May 3, 2011

பொய் சொல்லும் மின்சாரவாரியம்!! நூறு வருடங்கள் வேண்டும்!!

May 4, தமிழ்நாட்டில் இன்னும் 2 ஆண்டுகளில் மின்பற்றாக்குறை பிரச்சினை இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சி.பி.சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

மின்வெட்டு பிரச்சினையை கண்டித்து கோவையில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் மற்றும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சி.பி.சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கூட்டம் முடிந்ததும் சி.பி.சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர்,

காற்றாலை மின் உற்பத்தியை மின்வாரியம் வாங்குவதில்லை என்று கூறுவதில் உள்ள நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும். காற்றாலைகள் மூலம் தற்போது ஒரே நாளில் ஒரு சீரான மின் உற்பத்தி இல்லாததால் அது சாத்தியமில்லாத நிலை உள்ளது.

வருகிற 15-ந்தேதிக்கு பிறகு காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. அவ்வாறு வாங்கப்படும் மின்சாரம் 2 மாதத்துக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டு தான் வாங்கப்படுகிறது.

ஆகவே அந்த மின்சாரத்தை திடீரென நிறுத்திவிட முடியாது. ஆகவே தொலை நோக்கு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் இன்னும் 2 ஆண்டுகளில் மின்பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆரல்வாய்மொழி, கயத்தார், உடுமலை, தேனி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின் உற்பத்தியை வாங்கி வினியோகம் செய்வதற்கு ரூ.4 ஆயிரம்கோடி செலவில் 400 கே.வி திறன் கொண்ட 6 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இது 2 அல்லது 3 ஆண்டுகளில் செயல்பட தொடங்கும்.

No comments: