Feb 12, 2011

காதலர் தின கொண்டாட்டங்களும்!! சங்கபரிவார் எதிர்ப்புகளும்!!!

1) சென்னையில் காதலர் தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சிவசேனா கட்சி சார்பில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்

2) காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும், ஸ்ரீராம் சேனா அமைப்பு, இந்தாண்டு காதலர் தினத்தன்று வன்முறையை கையாளப் போவது இல்லை என, அறிவித்துள்ளது. மேலும், "காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்கள் பொது இடங்களில் அத்துமீறி நடந்து கொள்வதை, வீடியோ எடுத்து, இணைய தளத்தில் வெளியிடுவோம்'என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த பாசிச பயங்கரவாத ஹிந்துத்துவா இயக்கங்கள் இந்தியா முழுவதும் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளால் இவர்களது நிலை மக்கள் மத்தியில் ரொம்ப கேவலமா இருக்கும் இந்த சூழலில் இப்ப அதை சரிசெய்ய இந்த கூத்துகள். இவர்கள் ஏன் காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்கிறார்கள் என்றால் இவர்கள் சொல்லும் காரணம் அது மேலைநாட்டு கலாச்சாரம் (மீன்ஸ் கிருஸ்தவ கலாசாரம்) என்பதால் தான். ஏதோ இந்தியாவில் இந்த காதலர் தினம் வந்ததால் தான் கலாசாரம் சீரழிந்து விட்டது போல் ஒரு மாயையை உண்டாக்க பார்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. இந்து மத புராணங்கள், காவியங்கள், கோயில்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், நமது சினிமாக்கள் , டிவி சீரியல்கள் , கொண்டுவராத ஆபாசத்தை கலாசார சீரழிவுகளை ஒன்றும் இந்த காதலர் தினம் கொண்டு வந்துவிடவில்லை. அதயெல்லாம் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.

நன்றி: தமிழ் செல்வி ( மினஞ்சல் செய்தி).

No comments: