May 1, 2011

தகவல் தொழில் நுட்பமும் பெருகி வரும் வேலை வாய்ப்பும்!

May 01, நடப்பு நிதி ஆண்டில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் புதிதாக 2.50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என நாஸ்காம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்கள் முழு வீச்சில் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இத்துறையில் முன்னணியில் உள்ள நான்கு நிறுவனங்கள் மட்டும், நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்த உள்ளன என நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.

சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 60,000 புதியவர்களை பணியில் அமர்த்தப் போவதாக கூறியுள்ளது. மகிந்திரா சத்யம் நிறுவனம் 18,000 பேரை சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஐ.டி. சேவை துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் புதுடெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பூனா ஆகிய நகரங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: