஏழை என்பதாலா? இவர் நடிகர், பெரும் கோடிஸ்வரர், இவர் நமது கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் அல்லது பிரச்சாரம் பண்ணவேண்டும், இவர் பின்னால் கொஞ்சம் விசிள்ளடிச்சான் குன்சிகள் இருகிறார்கள் இவர்களை வைத்து தேர்தல் வேலை வாங்கி கொள்ளலாம் என்று ஒட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள் பார்கிறார்கள்.

அதனால் இந்த ஒட்டு பொருக்கி அரசியல்வாதிகள் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அங்கலாயிக்கலாம் மற்றவர்களுக்கு இதில் என்ன வேலை. ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் உறவு இருக்கிறது அவர்கள் அதற்காக வேண்டி கவலைபடுவது பிரார்த்திப்பது நியதி.
அது அல்லாமல் வேறுஒருவருக்கு இப்படி செய்வதின் நோக்கம் என்ன?

இனிமேல் நான் எங்கள் ஊரில் உள்ள நல்ல மனிதர்கள், நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் இப்படி நிறைய வயதானவர்கள் சுகமில்லாமல் இருக்கிறார்கள் இவர்களை பற்றிய ஒரு லிஸ்ட் வெளியிடுகிரீன், இதுபோல் நீங்கள் எல்லா இணையதளங்களும், அவர்கள் நலம் அடைய பிரார்தனை செய்வதும், அவரை போயி பார்க்கவும் செய்வீர்களா?

எந்த ஒரு மனிதன் சுகவீனம் அடைந்திருந்தாலும் அவன் நலம் பெறவேண்டும் என்று பிரார்த்திப்பது போது வீதி. அதை ஏன் நீங்கள் ஒரு தேசிய துக்கம் போல் காட்டுகிறீர்கள் என்பதுதான் இந்த அடியேனின் கேள்வி. கட்டுரையை திரும்ப ஒரு முறை படித்து பாருங்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சமூக அக்கறை உள்ளது. நமது பேச்சும் எழுத்தும் பணக்காரன், எல்லாம் இருப்பவனின் புகழ் நலம் பாடுவதிலேயே கழிகிறது. அதை விட்டு ஒழிக்கவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். வித்தியாசமாக எழுதி புகழ் சேர்க்க தேவை இல்லை. நடிகையின் தொப்புளை காட்டி படம் போட்டு செய்தி போட்டால் போதும். அதைதானே பெரும்பாலான இணையதளங்கள் செய்கின்றன. சிந்திக்கவும் இணையத்தளம் அதில் இருந்து வித்தியாசபட்டது.

நண்பரே யாரும் புகழ்வார்கள் என்று இது எழுதப்படவில்லை. சமூக அக்கறையோடு சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன் ஆசிரயர்.

Anonymous said...

அவர் சிறந்த நடிகர். திரைக்கு வெளியே. அவர் நல்ல மனிதர் கூட அல்ல. சுய நலவாதி, காரியவாதி, நம்பிக்கை துரோகி. அவர் வாழ்வின் ஒரே இலட்சியம் உலகப் பேரழகியுடன் ஜோடி சேர்ந்து ஸ்டைல் (!) காட்டுவது - படையப்பா காலத்திலிருந்து. அதை கச்சிதமாக சாதித்துக் கொண்டார், சன் பிக்சர்ஸ் துணையுடன். பிறகு தன் சுயரூபத்தைக் காட்டி, பெரிதும் மதித்து நட்பு பாராட்டிய, அந்த கட்சியின் முதுகிலே குத்தினார், ஏப்ரல் 13 அன்று. அந்த பாவம் சும்மா விடுமா. மறுபடியும் தன் பச்சோந்தி தனத்தைக் காட்டிய மே 13 அன்று அதற்குரிய தண்டனை கிடைத்தது. மனிதனாகவே இருக்க அருகதை இல்லாத ஒருவருக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா ... உங்கள் வீட்டில் ஒட்டடை இருக்கும். அதை சுத்தப் படுத்தி உருப்படியாக ஒரு வேலையைப் பாருங்கள்.

THAMILAN said...

Anonymous avrkale neega dmk kaarara...
rajini sehchathu sarithaan...
PUTHIYATHENRAL solvathum sarithan..

Anonymous said...

அவரின் ரசிகர்களை ஆண்டவன் கூட காப்பாற்ற மாட்டார் ....

Anonymous said...

nangal sinthipathu irukatum

ungaluku yen intha thider atkarai....poi neengal muthalil polapai parungal...

eppidida post ku hit kidaikum endrum varinthu katti kondu vanthu viduvathu

ungaluku ellam veru velai illaya...........

Rajini...nadikan enbathai maranthu oru manithar...

nenjil eramula manithar...avar udalnilai seri ilatha pothu avarai...patri thotra vendam ac\var nalam pera valthalamaey illai mooditu orama irukalamaey...ethuku intha panchyathu...

enna sathika pogirirgal ithanal

insru intha post ai padithu 10 nimidam waste.....

oruvar nalam pera vendum endru virumbi eluthu intha bathilal 15 numidam gain

oruvar udal nilai seri illamal irukum pothu ippidi nerathuku kathirunthu ungal sinthanaiyai parapum ungal suyarubam therigirathu

thirunthu illana vechiduvanga marunthu...

rajini oru manthithar enkindra murayil avara nalam pera andavanai vendukiraen


Padayappa pattaya kelapura poruthirunthu parkavum


- Muthu

Unknown said...

Atrocious... you have lots of things to write by which you can create social awareness.. you understand this, here not only the Rajini fans are praying for him.

you were also written about him to get popular.. when thousand people said he is good and if one said he is bad, then he will get the attention from others. thats what u doing,.

Have u done anything which u had written in your blogs.. As i have seen, most of your posts were copy paste from articles which has been published in newspapers and magazines.

Think thousand times before writing bad about others... just think atleast once how much worth are u before writing bad..

best wishes for ur forthcoming good posts...

Arun.

Anonymous said...

ரொம்ப அருமையான ஆக்கம் இது. ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். உங்கள் அருமையா பதிவிற்கு நன்றி. தொடரட்டும் பணிகள்.

தலைத்தனையன் said...

ARUN, HAVE YOU REALLY READ THE ARTICLE WITH IMPARTIAL AND FAIR SIGHT? WE ARE REALLY FLABBERGASTED WITH YOUR OBSCURE PERCEPTION. WE HAVE NOWHERE SAID ANYTHING BAD ABOUT HIM IN OUR ARTICLE. IT IS PAINING ME THAT WHY TAMILAN ALONE IS FALLEN DEEP IN THE DITCHES OF CINEMA.

ARUN, YOU LOOK REALLY EDUCATED WITH SOME WISDOM. MY POINT IS WHY DO WE HAVE TO GIVE THIS MUCH ADVERTISEMENT AND ATTENTION TO MR. RAJNI KANTH ? IS HE A FREEDOM FIGHTER? AT LEAST IF HE IS A CASTE LEADER AND DID SOMETHING TO HIS CASTE TO BRING THEM UP, WE WOULD HAVE APPRECIATED A LITTLE FOR THIS. THIS CELEBRITY MIGHT HAVE DONE SOMETHING GOOD TO HIS OWN FAMILY BUT NOT TO THE PUBLIC.

