நாகர்கோவில், டிச.30: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தமிழகத்தில் திமுக தலைவர்களும் ராசாவைப் பாதுகாக்கும் வகையிலான அணுகுமுறையில் ஈடுபட்டுள்ளனர். அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது கடைப்பிடிக்க வேண்டிய 3 விதிகள் குறித்து அப்போதைய அமைச்சர் ராசாவுக்கு பிரதமர் 2 கடிதங்களை எழுதியிருக்கிறார். அவற்றுக்கு ராசா தரப்பிலிருந்தும் பதில்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. இதை பிரதமர் ஏன் தடுக்கவில்லை? எனவே அவருக்கும் தெரிந்தே எல்லாம் நடைபெற்றுள்ளது. இது ஒரு திட்டமிட்ட ஊழல். ஆனால் இது ஊழலே அல்ல, அரசுக்கு இழப்பு எனக் கூறி திமுக தலைவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவசம் என்றெல்லாம் கூறி மக்களை திசைதிருப்ப முடியாது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment