May 19, 2011

தமிழக முஸ்லீம் அரசியல் தளத்தில் தமீம் அன்சாரி!!

May 20, தமீம் அன்சாரி நாகை மாவட்டம், நாச்சி குளம் என்ற ஊரைச்சேர்ந்தவர். முஸ்லீம் சமூகத்தில் இருந்து மிக இளம் வயதிலே அரசியல் தளத்துக்கு வந்தவர்.

சிறந்த செயல்வீரர், இவரின் தோல்வி உண்மையிலேயே தமிழக முஸ்லிம்களை பொருத்தவரை இழப்பென்றே சொல்லலாம்.

தமிழக முஸ்லீம் தலைவர்களில் தமீம் அன்சாரி ஒரு துடிப்பான இளைஞ்ஞர். இவர் ஜெயித்து சட்ட சபைக்கு சென்றிருந்தால், முஸ்லீம் மக்களின் குரலாக ஒலித்திருப்பார்.

எமக்கு தேவை ஆயிரம் நரிகளின் ஊளைகளல்ல. ஒரு சிங்கத்தின் கர்ஜனையே. அந்த வாய்ப்பு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தமீம் அன்சாரிக்கு இல்லாமல் போனது கவலைக்குரிய விசயமாகும்.

சிங்கத்தின் வாலாய் இருப்பதைவிட கட்டெறும்பின் தலையாயிருப்பதே மேல்" என்று மமக முடிவெடுத்து தனிச்சின்னத்தில் நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விசயமாகும்.

4 comments:

Anonymous said...

நல்ல பகிர்வு. உண்மையிலேயே தமீம் அன்சாரியின் தோல்வி வருந்தத்தக்க ஓன்று என்றாலும், இந்தக்கால இடைவெளியில் மேலும் தன்னை மெருகூட்டிக்கொண்டு, இன்ஷாஹ் அல்லாஹ் எதையும் எதிர்கொண்டு சிறந்த களப்பணியாற்றி ஜாதி, மத பேதமின்றி எல்லா தரப்பு மக்களுக்கும் தன் பணி சென்றடைய்ய முயற்சி செய்வார் என்று நம்புவோம். MOHAMED THAMEEM

udumangani said...

insha allah,

He will become a cheif minister

we will support to mr thameem ansari bhai

future CM

Anonymous said...

cheif minister
?? konjam overunu ninakiren......

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும். தனித்தனியாய் பிரிந்துபோய் ஒன்றுக்கும் உதவாக்கரையாய் போகாமல், பிரச்னைகளை தயவு செய்து பேசித் தீர்த்து ஒற்றுமையாய் செயல்பட வேண்டும். நாம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறோம். மவ்லவி பி. ஜே. ஒரு பக்கம். ஜனாப் ஹைதர் அலி ஒரு பக்கம். இரண்டு மூன்று முஸ்லிம் லீக்குகள், பாப்புலர் FRONT , SDPI இப்படி எத்தனையோ கட்சிகள் தனித்தனியே நின்று நமது சக்திகளெல்லாம் விரயமாகுதே. ஒன்றுபட வழியே இல்லையா?

நீங்களெல்லாம் என்ன ஜெயலலிதாவா ? ஏன் உங்களுக்கெல்லாம் இத்தனை கர்வம் ? அகம்பாவம் ? அல்லாஹ்வை மறந்துவிட்டீர்களா? உங்களுடைய திமிர்கள் எல்லாம் நீர்த்துப்போகும் காலம் ஓன்று அருகிருப்பதை மறந்து விட்டீர்களா? அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். ஓன்று படுங்கள். MOHAMED THAMEEM