WE STRESS THAT WE ARE NOT BLAMING OR SAYING ANYTHING BAD ABOUT MR. RAJNI. IF HE IS GOOD, THAT IS GOOD FOR HIM. BUT WHAT HE DID GOOD TO THE COMMON PEOPLE OF TAMIL NADU FROM WHERE HE EARNED ALL HIS FORTUNE ?

MR. ARUN, YOU SAY OUR ARTICLE IS ATROCIOUS. WE SAY NOTHING BUT TO SMILE. WE DONT WRITE THIS KIND OF ARTICLE NEITHER TO GAIN FINANCIALLY NOR POLITICALLY. WE SPEND DAY AND NIGHT TO OFFER SOMETHING TO MY PEOPLE IN EXPECTATION OF A CHANGE. AND KEEP THEMSELF EQUAL TO OTHER CIVILIZED PEOPLE. BECAUSE DRAVIDAN IS THE ONE WHO HAS A LANGUAGE WITH HERITAGE OF THOUSANDS OF YEARS.

YOU MENTIONED ABOUT COPY & PASTE. WE ARE NOT ASHAMED OF ACCEPTING THIS. YES WE DO COPY N PASTE. WE ARE NOT MONOPOLY IN THIS NEWS MEDIA. WE SEARCH NEWS FROM ALL SOURCES AND GIVE IT TO PEOPLE. THERE IS NOTHING WRONG IN IT WE BELIEVE. AND THERE ARE LOT OF ARTICLES OF OUR OWN. EVEN IF IT IS COPY N PASTE, WE NEVER FORGET TO IMPRESS OUR POINT OF VIEW IN THEM.

I JUST WANT BRING TO YOUR ATTENTION JUST TWO THINGS WHICH SHOOK THE WHOLE WORLD. 1) IN MULLAIVAIKAL MORE THAN 50 THOUSAND TAMIL PEOPLE HAD BEEN MASSACRED BY SRI LANKAN MILITARY. BULLDOZERS WERE USED TO BURRY THOSE INNOCENTS. DID YOUR RAJNI UTTER A WORD? 2) MORE THAN 500 FISHERMEN OF SOUTH COAST HAD BEEN MURDERED BY SRI LANKAN COASTAL GUARDS. TWITTER WEB SITE CREATED A MASSIVE DIALOGUE/DEBATE ON THIS ISSUE. DID MR. RAJNI SAY ANYTHING ON THIS ? AFTER HIS ADMISSION IN THE HOSPITAL, ONE TAMILAN HAVE IMMOLATED HIMSELF.

WHO IS GOING TO BRING HIS LIFE BACK? WHO IS THE CAUSE FOR THIS IDIOTIC ACTION? YOU AND I TOO PARTLY RESPONSIBLE FOR THIS STUPIDITY. POURING GALLONS OF MILK TO FILM STARS' CUT-OUTS WON'T HAPPEN ANYWHERE IN THE WORLD EXCEPT IN TAMIL NADU. PLEASE DON'T BE A PART OF IT.

Anonymous said...

எதையுமே கேட்க மாட்டாங்கா ... ஏதோ மயக்கத்தில இருக்காங்கா ... அதனால நீங்க சொல்றது புரியாது ... அவங்க வழி தனினினினினினினினி வழி ... மீனாவுக்குக் கொழந்த பொறந்திருக்காம் ... இன்னும் 16 வருஷத்தில அது கூட டூயட் பாடுவார் ... அத தான நாங்க எதிர்பாக்குறோம் ... நீங்க வேறே எதை எதையோ சொல்லிக்கிட்டு .... படுத்துரீங்களே சார் .....

niyamath said...

அருமையான கருதுக்கள் மக்கள் இது போன்ற கருதுக்களை மக்கள் எற்க வெண்டும்

Abu Mohd said...

http://www.maalaimalar.com/2011/05/26113643/rajini-health-condition-develo.html

i've copy paste the above news as comments for above link at:

Thursday, May 26,2011 01:44 PM, அபு hk (sinthikkavum.net)

More comments about News of sinthikkavum.net at Maalaimalar are as below:

On Thursday, May 26,2011 01:50 PM, விஜய் said :
Well done MR. ABU, Please read this comment

On Thursday, May 26,2011 02:08 PM, சுனில் said :
நாட்டுக்காக போராடியவர்களுக்காக இந்த நாடு என்ன செய்தது..... இல்லை உன்னை போன்றவர்கள் என்ன செய்தார்கள்..... உங்களை போன்றவர்கள் யாருக்குமே கவலை படாதவர்கள், பொதுவாக பணக்காரர்களை பார்த்து பொறாமை படுபவர்கள். உனக்கு ஒரு பிரச்சனை வந்தால் உன் குடும்பம் மட்டும் கவலை பட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா? பிரச்சனையின் தன்மையை பொறுத்து உனக்கு ஒரு ஊரின் உதவி கூட தேவை படும் நேரம் வரும். இன்றைய அரசியல் வாதிகளில் நேர்மையானவர் என்று நாம் கையை காட்டுவது வை கோ அவர்களைத்தான், அவருக்கு இந்த தமிழ்நாடு கொடுத்த தண்டனை தேர்தலில் நிற்காமல் ஒதுக்கி வைத்தது, கல்வி கண் திறந்த காமராஜ் என்று கூவுகிறோம், ஆனாலும் அவரை நாம் தேர்தலில் தோற்கடித்தோம். ஒருவன் கஷ்டப்படும் பொது அவனுக்காக மனம் வருந்துவது மனித நேயம், அதை கூட செய்ய முடியாத உங்களை எந்த இனத்தில் சேர்ப்பது....... அதற்காக ரஜினி குணமடைய காவடி தூக்குவது, மொட்டை அடிப்பது எல்லாம் வேண்டாத செயல். உன்னாலும் என்னாலும் பணம் கொடுத்து உதவ முடியாது, அது அவரிடம் நிறையவே இருக்கிறது. நம்மால் முடிந்தது ஒரு சிறிய பிரார்த்தனை.....அதை செய் இல்லை என்றால் மூடிக்கொண்டு போ.....

On Thursday, May 26,2011 02:35 PM, ராகவ் said :
திரு.ரஜினி அவர்கள் பூரண நலன் பெற்று மீண்டும் வெள்ளித்திரையில் எங்கள் கருப்பு வைரம் அவர்களை காணதுடிக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ரசிகன் என்பதை தவிர எங்களுக்கும் அண்ணன் ரஜினிக்கும் எந்த பந்தமும் இல்லை. எதையும் எதிர்பாராமல் செலுத்துவதே அன்பு. ரஜினி எங்கள் எல்லோரின் அன்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமானவர். நாங்களும் அவ்வாறே. அவர் ஸ்ரீ ராகவேந்திரர் பேரருளால் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல கடவுளை மனமார வேண்டுகிறோம்.

On Thursday, May 26,2011 02:57 PM, ராம் said :
ஏண் சுனில். வாயில ஏடாகூடமாக வந்துடப்போகுது.. அபு சொன்னதுல என்னடா தப்பு... கேன.. யார்டா இந்த ரஜினி... மக்களுக்கு அப்படி என்னத்தை செய்தார். அவரு கோடி கோடியா சம்பாதிச்சதுல குறைந்தது எவ்வளவு இந்த மக்களுக்கு கொடுத்தாரப்பா சொல்லு.... சுனாமி தாக்கிய நேரத்துல விவேக் ஓபராய்ன்னு ஒருத்தன் வடநாட்டு நடிகன் இங்கே வந்து நாள் கனக்கில் கிடந்து இந்த மக்களுக்காக உழைச்சானப்பா சுனி.. உங்க ரஜினி என்னப்பா செய்தார். தமிழ் நாட்டு மக்களிடமே கோடி கோடியாக சம்பாதிச்சுகிட்டு.. எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ அந்த கட்சிக்கு ஜால்ரா போட்டுகிட்டு இருந்ததை தவிர வேறு ஒன்றுமே உங்க ரஜினி செய்ய்யலை. அவரு குடும்பதிற்கு அவரு முக்கியமானவர்.. அதனால அவரு குடும்பம் வேண்டிக்கிடும்.. இயக்குனர்கள் இவரை வச்சி கோடிகணக்கில் சம்பாதிப்பாங்க அதனால வேண்டுவாங்க. இவருக்கு இளிச்சவாய மக்கள் கோடிகணக்கில் கொடுப்பாங்க.. சுனாமி டயத்துல நாங்களெல்லாம் ஓடி ஓடி உழைத்தோம்.. பொனத்தோட கிடந்தோம்... மக்களுக்கு எங்களாலான சேவையை செய்தோம். உங்க ரஜினி என்ன செய்தார். தன்னோட ஒரு படத்தோட சம்பளத்துல (ரூ. 13 கோடி வாங்குகின்றார்) ஒரு சதவீதமாவவது கொடுத்தாரப்பா. சொல்லுங்க.. என்னது மூடிகிட்டு போகவா... ஏண்டா நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா... ஏண்டா பெப்ஸியோட பார்ட்னர் அவரு. என்னைக்காவது மொத்த ரசிகர்களுக்கும் ஆளுக்கு ஒரு பெப்ஸி உனக்கு ஓஸில குடிங்கன்னு சொல்லியிருப்பாரப்பா. மதுரை அதிசயம் அவரு பார்ட்னர்ஸிப்ப்ல உள்ளது தான்.. ஒரு நாள் உன்னை ஃப்ரியா உள்ளே போக அனுமதிசிருக்காரப்பா... சொல்லு. ஏண்டா இப்படி அலையுறீங்க.. உங்க பொழப்பை போய் பாருங்க.. அவரு கோடிக்கும் கோடி வச்சிருக்கார்.. அதனால கிட்னி போனாக்கூட 10கிட்னி வாங்கமுடியும்.. அதனால பயப்பட வேண்டாம்.

On Thursday, May 26,2011 03:14 PM, ராஜ் said :
சுனில் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் !! பல நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த கலைஞர் என்ற முறையில் அவருக்காக பிரார்த்தனை செய்வது தவறில்லை , ஆனால் அதையே பிழைப்பாக வைத்துகொள்ள கூடாது !!!ரஜினி விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் !!!

Anonymous said...

ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர், ஒரு சிறந்த நடிகர்,நடிப்பில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டவர்.அந்த வகையில் அவர் ஒரு கலைஞர். உங்களுக்கு ரஜினிகாந்த் பிடிக்காமல் இருக்கலாம்,ஏன் சினிமா கூட பிடிக்காமல் இருக்கலாம்,ஆனால் இசையை ரசிப்பதில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?திரை இசையை ரசிக்காவிட்டாலும் வேறு ஏதேனும் இசையை ரசிப்பீர்கள் அல்லவா?அதே போல்தான் இதுவும் ஒரு ரசனை. தன் கடமையை சரி வர செய்யும் எந்த ஒரு மனிதனையும் மக்கள் விரும்பவே செய்வார்கள்.
அவருக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று உங்களை யாரும் கேட்டுக் கொண்டார்களா?இதுவரை பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தானே தெரிவித்தார்கள் ரஜினி குடும்பத்தினர்.ஒரு சிலர் தங்களை தீவிர ரசிகர்கள் என்று சமுதாயத்திற்கு காட்டி கொள்வதற்காக செய்யும் சில தவறுகளால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுகிறது.இதை ரஜினி ரசிர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.உண்மையான ரசிர்கள் ரஜினிகாந்த் அவர்களிடம் எதிர் பார்க்கும் அமைதியை கடை பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அவருக்காக வழிபடுவது தவறில்லை, ஆனால் உயிரை மாய்த்துகொள்வது அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும்.
நீங்கள் சொன்னது போல அவர் ஒன்றும் தியாகி இல்லை தான்.ஆனால் அவர் நடித்த படங்களை பார்த்து எத்தனயோ பேர் தன் வாழ்வை நல்வழியில் மாற்றி கொண்டதோடு அல்லாமல் அவர் பெயரில் பல நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார்கள், தியாகிகளை மறப்பது தவறுதான், ஆனால் அவர்களை பற்றி தெரியாதவர்களும், தெரிந்தாலும் அவர்கள் வழி நடக்காதவர்களும் இவர் பெயரில் நல்லது செய்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே,ரஜினிகாந்த் அவர்கள் நேரடியாக பல ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார்.அவருக்கு அது பெரிய தொகையாக இல்லாமல் இருக்கலாம்,ஆனால் அந்த மனது எத்தனை பேரிடம் இருக்கிறது?
சிறை வாசம் செய்தவரெல்லாம் தியாகி என்றால் எத்தனையோ அரசியல் கட்சிக்காரர்கள் மக்களுக்காக என்ற பெயரில் விளம்பரத்திற்காக சிறை சென்றனர்,அவர்களை தியாகி என ஏற்று கொள்வதா?ரஜினிகாந்த் எளிமையானவர்,மக்கள் மனதை எளிதில் குடிகொண்டவர்.உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?அவர் என்ன தவறு செய்தார் என்று அவரை இவ்வாறு சாடுகிறீர்கள்?மக்கள் பிரச்சினையை பேச வேண்டும் என்கிறீர்கள்.சினிமாவில் நடிப்பவர்களும் மக்கள் தான்.ஈழ மக்களுக்காகவும் நன் பிரார்த்தனை செய்பவன் என்று நான்
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டால் அது உண்மையான பிரார்த்தனையாக இராது.அதை போல்,நல்ல உள்ளம் கொண்டவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அதே போல் ரஜினிகாந்த் அவர்கள் மீண்டு வரவும்,கலை பயணம் தொடரவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்,அவர் நிச்சயம் வருவார்.

ரவி ராஜ்கோபால் said...

ரஜினி சிரஞ்சீவியா (நடிகர சொல்லலப்பா ...

நிரந்தரமா அழிவே இல்லாம வாழணுமுன்னா)

இருக்கணுமின்னா ... ஆளாளுக்கு நாக்க

அறுத்துக்கங்கப்பா ... (அம்மா ஆட்சிக்கு

வரணுமின்னு, யாரோ நாக்க அறுத்துக்கிட்டதுக்கு,

வைத்திய செலவ அம்மா ஏத்துக்கிட்டதோட,

கவர்மெண்ட்ல வேலையும் கொடுத்து, ஒரு லட்ச

ரூபா வேற கொடுத்தாங்களாம்) ரஜினி

ஆஸ்பத்திரியிலே இருந்து வந்ததும் (நீங்கள்ளாம்

நாக்க அறுத்துக்கிட்டனால தான அவருக்கு

குணமாச்சி மக்கா ...) ஒங்க எல்லாத்தையும்

செமத்தியா கவனிப்பாருப்பா ... கண்டுக்க ....

Anonymous said...

Envoius of Rajini. Not only money, he earned many people's heart, It is a talent. Please appriciate Mr. Rajini Kanth. Well, we cannot blame anyone......the real life is mixture of pain(80%) and gain(20%). So the people started to love movie. While watching the movie a person(people) imagine himself as a particular hero

When the hero falls in to sick he thinks he is suffering. Let say, Rajini Kanth is hero for 36years in movies. And he is a superstar because of his style, dialogue delivery and expression. So impact is high.

Two years ago Muthu kumar(a booming jounalist) fired himself for the srilanka issues. he was living with us one of our brother. That was a terrible incident. People knew muthukumar on that day, so the impact is comparitively less. In rajini matter he is well known hero for 36 years
take it easy (puthiya thendral aasiriyare

Anonymous said...

ஏன்யா உங்களுக்கு இவளவு கோவம் அவர் மேல...
ஏன் இந்த சீப் பப்ளிசிட்டி .... அவர் அவளவு மனச கவர்ந்த மாதிரி உங்களால முடியல...
"நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள்" பணம் குடுக்காம உங்க திருமுகத்தையா பார்க்க முடியும் ?? அந்த படம் புடிகுறது நல தான் பார்க்குறோம்..

"உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்" ஆமாயா நீங்களும் நாலு பேருக்கு புடிக்கிற மாதிரி நடந்துக்குங்க இதுக்கு பெரிய போராளிய தான் ஆகனும்னு அவசியம் இல்ல ... உன்க துறைல நீங்க சாதிங்க..அந்த துறை பிரபலமா இருந்தா உங்க அதிஷ்டம்.

"உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்" நண்பரே தமிழ் நாட்டு மக்கள் ஒன்றும் அவளவு கொடூரர்கள் கிடையாது.. உங்கள் கண்ணில் பிழை...

"எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்." ரஜினியை பத்தி பேசாவிட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா...அவர பத்தி நியூஸ் தான போட்டாங்க...உங்க கிட்ட என்ன காசு பணமா கேட்டாங்க....நாளைல இருந்து எல்லாரும் ரஜினிய எல்லாரும் மறந்துட்டா மாற்றம் வந்திடுமா...

"வெங்காலூர் ( பெங்களூர் ) அனுமந்தபுரம் பகுதியில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற் பெயருடன் தெருப் பொறுக்கி திரிந்துகொண்டிருந்த கன்னட மராட்டியன் தான் , இன்று தமிழ்நாட்டில் ''உச்ச விண்மீன்'' " அவர் ஒருத்தர் தான் அங்க தெருபோர்கிடு இருந்தாரா... இல்லாட்டி அவர் கூட பொறுக்கிட்டு இருந்தவங்க எல்லாம் என்ன கவர்னர் இல்ல கலெக்டர் ஆய்டங்களா... உழைச்சி முன்னேறி இருகாரு யா...கன்னட மராட்டியன் அண்ட் தமிழன்...கொஞ்சமாவது நாம இந்தியன்னு நினைங்க.... எப்ப பாரு தமிழன் அதுவும் ஈழ தமிழன்.. இத விட்டா ஒன்னும் தெரியாது... உலகம் முழுதும் மலையாளி பரவி இருக்கான் ஒரு பிரச்சன இல்லாம.. நம்ம ஆளு எங்க போனாலும் பிரச்சன தான்..

உங்களுக்கு தேவைனா எம்ஜியார் தமிழ் தலைவர் இல்லாட்டி அவர் ஒரு மலையாளி....

ரோட்ல எல்லா வண்டியும் எதிர்ல வந்தா நாம தான் தப்பான வழில போறோம்னு அர்த்தம்... சும்மா இந்த மாதிரி மெயில் அனுபுரத விட்டு புள்ளகுடிகள படிக்க வைங்க முடிஞ்சா ஒரு அந்த குழந்தைய தத்து எடுங்க...மரம் நடுங்க..இப்படி முடிஞ்சத பண்ணுங்க..

Anonymous said...

நண்பரே நன்றாக கட்டுரையை படித்து பாருங்கள், உங்களுக்கு நல்லா புரிகிற மாதிரிதான் எழுதி இருக்கேன். நீங்கள் சினிமா பாருங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா. எந்த நாட்டில் இப்படி நடக்கிறது. தலைவர் படம் ரெலீஸ் என்று சொல்லி கட்டவுட்கு பால் அபிஷேகம் செய்வது, எத்தனையோ குழந்தைகள் சாப்பிட உணவு இல்லாமல் வாடுகிறது. நீங்கள் செய்யும் இதுமாதிரி ஒரு கடைந்தெடுத்த காரியத்தை எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

அடுத்து கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் எதற்கு எடுத்தாலும் ஈழத்தமிழர் என்று சொல்லகிறோம் என்று நெஞ்சில் ஈரம் இல்லாமல் சொல்கிறீர்கள். குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் என்று ஐந்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டது உங்களுக்கு ரொம்ப சின்ன விசயமாக படுகிறது. இந்த சினிமா பைத்தியம் உங்களை எல்லாம் எப்படி ஆட்டி படைகிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. வலியும் வேதனையும் நமக்கு வந்தால்தான் புரியும் என்பார்கள்.

ரஜினி நடிக்கிறார், அவரது நடிப்புக்கு அதிகமான கூலியை பெற்று சந்தோசமாக வாழ்க்கையை அனுபவித்துள்ளார். நீங்கள் காசு கொடுத்து படம் பார்த்தீர்கள் அத்தோடு இது முடிந்துவிட்டதாகவே இதை கருத முடியும். அவர் நல்லவர், வல்லவர் என்பதெல்லாம் யாருக்கு வேண்டும். அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்பதுதான் நமது கேள்வி. தமிழனை தவிர வேறு ஒரு மாநிலத்துகாரனும் கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் வேலையெல்லாம் செய்யமாட்டான் என்றே எண்ணுகிறேன்.

மலையாளி உலகம் முழுவதும் போயி அமைதியாக இருக்கிறானாம். இருக்கட்டும் நமக்கு மலையாளி, இந்தியன், ஸ்ரீலங்கன் என்ற பாகுபாடுஎல்லாம் இல்லை. நாங்கள் மனித நேயம் பற்றியே இங்கு எழுதி உள்ளோம். யாரு நல்லதை சொன்னாலும் எடுதுக்கொவோம். உங்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன? ரசனை என்றால் என்ன? மனித நேயம் என்றால் என்ன? என்பது சரியாக புரியவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. நீங்கள் ஒன்றை மற்றொன்டோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்.

எப்படி நீங்கள் ஒரு பணக்கார கொடீஸ்வரருக்கு மனம் இருக்கு என்று சொல்கிரீகளோ, அதுபோல் ஏழைகளுக்கும் மனம் இருக்கு. நீங்கள் ரஜினி விசயத்தில் படும் கரிசனத்தை, அக்கறையை மற்றவர்கள் விசயத்திலும் படுவீர்களா என்பதே நமது கேள்வி!! அவர் நல்லவர் அதனால் படுகிறோம் என்று சொல்வீர்கள் என்றால்? அவரைவிட ஒரு நல்லவர் லிஸ்ட்டை உங்களுக்கு தரமுடியும். நீங்கள் எல்லாம் அந்த நல்லவர்கள் விசயத்திலும் இதுபோல் கரிசனம் காட்டுவீர்களா?

ரஜினி நடிகர் மட்டும் இல்லையாம், அவருக்கு ஒரு நல்ல இதயமே இருக்காம்! ஏன் மாதவனுக்கு எல்லாம் இதயம் இல்லாதமாதிரி!! அவருக்கு நல்ல இதயம் இருக்கா இல்லையா என்பது அவர் செய்யும் செயல்களே தீர்மானிக்கும். யாரும் யாருடைய இதயத்தையும் கிழித்து பார்க்க முடியாது. அவர் செய்த மக்கள் சேவை என்ன? இனி பின்னோட்டம் இடுபவர்கள் அதை பற்றி சொன்னால் நலமாக இருக்கும்.

அன்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

Anonymous said...

ரஜினி 'ஸ்டைலு' காட்டினார் ... 'ஸ்டைலு'

காட்டுகிறார் ... 'ஸ்டைலு' காட்டுவார்!!! அவர்

போல் 'ஸ்டைலு' காட்ட வேறெவரும் உளரோ?

Anonymous said...

Dear friend,

Rajinikanth is good man compare to you.... you don't know about rajinikanth. because you living in abroad. so you come watch here (Tamil nadu) rajinikanth actitives...don't say like this...ok...

by - mano manohar

Anonymous said...

Your article about rajini's health is really good words to our people.......

by - priya devi

Anonymous said...

THE SAME FILTH ACTION LIKE POURING MILK, GHEE, FLOWERS IN HUNDREDS OF BASKETS TO THE CUT OUTS OF THESE ACTORS SPREAD TO USA TOO.

ONE OF MY FRIENDS HE IS FROM KERALA WENT TO WATCH A RAJNI MOVIE HERE IN ARTESIA, CALIFORNIA. WHEN RAJNI APPEARED IN THE SCREEN HE SAID, "HIS STUPID FANS THROWN COINS, FLOWERS, SHREDED COLOR PAPERS INFRONT OF THE SCREEN" ASTONISHED FRIEND JUST GOT UP AND WENT TO THE BACK ROW.

THAT IS OUR INDIAN MENTALITY. YOU CAN NOT CHANGE THEM IF THEY ARE ADDICTED TO TWO THINGS IN INDIA. ONE IS RELIGION AND SECOND IS CINEMA. BOTH OF THEM ARE FLOURISHING BUSINESS. HOWMANY NITHYANANTHAS ARE CAUGHT RED HANDED IN AT LEAST MONTHLY BASIS IF IS NOT IN WEEKLY BASIS?

NO RELIGION OR REGION IS SAFE FROM THIS CONTAMINATED DISEAS IN INDIA.

YOU SEE, HOW MANY RAJNI FANS ARE TRYING TO DEFEND THEIR STANCE? THE SO CALLED FANS NOT VEHEMENT ENOUGH TO POINT OUT THE SHORTCOMINGS OR THE DIFFERENCE BETWEEN APPRECIATION AND DEVOTION/WORSHIP.

MAY GOD PROTECT RAJNI FANS FROM EXTREMISM.

- MOHAMED THAMEEM

Anonymous said...

Dear Sir.,

I found your website very interesting and innovative & I really appreciate your efforts to bring the current matters with your different angle or expression. Further, Tamilians are very good cultured peoples in India. The Tamil politicians and Cinema Actor/Actress & some caste based political leaders destroyed the political & moral environment for their selfish benefits. Now it is irreparable.

We need some good & honest politicians like Mr. Vaiko, but the people of TN ignore him due to other selfish leaders, currently he is the right person in TN to take care of issues of Tamilians. The day should come - That day only will be the real victory of every Tamilians.

Keep it up your work.

Many Thanks

MOHAMED USMAN
Tirunelveli (Dt) Tamil Nadu

Anonymous said...

Hi Macho man,

We are having the same feeling and thinking here., But what should we do man, People are still believing those things. Please advice the people surrounding you and motivating. That's all we can do intially.


Regards,
Praveen.

Anonymous said...

I saw your email questioning media's attention to Rajinikanth's health. I agree that the news may be exaggerated but thats what they ALWAYS do! People have done crazy things like building temples for some actresses, why did not you question that? I want to remind you that Rajini is a mass entertainer who has find special place in millions of fans' heart. Any PUBLIC figure of good fame will always get this kind of attention. He is HUMBLE, SIMPLE, and has HELPED thousands of poor people with his charity work. I want to remind you that he is NOT a theeviravathi, NOT a dirty politician, does NOT incite violence but simply a philanthrophist. This kind of media's attention happens in developed countries too. The fans/people are only wishing for the good being of the person they like. I do NOT find anything wrong with it.


Satish

Anonymous said...

அன்புள்ள சதீஸ் அவர்களுக்கு கருத்து எழுதியமைக்கு நன்றி, ரஜினியை பற்றி தவறாக எதுவும் எழுதப்படவில்லை. அதே நேரம் நீங்கள் சொல்லியது போல் ரஜினி மட்டும் அறக்கட்டளை வைத்துஇல்லை. எல்லா பணக்காரர்களும் அறக்கட்டளைகள் வைத்து "தான்" ஆகவேண்டும்.

இல்லையென்றால் வரி எய்ப்பு செய்யமுடியாது. இவர்கள் அறக்கட்டளை வைத்து தாங்கள் சம்பாதித்ததில் பெரும்பகுதியை, மக்கள் நலன்களுக்கு செலவு செய்ததாக சொல்லி பொய் கணக்கு காட்டுவார்கள்.

அதுபோல் ரஜினியை தீவிரவாதி என்று அந்த கட்டுரையில் சொல்லவே இல்லை. நீங்கலாக உங்கள் கருத்துக்கு வலு சேர்க்காதீர்கள்.

இதை புரிந்து கொள்ளுங்கள், மற்றபடி திரும்ப ஒரு முறை நடுநிலையான மனதோடு அந்த கட்டுரையை படித்து பார்க்கும்படி அன்போடு வேண்டி கேட்டு கொள்கிறேன். அந்த கட்டுரையின் நோக்கம் இதுபோல் நடிகர்கள் மாயையில் வீழ்ந்து நாம் ஏழை எளிய மக்களுக்கு, இந்த சமூகத்துக்கு செய்யவேண்டிய பணிகளை மறந்து நிற்கிறோம் என்பதே இதன் ஆதங்கம். மற்றபடி ரஜினி கெட்டவர், அவர் குணமடைய கூடாது, என்ற தவறான நோக்கில் எழுதப்படவில்லை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. என்றும் உங்கள் நட்புடன் - புதியதென்றல்.

Anonymous said...

வணக்கம்

That lenghty mail was nice to read.

Business is a Business. There can not be a Judgement whether a business is right or wrong - Unless and Until a Business affects a Living being or a Property or an Environment.

- I wish i drink heated / filtered water at home - why do they make bottled water, mineral water @ rate of INR 1 to 50 at various quality.

- I wish i go to college on merit - why do i land up in management quota - why do the operate college in private

- I wish i go in flight why do the operate budget airlines and normal flights

- And every thing you do from dawn to dusk will have a why and why not...

- When Barathiar wrote; the then govt. wanted to arrest him,

- When ananda vikkidan joked he was arrested

- When nakeeran writes he defends himself legally but still adds stories Except the first guy all motivated to business.

- When Amithab Bachan had a accident 3 decades back, Mega Star Siranjeev's Father made fasting and prayers (Committed by Mega star in presence of Bachan)

So.... just look into what is apt for us. Not applicable is not Applicable.

Doing a business is for earnings - 100% loyality is all stories to do another business.

Note: Hey common am not Rajini fan.

Thanks & Regards
Murugan

Anonymous said...

Hi Brother,

This is Ramesh.M from Abudhabi.Actually I want to know what is your problem?. your 1st question is all media and people speaking about rajini’s health…?I think this is the stupid question. He is a very familiar person of tamilnadu.Whoever it may be, whether he is rajini or any other familiar person….People and Media will be like that. I don’t Know Why u r blaming rajini.

Your 2nd question Why u people r worrying for his health? Personally im telling u brother,Im from Poor family only.In my school timings, every year I got Free note books from Arunachala Arakattalai.Not only me also my friends.In my district lot of students is getting that note books.As u know this is rajini’s own helping trust.Now im a Civil Engineer here.I got good salary.Im in good position.I will not tell bcz of him only im getting this position.But he is also one reason for me getting this position.He is the inspiration of me.

3rd u r talking about Srilankan Tamilians….Rajini has not helped any of them??. As u know,the Central Government,Maximum no of polititions against to them. Even UNO cant help to them. May I know what have u done for them?If Mr.Muthukumar(The great man who Sucided for our people) come,Can ask this question to rajini,to u,to me,to karunanidhi,to jayalalidha etc…Not U.

How u r telling that we r not carring about our family’s and relative’s. Have u visited to everyone homes?Dont write like bullshit.Here everybody know how will carry our family.I accepted ..some crazy fans are doing crazy things…don’t blame everybody…..

Rajini himself frankly accepted that in his teenage his activities was very bad.Genarally Very few familiar persons only will accept their mistakes.Rajini is one of them.If he is supporting and liking only kannada people means why he has given his daughters to Tamil boys.For your information,The superb actor Mr.Kamalhaasan using only English to communicate with their family.But in rajini family,They r using TAMIL to communicate.No Kannada.No Maratti.

Everybody has done the mistake including rajini,u and me. But good human beings will feel bad and rectified their mistakes very soon. Apart the actor, superstar, kannadian, marattian……Rajini is a Good Human Being.

Instead of blaming, try to help other human being.

Jai hind,
Ramesh.M

SURYAJEEVA said...

makkal prachchinaigalin mel kavanam thiruppaamal irukka eththanayo sangathigal ullana, avatril ondru thaan cinema, aduththu vilayaattu, aduththu kadavul, aduththu saamiyaar endru adukki konde poagalum...
oru naal soaththukku singi adikkum poathu,[naanum antha singi adikkira listla iruppen]ithellaam puriyum... appa enna paadu paduvoamo athu thaan theriyala?

Anonymous said...

நண்பரே பீர் சார்..
இதோ இந்த மெயிலுக்கு பதில்

இந்த கேள்விகளை எங்கு எடுத்தீர்களோ அங்கு இந்த பதிலை உங்களால் சமர்ப்பிக்க இயலுமா?

உங்களுக்கு நேரம் போக இந்த மெயிலை அனுப்புகிறீர்கள்

எங்களுக்கு நேரம் இல்லாமலும் இந்த மெயிலை அனுப்புகிறோம்

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?

ரஜினிக்கு உடல் சரி இல்லை என்றால் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம்தான்.

உண்மையாக உழைத்து களைத்து போகும் போது மனதும் புத்தியும் சந்தோசப்பட ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது

உண்மையாக உழைப்பவர்களுக்கு ரஜினி படம் தேவைப்படுகிறது பிறருக்கு புட்டியும் குட்டியும் தேவைப்படுகிறது எந்த அக்கறையும் இல்லாதவர்களுக்கு இது போல் ஏதோ ஒரு மெயில் தேவைப்படுகிறது அவ்வளவே....

ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.

மொத்த தமிழகமும் உழைப்பவர்கள் போல....

தன்னை திருப்தி படுத்தியவர் பாதிக்கப்படுகிறார் என்று கேள்விப்பட்டதும் கவலை கொள்வதில் தவறு இல்லை மாறாக கவலை கொள்வது ஆரோக்கியமான விசயம் தான்.
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம். (sinthikkavum@yahoo.com).

நிஜ்ஜயமாக இது மட்டும்தான் உறவு அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இது ஒன்று மட்டுமே உறவு ஆனாலும் கவலை கொள்ள வைக்கிறது அது ஏன் யோசித்து பாருங்கள். தமிழகத்திலும், அண்டை மாநிலம், அண்டை நாடு என உலகம் முழுவதும் திரைப்படும் வந்தும் அதை மக்கள் பார்த்தும் ரஜினியை மட்டும் ஏன்? கொண்டாடுகிறார்கள் விசயம் என்ன என்று புரிகிறதா? இது அறியாமை அல்ல. அறிவிலியும் அல்ல. அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது அது தான் மனித மனம். பிடிச்ச விசயம் எதுவாயினும் அதை தேடிப்போய் செய்வது மனித இயல்பு. ரஜினி அவர் ரசிகர்களுக்கு வேலைக்காரன்தான். ஆனால் என்ன பிடித்த வேலைக்காரன். தன்னை திருப்திபடுத்துவதுதான் ரஜினியின் வேலை என்று அவரின் ரசிகன் முழுமையாக நம்புகிறான். அதற்காக அவன் எவ்வளவு தொகையும் செலவு செய்ய தயாராக இருக்கிறான். தன்னை திருப்தி படுத்தியவன் படுக்கையில் கிடக்கும் போது "அய்யோ" என்று பதறுவது மனித இயல்பு இதில் தவறு ஒன்றும் இல்லை. மனித இனத்தின் இயல்பை விளக்குவதற்கு அல்லது விளங்குவதற்கு sinthikkavum@yahoo.com போக வேண்டிய அவசியம் இல்லை காரணம் என்னிடம் ஆறாம் அறிவு இருக்கிறது

அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா?

Anonymous said...

ஆம் விடுதலை என்பது சுதந்திரம் மட்டும் இல்லை சுதந்திரம் வந்த பின் சொர்க்கம் இல்லையெனில் சுதந்திரத்தின் பயன் என்ன?

சுதந்திரத்தை மூத்த தலைவரகள் தந்தார்கள். அதை காப்பதற்க்கு இது போன்ற சொர்க்கத்தை தேடுகிறார்கள் மக்கள். சமூகம் தன்னை தானே விடுதலை அடைந்து கொள்கிறது அதற்கு உந்துகோல் ரஜினியாக்கூட இருக்கலாம்.

யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!!

நிஜ்ஜயமாக இவர் மனிதர்தான். மந்திரவாதியும் இல்லை இவரிடம் தெய்வீக சக்தியும் இல்லை. அவரால் பூமியை வானமாகவும், வானத்தை பூமியாகவும் மாற்ற இயலாது. பணம் படைத்தவருக்கு மட்டும் தங்க செய்னும் மற்றவருக்கு விபூதியும் காற்றில் எடுக்க இயலாது. ஆனால் பணம் உள்ளவன், இல்லாதவன், நோயுற்றவன், திடமாக இருப்பவன் என அனைவரையும் சந்தோசப்படுத்தக்கூடிய ஒரு சாதாரண நடிகன்.

அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் இல்லையா?

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.

ஈழத்தில் விசயத்திலும், மோடியின் விசயத்திலும் ஆர்ப்பாட்டம் இல்லாமைக்கும், பிறர் வலி உணராமைக்கும் மனிதன் தன்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டதே காரணம்

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்?

அருகில் இருப்பவர்களின் நலனில் அக்கறை கொள்வர்களால் மட்டுமே தூரமாய் இருப்பவர்களின் நலனிலும் கொள்ள இயலும் என்பது பொது விதி

அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

வருத்தமான விசயம்தான் என்ன செய்வது. ஆனால் இதற்கும் ரஜினியின் உடல் நலத்திற்கும் என்ன சம்பந்தம் அவ்வாறு நீங்கள் சம்பந்தபடுத்தினால் ரஜினி முதல்வராக வேண்டும் அவர் வந்தால் மட்டுமே இந்த மாதிரி குறைகள் தீரும் என்று நம்புகிறீர்களா?

எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள்.

உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.

மாறுதல் ஏன் வரவேண்டும் ரசனை என்பது அவரவர் விருப்பு வெறுப்பு உரியது. உங்களின் விருப்பதற்கு ஏற்றார் போல மக்களின் மனநிலை மாறவேண்டும் என்று நீங்கள் நினைப்பது மடமை. ஹிட்லரிசம்

இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

பிற விசயங்கள் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும் போது ரஜினி பற்றி அக்கறை எதற்கு? உங்களையும் அவர் வென்று விட்டாரோ?

காயப்படுத்துவது நோக்கம் அல்ல

பதில் அளிப்பதே நோக்கம் என்ற எண்ணத்துடன்

துராப்ஷா..

ரசிப்பவன் மனிதன்,

பிறரை அக்கறை கொள்பவன் புனிதன்.

சார் இதுக்கு எனக்கு பதில் அனுப்புங்க...

Anonymous said...

மெகா ஸ்டார் ரஜினி மேல் யாருக்கும் கோபம் இல்லை. அவர் உடல் நலம் பெற்று வரவேண்டும். ஆனால் அதையே
அன்றாட செய்தியாக்கி, அதைவிட அவசியமாக நம் கவணத்தை கவர வேண்டிய, நாம் அதிக பொறுப்புடன் செயல் படவேண்டிய
அன்றாட நிகழ்வுகளுக்கும், நமக்கு ஒரு சோதனை வந்தால் அதற்காக இரவு பகல் பாராமல் தன்னை வருத்திக்கொள்ளும் நம் தாய், தகப்பன், உறவுகளுக்கு நமது கடமைகளை செய்கிறோமா?

சமீபத்தில் இலங்கையில் நடந்த நற்றமிழ் மக்களின் இன அழிப்புக்கு கொடுக்காத முக்கியத்துவம், குஜராத்தில் மோடியால் ஒரு இனப்படுகொலை நடத்தப்பட்டதே அதற்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம் ஏன் ரஜினி அவர்களின் உடல் நலக்குறைவுக்கு கொடுக்கப்படுகிறது? ஒரு பொழுதுபோக்கு விஷயம் பல்லாயிரம் மக்கள்
கொல்லப்படுவதைவிட பெரிதாக மக்களால் நினைக்கப்படுகிறதென்றால், இன்னும் மக்களுக்கு எது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விபரம் இல்லை என்பதைவிட சினிமா மாயை மக்களை தாழ்த்தி விட்டதே என்ற மன வருத்தத்தால் விளைந்ததுதான் இந்த கட்டுரை என்பது எனது அறிவு.
- NAA SAMAJ (புரியாதவன்)

jay said...

அழகாகவும் அருமையாகவும் பகிர்ந்துள்ளீர். இந்நிலை மாறவேண்டும், முடிந்தவரை முகநூலில் அனைவரும் பகிருதல் அவசியம்..தொடரட்டும் உங்கள் பணிகள்.

நட்புடன்
ஜெயா நல்லப்பன் மலேசியா.

swarna said...

very true. rajini cares for his wealth....he has not done anything to tamil people , other than killing and wasting their time by his movies...we need not worry about a guy who didn't even condemn his fan's idiotic activities like 'paal abishegam'. he just cares only about his money and family. please tamil people....take care of you and your family.

'' Nallavanukku Nallavan '' said...

சூப்பர் ஸ்டார் அவர்கள் யாரையும் சேர்க்கவில்லை,இது தானாக சேர்ந்த கூட்டம்தான் அவருடைய ரசிகர் கூட்டம், இது நீங்களும் இல்லை நானும் இல்லை இந்த புகழுக்கெல்லாம் காரணம் இறைவன்தான். ஏன் பிரறைக்கண்டு போறாமைக் கொல்கிறீர், இறவன் அவருக்குக்கொடுத்த அருட்கொடைதான் இது புரிந்து கொள்ளுங்கள். அவருக்காக தீக்குளிப்பதும், தன் குடும்பத்தை கண்டுகொள்ளாதவர்கள் இருப்பதும் அது அவர்களின் முட்டாள்தனமாகும்,தவிர அணைத்து ரசிகர்களையும் கேவலமாக நினைத்துவிடாதீர்கள்.
ரஜினி அவர்களின் திரைப்படம் பார்த்து உலகத்திலுள்ள நிறையபேர் வாழ்க்கையிலுள்ள தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். புரிகிறதா உங்களுக்கு?...........என்றும் உண்மையுள்ள ரசிகன் (முஹிபுல்லா)

sabari said...

ஆசிரியர் புதியதென்றல்.அவர்களே வணக்கம்.... ஏன் ரஜினிகாந்த் பற்றி இவ்வாறு எழுதுகிறீகள். அவருக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் வேற்றுமை . உங்கள் வழிக்கு வருகிறேன். நாடே ரஜினி! ரஜினி! என்று எழுதுகிறது என்கிறீர்கள் அனால் நீங்களும் அதை பற்றி தானே எழுதுகிறீர்கள் இதை என்ன என்று கூறுவது!?. ....ஈழம்! ஈழம்! நம்ம மக்கள் தான் அவர்களும் ஆனால் என்ன செய்வது.... இப்போது ரஜினியை பற்றி யாரும் படிக்கவும் இல்லை எழுதுவதும் இல்லை என்று வைத்துக் கொள்வோம் . அப்போது அணைத்து பிரச்சனைகளும் சரியாகுமா? .... கூறுங்கள் சரியாகுமா.. வாய்ப்பே இல்லை. "ரஜினிகாந்த் என்ன செய்தார்" என்று கேட்டீர்கள்.. இதை சற்று கவனமுடன் படிக்கவும்.. "கும்பகோணம் தீ விபத்தில் ரஜினி பெயரில் அங்கே "மூன்று லட்சம் கொடுக்கப்பட்டது", "சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ஒரே செக்காக கொடுத்துள்ளார்", "ஈழம் பிரச்னையில் நடிகர் சங்கம் சார்பில் எதிர்ப்பு நடந்த மறு நாள் அவர் மற்றும் சில நடிகர்களுடன் தனியாக போராட்டம் நடிதினார்"(example ..http://www.envazhi.com/?p=6882). “ரஜினிகாந்த் சேவை மையம்” – சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தொடங்கியுள்ள இலவச கிளினிக்!"(http://onlysuperstar.com/?p=12547).....சென்னையில் உள்ள ராகவேந்திரர் திருமண மண்டபத்தில் மாதத்திற்கு இருவது ஜோடிகலுக்கு இலவச திருமணம் மற்றும் தாய் வீட்டு சீதனம் பிற பொருள்களுடன் கூடிய சீதனம் இலவசமாக கொடுக்க படுகிறது. அது மட்டும் இல்லை அங்கே தினமும் அறுசுவை உணவு இலவசமாய் வழங்கபடுகிறது". மாவட்டம் தோரும் அவரின் ரசிகர்கள் பல ஏழைகளுக்கு துணியும் உணவும் கொடுக்கிறார்கள்".அவர் திரைபடத்தில் நடிப்பதின் மூலம் எத்தனை குடும்பம் நலம் பெறுகிறது தெரியுமா? கூற முடியுமா உங்களால்?. இது தமிழ்நாட்டில் மட்டும்!......... அரித்துவாரில் அவரின் உதவி மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கிறது தெரியுமா? 47 சாதுக்களும் அவர்களின் குடும்பங்களும்!....பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் எத்தனை குழந்தைகள் அவரின் உதவி மூலம் இன்று பெரிய படிப்பு படிக்கிறார்கள் தெரியுமா? தன் வாழ்நாள் முழுவதும் நண்பர்களுக்கு உதவும் மனிதனை தங்கள் வேறு இடத்தில கேட்டதுண்டா! (ஏன் நீங்களே உங்கள் நண்பர்களுக்கு உதவியது உண்டா?) அனால் இவர் அவர்களுக்கு அன்று முதல் இன்று வரை நண்பர்களின் குடும்பங்களுக்கு இவர்தான் உதவுகிறார்!.. சரி இது எல்லாம் போகட்டும் "என்ன இவர் அன்னஹசரே போன்று உண்ணாவிரதம் இருந்தாரா"..... ஐயா! ஆசிரியரே ஒரு நல்லவன் மற்றவர்க்கு உதவ உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. "அப்படி இருந்தால் அது நாளை அவர்களின் சுய லாபத்திற்கு மட்டும்தான்"(காந்திஜி கூட விதிவிலக்கு அல்ல, அவர் செய்ததற்கு இப்போது நம் ரூபாய் நோட்டில் பலமாக சிரிக்கிறார், அந்த நோட்டை பார்க்க முடியாமல் நாம் தினம் தினம் அழுகிறோம் ). தான் எழுதவேண்டும் என்பதற்காக எது வேண்டுமென்றாலும் எழுது கூடாது. நான் ஒன்றை உங்களுக்கு கூறுகிறேன் ஏன் தங்கள் ரஜினியை பற்றி எழுதுகிறீர்கள் என்று விளக்க வேண்டும். ...ஜே.ஜெயலலிதா அல்லது கருணாநிதி மற்றும் வைகோ, ராமதாஸ், ஸ்டாலின், வீரமணி "ஏன்..."ஈழம் என் ரத்தம்" 'அவர்கள் என் உடன்பிறப்புகள்" என்று கூறிய தோல்.திருமாவளவன் பற்றி எழுதலாமே?. ஆகாது அல்லவே!?.. இப்படிதான் திருமாவளவன் கூறினார் ஆனால் ஏன் அவர் அரசியலுக்கு வந்தார்? கூற முடியுமா உங்களால்? "மக்களுக்காகவா" அறவே இல்லை தான் சம்பாதித்த பணத்தை காக்கவே!(அவர் முதலில் நம்மை போன்று ஒரு எளிமையை தான் இருந்தார் ஆனால் இப்போது?) ...ஐயா!ரஜினிகாந்த் நான் மக்களை காக்க போகிறேன் என்று சம்பாதிக்கவில்லை அவர்களை சந்தோசப்படுதவே நடித்தார்! அதற்க்கான வெகுமதியை பிடித்தார்!

அம்பேத்கர் கூறியிருக்கிறார் " என் மக்கள் தூங்குகிறார்கள் தயவுசெய்து அவர்களை 'நான் உங்களை காப்பாற்றுகிறேன் என்று கூறி அவர்களை எழுப்பி அதல பாதாளத்தில் தள்ளிவிடாதிர்கள் அதை அவர்களால் தாங்க முடியாது' அவர்களே விளித்துக்கொவார்கள் என்று"
இப்போது உள்ள தலைவர்கள் இதை தான் செய்கிறார்கள் அவர்களை போல் தாங்களும் பேச வேண்டாம்.. தயவு செய்து இனி ரஜினிகாந்தை பற்றி பேச வேண்டாம்.. அவர் உங்களைகாடிலும் என்னைக்காட்டிலும் ஏன் இப்போது உள்ள அரசியல்வாதிகளைக்காட்டிலும் மிக மிக சிறந்தவரே!! நல்ல மனிதரும் கூட! (காந்திஜியை பற்றி கூரியதக்கு மன்னிக்கவும், ஏன் என்றால் அப்படி என்னை நீங்கள் கூற வைத்துவிட்டீர்கள்.)...

அன்புடன் பெங்களூரில் இருந்து.
கே.சவரீசன்.

Anonymous said...

(Xiao Song). [url=http://www.latestbagsdesign.com/]cheap gucci handbags[/url] ytuilet http://www.cheapbagswholesalesd.com/ unznfht [url=http://www.fashionjacketsonline.com/]chanel handbag[/url]

Anonymous said...

The hormones are still the culprits for these drastic changes that occur on a woman's body during menopause. cheap gucci bags qnlsjze moncler vest opxfxgv http://www.fashionjacketsonline.com/

Sridharan said...

தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்தேன்.ஒவ்வொன்றும் சிந்திக்க வேண்டியவைதான்.
உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

Anonymous said...

[url=http://buyonlinelasixone.com/#15642]buy cheap lasix[/url] - buy cheap lasix , http://buyonlinelasixone.com/#12000 cheap generic lasix

Anonymous said...

நடிகர்களுக்காக தீக்குழிப்பவர்களுக்கு இது புறியாது